சனி, 11 ஜூலை, 2020

கணபதி ஹ்ருதயம்:-

இந்த மந்த்ரம் கணபதியின் 21 நாமாக்கள் அடங்கியது.

சிவனிடம், நீங்கள் யாரை த்யானம் செய்கிறீர்கள் என்று கங்கா தேவி கேட்டதற்கு, கணபதி ஹ்ருதயத்தை சிவன் அவளுக்கு உபதேசம்
செய்வதாக முத்கள புராணம் சொல்லும்.

ரிஷி- சம்பு
சந்தஸ்- நானாவித சந்தஸ்

கணேசம் ஏக தந்தம்ச சிந்தாமணி விநாயகம்
டுண்டிராஜம் மயூரேசம் ச லம்போதர கஜாந்னௌ!!
ஹேரம்பம் வக்ர துண்டம்ச ஜ்யேஷ்ட ராஜம் நிஜஸ்திதம்.

ஆசா பூரம்து வரதம் விகடம் தரணீதரம் ஸித்தி புத்தி பதிம் வந்தேப்ரும்மணஸ்பதி சம்ஞிதம்
மாங்கல் யேசம் சர்வ பூஜ்யம் விக்னானாம் நாயகம் பரம்
ஏகத் விம்சதி நாமாநி கணேசஸ்ய மகாத்மன:

அர்நேக சம்யுதா நிசேத் ஹ்ருதயம் பரிகீர்த்திதம்.

நேபாளத்தில் வினாயகருக்கு ஆறு கைகள் உள்ளன. காட்மாண்டுவில் வினாயகருக்கு நாகம் குடைபிடித்துக் காணப்படுகிறது. மூஞ்சூறு வாகனம் அமைத்து வழிபடுகின்றனர். நேபாள மக்கள் கணபதி ஹ்ருதயம் எனும் மந்திரம் சொல்லியே செயல்களைத் தொடங்குகின்றனர்.

புத்தர் தம் சீடரான ஆனந்தருக்கு 'கணபதி ஹ்ருதய’ மந்திரத்தை உபதேசித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: