புதன், 28 ஆகஸ்ட், 2019

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!
தின்மையும் பாபமும் சிதைந்து தேயுமே!!
சென்மும் மரனமும் இன்றித் தீருமே
இன்மையே ராமா வென்றிரண்டெ ழுத்தினால்

எப்போதும் பூஜா உபன்யாசம் கடும் விரதம் என்றில்லை துறவிக்கு.
ஹாஸ்ய உணர்வும் அவர்களுக்கு உண்டு. ஹாஸ்யம் அடிக்கடி தலை தூக்கும் காஞ்சி முனிவர் பேச்சில்.

மஹாராஷ்ட்ர மாநிலம் சிற்றூர் ஒன்றில் ஒரு முறை சாலையோரம் பெரியவர் முகாம். நான்கு பேர் யானை மீது அமர்ந்து சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவா. அவர்களை உடனே ஆளனுப்பிக் கூப்பிட்டு விசாரித்தார். யானை மேல் ஏறி எங்குப் போகிறீர்கள்?

ஸ்வாமீ! நாங்கள் ஒரு காலத்தில் செல்வந்தர்கள். எங்கள் தகப்பனார் கடைசிக் காலத்தில் தன் பொருள் அனைத்தையும் தானம் செய்து விட்டு எஞ்சிய இந்த யானை மட்டும் எங்களுக்குத் தந்து இதன் மூலம் பிழைத்துக்கொள் என்றார்.

அதன் படி நாங்களும் ஊர் ஊராகச் சென்று புராணக் கதைகள் சொல்கிறோம். பக்திப் பாடல்கள் பாடுகிறோம். ஏதோ கொஞ்சம் பொருள் எங்களுக்கும் யானைக்குத் தீனியும் கிடைக்கிறது என்றார்கள்.

உடனே பெரியவா "ஹாஹா!" என்று சிரித்தார். இங்கேயும் இது தான் நடைமுறை. இவர்கள் என்னை யானை போல் ஊர் ஊராக அழைத்துப்போகும் இடங்களில் நானும் உபன்யாசம், பூஜைகள் செய்கிறேன்.

இவர்களுக்கும் சாப்பாடு, பணம் எனக்கு பக்தர்கள் கிடைக்கிறார்கள். நம்ம ரெண்டு பேர்க்கும் ஒரே தொழில்! கூடியிருந்த பக்தர்கள் பெரியவாளின் சிரிப்பில் ஹாஸ்ய உணர்வும் சமபாவ உள்ளமும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
-------------------------

கருத்துகள் இல்லை: