செவ்வாய், 18 செப்டம்பர், 2018

1.போஜனாந்தே பிபேத் தக்ரம் வாசராந்தரே பிபேத் பய:

நிசாந்தே ச பிபேத் வாரி த்ரிபி: ரோகோ ந ஜாயதே

சாப்பிட்ட பின்னர் மோர் குடிக்க வேண்டும், இரவில் பால் குடிக்க வேண்டும், காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த மூன்றும் செய்தால் நோயே அணுகாது.

2.பிப்பலீ மரீச ஸ்ருங்கவேராணி இதி த்ரிகடுகம்—சுஸ்ருத சம்ஹிதா-38-58

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் உணவில் சேர்ப்போருக்கு நோய்கள் வாரா.

3.ஹரிதக்யாமலகபிபீதகானிதி த்ரிபலா — சுஸ்ருத சம்ஹிதா- 38-56

ஹரிதகி (கடுக்காய்) ஆமலக (நெல்லிக்காய்), பிபீடகா (தான்றிக்காய்) ஆகிய மூன்றையும் காயவைத்து சூரணமாக சாப்பிடுவோரை நோய் அண்டா.

4.த்ரிமது

க்ருதம் குடம் மாக்ஷிகம் ச விக்ஞேயம் மதுரத்ரயம்

க்ருதம் (நெய்) குடம் (வெல்லம்) மாக்ஷிகம் (தேன்) ஆகிய மூன்றும் மதுரம் (இனியவை) எனப்படும். இவை மூன்றும் மருந்துடன் கலந்து சாப்பிட உதவும்.

கருத்துகள் இல்லை: