மருந்தீசர் சொன்ன மருந்து
___________________
நானும் எனது தம்பியும் அந்த இனிய நாட்களை மனதிலே சுமந்து மகிழ்கின்றோம்.
அப்பொழுது எனக்கு வயது 10 இருக்கும் எனதுதம்பி குருமூர்த்திக்கு வயது 8 இருக்கும். அவனுக்கு அடுத்த தம்பி மஹாலிங்கத்திற்கு 4 வயது.
எங்கள் குடும்பம் அப்பொழுது ஆக்கூரில் இருந்தது. மஹாலிங்கத்திற்கு 4 வயது வரை பேச வரவில்லை. எங்களது பெற்றோர்களுக்கு கவலை வந்து விட்டது.
அப்பொழுது மஹாபெரியவா பக்கத்து ஊரிலுள்ள ஆறுபாதிக்கு அங்குள்ள மிராசுதார் அழைப்பிற்கிணங்க பிக்ஷாவந்தனத்திற்கு
அவர்களுடைய வீட்டிற்குவந்திருந்தார். அவருடைய தரிசனம் கிடைக்கும் என்று எங்கள் பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்தது. எங்கள் பெற்றோர்களுக்கு காஞ்சி மஹானை பார்த்து தரிசித்து அவரை எனது தம்பியின் குறையைப்பற்றி சொல்லி நிவர்த்தி கேட்பது என முடிவு செய்து என்னையும் என் தம்பிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஆறுபாதி வந்து சேர்ந்தார்கள்.
அங்கு மிராசுதார் வீட்டில் பிக்ஷாவந்தனம் எல்லாம் முடிந்து அங்குள்ள பக்தர்களுக்கெல்லாம் தரிசனம் தந்தார்கள். எங்களது பெற்றோர்களும் வாங்கி வந்த பூ, பழங்களை ஒரு தட்டில் வைத்து நமஸ்காரம் செய்தார்கள். நாங்களும் நமஸ்காரம் செய்தோம்.
மஹாபெரியவா கல்கண்டு, திராட்சை, முந்திரி எல்லாம் கொடுத்து எங்களை ஆசீர்வாதம் செய்தார்கள். பிறகு தரிசனம் தந்து முடிந்த பின் அவருடைய அறைக்கு போய் கொண்டிருந்தார்கள். எனது தகப்பனார் மகானுக்கு என்தம்பியின் நிலைமையை எடுத்துச் சொல்ல பின்னாடி போனார். மஹான் அவரை சாயங்காலம் அங்குள்ள ஆத்தங்கரைக்கு வரச் சொன்னார்கள்.
பின்னர் சாயங்காலம் ஆத்தங்கரைக்கு வந்து தரிசனம் தந்தார்கள். அப்பொழுது எனது
தகப்பனார் எனது தம்பியின் குறையைப்பற்றி கூறி அதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டார்கள்.
மருந்தீசர் வேப்பம் பட்டையை அறைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ சொன்னார்கள்.
பிறகு நாங்கள் ஆக்கூர் வந்து சேர்ந்தோம்.
பெரியவா சொன்னபடி எனது அம்மா வேப்பம் பட்டையை அறைத்து தேனில் குழைத்து தம்பியின் நாக்கில் தடவி வர கொஞ்ச நாளில் எனது தம்பி பேச ஆரம்பித்து விட்டான். மஹானின் வைத்தியத்திற்கு ஈடு இணை உண்டோ?
அந்த நிகழ்ச்சி மஹானின் தரிசனம் ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறோம்.
இதைச் சொல்ல அம்மா அப்பா இப்பொழுது இல்லை. இந்த நிகழ்ச்சி எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். இதைப்பற்றி மற்றவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை.
மகானிடம் பக்தர்கள் அனுபவத்தை பிறருக்கு தெரிவித்து அதுபுத்தக வடிவில் வந்தது யாவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த எங்களது அனுபவம் பிறருக்கு எடுத்துக்கூறவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக