ஞாயிறு, 31 மே, 2020

*லிங்க புராணம் ~ பகுதி  — 04*

*அரி, அயன் கண்ட ஜோதி*
 ======================

பிரகிருதித் தத்துவமே ஒளிப் பிழம்பாய் லிங்கமாய் மாறியது. திங்கள் முடிசூடி., நஞ்சுண்ட முக்கண்ணனே அந்த லிங்கமாகி நின்றான். பிரளய வெள்ளத்தில் ஆதிசேஷன் மீது நாராயணன் யோக துயில் கொண்டு இருந்தான். நித்திரை கலைந்து எழுந்த பிரம்மன் உலகை மீண்டும் படைக்க எண்ணுகையில் பிரளய நீரில் மாதவனைக் கண்டார். *"நாராயணன் தானே சகல உலகங்களையும் தோற்றுவிப்பவன் என்றான்."*
*"ஈரேழு புவனங்களையும் அனைத்து உயிர்களையும் படைப்பவன் நானே என்றான் பிரம்மன்."* இருவரில் யார் பெரியவன் என்ற போட்டி துவங்கி சண்டையாக மாறியது. அச்சமயம் அங்கே அவர்கள் எதிரில் ஓர் ஒளி தோன்றியது. அதன் அடிமுடி காணப்படாததால் அது என்ன என்று இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

அதன் முடியைக் காண அன்னப்பறவை வடிவில் பிரம்மன் புறப்பட., அடியைக் காண வராக வடிவில் நாராயணன் புறப்பட்டான். இருவரும் முடி., அடி காண முடியாமல் களைத்துத் திரும்பி வந்து ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அவர்கள் அகந்தை அகன்றது. இருவரும் கைகூப்பி அனற்பிழம்பாக., ஜோதி லிங்கமாக நிற்கும் அப்பொருளை வணங்கினர். அண்டம் கிடுகிடு என நடுங்குமாறு பேரொலி ஒன்று கேட்டது. அப்போது *ஈசானம்., தத்புருஷம்,, அகோரம்,, வாமதேவம்,, சத்தியோஜாதம்* என்ற ஐந்து முகங்களுடன்., ஆறாவதாக *அதோமுகம்* சூட்சும முகத்துடனும்., ஜடை பிறைச் சந்திரன்., கைகளில் மான்., மழுவேந்தி எம்பெருமான் தரிசனம் அளித்தார். இருவரும் வணங்கினர். அவர்கள் அப்பொருளைப் பலவாறு போற்றி சிரம்தாழ்ந்து., கரம்கூப்பி., ரோமாஞ்சனம் பெற்றவராய் வணங்கினர்.

மகிழ்ச்சி அடைந்த ஈசனார் தன் வலப்புரத்தில் தோன்றியவன் மலரோன் என்றும்., இடப்புறத்தில் தோன்றியவன் திருமால் என்றும் கூறி இருவரும் தம் மக்களாகிய முருகன்., கணபதிக்கு ஒப்பானவர்கள் என்றுரைத்து வேண்டுவதைக் கேட்குமாறு பணித்தார். நான்முகன் அவருடைய அருளைப் பெற்ற தனக்கு வேறென்ன வேண்டும் என்று கூறி சிவனாரிடம் என்றும் குறையாத பக்தி அருள செய்யுமாறு வேண்டினார். அவ்வாறே என்று அருள் பாலித்தார் பரமன். மாதவனிடம்., பத்ம கற்பத்தில் நான்முகன் அவருக்குப் புத்திரனாக உந்திக் கமலத்தில் தோன்றுவான் என்று அருளினார். அன்று முதல் ஈசனார் லிங்க வடிவில் அடியவர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தொடரும்.....

*கனக மஹாமணி பூஷித லிங்கம்*
*பணிபதி வேஷ்டித ஶோபித லிங்கம் |*
*தக்ஷ ஸுயஜ்ஞ னினாஶன லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் ||*

கருத்துகள் இல்லை: