ஞாயிறு, 31 மே, 2020

பாலசுப்ரமணிய கவிராயர்.

இவர் ஒரு சேய்த் தொண்டர் ஆவார்.

முருகப்பெருமானின் திருப்பணிகளிலும், அவனது புகழைப் பரப்புவதிலுமே தங்களது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட அடியவர்கள் ‘சேய்த் தொண்டர்கள்’
ஆவார்கள்.

பழனியில் பெரியான் கவிராயர்'
என்னும் முருக பக்தர் வாழ்ந்து வந்தார்.

அவருக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல்
தவித்தார்.

தினமும் மலர் மாலை வாங்கி
பழனிப்பதிவாழ் முருகனை
வணங்கி
சஷ்டி விரதங்கள் கார்த்திகை விரதங்கள் இருந்து
முருகன் அருளால் ஆண் குழந்தையைப் பெற்றனர் கவிராயர் தம்பதியர்.

அக்குழந்தைக்கு பாலசுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

பிறந்த குழந்தையின் கண்களும்
காதுகளும் செயல்படாமல்
இருக்க,
பெற்றோர்கள் வேதனையுடன்
குழந்தையை வளர்த்தனர்.

குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது, பழநிமலை ஆண்டவர் சந்நிதியில் தம் மகனைப் படுக்க வைத்து தவமிருந்தார் பெரியான் கவிராயர்.

அவரது வேண்டுதலுக்கு
செவி சாய்த இறைவன்
கந்தப் பெருமானே ஒரு சிவனடியார் போல வேடம் தரித்து
ஒரு கடப்ப மலரைக் கொண்டு
சிறுவனின் உடலை வருடி, பின்
கண்களிலும் செவிகளிலும் கடப்ப மலரால் மெல்ல ஒத்தி எடுத்தார்.

சிறுவன் பாலசுப்பிரமணியனின் கண்கள் ஒளிபெற்றன; செவிகள் கேட்கும் திறனைப் பெற்றன.

பிறகுதான், `சிவனடியார் வேடத்தில் வந்தவர் முருகப் பெருமானே' என்பதை உணர்ந்து வியந்தார் கவிராயர்.

தம் மகனுக்கு தக்க ஆசிரியரிடம் தமிழ் மொழி வடமொழி
ஆகியவற்றை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்தார்.

அதன்படி, துறைசை ஆதீனத்து சுப்பிரமணியத் தம்பிரானிடம் சைவ சித்தாந்தமும் கௌமார தத்துவமும் பயின்றான், பாலசுப்ரமணியன்.

பின்னர் பல தலங்களை தரிசித்தார் பாலசுப்ரமணியன்.

அவர் இயற்றிய நூல்கள்

சைவ சித்தாந்த தரிசனம், பாஞ்சராத்ர மதச பேடிகை, வேதாந்த சித்தாந்த சமரச தீபம், கூவின நீப மான்மியம், அக்கதீபிகை

பாலசுப்ரமணியன்
தஞ்சை சமஸ்தானத்தில் ‘கவிராயர்’ பட்டமும் பாராட்டும் பெற்றார்.

பழநியின் பெருமைகளையும் அற்புதங் களையும் விவரிக்கும் ‘பழநிப்புராணம்’ என்னும் மிக உயர்ந்த நூலை இயற்றி முருகன் சந்நிதியில் அரங்கேற்றினார்.

கருத்துகள் இல்லை: