படலம் 55: சண்டேசானுக்ரஹ மூர்த்தி
55வது படலத்தில் சண்டேசானுகிரஹர் முதலானவர்களின் ஸ்தாபனமுறை கூறப்படுகிறது. இங்கு அமைக்கும் முறைப்படி சண்டேசானுக்ரஹ, நந்தீசானுக்கிரஹ, விஷ்ணுஅனுக்கிரஹ மூர்த்திகளின் பிரதிஷ்டை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. முதலில் சண்டேசானுக்ரஹ மூர்த்திலக்ஷணம் கூறப்படுகிறது. இங்கு உமா தேவியுடன் கூடிய சந்திரசேகரமூர்த்திக்கு வலப்பக்கத்திலோ, இடது பக்கத்திலோ அமர்ந்ததாகவோ நின்றதாகவோ அஞ்சலிகையுடன் ஸ்வாமியை பார்த்துக்கொண்டிருப்பதாக சண்டிகேஸ்வரரை அமைக்கவும். அங்கு ஈஸ்வரன் சண்டிகேஸ்வரரின் சிரசில் புஷ்பமாலையாக சுற்றுவதனை செய்பவராகி பிம்பம் அமைக்கவும். இப்பேர்பட்ட உருவ அமைப்பு உடையது சண்டேசானுகிரக மூர்த்தியாகும். இவ்வாறாக சண்டேசானுக்கிரக மூர்த்திலக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு முன்பு போலவே உமாதேவியுடன் கூடிய சந்திரசேகரமூர்த்திக்கு பாகத்திலோ, வலதுபாகத்திலோ, இரண்டுகண், இரண்டுகை உடையதும் அமைதியானதும் அஞ்சலிகையுடன் கூடியதாகவும், ஜடாமகுடத்துடன் கூடியதாகவும் சிவாகமங்களை கேட்பதில் ஈடுபட்டதாகவும் பிரசன்ன மானவருமான நந்திகேஸ்வரரை அமைக்கவும் இவர் நந்தீசானுக்கிரஹ தேவனாகும் என்று நந்தீசானுக்கிரஹ மூர்த்தி வர்ணிக்கப்பட்டது. பிறகு முன்பு கூறப்பட்டுள்ள அமைப்புபடி ஸ்வாமியின் வலது பாகத்திலோ இடது பாகத்திலோசக்ரத்துடன் கூடிய அஞ்சலிகையையும், சங்கம், தாமரை இவைகளை விஷ்ணுவிற்கு சக்ரம் கொடுப்பவராக உள்ளவர் விஷ்ணு அனுக்கிரஹமூர்த்தியின் லக்ஷணம் கூறப்பட்டு மற்ற அனுக்கிரஹ கார்யம் செய்யும் சிவனை அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முன்பு கூறப்பட்டு நல்ல கிழமை நட்சத்திரம் முதலியவைகளை பரிக்ஷித்து அங்குரார்பணம் செய்து அனுக்கிரஹம் செய்பவர் அனுக்கிரகிக்கப்படுவர்கள் ஆகிய இருவர்க்குமான விஷயத்தில் ரத்ந நியாசம், நயனோன்மீலனம், பிம்பசுத்தி கிராமபிரதட்சிண பூர்வமாக ஜலாதிவாசம் வரையிலான கிரியைகளை செய்யவும் என்று கிரிய வரிசை முறை கூறப்படுகிறது.
பிறகு யாக மண்டபம் குண்டம் வேதிகை அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு சிலையை திருப்திசெய்து விட்டு பிராம்மணபோஜனம், புண்யாகப்ரோக்ஷணம் வாஸ்து ஹோமம் இவைகளை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு மண்டபத்தில் வேதிகையில் ஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி சயனம் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு ஜலாதிவாசத்திலிருந்து மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்ட பிம்பங்களுக்கு தனித்தனியாக ஸ்நபனம் செய்து ரக்ஷõபந்தனம் செய்து சயானாதிவாசம் செய்யவும் என சயன அதிவாச முறை விளக்கப்படுகிறது. பிறகு ஈஸ்வரனால் அனுக்கிரஹிக்கத் தகுந்த பக்தர்கள் தனியாக பீடமாக இருந்தால் அவர்களுக்கு ஸ்வாமியின் காலடியில் சயனம் அமைத்து பிறகு ஈஸ்வரனின் சிரோபாகத்தில் சிவகும்பம், வர்தனியையும் ஸ்தாபிக்கவும். அனுக்கிரஹிக்கவேண்டிய பிம்பங்களின் விஷயத்தில் அந்த பூஜை முறையில் கூறப்பட்டுள்ளபடி அந்தந்த மூர்த்திக்கு எட்டுகும்பங்களுடன் ஸ்தாபிக்கவும். ஹோமமுறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு மறுநாள் மூர்த்திபர்களுடன் கூடி ஆசார்யன் தேவன், கும்பம், அக்னி இவர்களை பூஜித்து நல்ல முகூர்த்தத்தில் தட்சிணை பெற்றுக்கொண்டு மந்திரநியாசம் செய்யவும் என்று மந்திரர்யாஸமும் விளக்கப்படுகிறது. பிறகு அந்தந்த கும்ப தீர்த்தங்களால் அந்தந்தி ஸ்வாமியை அபிஷேகம் செய்யவும் என்று கும்பாபிஷேக முறை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டையின் முடிவில் ஸ்நபனம், உத்ஸவம், அதிகமான நைவேத்யம் இவைகளை செய்யவும். இங்கு பூஜை விஷயத்தில் வேறுபாடு காணப்படுகிறது. தேவியானவள் தனியாக பீடமாக இருந்தால் கல்யாணம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு முடிவில் இவ்வாறு யார் பிரதிஷ்டை செய்கிறானோ அவன் முடிவில் மோட்சத்தை அடைகிறான் என்று பலச்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு 55வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. பிறகு சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர் விஷ்ணு இவர்களை அனுகிரஹித்த பிரபுவினுடைய பிரதிஷ்டையை அதன் லக்ஷணத்தோடு கூட நன்கு கூறுகிறேன்.
2. உயர்ந்த ஆசார்யன் உமா மஹேஸ்வரனுடையவோ, சந்திரசேகர மூர்த்தியினுடையவோ வலது அல்லது இடது பாகத்திலோ
3. முழந்தாள், துடை, தொப்புள், வரையிலும் மார்பு பகுதி, கழுத்து பகுதி, வரையிலுமோ இருக்கும் நிலையையுடையவராகவும் அமர்ந்தோ நின்ற கோலத்துடனோ அஞ்சலி கூப்பிய கையை உடையவராகவோ
4. ஸ்வாமியைப் பார்த்த கோலமாகவோ என்னுடைய பக்தனான சண்டிகேஸ்வரரை எல்லா அங்க அழகுடையதாக அமைக்கவேண்டும். கனிஷ்ட தச தாளம் என்ற அளவினால்
5. மாலையினுடைய நுனியை, ஈஸ்வரனுடைய வரத, ஹஸ்தத்திலும் இன்னொரு கை நுனியை கடக கையிலும் வைத்து ஈஸ்வரன் மாலையினால் சண்டிகேஸ்வரனுடைய தலையில் சுற்ற வேண்டும்.
6. நந்திகேஸ்வர, அனுக்ரஹ மூர்த்தியில் சிறிது விசேஷமிருக்கிறது. சாந்தராய், இருகைகள், இரண்டு கண்கள், அஞ்சலியை சேர்த்துக் கொண்டு (கையை கூப்பிக் கொண்டு)
7. விரிந்த ஜடையை உடையவரும், ஜடையை மகுடமாக தரித்தவரும், ஆகம சாஸ்திரத்தை கேட்க்கும் விழிப்புணர்வோடும் வணங்கியவராய் செய்ய வேண்டும்.
8. முன்கூறிய அளவில் நந்திகேஸ்வரரை மலர்ந்த திருமுகமுடையவராய் அவரை செய்ய வேண்டும். நந்தீசானுக்ரஹ மூர்த்தியை இந்த பிரகாரம் கூறப்பட்டது. அது போல் விஷ்ணு அனுக்ரஹ மூர்த்தியையும் செய்ய வேண்டும்.
9. நந்தீஸ்வரரை விட்டு விட்டு விஷ்ணுவை அதன் லக்ஷணத்தோடு கூடியதாக சக்கரத்தோடு கூடின அஞ்சலி ஹஸ்தமும், சங்கு தாமரைகளை போன்ற மற்றகைகளிலும்
10. விஷ்ணு மூர்த்திக்கு சக்ரத்தை அளிப்பவராக இந்த தேவர் இருக்க வேண்டும். இவ்வாறே பரமேஸ்வரனை மற்ற அனுக்ரஹத்தை வேண்டி அவரை நோக்கிய தேவனை செய்ய வேண்டும்.
11. இந்த பிரகாரம், லக்ஷணங்களை கூறப்பட்டது. பிரதிஷ்டாவிதியை கூறுகிறேன். அங்குரார்பணம், ரத்னன்நியாஸம், இரண்டும் முதல் நாளிலும்
12. கண் திறப்பது, பிம்பசுத்தி, நகர பிரதட்சிணம், ஜலாதிவாசம், யாக மண்டபம் நிர்மாணம்
13. பிறகு வட்டவடிவ குண்டம், சதுரஸ்ர குண்டம், எண்கோண குண்டங்களை செய்ய வேண்டும். லக்ஷணங்களோடு கூட ஒன்பது, ஐந்து என்பதான எண்ணிக்கையில் செய்ய வேண்டும்.
14. சிற்பிகளை அனுப்பிவிட்டு பிராம்மன போஜனம் புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, தனியாக வேதிகையில் ஸ்தண்டிலம் அமைத்து சயனத்தை அமைக்க வேண்டும்.
15. ஸ்நபனம், ரக்ஷõபந்தனம், முதலியவைகளை முன்போல் தனித்தனியாக தேவர்களுக்கு செய்து சயனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
16. அருள் பாலிக்கப்பட்ட எந்த தேவர்கள் தனிமையான இருக்கையையுடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு சயன அமைப்பை ஸ்வாமியின் திருவடியின் கீழ் அமைக்க வேண்டும்.
17. ஈஸ்வரனுடைய தலை பாகத்தில் வர்த்தனியுடன் கூடிய சிவ கும்பத்தை வைக்க வேண்டும். அனுக்ரஹிக்கப்பட்ட மூர்த்திகளுக்கு அந்த அந்த மூர்த்திகளுடைய எட்டு கும்பங்களை மந்திரத்துடன் கூடியதாக வைக்க வேண்டும்.
18. முனிபுங்கவர்களே, அந்தந்த அத்யாயத்தில் சொல்லப்பட்டபடி கிரஹிக்க வேண்டும். குண்ட, அக்னி ஸம்ஸ்காரத்தை செய்து திரவ்யங்களால் ஹோமம் செய்ய வேண்டும்.
19. சமித்து, நெய், அன்னம், பொறி, எள், நெல், அரிசி இவைகளை வரிசையாகவும் புரசு, ஆல், அத்தி, இச்சி கிழக்கு முதலியவைகளையும்
20. வன்னி, கருங்காலி, பில்வம், அரசு தென்கிழக்கு முதலிய திசை குண்டங்களிலும் பிரதான குண்டத்தில் புரசு சமித்தும் அல்லது புரசையே எல்லா குண்டங்களுக்கும் உபயோகம் செய்யலாம்.
21. சண்டர், நந்திகேசர், விஷ்ணு, ஆகிய இவர்களை பிரதான குண்டத்தில் ஆசார்யன், ஹோமம் செய்ய வேண்டும். முடிவில் ஹோம கார்யமானது, பூர்ணாஹுதியோடு தனியாக செய்ய வேண்டும்.
22. தத்துவத்தை அறிந்து, ஆசார்யன், இரண்டாம் நாள், மூர்த்தீபர்களுடன் பரிசுத்தமாக சயனத்திலிருந்து பிம்பத்தை எடுத்து, கும்ப, குண்ட, அக்னிகளை பூஜித்து
23. நல்ல முஹூர்த்தம் வந்த ஸமயத்தில் மந்திரந்யாஸத்தை செய்ய வேண்டும். வஸ்திரம், தங்கமோதிரம், முதலியவைகளால் பூஜிக்கப்பட்டு ரித்விஜர்களோடு கூட அடையப்பட்ட பிம்பத்தின் முன்னிலையில் ஆதாரமாய் செய்யப்பட்ட ஸ்தண்டிலத்தில் கும்பங்களை வைக்க வேண்டும்.
24. பத்து ரிஷ்கம் முதலான அளவுள்ள தட்சினையினால் திருப்தி அடைந்த ஆசார்யன், பிம்பத்திற்கு முன்பாக ஸ்தண்டிலம் அமைத்து அதன்மேல் கடங்களை அமைக்கவும்.
25. கும்பத்திலிருந்து மந்திரத்தை எடுத்து, சிவனுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். வர்தனியினுடைய சக்தியை எடுத்து அதனுடைய பீடத்தின் மேல் சேர்க்க வேண்டும்.
26. அம்பாள் ஒரே பீடத்திலிருந்தால் அவளுடைய ஹ்ருதயத்தில் மந்திரத்தை நியஸிக்க வேண்டும். மற்றவர்களுடைய மூல மந்திரத்தை எடுத்து பீடத்தை சுற்றிலும், நியாஸம் செய்ய வேண்டும்.
27. சண்டேசர் முதலிய தேவர்களிடத்தில் அவருடைய கும்பங்களுடைய மந்திரத்தை வைக்க வேண்டும். அந்தந்த கும்ப ஜலங்களினால் அந்தந்த தேவதைகளுக்கு அபிஷேகம் செய்துவிக்க வேண்டும்.
28. ஸ்நபனம், உத்ஸவம், அதிகமான நைவேத்யம், முதலியவைகளை செய்தும் செய்யாமலும் இருக்கலாம். அம்பாள் வேறு பீடத்தில் இருந்தால் ஆசார்யன் கல்யாணம் செய்துவிக்க வேண்டும்.
29. இது மாதிரி எந்த ஒரு மனிதன் செய்கிறானோ, அவன் முடிவில் மோக்ஷத்தை அடைகிறான்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சண்டேஸாத்யனுக்ரஹ விதியாகிற ஐம்பத்தி ஐந்தாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக