படலம் 60: விஷ்ணூமார்த்த பிரதிஷ்டை
60வது படலத்தில் ஹரிஹரார்த்த மூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் இவர்களின் பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் இலக்கண அமைப்பு பூர்வமாக ஹரிஹரார்த்த மூர்த்தி அர்த்தநாரீஸ்வர மூர்த்தியின் பிரதிஷ்டையை கூறுகிறேன் என்பது கட்டளை. கற்சிலை முதலிய திரவ்யங்களால் பிம்பத்தை அமைக்கவும் என கூறி முதலில் உமார்த்த மூர்த்தி என்கிற அர்த்த நாரீஸ்வர மூர்த்தியின் லக்ஷணம் கூறப்படுகிறது. அங்கு பிம்பத்தில் தென் பாகத்தில் பரமேஸ்வரனின் பாதி உருவமும் வடக்கு பாகத்தில் உமாதேவியின் பாதி உருவமும் அமைக்க வேண்டும் தென்பாகத்தில் பாதிபாகமான பகுதியில் பிறை சந்திரனுடன் கூடிய ஜடாமகுடமும் இடப்பாகத்தில் அலகம் என்ற கேசத்துடன் கூடிய கரண்டமகுடம் அமைக்க வேண்டும். நெற்றியின் தென்பாகத்தில் பாதி அளவுள்ள நெற்றிக்கண் அமைக்கவும். வலது காதில் மகர குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அமைக்கவும். வலது இருகைகளில் கோடரியும் அபயமும், இடது கையில் நீலோத்பலம் அல்லது தேவி தியானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயுதமோ அமைக்கவேண்டும். இடது பாகத்தில் கண்ணை கண்ணாடி போல் பிரகாசமாக அமைக்கவும் என கூறி கண்ணாடியின் லக்ஷணம் கூறப்படுகிறது. வலப்பாகத்தில் புலித்தோலை அணிந்ததாகவும் இடப்பாகத்தில் இடது பாக ஸ்தானத்தையும் அழகிய வஸ்திரத்தையும் அமைக்கவேண்டும். வலது பாதம் கொஞ்சம் வளைந்ததாகவும் இடது பாதம் நேராக இருப்பதாக செய்ய வேண்டும் வலப்பாகம் மாணிக்க ரத்தினம் போல் பிரகாசிப்பதாகவும் இடப்பாகம் மரகத ரத்னம் போல் பிரகாசிப்பதாகவும் அமைக்கவும் என கூறி பிம்பத்தில் சூத்திரம் இடும் அர்த்தநாரீஸ்வரரின் லக்ஷணம் கூறப்படுகிறது. வலது பாகத்தில் பரமேஸ்வரன் உருவமும் இடது பாகத்தில் மஹாவிஷ்ணுவின் உருவமும் அமைக்க வேண்டும். இடப்பாகமான மஹாவிஷ்ணுவின் பாகத்தில் சங்கு, கடக முத்திரையுடன் கூடிய இரண்டு கையையும் பீதாம்பரத்துடன் கூடியதாகவும் மஹாவிஷ்ணு பாதி சரீரம் அமைக்க வேண்டும் என ஹரிஹரார்த்தமூர்த்தியை அமைக்க வேண்டும் என கூறப்படுகிறது.
பிறகு பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. கூறப்பட்ட காலத்தை பரிøக்ஷ செய்து முன்பு போலவே அங்குரார்ப்பணம் செய்து ரத்ன நியாசம், நயனோன் மீலனம் பிம்பசுத்தி, கிராமபிரதட்சிணம் ஜலாதிவாசம் முதலிய கிரியைகள் சாமான்யமாக ஸ்தாபனத்தில் சொல்லப்பட்ட முறைப்படி வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு மண்டபம் அமைக்கும் முறை விளக்கப்படுகிறது. குண்டம் அமைக்கும் முறையில் விசேஷம் கூறப்படுகிறது. பிறகு சில்பி விசர்ஜனம், பிராம்மண போஜநம்புண்யாகபிரோக்ஷணம் இவைகள் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து, அங்கு முறைப்படி சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலாதிவாசத்திலிருந்து எடுத்து வரப்பட்ட பிம்பங்கள் ஸ்னபநாபிஷேகம் செய்து பிறகு இருவர்களின் இரண்டு கைகளில் ரக்ஷõபந்தனம் செய்யவும் என கூறி ரக்ஷõபந்தனம் கூறப்படுகிறது. பிறகு பிம்பத்தை சயனத்தில் அமர்த்தி சயனாதி வாச விதி கூறப்படுகிறது. கும்பம் அதிவாசம் செய்யும் முறையும் விளக்கப்படுகிறது. அங்கு பரமேஸ்வர சிவகும்பம் அமைத்து உமாதேவியின் தலைப்பாகத்தில் வர்தனியை ஸ்தாபிக்கவும். ஹரிஹரார்த்த மூர்த்தி விஷயத்தில் மஹாவிஷ்ணு சிரோதேசத்தில் மஹாவிஷ்ணு கும்பம் அமைக்கவும். அந்தந்த சரீரத்தின் அர்த்த பாகத்தை தியானித்து பூஜை செய்யவும் சுற்றிலும் வித்யேஸ்வரர்கள் அதிஷ்டிதமாக ஸ்தாபித்து சந்தனம் புஷ்ப தூபதீப நைவேத்யங்களால் பூஜித்து மூர்த்தீஸ்வரர்களையும் முறையே தத்வ தத்வேஸ்வரர்களையும் அவர்கள் வியாபித்து உள் இடங்களையும் குறிப்பிட்டு ஹரிஹரார்தமூர்த்தி இவர்களுக்கு மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களின் விஷயத்தில் சிறப்பு கூறப்படுகிறது. பிறகு ஹோம முறையும் திரவ்யங்களும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டாவது நாள் மூர்த்திபர்களுடன் கூடி ஸ்வாமி, கும்பம், அக்னி இவைகளை பூஜிக்கவும் யஜமானன் மூர்த்திபர்களையும் ஆசார்யனையும் வஸ்திர, ஸ்வர்ணாங்குலீகம் இவைகளால் பூஜித்து அவர்களுக்கு தட்சிணை கொடுக்கவும். பிறகு நல்ல முகூர்த்த காலம் ஏற்பட்ட பொழுது ஆசார்யன் மந்திர நியாசம் செய்யவும் என கூறி அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரார்த்த மூர்த்தி இவர்களின் வேறுபாடு நிரூபிக்கப்படுகிறது. உத்ஸவம், ஸ்நபனம், அதிகமான நைவேத்யம் இவைகள் செய்ய வேண்டுமா வேண்டாமா என விளக்கமாக கூறப்படுகிறது. பிறகு இங்கு சொல்லப்படாதவற்றை அந்ததந்த ஸ்வாமியை ஸ்தாபிக்கும் முறையில் கிரஹித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. முடிவில் போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்க வல்லது என ஹரிஹரார்த்த மூர்த்தி, உமார்த்த மூர்த்தி பிரதிஷ்டை சொல்லப்பட்டது என பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறாக 60வது படல கருத்து சுருக்கம் ஆகும்.
1. விஷ்ணு உமார்த்த பிரதிஷ்டையை அதன் லக்ஷணத்துடன் சொல்கிறேன்.
2. இடது பாகத்தில் பார்வதியின் சரீரத்தையும் வலது பாகத்தில் சிவ சரீரத்தின் பாதியையும், வலது பாதியில் ஜடாமகுடமும், பிறை சந்திரனுடன் கூடிய சிகையையும்
3. இடது புறம் கரண்ட மகுடமும் நெற்றியில் சுருண்ட கேசத்துடன் கூடியதாகவும் வலப்புறம் அரை நெற்றிக் கண்ணை உடையதாகவும்
4. இடது காதில் சுருண்ட முடியும் கர்ணபத்ரத்துடன் கூடியும் வலது காதில் மகர குண்டலத்துடன் கூடியோ இல்லாமலும்
5. வலது மேல்கையில், மழுவும், அபயமும், அஸ்த்ரத்தை இடது கையில் கருங்குவளை மலர் தரித்ததாகவோ தேவியின் பிரதிஷ்டையில் கூறப்பட்டுள்ள ஆயுதத்தை ஏந்தியவராகவோ கண்ணாடி போலழகான உடையதாகவும்
6. கண்ணாடி அழகான வட்ட முக வடிவிலும் அதன் முஷ்டி பாகம் அதன் பாதி அளவாகவும் அதன் காம்பு மொட்டு போன்றும் கால்பக்கம் அழகாக உள்ளதாகவும் அமைக்க வேண்டும்.
7. உமையின் பாகம் ஸ்தனத்தோடு கூடியதாயும் அழகிய வஸ்த்ரம் உடுத்தியவராயும் வலது புறம் புலித்தோலுடையதாயும் இடது பாதம் சிறிது வளைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
8. இடது கால் நன்றாக நின்றதாயும் கொலுசு என்ற ஆபரணத்தினால் அலங்கரிக்கப்பட்டதாயும் மூன்றங்குல அளவு சிறிது வளைந்தும் பிறகு ஒன்பது அங்குல அளவு வளைந்ததாகவும் அமைக்க வேண்டும்.
9. இடது பாகம் பச்சை நிறமுள்ள தேகமாகவும் வலது பாகம் வெண்மையான காந்தி உடையதாயும் ஹ்ருதயம் குஹ்யம் இவைகளின் இடது வலது பாகத்தில்
10. சந்திரனின் இடப்பாகத்தை விட்டு நேராக நிற்கும் பாகத்தின் நுனியில் நடுபாகத்தில் சூத்திர மிடவும் உத்பல ஹஸ்தத்தின் உயரமும் ஸ்தன மொட்டும்
11. அதன் இடைவெளி பன்னிரெண்டங்குலமோ பதினான்கு அங்குலமாகவோ அமைக்கவும். ஈஸ்வர பாகத்தின் பக்கவாட்டுக்கை மத்தியில் உள்ளகை இவைகளின் இடைவெளி ஆறங்குலமாகும்.
12. கால் கட்டைவிரல், குதிகாலின் இடைவெளி பதினைந்து அல்லது ஐந்து அங்குலமாகும். மற்ற உருவ அமைப்புகள் சந்திரசேகர பிம்பத்தைப் போல் செய்ய வேண்டும்.
13. இவ்வாறு அர்தநாரீஸ்வரர் லக்ஷணம் கூறப்பட்டு ஹரிஹரார்த்த மூர்த்தியை பற்றி கேளுங்கள். முன்பு போலவே மஹேச்வரரின் பாதி உருவத்தையும் அமைக்க வேண்டும்.
14. விஷ்ணு பாகத்தில் சங்கு, கடகமுத்ரையோடு கூடிய இரண்டு கையை உடையவராகவும், பீதாம்பரத்துடன் எல்லா ஆபரணங்களையும் தரித்தவராயும்
15. மீதி உருவத்தை சந்திர சேகரரைப் போன்றே ஸூத்ரம் போடும், முறையில் செய்யவும். இவ்வாறே (ஹரிஹரார்த்த) சங்கர நாராயண மூர்த்திக்கு பிரம்ம பாகம் முதலியவைகளைச் செய்ய வேண்டும்.
16. இவ்வாறு பிம்பத்தை அமைத்து உத்தமமான ஆசார்யர்கள் பிரதிஷ்டையை செய்யவும். அவ்வாறான பிரதிஷ்டையை சுருக்கமாகக் கூறுகிறேன் கேளுங்கள்.
17. பிரதிஷ்டா காலம் முன்பே கூறப்பட்டுள்ளது. அவ்வாறே அங்குரார்ப்பணம் ரத்ன நியாஸம், நயனோன்மீலனம், மண் முதலியவைகளால் பிம்பசுத்தி
18. கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம் இவைகளை ஸாமான்ய ஸ்தாபனத்திற்கு சொல்லப்பட்ட வழியில் செய்ய வேண்டும்.
19. மேலும் அர்தபாகத்தை அந்த தேவ மூலமந்திரமாக அர்ச்சிக்க வேண்டும். ஐந்து, ஒன்பது குண்டங்கள் ஒரு குண்டத்தையோ அமைக்க வேண்டும்.
20. ஈசானத்தில் சதுரகுண்டம் ஒன்றை அமைக்கவேண்டும். சில்பியை அனுப்பிவிட்டு பிராம்மண போஜனத்தை செய்யவும்.
21. புண்யாகப்ரோக்ஷணம் செய்து, ஸ்தண்டிலம் அமைக்கவும். அதில் சயனம், அமைத்து ஸ்நபனம் தனியாகச் செய்து ரக்ஷõ பந்தனத்தை
22. இருவரின் முன்பாகமான கையிலும் செய்ய வேண்டும். பிம்பத்தை சயனத்தின் மேல் ஏற்றி பணிவுடன் படுக்க வைக்க வேண்டும்.
23. சிவனுடைய சிரோபாகத்தில் சிவ கும்பத்தையும் அம்பிகைக்குரிய சிரோ தேசத்தில் வர்த்தனீ கலசத்தையும் ஸ்தாபிக்க வேண்டும்.
24. விஷ்ணுவினுடைய சிரஸ்தானத்தில் விஷ்ணு கும்பத்தையும் ஸ்தாபிக்கவும். அந்தந்த சரீரத்தின் பாதி பாகங்களை அங்கு குருவானவர் தியானித்து பூஜிக்க வேண்டும்.
25. ஆசார்யர் சுற்றிலும் எட்டு குடங்களில் வித்யேச்வரரை பூஜிக்கவும் சந்தனம் புஷ்பம், தூபம், தீபம் நைவேத்யம் முதலியவைகளை கொடுத்து
26. தத்வ தத்வேச்வரந்யாசத்தை செய்து அடைந்ததாகப் பாவித்து க்ஷமா முதலான எட்டு மூர்த்திகளையும் அதன் மூர்த்தீசர்களையும் தியானம் செய்யவேண்டும்.
27. மூர்த்தீசர்களைப் பூஜிப்பதில் சற்று மாறுதல் கூறப்படுகிறது. சர்வன் பசுபதி, உக்ரன், ருத்ரன் என்ற மூர்த்திஸ்வரர்களும் சேதனா, பலோத்கடியையும்
28. தாத்ரீயையும் விப்வீயையும், இந்த்ராதி அஷ்டதிக்குகளில் வரிசையாக பூஜிக்க வேண்டும். விஷ்ணுவின் அர்த்த பாகப்ரதிஷ்டையில் ஸர்வ, பசுபதி உக்ர, ருத்ரன்களையும்
29. புரு÷ஷாத்தமன் விஷ்ணு கோவிந்தன் லக்ஷ்மிநாயகன் எனவும் பூஜிக்க பஞ்சமூர்த்தி ரூபமான நியாஸத்தில் மூர்த்திகள் முன்போல்
30. மேற்கில் பிரம்மா, கேசவன், ருத்ரன், ஞானி, இச்சா, என்றும் கவுரியின் பாதி சரீரத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்
31. ஜனார்த்தனன் புரு÷ஷாத்தமனையும் நியாஸம் செய்யவேண்டும். விஷ்ணுவின் பாதி பாகத்தில் பஞ்ச மூர்த்தீசர்களை நியாஸம் செய்யவேண்டும்.
32. சிவாம்சத்தில் சிவ மந்திரங்களையும் மற்ற அம்சத்தில் சரீரத்திற்கேற்ற மந்திரங்களையும் பூஜிக்க ஸம்ஹிதா மந்திரங்களினால் சிவனுடைய பாதி பாகத்தில் பூஜிக்க வேண்டும்.
33. அவ்வாறே மற்ற தேவதைகளுக்கு ஏற்ற ஈசாதிமூல மந்திரங்களால் பூஜிக்க இவ்வாறே மற்ற மந்திரங்களையும் புத்தியினால் அறிந்து பூஜிக்க வேண்டும்.
34. குண்ட ஸம்ஸ்காரத்தை செய்து அக்னியை அதில் பிறப்பிக்க வேண்டும். அந்தந்த திக்குகளில் அந்தந்த மூர்த்தீசர்களை ஆவாஹித்து
35. சமித்து, நெய், அன்னம், பொறி, எள், மூங்கில் யவைகளுடன் எல்லா மந்திரங்களாலும் பிரதான குண்டத்தில் ஆசார்யர் முன்போல் ஹோமம் செய்ய வேண்டும்.
36. புரசு, அத்தி, அரசு, ஆல் முதலிய சமித்துகளை கிழக்கு முதலான திக்குகளிலும் வன்னி, நாயுருவி, வில்வம் மயில் கொன்றை முதலியவற்றை அக்னி முதலான விதிக்குகளிலும் ஹோமம் செய்ய வேண்டும்.
37. பிரதான குண்டத்தில் புரசு, விசேஷமாக கூறப்படுகிறது. விஷ்ணு பாதிபாக விஷயத்தில் துளஸி, புரசு, இரண்டும் பிரதானத்தில் விசேஷம்
38. பிறகு இரண்டாவது நாளில் தேவர்களையும் கும்பங்களையும் அக்னியையும் பூஜிக்க வேண்டும். சந்தனம், வஸ்திரம், பொன் மோதிரம், முதலான உபசாரங்களோடு
39. மூர்த்திபர்களுடன் கூடிய ஆசார்யனை பூஜித்து தட்சிணையைக் கொடுக்கவும். நல்ல சுப முஹூர்த்தத்தில் மந்திர நியாஸத்தை செய்ய வேண்டும்.
40. கும்பங்களின் மந்திரங்களையும் வர்தனியின் மந்திரத்தையும் முறையாக சுவாமியிடத்தும் அம்பிகையிடத்தும், சமர்ப்பிக்கவும் பாதி விஷ்ணுவாக விஷயத்தில் வர்தனியை பீடத்தில் சேர்க்க வேண்டும்.
41. கிருஷ்ணருடைய கும்பத்திலிருந்து கிருஷ்ண பீஜத்தை கிருஷ்ணருடைய ஹ்ருதயத்தில் சேர்க்கவும். மற்ற கும்பங்களின் பீஜத்தை பீடத்தை சுற்றிலும் சேர்த்து நியாஸம் செய்ய வேண்டும்.
42. உத்ஸவம், ஸ்நபனம் மிகுந்த நைவேத்யம் முதலியவைகளை செய்யவும். செய்யாமலும் இருக்கலாம் இங்கு கூறாப்படாததை அந்தந்த மூர்த்தி ஸ்தானத்தில் கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.
43. பக்தியையும் மோக்ஷத்தையும் கொடுக்கக்கூடிய விஷ்ணுமார்த்தி பிரதிஷ்டை இவ்வாறு கூறப்பட்டது.
இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் விஷ்ணு உமார்த்த பிரதிஷ்டா விதியாகிற அறுபதாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக