சனி, 12 அக்டோபர், 2013

படலம் 57: காலாரி, காமாரி, மூர்த்தி, பிரதிஷ்டை

57வது படலத்தில் கால சம்ஹார மூர்த்தி காமாரி, மூர்த்தி, இவைகளின் பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. முதலில் காலாரீ, காமாந்தர்களின் லக்ஷண பூர்வமாக பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது என்பது பிரதிக்ஞை. முதலில் காலசம்ஹாரமூர்த்தியின் லக்ஷணம் சூத்ரம் இடும் முறையாக கூறப்படுகிறது. இதில் நான்கு கையுடன் கூடிய காமாரி மூர்த்தி லக்ஷணம் கீழே விழுந்துள்ள காலனின் லக்ஷணம், அவ்வாறே அங்கே நிற்கின்ற கோலத்துடன் மார்கண்டேயரின் லக்ஷணமும் கூறப்படுகின்றது. இங்கு மார்க்கண்டேயருடன் கூடியதாகவோ இல்லாமலோ அமைக்கவும் என கூறப்படுகிறது. இங்கு சிவலிங்கத்திலிருந்து உண்டான காலாரி தேவனால் விழுந்த காலனையோ செய்யவும் என்று காலாரி மூர்த்தியை அமைக்கும் விஷயத்தில் வேறு விதம் கூறப்படுகிறது. பிறகு காமாரி மூர்த்தி லக்ஷணம் நிரூபிக்கப்படுகிறது. இங்கு யோகதட்சிணா மூர்த்திக்கு முன்பாக அவருடைய திருஷ்டியால் க்ஷண நேரத்தில் விழுந்த மன்மதனை அமைக்கவும் என்று கூறி மன்மத மூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. இங்கு மன்மதன் தேவபாகன் வசந்தன் என்ற இரு நண்பர்களோடு கூடியதாகவோ இல்லாமலோ அமைக்கலாம் என்று விசேஷமாக கூறப்படுகிறது. இவ்வாறு மன்மதனின் ஐந்து சரத்துடன் கூடியவனாகவோ அல்லது ஒரு சரத்துடன் கூடியவனாகவோ அமைக்கலாம் என விசேஷம் கூறப்படுகிறது. மன்மதனின் ஐந்து சரங்கள் லிம்பனி, டாபினி, வேதினி, திராவினி, மாலிநி, என்ற ஐந்து பெயர்களும் கூறப்படுகின்றன. பிறகு பிரதிஷ்டா முறை கூறப்படுகின்றது. முன்பு கூறியுள்ளபடி நல்ல வார, திதி, நட்சத்திரங்களை பார்த்து அங்குரார்ப்பணம் செய்து முன்போல் யாக மண்டபம் அமைத்து குண்டவேதிகை இவைகளுடன் கூடிய மண்டப முறையும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஈஸ்வரன், காலன் காமன், இவர்களுக்கு தனித்தனியாக ரத்னநியாசம், நயனோன் மீலனம், பிம்பசுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் வரையிலான கிரியைகள் செய்யவும் என்று கிரியைகளின் வரிசை முறை கூறப்படுகிறது.

பிறகு மண்டபத்தில் வேதிகைக்கு மேல் ஸ்தண்டிலம் அமைத்து அங்கு பிம்பங்களுக்கு தனித்தனியாக சயனம் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமியின் காலடியில் காலனுக்கும், காமனுக்கும், சயனம் கல்பிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு ஜலாதிவாசத்திலிருந்து மண்டபத்திற்கு எடுத்து வந்த பிரதிமைகளுக்கு தனித்தனியாக சயனாரோஹணம் செய்யவும் என்று சயனாதிவாச விதி கூறப்படுகிறது. கும்ப அதிவாச முறை சுருக்கமாக கூறப்படுகிறது. ஸ்வாமியின் சிரோதேசத்தில் சிவகும்பமும் அதற்கு வடக்கு பாகத்தில் வர்த்தனியையும் ஸ்தாபிக்கவும். காலனுக்கு கும்பத்தை அவனுடைய சிரோதேசத்தில் அந்த மந்திரத்தை ஸ்மரித்து பூஜிக்கவும் மன்மதனாக இருந்தால் சிரோதேசத்தில் மன்மதனுக்கு கும்பம் அமைக்கவும். மன்மதன் தேவபாக வசந்தன் என்ற மன்மதனோடு சேர்ந்திருந்தால் மன்மதனின் இருபக்கத்திலும் கும்பம் அமைக்கவும். சுற்றிலும் வித்யேஸ்வரர்களை அதிஷ்டித்ததும் வஸ்திரம், ஸ்வர்ணம் இவைகளுடன் கூடியதுமான எட்டு கும்பத்தை ஸ்தாபிக்கவும். பிறகு முறைப்படி சந்தனாதிகளால், கும்ப அர்ச்சனை செய்யவும் பிறகு தத்வேஸ்வராதி நியாசம் செய்யவும் என கூறி காலகாம விஷயத்தில் தத்வதத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாசம் கூறப்படுகிறது. மன்மத விஷயத்தில் வசந்தன் கிரீஷ்மன், பிராவிருட், சரத் ஹேமந்த என்று மூர்த்தீஸ்வரர் கூறப்படுகின்றன. பிறகு திரவிய நிரூபண பூர்வமாக ஹோம முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ராத்திரி சேஷத்தை போக்கி காலையில் ஆசார்யன் சுத்தமான ஆத்மாவுடன் மூர்த்திபர்களுடன் கூடி பிம்பம், கும்பம், அக்னி இவர்களை பூஜித்து நல்ல முகூர்த்தத்தில் நல்ல லக்னத்தில் கும்பங்களை பிம்பத்திற்கு முன்னதாக வைத்து மந்திர நியாஸம் செய்யவுமே என்று மந்தர நியாச விதி கூறப்படுகிறது. இங்கு கூறப்படாத ஒன்றை சாமான்ய ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்யவும் என்று கூறப்படுகிறது. முடிவில் இவ்வாறு எந்த மனிதன் பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் தன் விருப்பப்பட்ட போகங்களை அனுபவித்து, சரீரமுடிவில் சிவனை அடைவான் என்று கூறி இது சந்தேகம் இல்லை என கூறி பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு 57வது படல கருத்து சுருக்கமாகும்.

1. காலஸம்ஹார மூர்த்தி, காமதகன மூர்த்தி பிரதிஷ்டையை லக்ஷணங்களோடு (அதன் அமைப்பு முறை) கூடியதாக கூறுகிறேன். நான்கு கைகள் மூன்று கண்கள் ஜடாமகுடம் இவைகளோடு கூடியவராகவும்

2. இடது கால் (குஞ்சிதமாக) சிறிது வளைந்த அமைப்பை உடையவரும், புலித்தோலை தரித்தவரும், நீண்ட தித்திப்பல்லோடும் கூட நீளமான மூக்கையும் சிறிது வலது பாதத்தை தூக்கியவராய் இருப்பவரும்

3. வலது கையில் சூலாயுதமும், இடது கையில் ஊசியும், வலது கையில் பரசுவையும் இடது கையில் நாகபாசமும் தரித்தவராய் (உடையவராய்)

4. ஈஸ்வரனுடைய பார்வை (கடாக்ஷம்) யானது காலனான யமனிடத்தில் வைக்கப்படவேண்டும். பரமேஸ்வரனுடைய சூலம் கீழ்நோக்கியோ யமனின் உடல்மேல் இருப்பதாகவோ கூறப்பட்டுள்ளது.

5. எச்சரிக்கும் முத்ரையையுடைய கை, (ஊசியோடு கூடிய கை) தொப்பூழ் பக்கத்தில் கையை தூக்கிய அமைப்பாகவும் அந்த கையினுடைய மணிக்கட்டு, பக்க நடுவில் ஐந்து அங்குலத்திலும்

6. காதுவரை சூலத்தினுடைய நுனியும் அதனுடைய மணிக்கட்டிலிருந்து காதினுடைய நுனி இரண்டு தாள அளவும் தோள்பட்டை பாகத்திற்கு ஸமமாக பக்கக்கையும்

7. காதினுடைய நுனி மணிக்கட்டுவரை என்பது ஒரு யவை அங்குல அளவாகும். தலை, வலதுகை, இடது மூக்கினுடைய பாகம்

8. தொப்பூழின் வலது பாகம் இடது கால் நுனி வரை முன்பக்கமாக கோடுபோட வேண்டும். அந்த சூத்திரத்திலிருந்து ஆண்குறியின் இடது பாகத்தின் நடுவிலுமாக கோடு போட வேண்டும்.

9. நிற்க கூடிய முழந்தாள் இடைவெளி சூத்திரத்திலிருந்து இடது பக்க சூத்திரம் கூறப்பட்டது. உயரே தூக்கப்பட்ட பாதம் முழங்கால் உயரமும் இடுப்பு நுனியும் அதற்கு சமமான அளவாகும்.

10. முழந்தாள் நடுவிலிருந்து சமமான உயரம் பாததள நுனிவரையிலும் ஆகும் என்று சொல்லப்பட்டது. வலது பாதத்தினுடைய குதிகால் நுனி வரை நூல்வரை பதினைந்து அங்குலமாகும்.

11. மேல்கைகளில் கடகம் சூலஹஸ்தமும் அந்த சூலஹஸ்தத்தின் இடது பக்கத்தில் தொப்பூழ் பாகம் வரை எட்டு யவம் அளவாகும்.

12. நடுவிலுள்ள சூத்திரத்திலிருந்து முழங்கால் வரை சம்பந்தப்பட்ட மூன்று அங்குலமாகும். உயரே தூக்கப்பட்ட நுனிபாகமுள்ள முழங்காலுக்கு எட்டு மாத்ரையாகும்.

13. யமன் கீழே விழுவதாகவும் மயங்கியதாயும் அழுது கொண்டும், கத்திக் கொண்டும், சிவப்பு வஸ்திரத்தோடு கூடியதாயும் அவ்விதமே செம்பட்டை முடியுள்ளவராயும்

14. சூலம், பாசம், விரிந்த கால்கள், தித்திப் பல்லுடன் கூடிய முகம், சிவப்பு பருவம், சிகப்பு கண்களோடு

15. பரமேச்வரனுடைய நாபிவரையில் உள்ளதாக ஒன்பதுதாள அளவில் செய்ய வேண்டும். கையை கூப்பிக் கொண்டாவது அமைப்புள்ளதாக யமனை செய்ய வேண்டும்.

16. அல்லது பரமேச்வரனுடைய லிங்கத்திலிருந்து தள்ளப்பட்டு விழுந்தவனாக செய்ய வேண்டும். காலஸம்ஹாரமூர்த்தி லிங்கத்திலிருந்து வெளிக்கிளம்பினவராகச் செய்தல் வேண்டும்.

17. மற்றொருவர் (மார்கண்டேயர்) பூசியவராய், த்ரிபங்கத்தில் நின்றவராய், தலைகுனிந்தவராய் புஷ்பாஞ்சலியோடு கூடியவராய் பக்கத்தில் இருப்பது (விரும்பத்தக்கது).

18. மார்க்கண்டேயர் யமனிடத்திலிருந்து பயத்தை அடைந்தவராகவோ மார்க்கண்டேயன் பரமேச்வரனால் மகிழ்ச்சி அடைந்தவனாகவோ இருப்பதாக குறிப்பறியும் தன்மையால் சேர்த்தோ சேர்க்காமலோ இருக்கலாம்.

19. அபஸ்மாரத்தினுடைய சரீரத்தில் கால் ஊனினதாக இல்லாமலோ இருக்கலாம். காலஸம்ஹார மூர்த்தி இவ்வாறு கூறப்பட்டது. மன்மத ஸம்ஹார மூர்த்தியை பற்றி கூறப்படுகிறது.

20. யோகத்திலிருக்கக்கூடிய தட்சிணா மூர்த்திக்கு முன்பாக மன்மதனை செய்ய வேண்டும். பார்வை பட்ட அந்த நிமிடத்திலேயே விழுந்தவனாக

21. பத்து பாகத்தை விட்டு தேவனுடைய ஒரு பாகம் முதல் ஏழுபாகம் வரை மன்மதனை தங்க ஆபரணங்களுடன் கூடியவனாக அமைக்கும்படி கூறப்பட்டுள்ளது.

22. சுத்தமான தங்கத்தை போல் பிரகாசித்துக் கொண்டு ஐந்து புஷ்ப பாணங்கள் கரும்பு வில்லோடு கூட மீன் கொடியோடு கூடியவனாக மன்மதனையும்

23. வசந்தனாகிய நண்பனோடு கூடியும் மிகவும் அழகானவனாகவும் தேவருடைய அருகில் இருந்து கொண்டு லம்பினீ, தாபினீ, வேதினீ, திராவினீ

24. மாரினீ என்ற அம்புகள் ஆகும், வில்லை இடது கையிலும் அம்புகளை வலது கையில் வைத்திருப்பவனாகவும் மன்மதன் நண்பனோடு கூடியவனாகவோ நண்பனின்றியோ ஓர் அம்புடன் கூடியவனாகவோ

25. மேற்கூறிய இந்த முறைப்படி உருவ அமைப்பு கூறப்பட்டது. பிரதிஷ்டை விதிமுறையை கூறுகிறேன். நாள் அங்குரார்ப்பணம், யாகமண்டபம் (வேள்விச் சாலை) முதலியவைகளை முன்போல் செய்ய வேண்டும்.

26. ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையுள்ள குண்டங்களை மண்டபத்தில் செய்ய வேண்டும். சதுரமோ (நாண்கோணம்) எண்கோணங்கள், வட்ட வடிவம் என்ற வடிவமாகவோ அமைக்க வேண்டும்.

27. ரத்னந்யாஸம், கண்திறப்பது பிம்பசுத்தி அதற்கு பிறகு கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம் இவைகளை ஆசார்யன் முன்போல் செய்ய வேண்டும்.

28. காலஸம்ஹார மூர்த்தி, காமாந்தக மூர்த்தி, தேவர்களுக்கு (மார்க்கண்ட யமன், மன்மதன் மித்ரன்) தனித்தனியாக செய்ய வேண்டும். வேதிகைக்கு மேல் ஸ்தண்டிலத்தில் சயனம், ஸ்நபனம், தனித்தனியாக செய்ய வேண்டும்.

29. ஈஸ்வரனுடைய (காலஸம்ஹாரர்) பாதத்தில் யமனையும், காமாரி பாதத்தில் மன்தனையும் சயனம் செய்விக்கவும். ரக்ஷõபந்தனம் சயனத்தில் எழுந்தருளச் செய்தல், முன்போல் தனித்தனியாகச் செய்ய வேண்டும்.

30. தலைபாகத்தில் ஈஸ்வர கும்பத்தையும் வடக்கு பாகத்தில் வர்த்தினியையும் வைத்து, யமனுடைய மந்திரத்தை ஸ்பரிசித்து யமனின் தலைப்பக்கத்தில் யமகும்பத்தையும் வைக்கவும்.

31. மன்மதனுடைய தலைபாகத்தில் வஸ்திரங்களோடு கூடிய கும்பத்தை வைக்க வேண்டும். நண்பனோடு மன்மதன் கூடியிருந்தால் அவர்களுக்காக இரண்டு கலசங்கள் வைக்க வேண்டும்.

32. மன்மதனுடைய அருகில் சயனாதி வாஸத்தில் வஸந்தன், தேவபாகன் ஆகிய இரு நண்பர்களையும் ஆசார்யன் அமைத்து

33. வஸ்திரம், இவைகளோடு கூடிய (எட்டு) கும்பங்கள், கிழக்கு முதலிய திக்குகளில் சுற்றிலும் வைக்க வேண்டும். வித்யேஸ்வரர்கள் (பூஜித்து) சந்தன புஷ்பங்களினால் பூஜிக்க வேண்டும்.

34. தத்வேஸ்வரர்களை பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும். தத்பம் முதலானவைகள் முன்போலவே காமதகன மூர்த்திக்கு வ்யாப்தி கூறப்பட்டது.

35. யமனுக்கு ஐந்து மூர்த்திகளுக்கு மூர்த்தீஸ்வரர்களையும், பூஜிக்க வேண்டும். ஆத்ம தத்வம், வித்யாதத்வம் சிவதத்வங்களுக்கிடையே வ்யாப்தி கூறப்பட்டது.

36. சப்ததத்வம் ப்ரக்ருதிதத்வம், காலதத்வம் வரையிலாகவும் ஈசானம் வரையிலுமாகி மூர்த்திகள் மூன்று தத்வ வ்யாபகமாகும். வசந்தம் கிரீஷ்மம் என்ற ஸம்ஞயில் கூறப்பட்டது.

37. ப்ராவிருட், சரத், ஹேமந்தம் என்ற ருதுக்கள் மன்மதனுக்கு மூர்த்தீச்வரர்கள் ஆவர். குண்ட ஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து, சமித்து நெய் ஹவிஸ், எள்ளு

38. அரிசி, வெல்லம், பொறி, வெண்கடுகு, இவைகளை முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும். புரசு, அத்தி, அரசு, ஆல் ஆகிய சமித்துக்களை கிழக முதலான நான்கு திசைகளில் ஹோமம் செய்ய வேண்டும்.

39. வன்னி, கருங்காலி, நாயுருவி, வில்வம் ஆகிய சமித்துக்களை தென்கிழக்கு முதலான நான்கு கோணங்களிலும் புரசு பிரதானத்திற்கும் ஆகும் அல்லது எல்லா குண்டங்களிலும் புரசு சமித்து ஹோமம் செய்யலாம்.

40. காலனையும், காமனையும் பிரதான குண்டத்தில் புத்தியுள்ளவன் கல்பிக்க வேண்டும். இந்த மாதிரியாக இரவை கழித்து பிறகு பரிசுத்தமான விடியற்காலையில்

41. சுத்தனான ஆசார்யன், பிம்பத்தை எடுத்து பூஜித்து குரூத்தமனானவன் கும்பம், குண்ட அக்னியில் மந்திரந்யாஸம் செய்ய வேண்டும்.

42. ரிக்விக்குகளோடு கூட வஸ்திரம் தங்க மோதிரம் இவைகளினால் அடைந்த தட்சிணைகளோடு (பணம்) நல்ல லக்னத்தில்

43. கும்பங்களை பிம்பங்களுக்கு முன்பாக வைத்து சிவகும்பத்தை மந்திரத்தை நினைத்துக் கொண்டு பரமேஸ்வரனுடைய மந்திரத்தை ஆதரவோடு நியாசம் செய்து அதனுடைய பீடத்தில் கரகமான வர்த்தனீயை நியசிக்க வேண்டும்.

44. அஷ்ட வித்யேச கும்பங்களுடைய மந்திரத்தை எடுத்து அதன் பீடத்தை சுற்றிலும் சேர்க்க வேண்டும். மற்றவைகளிலிருந்து மூலமந்திரத்தை எடுத்து அந்தந்த மூர்த்திகளுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

45. ஸ்னபனம், அதிகமான நைவேத்யம், உத்ஸவம் செய்தோ அல்லது செய்யாமலிருக்கலாம். இங்கு கூறப்படாததை ஸாதாரணமாக ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்ய வேண்டும்.

46. இது மாதிரியாக செய்கின்ற மனிதன் விரும்பிய போகங்களை அனுபவித்து சரீர முடிவில் ஈச்வரனை அடைகிறான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் காலாரி காமாந்தக பிரதிஷ்டை முறையாகிய ஐம்பத்தியேழாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: