புதன், 28 ஆகஸ்ட், 2019

"எங்கே படிச்சே ?" (உபன்யாஸம் நடந்த இடத்தில் ஒரு நிகழ்ச்சி)

"அர்த்தாதுரணாம் ந குருர் ந பந்து,

க்ஷுதாதுராணாம் ந ருசிக்கி ந பக்வம்,

வித்யாதுராணாம், ந சுகம் ந நித்ரா,

காமாதுராணாம் ந பயம் ந லஜ்ஜா"

சொன்னவர் ஸ்ரீ சி. ஆர். சுவாமிநாதன் மத்திய அரசில் பெரும் பதவி வகித்தவர்.... நம்ம சென்னை ஸம்ஸ்க்ருத கல்லூரியிலே 1956,57 லே மஹா பெரியவா சில நாள் தங்கி சாயந்திரம் தினமும் பிரசங்கம் நடைபெறும். கேக்கணுமா. பெரியவா பேச்சை கேக்க கூட்டம் அலை மோதும். அன்று ராஜாஜி வந்திருந்தார். என்ன பேசறதுன்னு மஹா பெரியவா முடிவு பண்ணலை. பக்கத்திலே ப்ரொபசர் சங்கரநாராயணன் நிக்கறதை பெரியவா பாத்து அவரை பக்கத்திலே கூப்பிட்டா. அவர் கிட்டே ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி அதிலே முதல் ரெண்டு வரியை மட்டும் சொன்னார்கள்.

''உனக்கு அடுத்த ரெண்டு வரி இருக்கே அது தெரியுமா? என்றார்.

''பெரியவா க்ஷமிக்கணும். எனக்கு தெரியலை''

இப்படி பெரியவா ஒரு ஸ்லோகத்தை பத்தி பேசினது மைக்லே எல்லோருக்கும் கேட்டுடுத்து. கூட்டத்திலே ஒருத்தருக்கு அந்த ஸ்லோகம் தெரிஞ்சிருந்தது. அவர் மெதுவாக மேடைக்கு அருகே வந்து ப்ரொபசர் சங்கரநாராயணன் கிட்டே '' சார் பெரியவா கேட்ட அந்த பாக்கி ரெண்டு அடி எனக்கு தெரியும் அது இது தான்” என்று அவரிடம் சொன்னார். அதை ப்ரொபசர் சந்தோஷமா மேடையிலேறி பெரியவா கிட்ட ''பெரியவா அந்த மீதி ரெண்டு வரி இது தான்” என்று சொன்னவுடன்  ''நான் கேட்ட போது தெரியாதுன்னியே''

''ஆமாம் பெரியவா. கூட்டத்திலே யாரோ ஒருவருக்கு தெரியும்னு வந்து எங்கிட்ட சொன்னதைத்தான் பெரியவா கிட்ட சொன்னேன். ''

''அவரை இங்கே அழைச்சிண்டு வா''

இந்த நிகழ்ச்சியை சொன்ன சி. ஆர். சுவாமிநாதனை மேடையில் தன் கிட்ட கூப்பிட்டு பெரியவா

''நீ தான் அந்த ரெண்டு வரியை சொன்னதா?''

''ஆமாம் பெரியவா''

''எங்க படிச்சே?''

''மெட்ராஸ்லே பிரெசிடென்சி காலேஜ்லே''

''நான் அதைக் கேக்கலே. இந்த ஸ்லோகத்தை எங்கே படிச்சே?''

''எங்க தாத்தா சொல்லி கொடுத்தது சின்ன வயசுலே'' ''எந்தவூர் நீ... உங்க தாத்தா யார்?'' சுவாமிநாதன் விருத்தாந்தம் எல்லாம் சொன்னார்.

ஸ்ரீ மஹா பெரியவா சுவாமிநாதன் பேசினது அத்தனையும் மைக் வழியா சகல ஜனங்களும் கேட்டிண்டு இருந்தா. பெரியவா சொன்ன ஸ்லோகம் இது தான்

அர்த்தாதுரணாம் ந குருர் ந பந்து

க்ஷுதாதுராணாம் ந ருசிக்கி ந பக்வம்

வித்யாதுராணாம் ந சுகம் ந நித்ரா

காமாதுராணாம் ந பயம் ந லஜ்ஜா

கருத்துகள் இல்லை: