திங்கள், 13 ஜூலை, 2020

274 சிவாலயங்கள் -6

அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில்

        மூலவர்    :     திருமேனியழகர்
      உற்சவர்    :     -
      அம்மன்/தாயார்    :     வடிவாம்பிகை
      தல விருட்சம்    :     கண்ட மரம், தாழை
      தீர்த்தம்    :     கோயில் எதிரே உள்ள மயேந்திர தீர்த்தம்
      ஆகமம்/பூஜை     :     -
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     திருமகேந்திரப் பள்ளி
      ஊர்    :     மகேந்திரப் பள்ளி
      மாவட்டம்    :     நாகப்பட்டினம்
      மாநிலம்    :     தமிழ்நாடு
 
    பாடியவர்கள்:   
             
     

சம்பந்தர்
தேவாரப்பதிகம்

கொண்டல்சேர் கோபுரம் கோலமார் மாளிகை கண்டலும் கைதையும் கமலமார் வாவியும் வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியில் செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.

-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 6வது தலம்.

     
             
     திருவிழா:    
             
      மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை      
             
     தல சிறப்பு:    
             
      பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. அலங்காரப்பிரியரான திருமால் அழகர் என்று அழைக்கப் படுவது தெரிந்த விஷயம்தான். மகேந்திரப் பள்ளி தலத்தில் சிவபெருமானை அழகர் என்று அழைக்கிறார்கள்.      
             
    திறக்கும் நேரம்:   
            
     காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.     
           
    முகவரி:   
           
      அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி -609 101. கோயிலடிப் பாளையம், நாகப்பட்டினம் மாவட்டம்.      
           
    போன்:   
           
      +91-4364- 292 309.     
            
     பொது தகவல்:   
             
     

பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், மனைவியுடன் இருக்கிறார். விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர். விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரும் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி இல்லை.

     
             
 
    பிரார்த்தனை   
            
     

முன்வினைப்பயனால் சிரமப்படுபவர்களும், ஜாதகத்தில் சூரிய, சந்திர தசை நடப்பவர்களும் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். பிரம்மனுக்குரிய தீர்த்தம் என்பதால் இங்கு நீராடினால், துன்பப்பட வேண்டும் என எழுதப்பட்ட தலையெழுத்து மாறி, நல்விதி ஏற்படும் என்பது நம்பிக்கை. கல்வியில் சிறக்கவும், நாகதோஷம் நீங்கவும் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

     
            
    நேர்த்திக்கடன்:   
            
      முகப்பொலிவு வேண்டி இத்தலத்தில் பக்தர்கள், சுவாமிக்கு வெண்ணிற வஸ்திரம், அம்பாளுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.     
            
     தலபெருமை:   
             
     

அழகு தரும் சிவன்: சிவன், அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி, "திருமேனி யழகர்' என்றும், அம்பாள் வடிவாம்பிகை' என்றும் அழைக்கப்படுகின்றனர்.  இங்கு வந்த திருஞானசம்பந்தர் சுவாமியை, "அழகர்' என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ளபெருமாள் "சுந்தரராஜன்' என்று சமஸ்கிருதத்திலும், "அழகர்' என்று தமிழிலும் வழங்கப்படுகிறார். அதுபோல, இத்தலத்தில் சிவன் "அழகர்' என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம்.

சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது. பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.

     
             
      தல வரலாறு:   
             
     

இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்றான். விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா) இந்திரன் வழிபட்டதால், "மகேந்திரப்பள்ளி' என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

     
             
    சிறப்பம்சம்:   
             
      அதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.

கருத்துகள் இல்லை: