திங்கள், 12 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 25

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 25




வாழியெதிராசன் வாழியெதிராசன்

கூரேசர்

தேவப்பெருமாள் திருவுளத்தை அறிந்த கூரத்தாழ்வான், இனி சகல ஐஸ்வர்யங்களையும் துறந்து இராமானுஜரின் திருவடி தரிசனம் பெறுவோம் என்று தன் தர்மபத்தினி ஆண்டாளை அழைத்துக் கொண்டு காட்டு மார்க்கமாகச் சென்றார்.

இரவுப்பொழுதானது. ஆண்டாள் கொஞ்சம் பயத்துடன் ஓர் இடத்தில் தங்கிவிட்டுச் செல்லலாம் என்றாள். அதைக்கேட்ட கூரத்தாழ்வான் "மடியில் கனமில்லை. எல்லாம் துறந்தாகிவிட்டது. எதற்குப் பயப்பட வேண்டும்? எல்லா சொத்தையும் துறந்துட்டு வந்துட்டோமே! இன்னும் எந்தச் சொத்தை எடுத்துட்டு வருகிறாய்?" என்றார் கூரேசர்.

"எல்லாவற்றையும் விட்டு வந்துட்டேன். ஆனால், நீர் நித்யப்படி அமுது செய்கின்ற தங்கக் கிண்ணத்தை மட்டும் எடுத்துட்டு வந்தேன்" என்றாள் ஆண்டாள். தர்மபத்தினிக்கு தன் கணவர் மீது ஆசை இருக்குமோ இல்லையோ? அந்த ஆசையால்தான் ஆண்டாள் இவ்வாறு செய்தாள்.

அப்போது கூரேசர் கூறியது, "மொத்த சொத்தும் இழந்துமே அதெல்லாம் தேவையில்லை. இனி நம் இராமானுஜர் திருவடி தரிசனம் ஒன்றே போதும்"  என்றார். "இந்தப் பாத்திரம் மட்டும் எதற்கு?" என்று தங்கக் கிண்ணத்தை தூர வீசி எறிந்துவிட்டார். "பயம் முற்றும் ஒழிந்தது. வா போகலாம்" என்றார்.

கூரத்தாழ்வான் பற்றி திருவரங்கத்து அமுதனார் 'முக்குறும்பு அறுத்தவர் கூரத்தாழ்வான்' என்கிறார். தனமதம், வித்யா மதம், ஆபிஜாத்யம் மதம் தான் நிரம்ப படித்திருக்கிறோம் என்ற மமதை கூரத்தாழ்வானுக்கு துளியும் கிடையாது. நாம் அடியார்க்கு அடியார் என்று இருந்தவர்.

இப்போது இராமானுஜரிடம் வந்து சேர, இராமானுஜர் அவரைத் தழுவிக் கொண்டார். ஸ்ரீ வைஷ்ணவத்தைப் பரப்ப அருந்துணை கிடைத்துவிட்டது என்று மனம் மகிழ்ந்தார்.

 முதலியாண்டான்

முதலியாண்டான் இராமானுஜரின் மருமகன். திரிதண்டம் வாங்கும் பொழுது, சந்நியாசிகள் எல்லாரும் சொல்லணும் 'சந்நியஸ்தம் மய:' என்னால் எல்லாம் துறக்கப்பட்டது என்று. ஆனால், இராமானுஜரோ அனந்தசரஸ் புஸ்கரணியில் ஸ்நானம் செய்து, தேவப்பெருமாளிடம் இருந்து திரிதண்டத்தை பெற்றுக்கொள்ளும் பொழுது 'நம் மருமகன் முதலியாண்டானைத் தவிர மற்ற அத்தனையும் துறந்தோம்' என்றார்.

அவர் மருமகன் என்பதற்காகத் துறக்காமல் இருக்கவில்லை. பரம பாகவதர் என்ற காரணத்தால் தான் துறக்காமல் இருந்தார். சொத்துக்களைத்தான்  துறக்க வேண்டும். பக்தர்களைத் துறக்கவேண்டும் என்று எந்த சந்நியாசத்திலும் சொல்லவில்லை.

முதலியாண்டானும், கூரேசரும் இராமானுஜரின் திருவடிகளை அடைய வந்து சேர்ந்தார்கள். பஞ்ச சம்ஸ்காரங்களைப் பெற்றுக் கொண்டு, இராமானுஜரிடத்திலே நித்யமாக காலட்சேபம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது தான் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. அது என்ன சம்பவம் என்பதை நாளை அறியலாம்.
ஒரு நாள் திருவரங்கம் வட காவிரிக் கரையில் அன்று பலத்த வாக்குவாதம்!
பல வைணவர்கள், சில பொதுமக்கள், சில அறிஞர்கள், சில புலவர்கள் போதாதா வாக்குவாதம் தோன்ற இருப்பினும் அரணிக் கட்டையைக் கடைந்தால் தானே, வேள்விப் பொறி பறக்கும்!
அதனால் தவறில்லை!
அத்வைதம், விசிஷ்டாத்வைதம், இன்னும் பல கருத்துக்கள் குறித்த சூடு பறக்கும் விவாதம் கடைசியில் ஒரு இடத்தில் வந்து நின்று விட்டது!
யார் ஜகத்குரு?
அவரவர் அவர்களுக்குப் பிடித்தமான பேர்களைச் சொல்கிறார்கள்!
சரி வம்பே வேணாம்!
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதாசார்யன் அவனே ஜகத்குரு என்று ஒரு முடிவுக்கு வர...
கூரத்தாழ்வார் அலறி அடித்துக் கொண்டு, காவிரியை நோக்கி ஓடுகிறார்!
கைகளை உரக்கத் தூக்கி அலறுகிறார்!
என்னமோ ஏதோ-ன்னு சகலரும் பதற...
கூரேசர் பெருங் குரலெடுத்து கத்துகிறார்! சுலோகமாய் வர்ஷிக்கிறார்!
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு!
ச ஏவா சர்வ லோகானாம்! உத்தார்த்தன சம்ஸயா!!
மக்களே, இந்தப் பேச்சும் தேவையோ? கீதாசார்யனா ஜகத்குருவா?
அத்தனை அத்தியாயம் சொல்லியும், சரணம் வ்ரஜ என்று சொல்லியும் பார்த்தனும் சரணம் அடைந்தானோ?
இல்லையே!!
போரில் வென்று, ராஜ்ஜியம் ஆண்டு, போகங்களில் இருந்தானே அன்றி, சரணாகதி செய்யவில்லையே!
கீதையே நேரில் கேட்டவனுக்கே
இந்தக் கதி!
ஆனால் நம் இராமானுசர் நம் அத்தனை பேரையும் கீதையை நேரில் கேட்காமலேயே உத்தாரணஞ் செய்யவில்லையா?
இத்தனை பேர்கள் சரணாகதி செய்துள்ளோமே!
அரங்கனின் இரண்டு விபூதிகளான லீலா விபூதியும், நித்ய விபூதியும் அவரிடம் அல்லவோ கொடுத்து வைத்துள்ளான்!
கண்ணனிடமா அவை இருக்கின்றன?
இதில் இருந்தே தெரியவில்லையா?
யார் ஜகத்குரு என்று கேள்வியும் எழுவதா?
அதைக் கேட்டு அடியேன் அழுவதா?
இராமானுஜ சம்பந்தத்தால் சம்சார ஜலத்தை ஸ்தம்பம் செய்தவன்,
காவேரி ஜலத்தை ஸ்தம்பம் செய்யேனோ?
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு!"
அனைவரும் பாய்ந்து சென்று, கூரேசனை நீரில் மீட்டு, கரைக்கு எடுத்து வருகிறார்கள்.
கரையில் வந்தவுடன் அனைவரும் கூரேசனிடம் மன்னிப்பு கேட்க,
"ஆசார்யரை ஒருநாளும் மறுதலிக்காமல், இராமானுஜ சம்பந்தம் உடையவர்கள் ஆவீர்" என்று கூரத்தாழ்வார் மொழிஞ்சருளினார்!
"* நம் இராமானுசருக்கு முன் வந்த ஆசார்யர்கள் அனைவரும் = அனுவிருத்தி பிரசன்னாச்சார்யர்கள்!
* நம் இராமானுசன் என்னும் ஆச்சார்யனோ = க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்!
அதாவது, அடிப்படை ஞானம், அனுஷ்டானம், இதில் தேறியவர்களுக்கு மட்டுமே உபதேசம் காட்டி அருளியவர்கள், அனுவிருத்தி பிரசன்ன ஆச்சார்யர்கள்!
ஆனால் நம் உடையவர் அன்றோ,
இந்த ஓராண்வழி என்னும் சங்கிலியை அறுத்து, ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதிச்சருளினார்கள்? = ஆசை வையும்! அது போதும்!
அதனால் அன்றோ, அடியோங்கள் உய்ந்தோம்! அதனால் அன்றோ, அரங்கன் உய்ந்தான்! "
இப்படிக் கூரேசன் கூற, கூட்டம் முழுதும், யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு! என்று கூவிக் குளிர்ந்தது!
ஓராண் வழியாய் உபதேசித்தார்! முன்னோர்
ஏரார் எதிராசர் இன் அருளால்
பாருலகில்
ஆசை உடையோர்க்கு எல்லாம், ஆரியர்காள், கூறும்! என்று
பேசி வரம்பு அறுத்தார் பின்!
இப்படியான ஆசார்ய அத்யந்த பக்தி கொண்டவர் கூரேசன்!
ஆசார்யரை விட வயதில் மூத்தவாராய் இருப்பினும், ஆசார்யரை நொடிப்பொழுதும் சிந்தையில் கீழ் இறக்காத இந்தப் பேருள்ளத்தை என்ன என்பது?
கூரேசரை அணுக்க மாணவராய்ப் பெற்ற உடையவர் நற்பேறா?
இராமானுசரை அணுக்க ஆசார்யனாய்ப் பெற்ற கூரேசன் நற்பேறா??
கூரத்தாழ்வார் இராமானுச முனிகள் திருவடிகளே சரணம்!

ஸ்ரீராமாநுஜ சஹஸ்ராப்தி
(1001ஆம் ஆண்டு)-பதிவு 227
🙏🙏🙏🙏🙏
நாளை,தை ஹஸ்தம்(26/01)
ஶ்ரீகூரத்தாழ்வானின் 1009 ஆவது திருநட்சத்திரம்-பாகம்1/3
🔔🍀🌹🌷🌺🌻🔔
"மொழியைக் கடக்கும் பெரும்புகழான்,வஞ்ச முக்குறும்பாம்,
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ்வான்,சரண் கூடிய பின்
பழியைக்கடத்தும்,இராமானுச புகழ் பாடியல்லா,
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே"
(இரா.நூற்.7)

கூரத்தாழ்வான் 10 தகவல்கள்:
👏👏👏👏👏👏👏👏
1.மொழிகளால் விவரிக்க முடியாத புகழுடைய,ஆழ்வான்--
i)பெரும்செல்வம்- பெருந்தேவித் தாயாரும்,
தேவப்பெருமாளுமே வியக்கும் வண்ணம் பெருஞ் செல்வந்த ராய்த் திகழ்ந்தார்.நித்யமும்,
அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரையில் அவரதுதிருமாளிகை யில் பாகவத ததீயாராதனை நடந்து கொண்டே இருக்கும்.இன்றும் கூரம் கிராமத்தைச் சுற்றியுள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பத்திரங்கள் கூரத்தாழ்வான் பெயரிலேயே உள்ளது.(அவற்றை உழுது பயிரிடும் மக்கள் ஆழ்வான் சந்நிதிக்கு, குத்தகையாக விளைபொருட் களில் ஒரு பகுதியைச் சமர்ப்பிக்கிறார்கள்.)

ii)உயர்ஞானம்-- பல சாஸ்த்ரங்களையும் சிறப்பாகக் கற்று, சிறந்த பண்டிதராக விளங்கினார்;ராமானுஜருக்கே ஏதேனும் சந்தேகம் வந்தால் ஆழ்வானைக் கேட்பாராம்!

iii)உயர்ந்த அந்தணர் குலம்-அதிலும் ஒரு பிரதேசத்தை ஆளும் சிற்றரசராக விளங்கியது ஆகிய 3 செருக்குகளும், அறவே அற்றவர்.
🙏🌷🌺🌻🙏
2) பகவத் கீதை,13 ஆம் அத்யாயம்,ஸ்லோகம் 7-11ல், ஸ்ரீகிருஷ்ணபிரான், ஒரு பகவானை உணர்ந்த, உயர்ந்த ஜீவாத்மாவின் 20 குணங்களை விளக்குகிறார்.அந்த குணங்கள் அனைத்தும் பூரணமாக நிரம்பப்
பெற்றவர் நம் கூரத்தாழ்வான்:

"அமானித்வம்- பணிவு;
அதம்பித்வம்- செறுக்கின்மை:
அஹிம்சை- வன்முறையின்மை;
ஷாந்திர்- சகிப்புத்தன்மை;
ஆர்ஜவம்-நேர்மை;
ஆசார்ய உபாஸனம்- எப்போதும் ஆசார்யரையே சார்ந்திருப்பது;
சௌஸம்-தூய்மை(அகம்/புறம்);
ஸ்தைர்யம்-மன உறுதி;
ஆத்மவினிக்ரஹ-வைராக்யம்
-சுயகட்டுப்பாடு;
இந்த்ரிய அர்த்தேஷு-வைராக்யம்-புலன்களின் ஆசைகளைத் துறத்தல்;
அனஹங்கார- தற்பெருமை கொள்ளாமல் இருத்தல்;
ஜன்ம/ம்ருத்யு/ஜரா/வ்யாதி/துக்கா தோஷானுதர்சனம்--
எப்போதும் இந்த சமுதாயத்தில் உள்ள கஷ்டத்தையே பார்ப்பது;
அஸக்திர்- பற்றின்மை;
புத்ரதாரக்ருஹாதி ஷு அன்பிஷ்வங்க-மனைவி, மக்கள்,வீடு முதலியவற்றில் பற்றின்மை;
இஷ்ட,அனிஷ்ட உபபத்திஷு
நித்யம் ஸ சமசித்தத்வம்-விருப்பு/வெறுப்புற்று சம நிலையுடன் இருத்தல்;
மயிசாநந்ய யோகேன பக்தர்
அவ்யபிசாரணி-என்(கண்ணபிரான்) மேல் மட்டுமே நிலையான பக்தி;
விவிக்ததேச சேவித்வம்- தனிமையான இடத்தில் வசித்தல்.
அரதிர்ஜனஸம்ஸதி- பொதுமக்களிடம் பற்றில்லாமல் இருத்தல்;
அத்யாத்ம ஞான நித்யத்வம்-
நித்யமான ஆத்ம ஞானம்.
தத்வ ஞான அர்த்த சிந்தனம்-
உண்மையான அறிவைப் பற்றிய சிந்தனை.
🙏🙏🙏🙏🙏🙏
3.கூரம் பிரதேச ராஜாவான அவர்,ஒரு நாள் இரவு,நகர சோதனைக்காகத் தனியே சென்ற போது,ஒரு ஏழையின் வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டது.விவரம் கேட்ட போது,
அந்த வீட்டார்,திருமண வயதடைந்த தம் மகள்,ஜாதகப் படி,கணவனோடு கூடினால்,
கணவன் மரணம் அடைவார்
என்பதால்,திருமணம் செய்ய முடியாத கவலை என்றனர்.
ஆழ்வான்,அந்தப் பெண்ணைத் தானே மணம் செய்துகொண்டு அவர்கள் துயர் தீர்த்தார். இறுதிவரை ஆழ்வானும்.அவர் மனைவி ஆண்டாளும்,தேக சம்பந்தம் இல்லாமல் வாழ்ந்தனர்.
🍀🌳🌲🌾🌴
4.அவருடைய திருமாளிகையில் காலையிலிருந்து,இரவு வரை,
தொடர்ந்து,நாளும்,அன்ன
தானம் ந்டைபெற்றது.இரவில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் நடை சாற்றிய பின் தான் இவர் மாளிகைக் கதவுகள் மூடப்படும்.
ஒரு நாள்,கோவிலில் சற்று தாமதமாகி விட்டது.ஆனால் ஆழ்வான் மாளிகைக் காவலாளிகள் எப்போதும் போல குறித்த நேரத்தில் கதவுகளை மூடினர்.பெரிய மணிகள் பொருத்தப்பட்ட கதவாதலால்,கதவின் சப்தம் வரதராஜப் பெருமாளுக்கும் கேட்டது.பெருந்தேவித்தாயார்பெருமாளிடம்,"என்ன கோவில் கதவு சப்தம் போல் இருக்கி றதே"என்று கேட்க, பெருமாள்
அவை கூரத்தாழ்வான் வீட்டுக் கதவுகள் அடைக்கும் சப்தம் என்றார்.'ஆழ்வான் அவ்வளவு செல்வம்படைத்தவரோ' என்று வியந்தார் தாயார்.இந்த தெய்வீக உரையாடலைச் செவியுற்ற திருக்கச்சி நம்பிகள் (பெருமாளுக்கு ஆலவட்டம்-விசிறிவீசும் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தவர்) மறுநாள்ஆழ்வானிடம்,இதைப்பற்றி உகந்து கூற,ஆழ்வான் மிகத் துக்கமடைந்தார்!! (அவருடைய கைங்கர்யம் பேசப்பட வேண்டி யிருக்க, அழியும் செல்வம் போற்றப் பட்டதே என்று). செல்வம் இறைவனை அறிய/அடைய தடையாக இருப்பதால் உடனே தம் செல்வமனைத்தும் துறந்து,
உடுத்தியஉடைகளுடன்,சென்று இராமானுஜரைத் தஞ்சம்
அடைந்தார்.ஆழ்வானுடன் புறப்பட்ட ஆண்டாள் நடந்து செல்லும் காட்டு வழியில்,
மடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே வந்தார்.இதைக் கவனித்த ஆழ்வான்,"மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்,ஏதாவது வைத்திருக் கிறாயா?" என்று, வினவ,அவர் "தேவரீர் உணவருந்துவதற்காக (பயன்படுத்தும்),பொன்வட்டிலை எடுத்து வந்தேன்"என்றார்
ஆழ்வான் உடனே பொன் வட்டிலை வாங்கி,காட்டில் வீசிவிட்டு,இப்பொழுது பயமின்றி நடக்கலாம் என்றார்.
👏👏👏👏👏👏
5.இவரின் இயற்பெயர் "ஶ்ரீவத்சாங்கமிஶ்ரர்",தமிழில் "திருமறு மார்பன்"(இவர் மார்பிலும் திருமறு இருந்தது ).
ராமாவதாரத்தில்,ஆதிசேஷனாகிய லக்ஷ்மண்,பகவானுக்குத் தொண்டுபுரிந்தமைக்காக,இந்த அவதாரத்தில் ஆதிசேஷ அவதாரமாகிய இராமானுஜ ருக்குத் தொண்டு புரிய, ராமபிரானின் அம்சமாகக் கூரத்தாழ்வான் அவதரித்தார்.
🔔🔔🔔🔔🔔🔔
6.இவர்திருவாய்மொழிக்கு,அதி அற்புத வ்யாக்யானம் செய்யும் போது,அதன் மேன்மையில், உருகிக் கரைந்து, மூர்ச்சித்து விடுவாராம். இதைச் செவியுற்ற ராமாநுஜர்"கூரேசர் பாவம்/நிஷ்டை அடியேனுக்கு இல்லாமல் போயிற்றே" என்றாராம்.அவர் திருவாய் மொழியில் ஆழ்ந்து திளைப்ப தால் ராமானுஜர்,அவரை 'ஆழ்வான்'என்று கொண்டா டினார்.அப்போதிருந்து அவர் "கூரத்தாழ்வான்" என்றழைக் கப்பட்டார்.
👏👏👏👏👏👏
7.முதலாம் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில்,சைவம் மேலோங்கியிருந்தது.வைணவத்தை அழிக்க நினத்த மன்னன், இராமானுஜரை சைவமே
பெரிது,என்று ஒத்துக்கொள்ள வைத்துவிட்டால்அனைவரும் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்றெண்ணி,அவரை அழைத்து வர படை வீரர்களை அநுப்பினான்.இதை அறிந்த கூரத்தாழ்வான்,ராமானுஜரின் காஷாய உடைகளைத் தாம் அணிந்து, அரசவைக்குச் சென்று, தாமே ராமானுஜர் என்று கூறி வைணவத்தின் உயர்வை பலவாறு எடுத்து
ரைத்து,வைணவமே உயர்ந்தது என்று வாதிட்டார். அரசவையில் இருந்த, நாலூரான் என்பவன் அரசனிடம்,வந்திருப்பவர் ராமாநுஜர் அல்ல; ஆழ்வானே ராமாநுஜர் வேடத்தில் வந்திருக்கிறார் என்றான். பெரிதும் சினமடைந்த அரசன் ஆழ்வான் கண்களைப் பிடுங்குமாறுஆணையிட்டான்.
'உன்னுடைய ஆட்கள் என்னை என்ன தொடுவது?என் சம்பிரதாயத்தை நிலை நாட்டுவதற்காக,நானே என் கண்களைப் பிடுங்கி விடுகிறேன்' என்ற,ஆழ்வான் தன் கண்களைத் தானே பிடுங்கி எறிந்தார் (இராமானுஜரை ஆழ்வானது வெள்ளை உடைகளை உடுத்தச்செய்து,மேல்கோட்டை
க்கு,அனுப்பி விட்டார்)
👁👁👁👁👁👁👁👁👁👁
8.ஶ்ரீரங்கம் வந்தடைந்த ஆழ்வான்,பெரிய பெருமாளைச் சேவிக்கச் சந்நிதிக்குச் செல்ல,அங்கு காவலாளிகள்,
இராமானுஜ சம்பந்தமுடைய யாரையும் சந்நிதிக்குள் விடக்
கூடாதென்பது மன்னனின் கட்டளை என்று மறுக்க,தனக்கு தன் ஆச்சார்யன் எம்பெருமா னார் தான் வேண்டும் என்றும்,
எம்பெருமான் வேண்டாம் என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்று விட்டார்!
👐👐👐👐👐👐👐👐
9.ஶ்ரீரங்கத்தை விட்டுத் திருமாலிருஞ்சோலை சென்றார்,அங்கு அழகர் மீது"ஸுந்தர பாஹுஸ்தவம்"
என்ற கிரந்தத்தை இயற்றினார்.அவர் இயற்றிய பிற கிரந்தங்கள்:

ஶ்ரீவைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ ஸ்தவம், ஶ்ரீவரதராஜ ஸ்தவம்,ஶ்ரீஸ்தவம்,
என்னும் கிரந்தங்கள். 'லக்ஷ்மிநாத ஸமாரம்பாம்',
'யோநித்யம் அச்யுத பதாம்புஜ'என்னும் தனியன்கள்
📖📃📚📙📘📗.
10.அரங்கனின் பேரருள் பெற்ற
அரவணைப் பிரசாதத்தை ,
உட்கொண்டதால்,இவர் மனைவியார், ஆண்டாள்,
பிள்ளைப் பேறு அடைந்து,ஶ்ரீ பராசர பட்டர்,ஶ்ரீ வேதவியாஸ் பட்டர் என்ற பெரும் ஆச்சார் யார்களை திருக்குமாரர்களா கப் பெற்றார்.இந்த இரண்டு குழந்தைகளையும்,பெரியபெருமாளும்,பெரியபிராட்டியாரும், பெரியகோயில் திருமணத் தூண்களில் தொட்டில் கட்டி வளர்த்தார்கள்.அவர்களுக்குத் திருமண வயது வந்ததும், ஆண்டாள்,ஆழ்வானிடம் "பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டுமே" என்றார். ஆழ்வான் "அதை என்னிடம் எதற்குச் சொல்கிறாய்?" என்று கேட்டார்! கொஞ்ச நேரம் கழித்து,"மாலை பெருமாளைச் சேவிக்கச் செல்லும் போது, பிள்ளைகளை வரச்சொல்" என்று கூறிவிட்டுச் சென்றார். மாலையில் பெருமாளைச் சேவித்து விட்டு,தீர்த்தம்,சடாரி பெற்றுக் கொண்டு,செல்லாமல்
நின்று கொண்டிருந்தார்.
பெருமாள், அவர் தயங்கி நிற்பதைப் பார்த்து,"ஆழ்வான்!ஏதோ சொல்ல நினைப்பது போல் தெரிகிறதே; என்ன?" என்று கேட்டார்.ஆழ்வான் மிகத் தயங்கி,"ஆண்டாள், பிள்ளை களுக்கு வயதாகிவிட்டது; திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறாள்"என்றார்.
பெருமாள் "நீர் வீட்டுக்குப் போம்; நாம் பார்த்துக் கொள்கிறோம்"என்றார்.
மறுநாள் காலை பெரிய நம்பிகளின் திருமாளிகை யிலிருந்து,பெரியோர் அனைவரும் சீர்வரிசை களுடன் ஆழ்வான் திருமாளிகைக்கு வந்து "எங்கள் குமாரத்திகளை தேவரீர் திருக்குமாரர்களுக்கு திருமணம் செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும்;இது பெரியபெருமாள் நியமனம்" என்று கூறி சேவித்தார்கள் (பெருமாள் அவர்கள் கனவில் தோன்றி அவ்வாறு நியமித் தாராம்.!!)
படங்கள்:
1&2:கூரத்தாழ்வான் வைபவம்
3. அலங்காரக் கூரத்தாழ்வான்.
4.காஷாய கோல ஆழ்வான்
(ஆழ்வான் பற்றிய மேலும் இரு பதிவுகள் நாளை பதிவிடப்படும்)

---(கூரத்திலிருந்து,அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸ்வாமி.
ஸ்ரீ மதே பாஷ்யககாரர் நம :
ஸ்ரீ ஸ்வாமி கூரேசர்.

நான் பெற்ற பெருஞ்செல்வம்
நாலூரான் பெறும் வரம் வேண்டும்-இந்த
ஊன் பெற்றுக்கிடைத்த பலம்
அடியேனுக்குறுதி நின்னைத் தான் பெற்றேன் இனிப்பேறு வேறுண்டோ தனிமுதலே
தேன் பெற்ற துழாய் மாலை வேண்டி விரும்பி அணிபவனே திருமாலே.

ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸ்வாமி.
ஸ்ரீ மதே பாஷ்யககாரர் நம :
ஸ்ரீ ஸ்வாமி கூரேசர்.

நான் பெற்ற பெருஞ்செல்வம்
நாலூரான் பெறும் வரம் வேண்டும்-இந்த
ஊன் பெற்றுக்கிடைத்த பலம்
அடியேனுக்குறுதி நின்னைத் தான் பெற்றேன் இனிப்பேறு வேறுண்டோ தனிமுதலே
தேன் பெற்ற துழாய் மாலை வேண்டி விரும்பி அணிபவனே திருமாலே.
🐚ஓம் நமோ நாராயணா🐚

ஸ்ரீமன் நாராயணனன் மந்திரம்

ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா
கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்
விமுக்தது கா ஸுகினோ பவந்து
கூரேசர் அருளிய நாராயணாஷ்டகம்

வைகுண்டத்தில் வாசம் செய்யும் ஸ்ரீமன் நாராயணன் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதிப்பவர்களுக்கு மிகுந்த நன்மைகளை உண்டாக்கும். மாத ஏகாதசி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தவாறு இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பதால் பிறரின் வஞ்சகத்தால் நீங்கள் இழந்த சொத்துக்கள் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். மனக்கவலைகள் மற்றும் நோய்கள் நீங்கும்.மனோதைரியம் உண்டாகும்.

மனக்கவலை கொண்டவர்கள், துக்கத்தால் வருந்துபவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், பயம் கொண்டவர்கள், தீராத நோயினால் வேதனையுறுபவர்கள் என அனைவரும் ‘நாராயண’ எனும் திருநாமத்தை உச்சரித்தபோதே அந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகமடைவார்கள். அப்படியொரு அமைதியை எங்களுக்கு அளிப்பாய் நாராயணா என்பதே இந்த மந்திரத்தின் பொதுவான பொருளாகும். ஸ்ரீமன் நாராயணனின் இந்த மந்திரத்தை துதிப்பதால் நமக்கு பல விதமான நன்மைகள் உண்டாகிறது.
<<கூரேசரின் பெருந்தன்மை >>

மேல்கோட்டையிலும், மைசூரிலும் தனது திருப்பணிகளையெல்லாம் வெற்றிகரமாக முடித்துவிட்டு ஸ்ரீரங்கம் திரும்பினார் இராமானுஜர் கூரத்தாழ்வானை கண்டு மனம் வெதும்பி, துக்கம் மேலிட அவரைத் தழுவினார். " கூரேசரே ! காஞ்சியில் பேரருளாளரான ஸ்ரீ வரத ராஜப் பெருமாள் வேண்டியவர்களுக்கு வேண்டிய வரத்தை அருளுபவர். நீர் எமக்காக அவரைத் தரிசித்து உமது கண் பார்வையை வரமாக கேளும். உம்மைக் காணும் போதெல்லாம் குற்ற உணர்ச்சி என்னைக் கொல்லுகிறது " என்று வற்புறுத்தினார். கூரேசரும் தனது குரு நாதரின் வேண்டுகோளின்படி காஞ்சிக்கு வந்து ஸ்ரீ வரத ராஜரைத் தரிசித்து " வரதராஜ ஸ்தவம் " என்கிற துதியைப் பாடினார் கூரேசர். எம்பெருமான் அவர் முன் பிரத்தட்சயமாகி  வேண்டும் வரம்" என்னவென்று கேட்க " யான் பெற்ற பேற்றை நாலூரானும் பெற்று நல்ல கதி அடைய வேண்டும் "  என்று யாசித்தாராம். எத்தனை பெருந்தன்மை கூரேசருக்கு, தன்னுடைய விழிகள் போகக் காரணமாயிருந்த நாலூரானும் மோட்சமளிக்க வேண்டும்" என்று வரம் கேட்டாரே, இதைக் கண்டு ஆசார்யர் இராமானுஜர் புளகாங்கிதமடைந்தாராம் .

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

கருத்துகள் இல்லை: