சிருங்கேரி சுவாமிகளுக்கு வரவேற்பு
ஹைதராபாத்தில் எனக்கு உத்தியோகம். அப்போது என் மாமனார் ஸ்ரீ காமகோடி மடத்தின் பிரதிநிதியாக அந்த இரட்டை நகரத்தில் பல தெய்வீக பணிகளை செய்து வந்தார்.
அந்த சமயத்தில் சிருங்கேரி பீடம் ஸ்ரீ மஹா சந்நிதானம் அவர்கள் ஹைதராபாத் செகந்திராபாத் விஜயம் செய்தார்கள்.
ஒரு ஆந்திர அன்பர் ஸ்ரீ காமகோடி பீடத்துக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டு சலசலப்பை உண்டாக்கினார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஸ்ரீ மஹா சந்நிதானம் பவனி வரும் போது கறுப்புக்கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது என்று காமகோடி பீடம் சிஷ்யர்கள் சிலர் முடிவு செய்தார்கள். செய்தி மஹா சுவாமிகள் வரை போய் விட்டது. உடனே தரிசனத்துக்கு வரும் படி என் மாமனாருக்கு தந்தி வந்தது.
'இதோ பார், ரெண்டு கை சேர்ந்து தட்டினால் தான் சத்தம் வரும். ஒரு கையை மட்டும் ஆட்டினால் சத்தம் வராது யாரோ ஒருவர் நம் மடத்தை பற்றி துஷ்ப்ரச்சாரம் செய்கிறார் என்றால் அதற்கு அவர் தான் பொறுப்பு. நான் உங்கள் ஊருக்கு வந்தால் எப்படி கோலாகலமாக வரவேற்பீர்களோ, அவ்வாறே சிருங்கேரி மஹா சன்னி தானத்துக்கும் செய்யணும். விஜயம் செய்பவர் ஓர் ஆச்சார்யார் பீடாதிபதி. அவாள் மனம் நோகும் படியாக எந்த காரியமும் செய்யக் கூடாது... என்ன? அப்புறம் என்ன?
மஹா சன்னிதானம் அவர்களுக்கு அவர்களே எதிர்பார்த்திருக்க முடியாத வகையில் கோலாகலமான வரவேற்பு! நாள் தோறும் பிக்ஷாவந்தனம், பாதபூஜை!... பிற ஆச்சார்யர்களிடம் அவ்வளவு மரியாதை பெரியவாளுக்கு.
-------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக