ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா எழுதிக்கொடுத்த ஒரு ஆசிய கீதத்தை ஐ.நா. சபையிலே எம்.எஸ் சுப்புலட்சுமி பாடினது உலக அளவில் பேசப்பட்டது. ‘மைத்ரீம் பஜத’ என்று தொடங்கும் அந்தக் கீதம் உலக மக்கள் அனைவரும் போரை விட்டுவிட்டு அமைதியுடன் வாழ வேண்டும் என்று பொருள்பட எழுதப்பட்ட உன்னதமான பாட்டு.
இது நடந்த சில நாட்களில் மடத்துக்கு ஒரு கடிதம் வந்தது. உலக அளவில் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள ஒரு இசைக் கலைஞரைக் கொண்டு பெரியவா இது போன்ற பப்ளிஸிட்டியைத் தேடிக்கொள்ள முயல்கிறார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு.
அதற்குப் பெரியவா சொல்லறா ..
“இதுலே ஆத்திரப்படறத்துக்கோ கோபப்படறத்துக்கோ ஒன்னுமில்லே. ஐ.நா. சபைக்காரன் இப்படியொரு மெஸேஜ் வேணும்னு கேட்டானா. இல்லையே, நானாதானே அட்சதையைப் போட்டுக்கொண்டு தேசம், லோகம் பூராவுக்கும் நான் உபதேசம் பண்றவனாக்கும் என்று நினைச்சுப் பாட்டுப் போட்டுத் தந்தேன். அதனாலே இது ஒரு ஸெல்ஃப் பப்ளிசிட்டிக்கு நானா பண்ணிய காரியம்னு ஒருத்தர் நினைக்கிறான்னா அதுல தப்பில்லையே. அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கார்னு புரிஞ்சிண்டு இனிமே ஜாக்கிரதையா இருக்கணும்.
லோக சமாதானத்துக்காக ஐ.நா சபையிலே அனைவரும் பயன் பெற வேண்டும் என்று நினைச்சுப் பாட்டு எழுதிக்கொடுத்தற்கு ஒரு அநாகரிகமான விமர்சனம் வந்ததே என்று வருத்தப்படுவது வேதனைப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும் அதைச் சமநிலையோடு எதிர்கொண்டு அதற்குத் தன் செயலை நியாயப்படுத்தி கூற வேண்டும் என்று எண்ணாமல் அந்த அபாண்டத்தைத் தனக்கு ஒரு பாடமா பாவித்துக்கொண்டாரே, சாட்சாத் பரமேஸ்வரனான பெரியவா.
-------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக