படலம் 87: கற்பக விருக்ஷ தான விதி
87வது படலத்தில் கற்பக விருக்ஷ தான விதி கூறப்படுகிறது. முதலில் நூறு நிஷ்க ஸ்வர்ணத்தினால் கற்பக விருக்ஷம் அமைக்கும் முறை நிரூபிக்கப்படுகிறது. முதலில் கற்பக விருக்ஷம் பல கிளைகளை உடையதாகவும் பத்திர புஷ்ப ஸமன்விதமாகவும் பல பழங்களை உடையதாகவும் அமைக்கப்பட வேண்டும். இங்கு கல்பக விருக்ஷத்தின் அங்கங்களான குச்சி, கிளை, பக்க கிளைகள் இலை, துளிர், முதலியவைகள் எல்லாம் நவரத்தினங்களால் செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. கலபக விருக்ஷத்தின் மேடை ஸ்படிகத்தினால் செய்ய வேண்டும். விருக்ஷத்திற்கு ஒரு முழ அளவே உயரமாக செய்யவேண்டும் என கூறப்படுகிறது. துலாரோஹ விதியில் கூறிப்பட்டுள்ளபடி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கவும். அதன் மத்தியில் கற்பக விருக்ஷத்தை ஸ்தாபித்து கற்பக விருக்ஷத்தின் அடியில் லோக பாலகர்களுடன் கூடியதாகிய லிங்கம் அமைக்கவும். லோக பாலகர்களுடன் கூடிய ஈஸ்வரனை ஆசார்யன் முறைப்படி பூஜிக்கவும். பிறகு ஈஸ்வரனின் பொருட்டும், சிவபக்தர்களுக்கும் கல்பக விருக்ஷம் தானம் செய்யப்பட வேண்டும். இங்கு சொல்லப்படாத கர்மாவை துலாரோக விதிப்படி செய்யவும். இவ்வாறு 87வது படலகருத்து சுருக்கமாகும்.
1. கல்பக மர தானத்தைக் கூற இருக்கிறேன், நூறு நிஷ்க தங்கத்தால் மரத்தை
2. பல கிளைகளுடன் கூடியதும் இலை, புஷ்பங்களுடன் கூடியதும், பல விதமான பழங்களுடன் கூடியதும், நல்ல அழகுடன் கூடியதுமான
3. கற்பக வ்ருக்ஷத்தை நிர்மாணிக்க வேண்டும். அதன் கிளைகளில் முத்துக்களால் செய்யப்பட்ட மாலையும் தொங்கவிட்டு மரகதத்தால் பட்டைகளை விசித்ரமாக நிர்மாணிக்க வேண்டும்.
4. பவழங்களால் தளிர்களை தயாரிக்க வேண்டும். பத்மராகத்தால் விதவிதமான பழங்களை நிர்மாணிக்க வேண்டும்.
5. கல்ப விருக்ஷத்தின் அடிபாகத்தை, நீலக் கற்களால், நிர்மாணிக்கவும். அடிக்கிளையை வைரத்தால் தயாரிக்கவும், மரத்தின் நுனியை வைடூரியத்தாலும், புஷ்யராகத்தாலும்
6. மரத்தின் உச்சியை, கோமேகத்தால் செய்யவும். மரத்தின் மேல் கிளையை சூர்ய காந்த கற்களாலோ
7. கல்பக விருக்ஷத்தின் வேதியை சந்திர காந்தக் கற்களாலோ அல்லது ஸ்படிகத்தாலோ நிர்மாணிக்கவும். கல்பக விருக்ஷத்தின் உயரம் (சுற்றளவு) சாண் (குறிப்பு விதஸ்தி பெருவிரலுடன் பரப்பப்பட்ட விரல்கள் உள்ள இடம்)
8. எட்டு கிளைகளின் அளவும், விஸ்தரிப்பும் மேல் நோக்கி இருக்க வேண்டும். கல்பக வ்ருக்ஷத்தின் அடியில் திக்பாலர்களுடன் கூடிய சிவலிங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.
9. வேதிகையும், மண்டபத்தை நிர்மானித்து மண்டலத்துடன் கூடியதாகவோ அல்லது மண்டலம் இல்லாமலோ அதன் நடுவில் கல்பக விருக்ஷத்தை ஸ்தாபித்து
10. திக்பாலர்களின் ஆவரணங்களுடன் கூடிய பரமேஸ்வரனை பூஜிக்க வேண்டும். சிவார்ப்பணம் செய்து கல்பக விருக்ஷத்தை சிவாம்சமான சிவபக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
11. இங்கு சொல்லப்படாததை துலாபாரத்தில் கூறியது போல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கல்பதான விதியாகிற எண்பத்தி ஏழாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக