புதன், 18 டிசம்பர், 2013

புதுப்பெரியவாள் 1971-71 கேரளத்துக்கு விஜயம் செய்தார்கள். அப்போது எர்ணாகுளத்தில் நகர்வல்த்திற்கு ஏற்பாடு

செய்திருந்தார்கள். ஒரு குட்டி யானை மீது அமர்ந்து முதல் வரிசையில் ஊர்வலம் வந்துக் கொண்டிருந்தார்கள். தீடீரென்று ஏற்பட்ட

மின் தடையால் எல்லா விளக்குகளும் அணைந்தன. குட்டி யானை மிரண்டது. நல்ல காலமாக இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்

விளக்குகள் எரியத்தொடங்கியது. இடையில் புதுப் பெரியவாளும் யானையிலிருந்து பத்திரமாக இறங்கி விட்டிருந்தார்கள்*.

*வீதிவிளக்குகள் அணைந்ததும், பக்தர் திரு.டி.வி.சுவாமிநாதன் தன் இல்லத்திற்கு விரைந்து விளக்குகள் அணைந்த காரணத்தைக்

கேட்க மின் வாரியத்துடன் தொடர்பு கொண்டார். அதற்குள் எல்லாம் சரியாயிற்று. மீண்டும் அவர் ஊர்வலத்தில் கலந்துக் கொள்ளப்

புறப்படும் சமயம் காஞ்சியிலிருந்து டெலிபோன் அழைப்பு. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.நாகராஜ அய்யர்

விசாரித்தார். “ஊர்வலத்தில் ஏதாவது குழப்பம் உண்டாயிற்றா?” திரு.டி.வி.சுவாமிநாதன் நடந்ததை விவரித்துவிட்டு, வியப்புடன்

வினவினார், “சம்பவம் நடந்து ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் எப்படி உங்களுக்குத் தெரிந்தது?”

அதற்கு ஏ.நாகராஜ அய்யர், ”ஸ்ரீ பெரியவாள் சிவாஸ்தானத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்களாம், “நாற்பத்தைந்து வருஷங்களுக்கு

முன் நான் மலையாள ராஜ்ஜியத்தில் யாத்திரை செய்த போது இருந்ததை விட, புது சுவாமிகள் ஊர்வலத்திற்க்கு இன்று

தடபுடலான் ஏற்பாடுகள்…” இவ்விதம் சொன்ன பெரியவா, தீடீரென்று, “ஒரே இருட்டாய் போயிடுத்தே, யானை மிரண்டுடுத்தே?”

என்று சொன்னாராம், உடனே எர்ணாகுளத்திலிருந்த உங்களை கூப்பிட்டு, “என்ன நடந்தது?”” என்று அறியப் பணித்தார் என்று

கூறினார்.

அங்கு நடந்தது சிவாஸ்தானத்தில் இருந்த பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?, பெரியவாளுக்கு,, சிவாஸ்தானம் தான்

நேத்ரஸ்தானமா???

கருத்துகள் இல்லை: