சனி, 11 ஜூலை, 2020

தில்லை அம்பல நடராஜா!!!

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? நாம் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..

நடராஜரின் நடனமே அதைக் குறிப்பது தான். The cosmic dance of matter. ஆதிக்கும் அந்தத்திற்கும் இடையிலான சுழற்சியைக் குறிக்கும் பெரும் அறிவியலும், தத்துவமும் ஆகும். இந்த பிரபஞ்சத்தின் பிறப்பையும், அதன் முடிவையும் குறிப்பதாகும். அது மீண்டும் மீண்டும் சுழன்று முடியும் என்பதே அதன் கருத்து.

வாழ்க தமிழ்..வெல்க தமிழனின் நுண்ணறிவு... வளர்க ஹிந்து தர்மம்!!

மன்னனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லாப் பிள்ளை யாரை வணங்கி அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரை களோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தனர். பின்பு தில்லையை வந்தடைந்து மூவருக்கும் விழா எடுத்து குறிப்பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன. பின்னர் எண்ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்த போது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. பின்பு உள்ளவற்றை எடுத்துப் பத்திரப் படுத்தினர். இவ்வாறு கிடை க்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள். அத்தகைய அரிய தேவாரப் பதிகங்கள் கிடைத்த தலம் இது.

திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம். நால்வர் இத்தலத்தில் எழுந்தருளியபோது நான்கு கோபுர வாயில்கள் வழியாக வந்தனர் என்கின்றனர்.

கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்க வாசகரும் தெற் கில் ஞான சம்பந்தரும்,மேற்கில் அப்பரும், வடக்கு கோபுரம் வழி யாக சுந்தரரும் சென்று சிற்சபையில் இறைவனை கண்டு தரிசி த்தனராம். இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரத ட்சணமே செய்தாராம்.

இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக் கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம். இத்தலத்து திரு க்கோயிலில் சிற்றம் பலம்,பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்த சபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத் தலும், சிவன் விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது.

இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள்
பாடியு ள்ளார்.

பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோ யிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும்,
நடராஜர் சன்னதி யை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் இலிங்கவடிவில் “ஆதிமூலநாதர்” என்ற பெயரில் அருள் செய்கிறார்.

பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், “திரிசகஸ்ர முனீஸ்வரர்கள்” என் போரை கயிலையிலிருந்து,சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தை மாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களே “தில்லை மூலவாரயிவர்”என்று சொல்வதுண்டு.

திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில்
வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி.
திருவண்ணா மலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் “நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா” என அப்பர் கூறியுள்ளார்.

இது போல்,வாழ்நாளில் ஒரு தட வையேனும் நடராஜரையும், திரு மூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும். எனவே தான் நந்தனார், தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட
நிஜமான பக்தியால், சர்வ மரியாதை யுடன்
கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.

இத் தலத்து நடராஜரைக் காண உலகமே திரண்டு வருகிறது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட,
நடராஜரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படி ப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.

ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்திய லோக த்துக்கு அழைத்தார். தில்லையிலேயே இருந்து, நடராஜரின் திருநடனத் தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத் து விடப்போகிறது எனக் கூறினர். அப்போது, நடராஜர் யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை “ரத்னசபாபதி” என்கின்றனர். இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது.

இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும்.சிலையின் முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர்.

மண்ணும் நமசிவாயம்
மலையும் நமசிவாயம்

கருத்துகள் இல்லை: