வெள்ளி, 13 டிசம்பர், 2019

⚘⚘⚘கல்யாணம் செய்து பார் வீட்டை கட்டி பார் என்பது பழமொழி மட்டும் அல்ல உண்மை மிக பெரிய விஷயம் அப்படி இருக்க ஒரு புஷ்கர் செய்வதே பெரிய விஷயம் அப்படி இருக்க ஆண்டுக்கு ஆண்டு வரும் புஷ்கர் நடத்துவதென்றால் அது சாதாரண விஷயம் அல்ல... அப்படி பட்ட புஷ்கர் திருமதி மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு புஷ்கர் மாயவரம் மற்றும் தாமிரபரணி ஆகிய இரண்டு இடத்திலும் {பல இடையூறுகளையும் தாண்டி} நடத்தியது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இதை பற்றி அடியேன் சென்ற ஆண்டு நடந்த தாமிரபரணி புஷ்கர் முடிந்தவுடன் மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று எழுதியிருந்தேன். தமிழ் நாட்டில் நடந்த மாயவரம் மற்றும் தாமிரபரணி ஆகிய இரண்டு புஷ்கரத்தையும் பல இன்னல்களுக்கும் இடையே  சிறப்பாக நடத்தி முடித்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்கள் தற்போது அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தில் மூன்றாவது புஷ்கர் நடத்த இந்த அம்மையார் கடந்த பதினோரு மாதங்களாக பெரும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். மொழி தெரிந்த நம் தமிழகத்தில் நடத்தவே பெறும் பாடுபட்ட இந்த அம்மையார் தற்போது அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தில் எந்த ஒரு வசதியும் இல்லாத அத்வான காட்டில் மிக சிறப்பாக நடத்த காஞ்சி சங்கரா சார்யரின் பரிபூரண அனுகிரஹத்துடன் காஞ்சி ஸ்ரீமடத்துடன் கை கோர்த்து நடத்த உள்ளார்கள். மொழி, இனம், மக்கள் என்று எதுவுமே தெரியாத கௌகாத்தில் வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரை பன்னிரெண்டு நாட்கள் நடத்த திட்டம் தீட்டி வெகு சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளார்கள். எப்படி தமிழகத்தில் தாமிரபரணி புஷ்கரில் கோடிக்கணக்கான மக்கள் திரண்டு தாமிரபரணியில் நீராடினார்களோ அதே போல் அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்திலும் கோடிக்கணக்கான மக்கள் நீராடி தங்கள் பாபங்களை போக்கி புண்ணியத்தை அடைய நம்  அனைவருக்காகவும் இந்த அம்மையார் மிக சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்கள். நாம் அனைவரும் இந்த கலியுகத்தில் செய்த பாபங்களை போக்கி கொள்ள இந்த அம்மையார் நமக்கு கிடைத்த மிக பெரிய வர பிரசாதம் இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்கள். இவருக்கு பக்க பலமாக திரு வளசை ஜெயராமன் அண்ணா அவர் இந்த அம்மையாருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். இதில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் அஸ்ஸாம் மாநிலத்தில் முதல்மை ஆறான பிர்ம்மபுத்ரா புஷ்கரில் அனைவரும் நீராடுவதே நமக்கு பெறும் பாக்யத்தை இந்த அம்மையார் நமக்காக ஏற்பாடு செய்துள்ளார்கள். நாம் அனைவரும் அந்த பிர்ம்மபுத்திராவில் ஸ்நானம் செய்து நம் பாபங்களை போக்கிக் கொள்ள வேண்டியது தான். அடியேன் சென்ற ஆண்டே சொன்னேன் இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று ஆனால் இதுவரை இதை பற்றி யாரும் எந்த முயற்சியும் எடுக்காதது மிகவும் வேதனையாக உள்ளது. இந்த புஷ்கர் மட்டுமே இந்த அம்மையார் செய்யவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள். சென்ற ஆண்டு திருச்சி அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை மிக சிறப்பாக நடத்தினார்கள். தற்போது வைத்தீஸ்வரன் கோவில் திருப்பணியை தொடங்கி உள்ளார்கள். பல ஆண்டுகளாக செய்யாமல் இருந்து வரும் வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்கு பெறும் பொருள் செலவில் பணிகளை தொடங்கி உள்ளார்கள் இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதிகள், மற்றும் வளசை ஜெயராமன் அண்ணா அவர்களின் மேல் பார்வையில். இப்படி பட்ட இந்த அம்மையாருக்கு இது வரை யாருமே ஒரு பாராட்டு விழா நடத்த வில்லை என்பது வேதனையே? அடியேனுக்கு மட்டும் வசதி இருந்தால் நிச்சயம் இந்த அம்மையாருக்கு ஒரு மிக பெரிய பாராட்டு விழா செய்வதற்கு ஏற்பாடு செய்திருப்பேன். என்ன செய்வது இறைவன் தான் இந்த அம்மையாருக்கு நீண்ட ஆயுளும், நோய் நொடி இல்லாத வாழ்வும் தர வேண்டும். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே!!! அடியேனும் அடியேனின் தர்மபத்னியும் சேர்த்து தங்கள் பாதார விந்தத்தில் அனந்த கோடி நமஸ்காரங்கள் செய்கிறோம் தாயே⚘⚘⚘💕💕💕🌺🌺🌺

இது சென்ற ஆண்டு பதிவு

நமஸ்காரம் நண்பர்களே!!! சென்ற ஆண்டு மாயவரத்தில் காவேரி மஹா புஷ்கரம் திருமதி மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்களால் வெகு சிறப்பாகவும் விமர்ச்சையாகவும் கொண்டாடப்பட்டது. அன்றைக்கே முதல் முதலாக தாமிரபரணி புஷ்கரை அடுத்த ஆண்டு வருவதை என்னி திருமதி மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்கள் திருநெல்வேலியில் கொண்டாட திட்டமிட்டார்கள். ஆனால் இன்றைக்கு நிறைய அமைப்புகள் பணத்தை எதிர் பாத்து தாமிரபரணி புஷ்கரை கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஒரு தனி பெண்ணாக இருந்து இந்த புஷ்கரை கொண்டாடுவதற்கு அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது வளசை அண்ணா மூலம் நன்கு அறிவேன். இதே போல் தான் மாயவரம் காவேரி புஷ்கரை தடுப்பதற்காக சிலர் வரிந்து கட்டிக்கொண்டு வந்தார்கள். இப்படி ஒரு புஷ்கரே கிடையாது என்றார்கள். அதை பற்றி அடியேன் முகநூலில் ஏராளமான பதிவுகள் செய்தேன். ஆனால் மாயவரம் புஷ்கர் வெகு சிறப்பாக நிறைவடைந்தது. சுமார் ஒரு கோடிக்கும் மேல் மக்கள்  ஸ்நானம் செய்தார்கள். யாரும் இதை எதிர் பார்க்க வில்லை. எதிர்ப்பு தெரிவித்தவர்கள், புஷ்கர் என்று ஒன்று இல்லவே இல்லை என்று சொன்னார்கள் எல்லோரும் மூக்கின் மீது விரல் வைத்தார்கள். அன்று இதனை எதிர்த்தவர்கள் இன்று தாமிரபரணி புஷ்கரை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது. தமிழ் நாட்டை பொறுத்தவரை நடந்து முடிந்த நடந்து கொண்டிருக்கும் இந்த இரண்டு புஷ்கரும் திருமதி மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்களை சாறும். ஏகப்பட்ட இன்னல்களை தாண்டி இந்த அம்மையார் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்கள் நூற்றி ஐம்பதற்கும் மேலானா கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. ஆனால் அடியேன் நன்கு அறிவேன். அடுத்ததாக டிசம்பர் மாதம் திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடத்த உள்ளார்கள். ஒரு கோவில் கும்பாபிஷேகம் என்றால் நான்கு காலம் யாகசாலை பூஜைகள் நடப்பது வழக்கம். ஆனால் அகிலாண்டேஸ்வரி கோவில் பதினாறு காலம் யாகசாலை பூஜைகள் நடைபெற திட்டமிட்டுள்ளார் இந்த அம்மையார். இந்த கலி காலத்தில் யார் செய்வார்கள் இப்படி பட்ட பணிகளை. அடியேனுக்கு தெரிந்தது இவர் ஒருவரால் மட்டுமே அது சாத்தியமாகும். கோடி கோடியாக பணம் வைத்துள்ளவர்களே மேலு‌ம் எங்கே பணம் கிடைக்கும் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று பார்க்கும் இந்த காலத்தில் இந்த அம்மையார் எந்த ஒரு பிரிதிபலனையும் பார்க்காமல் புண்ணியம் ஒன்றே பிரதானமாக எண்ணி பல நல்ல காரியங்களை செய்து வரும் அம்மையாரை வாழ்த்த வயதில்லை அதனால் அன்னையே உன் பாதத்தில் அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்களை செய்கிறோம் தம்பதிகளாக எங்களையும் ஆசீர்வதியுங்கள் அம்மா.

கருத்துகள் இல்லை: