படலம் 91: திலதேனுதான விதி
91வது படலத்தில் திலதேனுதான விதி கூறப்படுகிறது. பிறகு எல்லா விருப்பத்தையும் கொடுக்கக்கூடிய திலதேனு தான விதி கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. துலாரோஹண முறைப்படி வேதிகை, குண்டம், மண்டலம் இவைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கவும். மண்டபத்திற்கு முன்பாக, 8 மரக்காலாமோ 8 படியாலோ எள்ளினால் எள்ளு ரூபமான தாமரை அமைக்கவும். அந்த எள் தாமரையை வஸ்திரத்தால் மூடி அதற்கு மத்தியில் மூன்று, பத்து நிஷ்கம், பதினைந்து நிஷ்கம் ஏழரை நிஷ்கம் இந்த அளவினாலோ அல்லது ஐந்து நிஷ்கத்தினாலோ தங்கத்தினால் கர்ணிகை என்கிற பாகம் தண்டு இவைகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க தாமரை செய்து வைக்கவும். அதற்கு வடக்கு பாகத்தில் 11 பிராம்ணர்களை 11 ருத்திரர்களாக ஸ்மரித்து ஆவாஹணம் செய்து பூஜிக்கவும். கிழக்கு பாகத்தில் 12 பிராம்ணர்களை 12 சூரியன் மந்திரங்களால் பூஜிக்கவும். தெற்கு பாகத்தில் 8 பிராம்ணர்களை வித்யேஸ்வரர்களாக நினைத்து பூஜிக்கவும். பிறகு 16 நபர் என்று கூறி நினைக்க வேண்டும் என்பதாக தேவதைகளின் பெயரை கூறாமல் 16 பிராம்ணர்களை வித்யேஸ்வரர்களுடன் கூட தெற்கு பாகத்தில் பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த படலத்தில் 12வது ஸ்லோகத்தில் மூர்த்தி வித்யேச தானந்து என்று கூறப்படுவதால் இங்கு மூர்த்திகளையும் பூஜிக்க வேண்டும் என தெரிகிறது. ஆனால் அந்த மூர்த்திகள் யார் யார் என்று விளக்கப்படவில்லை. பிறகு முன்பு குறிப்பிட்டுள்ளபடி அந்தந்த மந்திரங்களால் பூஜை செய்து அந்த பிராம்ணர்களுக்கு வஸ்திரம், பஞ்சாங்க பூஷணம் முதலியவைகள் கொடுக்க வேண்டும், பிறகு ஒவ்வொருவர்களுக்கும் புதிய வஸ்திரத்தில் 1 படி அளவு எள்ளை வைத்து அந்த எள்ளுடன் கூடிய வஸ்த்திரத்தை வெங்கல பாத்திரத்தில் வைத்து அந்த பாத்திரத்தை, கரும்பு புதிய பழங்கள் இவைகளுடன் தங்க கொம்பு, வெள்ளிக்கொம்பு, இவை உடைய ஆரோக்யமான் பசுவை அந்த பிராம்ணர்களுக்கு கொடுக்க வேண்டும். துலாரோஹன விதியில் கூறப்பட்டுள்ளபடி சாதாரண பூஜை, ஹோமம், பரமேஸ்வரர் விஷயத்தில், ஸஹஸ்ர கலசங்களால் ஸ்நபனம் மஹாபூஜை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இங்கு ருத்திரன், சூரியன், வித்யேஸ்வரன் மூர்த்தி ஆகியவர்களின் தானங்களில் ஒரு வர்கத்தின் தானத்தையே செய்யவும் என்று வேறுமுறை கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாததை துலாபார முறைப்படி செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 91வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. எள்ளையும் பசுவையும் தானம் செய்யும் முறையை கூறுகிறேன். அது எல்லா விருப்பத்தையும் பூர்த்தி செய்யும். வேதிகை மண்டலத்துடன் முன்பு போல் நிர்மாணிக்க வேண்டும்.
2. அந்த மண்டபத்தின் முனையில் எள்மயமான தாமரையை நிர்மாணிக்கவும். எள்ளின் அளவு எட்டு மரக்கால் அல்லது பாரம் என்ற ஓர் அளவை உடையதாகும்.
3. வஸ்திரங்களால் அதை மறைத்து அதன் நடுவில் முப்பது நிஷ்க அளவோ அதில் பாதி அளவோ தங்கத்தாலோ
4. ஐந்து நிஷ்க அளவு தங்கத்தாலோ கர்ணிகை, காம்பு இவைகளுடன் கூடியதான தங்க தாமரையை வைக்க வேண்டும். அதன் வடக்கு திசையில் ருத்ர ஸங்க்யையாகிற பதினோரு பிராம்மணர்களை
5. பதினோரு ருத்ரர்களாக பாவித்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். கிழக்கு திசையில் பன்னிரெண்டு பிராம்மணர்களையும் அதன் மந்திரங்களால் பூஜிக்க வேண்டும்.
6. தெற்கில் எட்டு வித்யேச்வர ரூபமான வித்வான்களான எட்டு நபர்களை பிராம்மணர்களை பூஜிக்க வேண்டும். நான்கு திசைகளிலும் பதினாறு பிராம்மணர்களை சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும்.
7. அந்தந்த மந்திரங்களால் வஸ்திரத்தையும், ஆவரணதேவதைகளையும் பூஜித்து கண்டம், கைகள், காதுகளில் ஆபரணங்களுடன் கூடிய பிராம்மணர்களுக்கு
8. புது வஸ்த்ரம் ஸமர்ப்பித்து வெண்கல பாத்திரத்தில் மரக்கால் அளவு எள்ளை வைத்து ஒன்பது விதமான பழங்களுடன்
9. கரும்பையும் பசுவையும் தானம் செய்ய வேண்டும். தானம் செய்யப்படும் பசுவானது தங்க கொம்புகளுடன் கூடியதாகவும் வ்யாதி இல்லாததாகவும் வெள்ளி மயமான குளம்புகளை உடையதாகவும்
10. ஒவ்வொரு கொம்பிலும் ஒரு நிஷ்க பிரமாணம் தங்கமும் இரண்டு நிஷ்க பிரமாண தங்கத்துடன் குளம்பும் இருக்க வேண்டும். முன்பு போல் வேதிகை, மண்டலத்துடன் கூடின மண்டபத்தை நிர்மாணிக்க வேண்டும்.
11. முன்பு போல் பூஜை, ஹோமமும் அபிஷேகம் முதலியவைகளும் செய்ய வேண்டும். பதினோரு ருத்ரதானமும் பனிரெண்டு சூர்யதானமும்
12. அஷ்ட வித்யேசதானமும் அதன் அதிகரிப்பால் செய்ய வேண்டும். கழுத்து காதுகள் கைகள் முதலிய பஞ்ச அங்கங்களிலும் ஐந்து நிஷ்க அளவு தங்கத்தால் ஆபரணம் செய்ய வேண்டும்.
13. முன்பு போல் ஆசார்யனுக்கு கூறியபடி தட்சிணையை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் திலதேனு தானம் செய்யும் முறையாகிற தொன்னூற்றொன்றாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக