படலம் 86: தங்க பூமி தான முறை
86வது படலத்தின் ஸ்வர்ண பூமிதானம் முறை கூறப்படுகிறது. பிறகு 7 த்வீபம், 7 சமுத்திரம், பர்வதம் இவைகளோடு கூடியதும் எல்லா தீர்த்தத்தோடு கூடியதும் மத்தியில் மேருமலையுடன் கூடியதான பூமியை ஆயிரம், தங்கங்களால் ஒரு முழங்கை அளவு செய்து அதை 9 கண்டமாக்கி பல முனிவர்கள் கூடியதாக பாவிக்கவும். துலாரோக முறைப்படி பூஜை ஹோமம் செய்யவும். மேருமலை முதலியவைகள் அந்தந்த பீஜமந்திரத்தினால் வரையவும். பரமேஸ்வரனை துலாரோஹன முறைப்படி ஆயிரம் கலசம் முதலியவைகளால் ஸ்நபனம் செய்து மஹாபூஜை செய்யவும், பிறகு அந்த பூமியை, சிவன் முதலானவர்களுக்கு கொடுக்கவும் என்று செயல்முறை விளக்கம் கூறப்படுகிறது. இவ்வாறாக 86வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. தங்கமயமான பூமிதானத்தை கூறுகிறேன், ப்ராம்மணோத்தமர்களே, ஆயிரம் ஸ்வர்ணங்களால் நான்கு மூலைகளுடன் கூடியதும்
2. ஒரு முழ அளவுள்ளதும் ஏழு தீவுகளுடன் கூடியதும் ஸமுத்ரம், மலைகளுடனும் எல்லா தீர்த்தங்களுடன் கூடியதும்
3. நடுவில் மேரு பர்வதத்துடனும் கூடியதும் அழகாகவும் பல முனிவர்களுடனும் ஒன்பது கண்டங்கள் நிறைந்ததாகவும் உள்ள பூமியை நிர்மாணிக்க வேண்டும்.
4. முன்போலவே தேவபூஜையும் ஹோமமும் செய்ய வேண்டும். மேரு முதலியவைகளை அதன் பீஜாக்ஷரங்களால் ஆசார்யன் பூஜிக்க வேண்டும்.
5. பரமேஸ்வரனுக்கு ஆயிரம் கலசங்களால் அபிஷேகம் செய்யவும். முன்பு கூறியது போல் பூஜைகளை செய்ய வேண்டும்.
6. தங்கமயமான பூமியானது, சிவஸ்வரூபமாக விளங்கும் பெரியோர்களுக்கு தானமாக அர்ப்பணிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சுவர்ண பூமிதான முறையாகிற எண்பத்தியாறாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக