சனி, 12 அக்டோபர், 2013

படலம் 56: பக்தானுக்கிரஹ மூர்த்தி ஸ்தாபனம்

56 வது படலத்தில் பக்த அனுக்கிரஹ தேவதா ஸ்தாபன விதி கூறப்படுகிறது. அமைப்பு முறையுடன் பக்த அனுக்கிரஹ தேவரின் ஸ்தாபனம் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பக்த அனுக்கிரஹர்கள் சதாசிவன் முதலிய தேவர்கள் என்று முன்னமே கூறப்பட்டுள்ளது. தேவ தானவ, கந்தர்வ முனிவர்கள் முதலிய மனுஷ்யர்கள் அவ்வாறே எறும்பு முதல் யானை வரை உள்ள ஜங்கம பிராணிகள் மரம் செடி கொடி முதலிய ஸ்தாவரங்கள் ஆகியவை இந்த சாஸ்திரத்தில் அனுக்கிரஹம் அடைய தகுந்தவர்களாவார்கள். இவர்களின் அனுக்கிரஹமானது சாக்ஷúஷதீக்ஷõ ஸ்பர்ச தீøக்ஷ சாஸ்த்ர தீøக்ஷ வாசிக தீøக்ஷ என்று பலவிதமாக கூறப்படுகிறது. எந்த மனிதன் சிவனால் அதிஷ்டிக்கப்பட்ட சரீரத்துடன் மரணத்தை அடைகிறானோ அவள் அந்த மனிதன் எல்லா பாபத்திலிருந்து விடுபட்டு சிவனாகவே ஆகிறான் இவ்வாறு எந்த மனிதன் மரணம் அடைந்த சமயத்தில் தன்னுடைய இஷ்டமான லிங்கத்தை தொட்டுக் கொண்டு உயிரை விடுகிறானோ அவனும் சிவனாகவே ஆகிறான். இதில் சந்தேகம் இல்லை.  இவ்வாறு அனுக்கிரஹம் செய்பவர்கள் அனுக்கிரஹிக்கப்படுபவர்களுக்கு செய்யும் அனுக்கிரஹம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பக்தர்களின் உருவத்தை அமர்ந்ததாகவோ, நின்ற கோலத்திலோ, படுத்திருப்பதாகவோ நல்ல லக்ஷணம் அஞ்சலிகையுடன் கூடியதாக உலோகம் முதலிய திரவ்யங்களால் செய்ய வேண்டும். இவ்வாறு உலோகம் முதலிய திரவ்யங்களால் சதாசிவன் முதலிய தேவர்களின் உருவமோ அல்லது அவர்களுடைய பீடமோ செய்யப்படவேண்டும். பக்த பிரதிமை, தேவபிரதிமையை ஸ்தாபிக்கவும் என்று பக்தானுகிரஹ தேவலக்ஷணம் கூறப்பட்டது. பிறகு பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. அங்கு கூறப்பட்ட நல்ல காலத்தில் அங்குரார்ப்பணம் செய்து ரத்னநியாஸ, நயனோன்மீலன, பிம்பசுத்தி, கிராமப் பிரதட்சிண, ஜலாதி வாசம் வரையிலான கிரியைகள் செய்யவும் என்று கிரியையின் வரிசை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை மண்டபத்தை குண்டம், வேதிகையுடன் கூடியதாக முன்பு கூறப்பட்டுள்ளபடி செய்யவும்.

பிறகு ஸ்தபதியை திருப்தி செய்து, பிராம்மண போஜனம், புண்யாகவாசன பரோக்ஷணம் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் செய்து அங்கு முறைப்படி சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலாதி வாசத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து ஸ்நபனத்தால் அபிஷேகம் செய்து ரக்ஷõபந்தனம் செய்து சயனத்தில் ஸ்தாபிக்கவும். பிறகு முன்பு போல் கும்பஸ்தானம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமியின் கால் பக்கத்தில் பக்தனின் கும்பமும் சுற்றிலும் வித்யேஸ்வரரால் அதிஷ்டிதமான எட்டு கும்பங்களையும் ஸ்தாபிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தத்வததத்வேஸ்வர மூர்தித்தேஸ்வர நியாசம் முன்பு கூறிய முறைப்படி செய்யவும் என்று கும்ப அதிவாச முறை மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஹோம முறை திரவ்ய நிரூபணம் முதற் கொண்டதாக சுருக்கமாக கூறப்படுகிறது. இரண்டாவது தினத்தில் ஆசார்யன் முறைப்படி கும்ப, அக்னி பூஜை செய்து, தட்சிணையை பெற்றுக் கொண்டு மூர்த்திபர்களுடன் கூடி பிம்பத்திற்கு முன்பாக கடங்களை ஸ்தாபித்து மந்திர நியாசம் செய்யவும் என்று மந்திர நியாஸம் முறைப்படி கூறப்படுகிறது. பிறகு அந்த கும்பத்தில் உள்ள தீர்த்திரங்களால் மூர்த்தியை அபிஷேகம் செய்யும் முறையும் கூறப்படுகிறது. பிரதிஷ்டை முடிவில் ஸ்நபனம், நைவேத்யம் செய்யவும். பிறகு உத்ஸவம் செய்யவும் என்று உத்ஸவம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு முடிவில் இறந்தவரை குறித்து அவரின் புத்திரனோ பேரனோ இந்த பிரதிஷ்டையை செய்யவும் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய ஆத்மாவை சிவாத்மாவாக பாவித்து பிரதிஷ்டை செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு 56வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே, உயர்ந்த அந்தணர்களே, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்ற தேவருக்கு உருவ அமைப்புடன் கூடியதான ஸ்தாபனத்தை நன்கு கூறுகிறேன், கேளுங்கள்!

2. ஸதாசிவாதி தேவர்கள் முன்பே அமைப்பு முறையுடன் கூறப்பட்டுள்ளார்கள். அவர்களே அனுக்ரஹம் செய்யக்கூடியவர்கள், அதனால் பக்தாநுக்ரஹம் செய்யக்கூடியவர்கள் என்று எண்ணப்படுகிறார்கள்.

3. தேவர்கள், தானவர்கள், கந்தவர்கள், முனிவர்கள், மனுஷ்ய ஜாதிகள், எரும்பு முதல் யானை வரை ஜங்கமஸ்தாவரங்கள் எவர்களோ

4. அவர்கள் அனுக்ரஹிக்க கூடியவர்கள். சாஸ்திரங்களில் அனுக்ரஹம் பலவிதமாக கூறப்பட்டுள்ளது. சிவதீøக்ஷ, சாஸ்த்ர உபதேசம், ஸ்பர்சதீøக்ஷ, சாக்ஷúஷ தீøக்ஷ சமாதான வார்த்தைகள் மூலம் என்பதாக அருள்பாலிக்கும் முறை கூறப்பட்டுள்ளது.

5. சிவாதிஷ்டித உடலோடு கூடின ஓர் மனிதன் மரணத்தை அடைந்தால் அந்த மனிதன் எல்லா பாபங்களில் இருந்து விடுபட்டு சிவனாகவே ஆகின்றான்.

6. இறக்கும் காலத்திலே விருப்பப்பட்ட லிங்கத்தை தொட்டுக்கொண்டு எவன் உயிரை விடுகின்றானோ அவன் சிவனே அதில் சந்தேகம் இல்லை.

7. சொல்லப்பட்ட கோத்ரம் முதலிய தேகத்தை அதனுடைய ஆகிருதியை (உருவை) செய்து தொட்டுக் கொண்டு நல்ல லக்ஷணத்தோடு கூட படுத்துக் கொண்டோ அமர்ந்து இருந்து கொண்டோ நின்று கொண்டோ

8. கையை கூப்பிக் கொண்டு பிரதிமையை ஸதாசிவர் முதலான பிம்பங்களுக்கு கூறப்பட்ட உலோக திரவியங்களினால் (பொருட்களால்) சமர்த்த னானவன் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

9. சமர்த்தனான ஆசார்யன் அதனுடைய பீடத்தை அதேபோல் அளவில் செய்ய வேண்டும். பக்தானுக்ரஹ தேவதையினுடைய லக்ஷணம் இம்மாதிரி கூறப்பட்டது.

10. பிராம்ஹண உத்தமர்களே, பிரதிஷ்டை செய்வதை பற்றி கூறுகிறேன் கேளுங்கள். முன்போல நல்லவேளையை நிர்ணயம் செய்து அங்குரார்பணம் செய்ய வேண்டும்.

11. ரத்னந்யாஸம், கண் திறப்பது, பிம்பசுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலத்தின் நடுவில் (அதிவாஸம்) ஜலாதிவாசம் செய்ய வேண்டும்.

12. பிரதிஷ்டா மண்டபமானது (அதை) முன்பு கூறப்பட்ட முறையினால் செய்யவும். அந்த இடத்தில் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் குண்டங்களை அமைக்கவும்.

13. நாற்கோணம் முதலிய குண்டங்கள், வ்ருத்த குண்டம், பிரதாணமாகவோ அமைத்து சில்பியை சந்தோஷப்படுத்தி அனுப்பிவிட்டு பிராம்ஹண போஜநம் செய்வித்து புண்யாஹவாசனம் செய்து புரோக்ஷிக்கவும்.

14. நெல், அரிசியால் ஸ்தண்டிலம் அமைத்து ஸ்நபனம், சயனாதிவாசம், அதே போல் ரக்ஷõபந்தனம் (காப்புகட்டு) கும்பஸ்தானம் இவைகள் முன்போல் செய்ய வேண்டும்.

15. அதனுடைய பாதத்தில் அதனதனுடைய தியானத்தோடு பக்த கும்பத்தையும் ஹ்ருதய மந்திரத்தோடு கூட வித்யயேஸ்வர கடங்களை சேர்ந்ததாக (கடகங்களுடன்)

16. அந்தந்த மூர்த்திகளுடைய நியாஸங்களை முன் கூறிய விதியினால் நடத்த வேண்டும். குண்ட ஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்ய வேண்டும்.

17. சமித்து, நெய், பொறி, எள், மூங்கில், அரிசி, யவதான்யம், புரசு, அத்தி, அரசு, ஆல் இவைகள் கிழக்கு முதலிய நான்கு திசைகளிலும்

18. வன்னி நாயுறுவி, வில்வம், இச்சி ஆகிய சமித்துக்களை தென்கிழக்கு முதலான கோணங்களிலும் புரசு சமித்து பிரதான குண்டத்திலும் அல்லது எந்த குண்டசமித்து இல்லையோ அந்த குண்டத்திற்கு புரசுசமித்தையும் ஹோமம் செய்ய வேண்டும்.

19. பிறகு இரண்டாவது தினத்தில் கும்பம், அக்னி, பூஜையை செய்து ருத்விக்குகளோடு கூட வஸ்திரம், தங்கம் முதலியவைகளை அடைந்தவனாய்

20. ஆசார்யன் பத்து நிஷ்கம் தட்சிணையை அடைந்து சந்தோஷமான மனதோடு பிம்பத்தின் முன்நிலையில் கடங்களை வைத்து பிம்பத்திற்கு மந்திரந்யாஸம் செய்யவும்.

21. கும்பத்திலிருந்து மந்திரத்தை எடுத்து தேவருடைய ஹ்ருதயத்தில் நியஸித்து (சேர்த்து) ஈஸ்வரன் தேவியோடு கூடி இருந்தால் ஆசார்யன் தேவியினுடைய மந்திரத்தை

22. தேவியினுடைய ஹ்ருதயத்தில் மந்திரத்தை சேர்க்க வேண்டும். இல்லாவிடில் பீடத்தில் சேர்க்க வேண்டும். பிறகு கும்ப ஜலத்தினால் அவர்களை அபிஷேகம் செய்ய வேண்டும்.

23. பக்த கும்பத்திலிருந்து மூலமந்திரத்தை அந்த பக்த ஹ்ருதயத்தில் சேர்த்து நியஸிக்க வேண்டும். மற்ற அஷ்டவித்யேஸ்வர மூலமந்திரங்களை எடுத்து பீடத்தினுடைய சுற்றிலும் சேர்க்க வேண்டும்.

24. அந்த கும்ப ஜலத்தினால் பீடத்தை அபிஷேகம் செய்விக்க வேண்டும். ஸ்நபனம் செய்து முடிவில் நைவேத்யம் செய்ய வேண்டும்.

25. கடைசியில் உத்ஸவம் செய்ய வேண்டும் என ஸாமான்யமாக கூறப்பட்டது. திரிபுரஸம்ஹார (முப்புரம் எரிப்பது) பிரதிஷ்டையில் விசேஷவிதி கூறப்பட்டிருக்கிறது.

26. பக்த பிரதிஷ்டையில் கூறியுள்ளபடி எந்த மனிதன் இந்தபடி செய்கிறானோ, அவன் புண்ய கதியை அடைகிறான்.

27. புத்திரனை விரும்புகிறவர்கள் புத்திரனையும், பணத்தை விரும்புகிறவர்கள் பணத்தையும் தேவர்கள் விரும்புபவர்கள் தேவர்களையும், மோக்ஷத்தை விரும்புபவர்கள் மோக்ஷத்தையும் அடைவார்கள்.

28. மனுஷ்யன் எந்தந்த விருப்பங்களை விரும்புகிறானோ அவைகளை அடைகிறான். இறந்தவனை குறித்து எந்த மகன், பேரன், இப்பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் மேற்கூறிய பயனை அடைகிறான்.

29. உயிரோடு இருக்கும்பொழுதே சிவ அடையாளத்தை உடையவனாக தன்னை பிரதிஷ்டை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பக்தானுக்ரஹ தேவஸ்தாபன முறையாகிற ஐம்பத்தியாறாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: