வெள்ளி, 13 டிசம்பர், 2019

நவராத்திரி ஒன்பதாம் நாள் (நாளை சரஸ்வதி பூஜை.)

அம்பாளை வெள்ளைத் தாமரையில் அமர வைத்து, வீணை, ஏடு, ஜபமாலையுடன் சரஸ்வதியாக அலங்கரிக்க வேண்டும்."சியாமளா' என்றும்"ராஜமாதங்கி' என்றும் இவளை அழைப்பர்.இவளை வழிபட்டால் அறிவுவளர்ச்சி, ஞானம் உண்டாகும்.மதுரை மீனாட்சியம்மன் நாளை சிவபூஜை அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.மகிஷனை வதம் செய்து, தீமையை அழித்தாலும் ஒரு உயிரைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க அம்பிகை சிவனை பூஜிக்கிறாள்.கணவன் தன் மனைவி மீது உயிருக்குயிராக அன்பு காட்டினால் அவள் கணவனைக் கண்கண்ட தெய்வமாகக் கொண்டாடுவாள் என்ற வாழ்வியல் நெறியை சிவபூஜை அலங்காரம் வெளிப்படுத்துகிறது.இந்த அலங்காரத்தை தரிசித்தால் தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.

நாளைய நைவேத்யம்:சர்க்கரைப்பொங்கல்,சுண்டல்,அவல்,பொரி

தூவ வேண்டிய மலர்:வெள்ளைத் தாமரை,மருதாணிஇலை

பாட வேண்டி ய பாடல்:
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம்
வந்திப்பதே.

கருத்துகள் இல்லை: