திங்கள், 14 அக்டோபர், 2013

படலம் 89: ஹேமதேனு தான முறை

89வது படலத்தில் ஸ்வர்ண தேனு தானமுறை கூறப்படுகிறது. முதலில் எல்லா பயத்தையும் துர்பிக்ஷத்தையும் போக்கக்கூடிய ஸ்வர்ண தேனு தானம் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு ஆயிரம், ஐநூறு, இரு நூற்றி ஐம்பது, நூறு, இந்த எண்ணிக்கை உள்ள நிஷ்க்கம் என்ற அளவுள்ள தங்கத்தினால் ஸர்வலக்ஷணத்துடன் கூடிய பசுவை அமைக்கவும். பசுவின் கொம்பு முதலான அங்கங்களில் நவரத்தினங்களால் அலங்காரம் செய்யவும். பசுவின் பத்தில் ஒரு பாகத்தில் கன்று குட்டி உருவம் அமைக்கவும் என்று கன்றுகுட்டியுடன் கூடிய பசுவின் உருவ அமைப்பு முறை கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் துலாரோஹ முறைப்படி வேதிகை மண்டலத்துடன் கூடிய மண்டபம் அமைத்து அதன் நடுவில் கன்றுடன் கூடிய பசுவை வைத்து இரு வஸ்த்திரங்களால் போர்த்தவும் தேனு காயத்திரியால் சந்தனம், புஷ்பம் இவைகளால் தேனுவை பூஜிக்கவும். துலாபார முறைப்படி சாமான்ய பூஜை ஹோமம் செய்யவும். பிறகு பரமேஸ்வரனை ஆயிரம் கலசம் முதலான கலசங்களால் கலசாபிஷேகம் செய்து மஹாபூஜை செய்யவும் என கூறப்படுகிறது. இங்கு ஹோம விஷயத்தில் சமித்து, நெய், ஹவிஸ், இவைகளால் ஒரு அக்னி ஹோமம் செய்யவும் என்று ஒரு அக்னி ஹோமம் செய்யும் விஷயத்தில் குருவிற்கு தட்சிணை கொடுக்கும் விஷயம் பற்றி கூறப்படுகிறது. முடிவில் இங்கு சொல்லப்படாத கர்மா எது உண்டோ அதை துலாபார முறைப்படி செய்யவும். இவ்வாறு 89வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. தங்க பசு தானத்தை கிரமமாக சுருக்கமாக கூறுகிறேன். எல்லாவித பாபங்கள், எல்லாவித பயங்கள் துர்பிக்ஷம் (பஞ்சம்) இவற்றை நாசம் செய்ய வேண்டும்.

2. ஆயிரம் தங்கத்தாலோ அல்லது அதில் பாதியான ஐநூறு தங்கத்திலோ அதில் பாதியான இரு நூற்று ஐம்பது தங்கத்திலோ அல்லது நூறு தங்கத்தாலோ

3. எல்லா லக்ஷணங்களோடு பசுவின் ரூபத்தை வித்வான் செய்ய வேண்டும். பத்மராகத்தை கொம்பின் நுனியிலும் வஜ்ரத்தை குளம்பின் நுனியிலும் வைக்க கூறப்படுகிறது.

4. முத்துவை நெற்றியின் நடுவிலும் வைடூர்யத்தை வால் இருக்குமிடத்திலும் புஷ்பராகத்தை பல்லுக்காகவும் அறிந்தவன் செய்ய வேண்டும்.

5. பசுமாடு இந்த விதமாக செய்து அதில் 10ல் ஓர் பாகம் கன்றுகுட்டி அதைபோல் செய்து முன்புபோல் மண்டபத்தை அடைவிக்க வேண்டும்.

6. மண்டலத்தோடு கூடின வேதிகை அதன் நடுவில் பசுமாட்டை வைக்கவும். தேசிகோத்தமர் கன்று குட்டியோடு கூடிய பசுவை இரண்டு வஸ்திரங்களினால் சுத்த வேண்டும்.

7. அதன் காயத்ரியினால் சந்தன புஷ்பங்களினால் பூஜிக்க வேண்டும். கும்பம், குண்டம் இவற்றிற்கு விசேஷமாக (அர்ச்சனை) பூஜையை செய்ய வேண்டும்.

8. பிறகு ஓர் அக்னி முறையில் ஸமித், நெய் ஹவிஸ்ஸோடு பால் முதலியவைகளினால் 1000 ஆயிரம் கலசங்களினால் தேவனை பூஜிக்க வேண்டும்.

9. ஓர் குண்ட முறையில் குருவுக்கு முப்பது நிஷ்கம் என அறியவும், இதில் கூறப்படாதவைகளை துலா ரோஹ விதியில் கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஹேமதேனு தான விதியாகிற எண்பத்தி ஒன்பதாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: