திங்கள், 14 அக்டோபர், 2013

படலம் 82: ரக்ஷ பந்தன விதி

82வது படலத்தில் ரக்ஷõபந்தன விதி கூறப்படுகிறது. அதில் முதலாவதாக அரசர்களின் ரக்ஷõபந்தன முறை கூறப்படுகிறது. எல்லா மங்கள கரமான கார்யங்களிலும் குறிப்பிட்ட தினத்தின் முன் இரவில் ரக்ஷõபந்தனம் செய்யவேண்டும் என்று ரக்ஷõபந்தன விதியின் காலம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு சுத்தமான ஆசார்யன் அங்கந்நியாசம், கரந் நியாசம் செய்து தாம்பாளத்தை ஸ்தண்டிலத்தின் மேல் வைத்து புண்யாக வாசனம் முதலாக பிரோக்ஷித்து யக்ஞசூத்ர வலயம் நூதன ரக்ஷõபந்தனம் ஸ்வர்ண மயமாக பத்மம் ஸ்தாபித்து அர்க்ய ஜலத்தால் அஸ்திரமந்திரத்தை கூறி பிரோக்ஷித்து பாத்திரத்தில் வைக்கப்பட்ட உபவீதம் முதலிய பொருள்களை முறைப்படி மந்திரங்களால் அபிமந்திரிக்கவும் என்று கூறி அபிமந்திரனத்தின் மந்திரவிஷயம் கூறப்படுகிறது. இவ்வாறு மந்திரத்தினால் அபிமந்திரிக்கப்பட்டதும் சந்தனம் பூசப்பட்டதும் ரக்ஷõபந்தனம் விபூதியையும் ஈசான திக்கில் வைக்கவும். ஸ்வர்ணபுஷ்பம் முதலியவைகளை மத்ய திக் முதல் வடக்கு திக் வரை வைக்கவும் மந்திர பூர்வமாக தாம்பூலம் கொடுக்கவும். அல்லது தங்கத்தால் செய்யப்பட்டதோ அல்லது வெள்ளியால் செய்யப்பட்டதோ வெரும் அருளும் புல்லையோ ஆக்னேய திக்கிலோ நிருதி திக்கிலோ வைத்து ஹ்ருதய மந்திரத்தினால் அபிமந்திரிக்கவும் என்று வேறு விதமாக கூறப்படுகிறது. பிறகு அந்த பாத்திரத்தை வஸ்திரங்களால் மூடி எல்லா அலங்காரத்துடன் கூடிய யானையின் மேல் ஏற்றி நகரத்தை வலம் வரவும் பிறகு ஆசார்யன் ஜோஸ்யன், முதலான பிராம்ணர்களுடன் கூடி எல்லா மங்கள வாத்யங்களுடனும் சுத்த மானவரும் விபூதி அணிந்தவரும் வெண்பட்டு உத்தரீயம் தரித்தவரும் எல்லா ஆபரணமும் அலங்காரமும் உடையவரும் ஆன ராஜாவை சிம்மாசனம் முதலிய ஆசனங்களில் கிழக்கு முகமாக அமர்த்தவும் பிறகு முன்பு மந்திரிக்கப்பட்ட புண்யாக ஜலத்தினால் பிரோக்ஷித்து ஸ்வர்ண புஷ்பம் முதலியவைகளை மிருத்யுஞ்ஜய மந்திரம் கூறி எல்லா வற்றையும் அரசனிடம் கொடுத்து அவனுடைய வலக்கையில் வடக்கு முகமாக இருந்து கொண்டு மந்திர பூர்வமாகவும் விபூதி அளிப்பதன் மூலமும் ரக்ஷõபந்தனம் செய்யவும் என கூறப்படுகிறது. அல்லது ஆசார்யன் ஈசாந முதலிய மந்திரங்களினால் முறைப்படி எல்லாவற்றையும் பூஜித்து சுற்றிலும் லாஜ புஷ்பங்களுடன் கூடி தேங்காய்களை ஸ்தாபனம் செய்து பிருஹத்சாம என்ற மந்திரம் கூறி ரக்ஷõபந்தனம் விதிப்படி செய்யவும் என வேறு விதமாக கூறப்படுகிறது. பிறகு கர்த்தா, தேசிகன், ஜோஸ்யன், புரோஹிதன் மற்ற எல்லா பிராம்ணர்களையும் பூஜிக்கவும் என கூறுகிறது. முடிவில் மங்கள வாத்ய சப்தங்களுடன் இந்த விதிப்படி தேவ தேவனான பரமேஸ்வரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் நான்கு வர்ணத்தவர்களுக்கும் ரக்ஷõபந்தனம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறு 82ம் படல கருத்து சுருக்கமாகும்.

1. மங்களகரமான எல்லா கர்மாக்களிலும் அரசர்களுக்கு ரக்ஷõபந்தனத்தைக் கூறுகிறேன். மங்களகர்மா செய்வதற்குக் குறிப்பிட்ட முதல்நாள் இரவு ரக்ஷõபந்தனம் (காப்புகட்டு) செய்யவேண்டும்.

2. ஆசார்யன் சுத்தனாய் ஸகளீகரணம் செய்து கொண்டு நெல்லினால் ஸ்தண்டிலம் கல்பித்து (ஏற்படுத்தி) அதன்மேல் தம்பாளத்தை வைத்து,

3. வெண்மையான அரிசியின் மேல் ஸ்தாபிக்கப்பட்ட புண்யாக தீர்த்தத்தால் பூணூல், காப்பு, மோதிரம் இவற்றைப் பிரோக்ஷணம் செய்து,

4. தங்கமயமான காப்பையும் ஸ்வர்ணபுஷ்பத்தையும் அஸ்திர மந்திரத்தைச் சொல்லி அர்க்யத்தால் சுத்தம் செய்து அரிசியின் மேல் வைத்து,

5. சந்தன புஷ்பங்களாலும், பூஜித்து கீழ்வரும் மந்திரங்களால் அபிமந்தரணம் செய்ய வேண்டும். ஈசானமந்திரத்தால் தலையில் ஸ்வர்ண புஷ்பத்தையும், கவசமந்திரத்தால் பூணூலையும்,

6. ஹ்ருதய மந்திரத்தால் காப்பையும், மோதிரத்தையும் அபிமந்திரணம் செய்ய வேண்டும். அல்லது எல்லாவற்றையுமே அகோர மந்திரத்தால் அபிமந்திரணம் செய்யலாம்.

7. காப்பையும் விபூதியையும் ஹ்ருதயமந்திரத்தால் அபிமந்த்ரணம் செய்து அவைகளை சந்தனத்தால் பூசி ஸ்தண்டிலத்தின் ஈசானதிக்கில் வைக்க வேண்டும்.

8. நடுவிலிருந்து வடக்கு பாகம் வரை புஷ்பம் முதலியவைகளை வைக்கவும். தத்புருஷ மந்திரத்தைச் சொல்லி தாம்பூல ஸமர்பணம் செய்ய வேண்டும்.

9. தங்கத்தால் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட காப்பை அருகுநுனி அளவிலாவது செய்து அதை ஸ்தண்டிலத்தின் தென்கிழக்கிலோ அல்லது தென் மேற்கிலோ ஹ்ருதயமந்திரத்தால் அபிமந்த்ரணம் செய்ய வேண்டும்.

10. இவ்வாறு பூஜிக்கப்பட்ட காப்பை விபூதியுடன் கூட மோதிரம், பூணூல் இவற்றையும் தாம்பாளத்தில் வைத்து வஸ்திரத்தால் மூடி எல்லா அலங்காரத்துடன் கூடியதாக யானைமேல் அதை வைத்து நகர்வலம் வந்து பிறகு

11. ஆசார்யன் நல்லவேளையில் ஜோஸ்யர் புரோஹிதர், மற்றும் பிராம்மணர்களுடன் எல்லா மங்களங்களும் கூட

12. காலைக்கடன்களை முடித்து உடல் முழுதும் விபூதியையணிந்தவராயும் வெண்பட்டு உடுத்தி எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவராயுமுள்ள

13. அரசனை கிழக்கு முகமாக ஸிம்மாஸனத்தில் அமரச் செய்து புண்யாஹதீர்த்தத்தால் பிரோக்ஷித்து பூவினால் முன்பு சொன்ன மந்திரங்களாலும் பூஜித்து

14. எல்லாவற்றையும் (மோதிரம், பூணூல்) அரசனிடம் கொடுத்து ம்ருத்யுஞ்ஜய மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு ஆசார்யன் வடக்கு முகமாக இருந்து அரசனின் வலது கையில் காப்புகட்டுதலை செய்ய வேண்டும்.

15. ஸர்வேச்வரனை பிரார்த்தித்து விபூதியை கொடுத்தோ அல்லது முறைப்படி ஈசாநன் முதலிய மந்திரங்களினால் விபூதியை கொடுக்க வேண்டும்.

16. ப்ருஹத்ஸாம என்ற மந்திரத்தை சொல்லி விபூதியை கொடுக்க வேண்டும். பொறி, புஷ்பங்கள் இவைகளுடன் கூட தேங்காய்களை

17. சுற்றிலும் வைத்தோ காப்பு கட்டுதலைச் செய்யவும். பிறகு யஜமானன் ஆசார்யனையும் ஜோஸ்யரையும் புரோஹிதரையும் பூஜிக்க வேண்டும்.

18. எல்லா பிராம்ணர்களையும் ஸ்வஸ்தி மங்கள வாசகத்தோடு கவுரவிக்க வேண்டும். இந்த முறைப்படியே ஸர்வேச்வரனான பரமேச்வரனுக்கும் காப்பு கட்டுதலை செய்யவேண்டும்.

19. இவ்விதமே மற்ற தேவதைகளுக்கும் பிராம்மண க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர என்ற நான்கு வர்ணத்தாருக்கும் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்த்ரத்தில் ரக்ஷõ பந்தன விதியாகிற எண்பத்தி இரண்டாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: