ஞாயிறு, 10 மே, 2020

சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே ஸ்ரீகண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவன்தானே!' என்று போற்றுகின்றனர் வைணவப் பெருமக்கள்.

பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்திருக்கும். பஞ்ச பாண்டவர்களிடம் இருந்த சத்தியமும் தர்மமும்தான் அவர்களைக் காத்தன. அதாவது, பகவான் பாண்டவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் வென்றனர்.

''ஒரேயொரு பாணத்தில் பாண்டவ வம்சத்தில் உள்ள அனைவரையும் அழித்துவிட முடியும். ஆனால், அவர்களுக்கு ரட்சகனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரே... அவர் மட்டும் இல்லையென்றால், விரல் சொடுக்கும் நேரத்துக்குள் அழித்துவிடலாம்'' என பீஷ்மரும் துரோணரும் சொன்னார்கள்.

ஆச்சார்யர்கள் சொன்னதை விடுங்கள்... ஸ்ரீபரமேஸ்வரனே சொல்கிறார்... ''கண்ணபிரான் அவர்களுடன் இருக்கும் வரைக்கும், பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்று!

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார ஸேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன் நிறைவாக வாழலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

'சரக சம்ஹிதை’யின் ஒளஷத சாஸ்திரம், அற்புதமாக இதை விவரிக்கிறது. 'எப்படி வாசுதேவனுக்குத் தோல்வி என்பதே கிடையாதோ, இந்தச் சமுத்திரம் எப்படி வற்றாமல் இருக்கிறதோ, என் தாயாரின் திருமணத்தை எப்படி நான் பார்த்தது கிடையாதோ... இந்த சத் வாக்கியங்கள் அனைத்தும் உண்மையானதைப் போல, இந்த மருந்தும் வேலை செய்து குணமாக்கும்’ என்கிற மந்திரத்தைச் சொல்லியபடி, மருந்து தயார் செய்வார்களாம்.

இத்தனை பெருமைகளைக் கொண்டவன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. இதனால்தான், அபராஜிதன் எனும் திருநாமம் அமையப் பெற்றான். அபராஜிதன் என்றால், தோல்வியே இல்லாதவன் என்று அர்த்தம்!

பகவானின் ஒவ்வொரு அவதாரத்துக்கும் அவனுடைய ஒவ்வொரு திருநாமத்துக்கும் அளப்பரிய சக்தி உண்டு. அந்தக் காரணங்களைத் தெரிந்து கொண்டால், காரியங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். உடுத்துகிற ஆடை, பஞ்சில் இருந்து வருகிறது; அந்தப் பஞ்சு, புடவையாகவும் வேஷ்டியாகவும், சட்டையாகவும் துண்டாகவும் எப்படியெல்லாம் மாறுகிறது பார்த்தீர்களா? பகவானின் திருமேனி அவதாரமும் திவ்விய நாமங்களும் அப்படித்தான்!

சஜாதிபய பேதம், விஜாதிபய பேதம், ஸ்வத்த பேதம் என மூன்று பேதங்கள் உள்ளன. அதாவது, தென்னையும் வாழையும் மரம்தான்! ஆனால், தென்னை என்பது ஒரு வகை மரம்; வாழை என்பது வேறொரு வகையானது! ஆனால், இரண்டுமே மரம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இது, சஜாதிபய பேதம்!

அடுத்து, விஜாதிபய பேதம். அது வேறு, இது வேறு. அதாவது, ஒன்று மரமாகவும், இன்னொன்று மலையாகவும் இருக்கிறது. ஆகவே, மரத்தையும் மலையையும் எப்படி ஒரே வகை என்று சொல்ல முடியும்?

மூன்றாவதாக, ஸ்வத்த பேதம். அதாவது ஒரு மரம் இருக்கிறது. அதில் வேர், கிளை, இலை, பழம் என அனைத்தும் இருக்கின்றன. இப்போது, வேரைப் பார்த்து மரம் என்பீர்களா? கிளையை அல்லது இலையைப் பார்த்து மரம் என்று சொல்வீர்களா? வேரை வேர் என்றும் கிளையை கிளை என்றும், இலையை இலை என்றும் கனியை கனி என்றும்தானே சொல்வோம்?! மொத்தமாக மரம் என்று சொன்னாலும், தனித்தனியே ஒவ்வொரு பெயருடன் வேறுபட்டுத் திகழ்கின்றன, பார்த்தீர்களா?

இறைவன் எனும் பிரமாண்டமானவனும் இப்படித்தான்! பரமாத்மாவான அந்தப் பரந்தாமன், அனைத்துக்கும் அப்பாற்பட்டவன். எல்லாமுமாக இருப்பவனும் அவனே; எதுவுமற்றுத் திகழ்பவனும் அவனே! ஏகஹ என்றும் ந ஏகஹ என்றும் ஸ்ரீகிருஷ்ணனை இரண்டு விதமாகவும் அழைப்பது அதனால்தான்! இதைச் சொல்லும் விதமாகத்தான், உணர்த்துகிற வகையாகத்தான் அவனுடைய ஒவ்வொரு திருநாமமும் அமைந்தது.

'நீராய் நிலனாய்...' என்று துவங்குகிற பாடல் உண்டு. அதில் நீராகவும் இருக்கிறாய்; நிலமாகவும் இருக்கிறாய்; நெருப்பாகவும் இருக்கிறாய்; காற்றாகவும் இருக்கிறாய் என்று ஆழ்வார் வியந்து பாடுவார். அந்த வியப்பின் நிறைவாக, 'அட போப்பா... உன்னை எப்படிக் கூப்பிடுறதுன்னே எனக்குத் தெரியலை!' என்று ஏக்கமாகச் சொல்வார். ஆனால் ஒரு விஷயம்... இங்கே பல இடங்களில், வரிகளில்... இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவுறச் சொல்லிக் கொண்டே வருகிற உத்தி ரசனைக்கு உரியது!

மண்ணை எடுத்துச் சாப்பிட்டான் கண்ணன். இதை பலராமன் யசோதைக்குச் சொல்ல... 'எல்லாரும் பொய் சொல்றாங்கம்மா... நான் மண்ணைச் சாப்பிடலை’ என்று குறும்பு கொப்பளிக்கச் சொல்கிறான் கண்ணன். 'நீ விஷமக்காரனாச்சே... செஞ்சாலும் செய்திருப்பே. எங்கே வாயைத் திறந்து காட்டு’ என்கிறாள் யசோதை.

வேறு வழியின்றி, தன் வாயைத் திறக்கிறான் கண்ணபிரான். அங்கே, ஏழுலகையும் தன் தாயாருக்குக் காட்டி அருள்கிறான் பகவான். அதாவது, பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்பது ஒருவன்தான். ஆனால், அவன் காட்டியது ஏழுலகங்களையும்! 'வையம் ஏழும் கண்டாள்... என்றொரு பாடல், 'காட்டியது ஒருவன்; கண்டது ஏழு’ எனும் பொருள்படும்படி, அழகுற விவரிக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணனுக்கு 'சஹா’ எனும் திருநாமம் அமைந்தது அதனால்தான்! அதாவது... கொடுப்பது, கொடுப்பவன் என்று அர்த்தம். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளிக் கொடுப்பவன் ஸ்ரீகிருஷ்ணன் அல்லவா?

சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட உபதேசித்தவன், அந்தக் கருணாமூர்த்தி அல்லவா?

சர்க்கரையை, பச்சை மிளகாய் என்றோ வேம்பு என்றோ மாற்றிச் சொல்லிவிட்டு, அந்தச் சர்க்கரையைச் சாப்பிட்டால் அது காரமாகிவிடுமா? கசப்பாகிவிடுமா? சர்க்கரையின் இயல்பை மாற்ற எவராலும் முடியாது. அப்படித்தான்... பகவானின் எந்தத் திருநாமங்களைச் சொன்னாலும், அவனுடைய பரிபூரண அன்பும் ஆசீர்வாதமும் நமக்கு என்றைக்கும் உண்டு.

இதேபோல் 'வஹா’ எனும் திருநாமமும் கொண்டிருக்கிறான் பகவான். வஹா என்றால் வசிப்பது, வசிப்பவன் என்று அர்த்தம்.

இதைத்தான் பராசர பட்டர், தன் சிஷ்யரான மைத்ரேயரிடம்... 'ஜகத் முழுவதுமாக, ஜகத்தில் உள்ள உயிர்கள் அனைத்திலுமாக ஊடுருவிப் பரவியிருக்கிறான் பரந்தாமன்’ என்கிறார். அதாவது அந்தராத்மாவாக, அந்தராமியாக, அனுப்பிரவேசம் பண்ணியிருக்கிறான்.

அட... இதைத்தானே பிரகலாதனும் சொன்னான் என்கிறீர்கள்தானே?!

ஆமாம். 'இறைவன் எங்கே இருக்கிறான்?' என்று இரணியன் கேட்டதற்கு, 'எங்கும் உளன்’ என்றான் பிரகலாதன். உடனே 'இங்கே இருக்கிறானா?' என்று கேட்டான் இரணியன். எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி இது. பின்னே... எங்கும் இருப்பவன் என்று சொல்லிவிட்ட பிறகு இங்கே இருக்கிறானா என்று கேட்கலாமோ?

'இந்தத் தூணில் இருக்கிறானா?' என்று அவன் கேட்க, 'இருக்கிறான்’ என்று பதில் சொன்னால், 'அந்தத் தூணில் இல்லையா?' என்கிற அடுத்த கேள்வியும் வரும். இதை உணர்ந்த பிரகலாதன், விதண்டாவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்... எனச் சொன்னான்.

சஹா என்றால் கொடுப்பவன்; வஹா என்றால் வசிப்பவன். கொடுக்க வேண்டும் என்றால், கூட இருந்துதானே ஆக வேண்டும்?!

நம்மில், நமக்குள்... ஊடுருவியிருக்கிறான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். இன்று இல்லையேனும் நாளை... நாளை இல்லையேனும் அடுத்த வாரம்... அதுவும் இல்லையெனில் அடுத்த மாதம்... நாம் திருந்த மாட்டோமா, நல்வழிக்கு வரமாட்டோமா எனக் காத்துக் கொண்டிருக்கிறான் கண்ணபிரான்.

'ஆடுற வரைக்கும் ஆடு. ஓய்ஞ்சு முடிஞ்சாதான் உன் புத்திக்கு எதுவுமே உரைக்கும்’ என்று பிள்ளையைப் பெற்ற தாய், பொறுமை காப்பதைப் போல, நமக்குள் இருந்தபடி நமக்காகக் காத்திருக்கிறான் கண்ணபிரான். முடிந்தால், அவனை உணர முயற்சி செய்து பாருங்களேன்!
தசமகா வித்யை

பராசக்தியின் பத்து அம்சங்களை தசமகா வித்யை என்பர். முதல் அம்சமான காளி காலச் சக்கரத்தின் கடவுள். தாரா பிரபஞ்சத்தின் தோற்றத்துடன் தொடர்புடைய பொன்னிற தேவதை. சோடசி என்றும் பதினாறாய் காட்சி தருபவள் அழகின் அதிதேவதை. புவனேஸ்வரி உலகில் அனைத்தின் இயக்கங்களுக்கும் மூல காரணமானவள். ஐந்தாம் வித்யையான பைரவியை வணங்கினால் ஆசைகளிலிருந்து விடுபடலாம். தன் தலையையே அறுத்து கையில் பிடித்துக்கொண்டிருக்கும் சின்ன மஸ்தா பொருட்களும் காட்சிகளும் தோன்றி மறையும் தொடர் நிகழ்வுக்குப் பொறுப்பானவள். உலக அழிவுக்குப்பின் புகை மட்டும் சூழ்ந்திருப்பதைக் குறிப்பவள் தூமாவதி. பொறாமை, வன்முறை, வெறுப்பு போன்றவற்றை நம்மிடமிருந்து அகற்றுபவள் பகளாதேவி. அனைவரின் மேலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவள் மாதங்கி. பயத்தைப் போக்கி வரங்களையருளும் பத்தாவது அம்சமாகத் திகழ்பவள் கமலா.
சதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்

மானஸ சஞ்சர ரே என்ற இனிய எளிய கர்நாடக இசைப் பாடலை நம்மில் பலர் கேட்டிருப்போம். இதனை இயற்றியவர் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற மகான். காயதி வனமாலி, பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி, சர்வம் பிரம்மமயம் ரேரே... என்று பக்தியையும், ஞானத்தையும் எளிய சொற்களில், மெட்டுகளில் எடுத்துச் சொல்லும் பல கீர்த்தனைகளை அவர் புனைந்துள்ளார். அவற்றில் ‘பரமஹம்ஸ’அல்லது ‘ஹம்ஸ’ என்ற அவரது முத்திரையும் இருக்கும். 17-ம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கருதப் படுகிறது. பல்வேறு ஐதிகங்கள், அற்புதக் கதைகள் அவரைக் குறித்துக் கூறப் படுகின்றன. கரூரை அடுத்த நெரூரில் அவரது சமாதி உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் அவரது மஹா சமாதி தினத்தன்று ஆராதனை விழா பக்தர்களால் சிறப்பாக அனுஷ்டிக்கப் படுகிறது.

 17ம் நூற்றாண்டு என்பது மிகப் பழங்காலம் அல்ல. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழ் மண்ணில், மூன்று நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த ஒரு மகான் பற்றிய ஆதாரபூர்வமான், நம்பகத்திற்குரிய வரலாற்றை எழுதுவது என்பது கூட அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஏறக்குறைய இதே காலகட்டத்தில் வாழ்ந்த தாயுமானவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோரைக் குறித்தும் புராண சாயலில் ஆவணப் படுத்தப் பட்ட சரிதங்களே நம்மிடம் உள்ளன. அவற்றிலிருந்து தான் இவர்களது வாழ்க்கை வரலாறுகளைக் கட்டமைக்க வேண்டியுள்ளது.

சதாசிவ பிரம்மேந்திரரைப் பொறுத்த வரையில் சில அடிப்படைத் தகவல்கள்   சரியாகவே கிடைத்துள்ளன. அவரது  தாய் தந்தையர் சோமசுந்தர அவதானி மற்றும் பார்வதி. அவரது பதினைந்து வயதில் மீனாட்சி என்ற ஏழு வயது பெண்ணை பாலிய விவாகத்தில் மணக்கிறார். அந்தப் பெண் பருவமடைந்ததும்,  குடும்ப வாழ்க்கை தொடங்கும் நேரத்தில் அதனை வெறுத்து துறவு பூண்டு  வீட்டை விட்டு வெளியேறி ஞானத் தேடலுடன் அலைகிறார். ஆனால் இதன் பிறகு  நடந்ததாகக் கூறப்படும் வாழ்க்கை சம்பவங்களின் அடிப்படையில் அவர் ஒருவரா பலரா? அவர் வாழ்ந்த கால கட்டம் என்ன? அவர் இயற்றியதாகக் கூறப்படும் நூல்களின் தன்மை அவரது ஆன்மிக சாதனைகள், நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியவை பற்றி பல புகைமூட்டமான, பல முரண்பாடுகள் கொண்ட கருத்துக்கள் உள்ளன. இந்தப் புகைமூட்டத்தை விலக்கி அந்த மகானின் வரலாற்றைத் துலக்கும் முகமாக அண்மையில் ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது.
இந்தப் புத்தகத்தின் முக்கிய அம்சம் சதாசிவர் பற்றி வழங்கும் அனைத்து செய்திகளையும் ஐதிகங்களையும் ஓரிடத்தில் தொகுத்திருப்பது. பிறகு அவற்றை தர்க்கபூர்வமாக ஆய்வுக்கு உட்படுத்த முயல்வது. உதாரணமாக சதாசிவரை சந்தித்தவர்கள் என்பதாக தாயுமானவர், பஜனை சம்பிரதாயத்தை உருவாக்கியவரும் கும்பகோணம் மடாதிபதியுமாக இருந்த ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி, சிவபக்தரான திருவிசைநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாள், அரசர்கள் விஜயரகுநாத தொண்டைமான், ஷாஜி, சரபோஜி என்று பலபேர் பல சம்பிரதாய செவிவழிச் செய்திகளில் குறிப்பிடப் படுகின்றனர். தாயுமானர் தனது குருவாகக் குறிப்பிடும் மௌனகுரு என்பவர் சதாசிவ பிரம்மேந்திரராக இருக்கக் கூடுமோ என்று ஒரு கருத்தும் உள்ளது. திருவிசைநல்லூரில் ஸ்ரீதர வேங்கடேசர் வீட்டில் கங்கை பொங்கிய அற்புதம் நிகழ்ந்த போது சதாசிவர் உடனிருந்ததாகவும் “ஜய துங்க தரங்கே கங்கே” என்ற கீர்த்தனை அப்போது தான் இயற்றப்பட்டது என்றும் ஒரு ஐதிகம் உள்ளது. சித்தராகத் திரிந்து வந்த அவர் ஒரு முஸ்லிம் மன்னன் (அல்லது படைத்தளபதி) வீட்டுக்குள் நுழைய, அவன் அவரது கையை வெட்ட அதிலிருந்து ரத்தம் கொட்டியது. இருப்பினும் சரீர போதம் இன்றி அவர் நடந்து சென்றார் என்றும் ஒரு செய்தி பின்னாளில் அவரைக் குறித்து எழுதப்பட்ட சதாசிவ அஷ்டகம் என்ற துதிப்பாடலில் இடம் பெறுகிறது.

சம்பிரதாய செய்திகள் தவிர்த்து கறாரான வரலாற்று ஆவணங்கள் என்று கொண்டால் சரபோஜி மன்னரின் ஆட்சிக் காலத்தில் (1712-18) அவரது அமைச்சரான மல்லாரி பண்டிட் என்பவர் எழுதிய ஒரு கடிதம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தக் கடிதத்தில் தான் சதாசிவ பிரம்மேந்திரரை சந்தித்தகாகவும், மன்னருக்கு மகன் பிறக்க அருள வேண்டும் என்று தான் வேண்டிக் கொண்டதாகவும் சதாசிவ பிரம்மேந்திரர் ஆசிர்வதித்து “ஆத்மவித்யா விலாசம்” என்ற நூலை அளித்ததாகவும் அமைச்சர் மல்லாரி பண்டிட் குறிப்பிடுகிறார். இந்தக் கடிதத்தின் மூல வடிவம் தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப் படுகிறதாம். வேறு சில ஓலைச் சுவடிகளும், ஆவணங்களும் சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கை வரலாற்றைக் கட்டமைக்க உதவி புரிகின்றன.

சில ஐதிகச் செய்திகளை மற்ற வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் நூலாசிரியர் நிராகரிக்கிறார். உதாரணமாக தாயுமானவரின் குருவாக சதாசிவ பிரம்மேந்திரர் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதற்கு இரண்டு சான்றுகளை நூல் அளிக்கிறது.

1. மவுனகுரு நந்தி, திருமூலர் மரபில் வந்தவர்; நவநாத சித்தர்களுடன் தொடர்புடையவர் என்று குறிப்பிடும் தாயுமானவர் பாடல் அகச்சான்றுகள். இவை சதாசிவர் பற்றிய மற்ற எந்த செய்தியுடனும் பொருந்தவில்லை.

 2. 1685ல் மௌன குரு தேசிகர் என்ற தருமபுர ஆதினத்தார் திருச்சி சாரமாமுனிவர் மடத்தில் தங்கியது தாயுமானவரை சந்தித்தது. அவரே தாயுமானவரின் குருவாக இருக்கலாம் என்ற தமிழறிஞர் கருத்துக்கள். இவற்றை வைத்து. தாயுமானவர் காலத்தில் சதாசிவர் பிறந்திருக்கவில்லை அல்லது மிகச் சிறுவனாக இருந்திருப்பார் என்று நூலாசிரியர் முடிவு செய்கிறார். இது போன்று ஒவ்வொரு ஐதிகச் செய்தியும் நூலில் அலசப் படுகிறது.

அனைத்து ஐதிகச் செய்திகளையும் திருப்திப் படுத்த வேண்டும் என்றால் சதாசிவர் வாழ்ந்த காலம் 200 ஆண்டுகளைத் தாண்டுகிறது என்று நூலாசிரியர் கணக்கிடுகிறார். ஒரு வரலாற்று மனிதர் இவ்வளவு நீண்டகாலம் வாழ்ந்திருப்பது சாத்தியமே அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.

சதாசிவர் குறித்த பல செய்திகளையும் நான்கு சட்டகங்களுக்குள் வகைப்படுத்துகிறார்.

1. அத்வைத பண்டிதராக இருந்தவர், பரமசிவேந்திர சரஸ்வதி என்ற கும்பகோணம் மடாதிபதியின் சீடர். சில அத்வைத நூல்களை எழுதியவர்.

2. ஸ்ரீதர வேங்கடேசர் காலத்தவர் பல சமய, தத்துவ வாதவிவாதங்களில் ஈடுபட்டவர். கர்நாடக இசைக் கீர்த்தனைகளை இயற்றியவர்.

3. விஜரகுநாத தொண்டைமானின் சமகாலத்தவர் வேறு சில அத்வைத நூல்களை எழுதியவர்.

4. அவதூதராகவும் சித்தராகவும் வாழ்ந்தவர். திருச்சி, தஞ்சை, கும்பகோணம், புதுக்கோட்டை பகுதிகளில் தன்னிச்சைப் படி உலவிக் கொண்டு சாதாரண மக்களுடன் பழகியவர். அற்புதங்கள் நிகழ்த்தியவர்.

இந்த அத்தனை செய்திகளையும் சமன்வயப் படுத்தி நூலின் இறுதியில் சதாசிவ பிரம்மேந்திரர் வாழ்க்கைக் கால அட்டவணை ஒன்றை நூல் அளிக்கிறது. பிறந்த ஆண்டு 1680 என்று நிர்ணயிக்கப்பட்டு, அவரது ஒவ்வொரு வயதிலும் நடைபெற்ற அவரது வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் அந்த ஆண்டின் மற்ற முக்கிய அரசியல் வரலாற்று சம்பவங்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. 1755ம் ஆண்டு 75 வயதில் மஹாசமாதி அடைந்திருக்கலாம் என்றும், அல்லது 1781ல் 101 வயதில் மஹாசமாதி அடைந்திருக்கலாம் என்றும் இரு சாத்தியங்களை நூலாசிரியர் அளிக்கிறார்.

”அதிசயக் கதைகளில் பொதிந்துள்ள சரித்திர உண்மைகள்” என்று தலைப்பிட்ட அத்தியாயத்தில் அற்புதங்கள் பற்றிய கதைகளுக்கு சமூக வரலாற்று அடிப்படையில் விளக்கங்கள் தர நூலாசிரியர் முயன்றிருக்கிறார்.

உதாரணமாக:-
•    அறுவடை நேரத்தில் வயல்களில் நெற்கட்டுகளின் மீது அவர் படுத்திருந்தது – இது நவாபின் படைவீரர்கள் அடாவடியாக பயிர்களை கொள்ளையடிப்பதிலிருந்து பாதுகாப்பதற்காக இருக்கலாம்.

•    உடலை மணல் மூடி தியானத்தில் லயித்திருந்த போது அவரது தலை மண்வெட்டியால் வெட்டப் பட்டு ரத்தம் வந்தது – நவாப் படைகளிடருந்து தப்பிக்கவும், நதிக்கரைகளைப் பாதுகாக்கவும் முயன்ற போது படைகளால் தாக்கப் பட்டிருக்கலாம்.

•    ஆற்றங்கரைகளில் மண்ணைத் தலையணையாக வைத்துப் படுத்திருந்தது பார்த்து ஊர் மக்கள் கேலி பேசியது – நவாப் படைவீரர்கள் இரவில் வந்து கரைகளை உடைத்து நீரைத் திருப்பிவிடுவதைத் தடுப்பதற்காக இருக்கலாம்.

•    குழந்தைகளை திருச்சியிலிருந்து மதுரைக்கு திருவிழா காண அழைத்துச் சென்று அவர்களுக்கு மிட்டாய் வரவழைத்துத் தந்தது – பஞ்சகாலத்தில் தஞ்சைப் பகுதிகளில் நவாபின் அதிகாரிகள் மற்றும் ஐரோப்பியர் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தோ சல்லிக்காசுகு வாங்கியோ கப்பலில் ஏற்றி கடத்தியதற்கு ஆதாரம் உள்ளது. குழந்தைகளைத் தப்பிக்க வைத்துக் காப்பாற்றுவதற்காக இந்த மகான் இவ்விதம் செய்திருக்கலாம்.

இதற்கு வலுசேர்க்கும் முகமாக, சோழமண்டலத்தில் 17ம் நூற்றாண்டில் அடிமைகளாக ஏற்றுமதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய குறிப்பும் நூலில் உள்ளது (பக். 41). 1659 முதல் 1661 வரையிலான வருடங்களில் 8000 முதல் 10000 பேரும், 1694 – 1696 காலகட்டத்தில் 3800 பேரும் இவ்வாறு ஏற்றுமதி செய்யப் பட்டார்களாம்! 17ம் நூற்றாண்டு பஞ்சம், சந்தாசாகிப், ஷாஜி, சரபோஜி காலத்திய போர்கள், ஐரோப்பியர்கள் தஞ்சை மண்ணில் வேரூன்றுவது பற்றிய சில தொடர்புடைய விவரணங்களும் நூலில் ஆங்காங்கே தரப்படுகின்றன.
ஆத்மவித்யா விலாசம் என்ற நூலில், முற்றும் துறந்த அவதூதரான தனது இயல்பைப் பற்றி தானே விவரிக்கும் சதாசிவ பிரம்மேந்திரர் “வர்ணாஸ்ரமங்களின் கட்டுப்பாடுகளைக் கடந்தவன் நான். சாஸ்திரங்களில் விலக்கப்படுபவை பற்றிய விதிகளையும் உதறித் தள்ளியவன்” (சுலோகம் 57) என்றும் குறிப்பிடுவதிலிருந்து அவர் ஏழை, எளிய மக்களுடன் கலந்து உறவாடியவர். அனைத்தும் கடந்த ஞானியாக இருந்தும் மக்களின் துயரம் கண்டு உருகியவர் என்னும் கருத்து மேலும் உறுதிப் படுகிறது.
சதாசிவ பிரம்மேந்திரரின் உருவம் சித்தரிக்கப்படும் பல விதங்கள், நெரூர் சமாதிக் கோயிலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் சம்பந்தப்பட்ட இடங்களின் புகைப்படங்கள் என்று மேலும் சில பயனுள்ள தகவல்களும் நூலில் கோர்க்கப் பட்டுள்ளன.

நூலாசிரியர்களில் ஒருவரான மறைந்த கரூர் நாகராஜன் பிரம்மேந்திரரின் பரம பக்தர் என்றும் மற்றொருவரான வேதபிரகாஷ் ஒரு தனிப்பட்ட ஆராய்ச்சியாளர் என்றும் நூலின் பின்னட்டை தெரிவிக்கிறது. எந்தவித கல்விப் புலமும், வரலாற்று ஆய்வு பட்டயங்களும், சான்றிதழ்களும் இல்லாத இவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் இத்தகைய ஆய்வில் ஈடுபட்டு இதனை நூலாக வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். கரூர் நாகராஜன் மகானின் மீது கொண்ட ஆத்மார்த்தமான பக்தியாலும், வேதபிரகாஷ் இந்துப் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆன்மிக நோக்கில் பல செய்திகளையும் கலந்து கட்டி எந்தவித வரலாற்றுப் பிரக்ஞையும் இன்றி எழுதப் படுவதைக் கண்டு மனம் நொந்து இவற்றில் ஒரு முறைமையைக் கொண்டுவரவேண்டும் என்ற உந்துதலுடனும் ஆய்வுகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. நூல் வெளிவரும் முன்பே கரூர் நாகராஜன் மறைந்து விட்டார். அவரது உள்ளக் கிடக்கையை பூர்த்தி செய்து அவர் விருப்பப் படியே நூலைத் தமிழில் கொணர்ந்திருப்பதாக வேதபிரகாஷ் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நட்புணர்வும், அர்ப்பணிப்பும் பெரிதும் போற்றத் தக்கவை.

சில விதங்களில் நூலை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது. திரட்டப் பட்ட தகவல்களைத் தொகுத்தளித்திருக்கும் விதம் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம். அத்தியாயங்கள் பகுக்கப் பட்ட விதம் கோர்வையாக இல்லை. நூலின் இறுதியில் ஆசிரியர் கூற வரும் முடிபுகள் என்ன என்பது தெளிவாக விளக்கப் படாததால் வாசகர்கள் அதனை ஊகித்து உணர வேண்டியிருக்கிறது. பக்தர்களும் ஆன்மிக எழுத்தாளர்களும் செய்யும் கணிப்புகள் அதி ஊகங்கள் குறித்து சலிப்புடன் ஆரம்பத்தில் குறிப்பிடும் ஆசிரியர் தானே சில இடங்களில் அதைச் செய்து விடுகிறார் – உதாரணமாக, சித்தராகத் திரிந்த சதாசிவர் கட்டாயம் மற்ற சித்தர்கள் போன்று தமிழில் பாடல்கள் புனைந்திருக்க வேண்டும் என்றும், அவை கிறிஸ்தவ மதப்பிரசாரகர்களால் அழிக்கப் பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

சிவப்பிரகாசரின் ’ஏசுமத நிராகரணம்’ நூலுக்கு அந்த கதி ஏற்பட்டிருக்கிறதே என்பது சற்றே பொருந்துகிற சரியான வாதமாக இருந்தாலும், ஆதாரங்கள் இன்றி இத்தகைய ஊகங்கள் முன்வைக்கப் படுவது மிகவும் தவறான முன்னுதாரணம். இதே போல சதாசிவரின் இரட்டை இஸ்லாமிய சீடர்களாகக் கருதப்படும் தஞ்சை “மஸ்தான் சகோதரர்கள்” பற்றிய ஐதிகம் இஸ்லாமிய மதமாற்றத்தைக் கருத்தில் கொண்டு வேண்டுமென்றே புனையப் பட்டது என்ற நிலைப்பாட்டுக்கும் ஆதாரம் தரப்படவில்லை. சமூகக் கட்டுப்பாடுகளை உதறிவிட்ட அத்வைதியான சதாசிவ பிரம்மேந்திரர் உண்மையிலேயே முஸ்லிம்களை சீடர்களாக ஏற்றுக் கொண்டிருந்திருக்கவும் சாத்தியம் உள்ளது. அதை முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. மேலும் சூஃபிகளையும் தர்கா வழிபாடுகளையும் பற்றி அடிப்படைவாதிகளான வகாபி இஸ்லாமியர்களின் நிலைப்பாட்டையே தானும் எதிரொலித்து நூலாசிரியர் எழுதியிருக்கிறார். இது இந்து சமூக நலப் பார்வையில் சரியானதல்ல என்பதோடு, ஒரு ஆய்வு நூலில் இத்தகைய அரசியல் ரீதியான கருத்துக்களையே முற்றிலுமாகத் தவிர்த்திருக்கலாம்.

நூலின் மொழி பல இடங்களில் இயந்திரத்தனமான மொழிபெயர்ப்புச் சாயலில் உள்ளது; அதனைச் செம்மைப் படுத்தியிருக்கலாம். கடைசி அத்தியாமாக உள்ள ”சம்பந்தப் பட்ட இடங்களின் புகைப்படங்கள்” அனைத்தும் தபால் தலை அளவிலேயே உள்ளன. வாசகர்கள் பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் வழக்கமான புகைப்படங்களின் அளவில் அவற்றைக் கொடுத்திருக்கலாம்.
ஒட்டுமொத்தமாக, இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. ஏனைய இந்துப் பெரியோர்களது ஆதாரபூர்வ வாழ்க்கை வரலாறுகளையும் இத்தகைய ஆய்வு நோக்கில் ஆவணப் படுத்தும் முயற்சிகள் ஊக்குவிக்கப் படவேண்டும். நமது வரலாற்றுக் கல்வி அமைப்புகள் செய்யவேண்டிய இத்தகு பணிகளை, தாங்களாகவே முன்வந்து முனைப்புடன் செய்யும் தனிப்பட்ட ஆய்வாளர்களுக்கும், ஆய்வு மையங்களுக்கும் இந்து சமுதாயம் உண்மையிலேயே கடமைப் பட்டுள்ளது

சித்தருக்குக் கிட்டிய சித்தி
July 3, 2013
- தஞ்சை வெ.கோபாலன்

நெரூரில் சமாதி கொண்ட சித்தர் சதாசிவ பிரம்மேந்திரர். இவரைப் பற்றி பல வரலாற்றுச் செய்திகள் சொல்லப்படுகின்றன. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் பிரதிஷ்டை செய்தவர் இந்த சதாசிவ பிரம்மேந்திரர் என்கிறார்கள். இவர் நிகழ்த்திய அற்புதங்கள் இன்றும் பேசப்படுகின்றன. இவருடைய சமாதியின் மேல் வளர்ந்திருக்கும் விருக்ஷம் பட்டுப் போனது, இப்போது மீண்டும் துளிர்த்து வளர்வதைக் காண மக்கள் வந்து போகிறார்கள். நெரூர் காவிரிக் கரையில் அமைதியான சூழலில், வயல்களும், தோட்டங்களும் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சுகின்ற இடத்தில் அமைந்திருக்கிறது இவரது சமாதி. இவரது சித்துக்களில் ஒன்றை பார்க்கலாம்.

காவிரியாறு ஈரோட்டைத் தாண்டி கொடுமுடி எனும் தலத்துக்கு வருகின்ற இடத்தில், ஆற்றின் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அகத்தியம்பாறை எனும் இடம். ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்தப் பாறையின் மீது மோதி காவிரி வெள்ளம் கிழித்துக் கொண்டு இருபுறமாக விரைந்து செல்லும் அழகைப் பார்த்து ரசிக்கலாம். அந்த பாறையின் மீதுதான் சதாசிவ பிரம்மேந்திரர் வந்து அமர்ந்து தியானத்தில் இருப்பாராம். பிறரால் தொல்லை ஏற்படாத ஏகாந்தமான இடமாக இந்த இடத்தை பிரம்மேந்திரர் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை. அப்படி அவர் தியானத்தில் தன்னை மறந்து, இவ்வுலக புறவாழ்வை, தன் உடலை மறந்த நிலையில் பிரம்மத்தில் ஈடுபட்டிருக்கும்போது சுற்றுப் புறத்திலோ, தன் உடலுக்கோ எது நேரினும் அதனை உணரமுடியாத ஆழ்ந்த தியான நிலை. அப்போது அவர் உடல் வெறும் கட்டை, அதற்கு ஏற்படும் துன்பம் அவரை எட்ட முடியாத நிலை.

அப்படியொரு நாள் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சதாசிவ பிரம்மேந்திரரை ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஒவ்வொரு நாழிகைக்கும் அதிகரித்து இறுதியில் பாறையின் மீது ஆழ்நிலை தியானத்தில் இருந்த யோகியாரை அடித்துக் கொண்டு போய்விட்டது. அவர் உடல் என்னாயிற்று. அவர் உயிர் என்னவாயிற்று என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. சில நாட்களில் ஆற்று வெள்ளம் வற்றியதும், பாறையில் அமர்ந்து தியானத்திலிருந்த அந்த யோகி எங்கே, என்னவானார் என்று சிலர் தேடத் தொடங்கினார்கள். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் எங்கு சென்றாரோ, கரை ஏறினாரோ, தன்னை மறந்து இருந்த நிலையில் நீரில் மூழ்கி இறந்து போய் உடல் எங்காவது கரை ஒதுங்கியதோ. அல்லது ஆற்று நீரோடு போய்விட்டதோ? தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை என்றதும், மக்களும் சோர்ந்து போய் தேடுதலை விட்டுவிட்டார்கள். மறந்தும் விட்டார்கள்.

சில காலம் ஆனபின்பு ஆற்றில் மணல் அள்ள மாட்டு வண்டிகள் வந்த வண்ணம் இருந்தன. மணல் கொள்ளை என்பது இப்போதுதான், ஆனால் அந்த நாளில் வீடு கட்ட, மற்ற கட்டடங்கள் கட்ட மணலை ஆற்றிலிருந்து வண்டிகளில் எடுத்துப் போனார்கள். அப்படி மணல் எடுத்துப் போக வந்த ஆட்கள் ஆற்றில் நல்ல மணல் மேடிட்டுக் கிடந்த இடம் நோக்கிப் போய் அங்கு மண்வெட்டியால் மணலைத் தோண்டி எடுத்து வண்டிகளில் கொட்டிக் கொண்டிருந்தார்கள். மேடு கரைந்தது. வண்டிகளில் மணல் நிறைந்தது. சற்று ஆழத் தோண்டிய ஒரு இடத்தில் மணல் எடுத்தவன் ஓங்கி மண்வெட்டியால் வெட்டியபோது, மணல் அல்லாத ஏதோவொரு பொருளின் மீது மண்வெட்டி பட்டதை உணர்ந்தான். உடனே அந்த இடத்தை ஜாக்கிரதையாக தோண்டி மணலை விலக்கிப் பார்த்தான். அங்கு ஒரு மனிதரின் தலை. அதில் மண்வெட்டியின் வெட்டுப் பட்டு குருதி கசிந்தது.
சுற்றிலும் இருந்த மணலை விலக்கி அந்த மனிதரை வெளியே எடுத்தனர். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாறையின் மீது யோகத்தில் ஆழ்ந்திருந்த சதாசிவ பிரம்மேந்திரர்தான் அவர். இத்தனை நாள் மணலுக்கடியில் தன்னுணர்வு இன்றி சதா சிவ தியானத்தில் ஆழ்நிலையில் உறைந்திருந்திருக்கிறார். பரப்பிரம்மமான ஞானி ஒருவர் மணலுக்கடியில் யோக நிலையில் இருந்தவர் தலையில் மண்வெட்டி பட்டு இரத்தம் கசிகிறது, அந்த ஞானி உயிருடன் தான் இருக்கிறார் எனும் செய்தி ஊருக்குள் கசிந்தது.
கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்த்தனர். செய்தி சுற்றுப்புறங்களுக்கும் பரவியது. கொடுமுடிக்கருகில் ஆற்றுக்கிடையே இருந்த பாறையில் ஒரு ஞானி தவத்தில் இருந்தார். அவரை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்றார்கள். இவர் அவராகத்தான் இருக்க வேண்டும். இவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். ஞானி அல்லவா, உணவு, நீர் இன்றி உயிர்வாழும் சக்தி வேறு யாருக்கு உண்டு. அவரை மணலுக்குள்ளிருந்து வெளியே கொணர்ந்து, உடலுக்கு சூடேற்றி, உண்ண ஆகாரம் கொடுத்து அவரை மக்கள் சுயநிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

சுய நினைவு திரும்பி சுற்றிலும் நிற்கும் மக்களை ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்து தான் எங்கிருக்கிறோம், தனக்கு என்னவாயிற்று என்பதை உணராமல், உடனே புறப்பட்டு யாரிடமும் எதையும் கேட்காமல் மெளனியாக கால்போன போக்கில் வேகமாகச் சென்று மறைந்து விட்டார் இந்த ஞானி சதாசிவ பிரம்மேந்திரர். இப்படியொரு வரலாறு இந்த யோகியைப் பற்றி இன்றும் பேசப்படுகிறது.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். தஞ்சாவூர் மாரியம்மன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படும் இந்த மாரியம்மன் கோயில் இருக்குமிடம் புன்னைநல்லூர். தஞ்சையிலிருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் இவ்வூர் வழியாகத்தான் திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் செல்லும். இந்த மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன். இவ்வாலயம் எழுந்த வரலாற்றையும், இவளை வழிபட்டு பலனடைந்த பலருடைய வரலாற்றுச் செய்திகளும் ஏராளம். ஒரு ஆங்கிலேய அதிகாரிகூட இவளை வழிபட்டு தன் கண்பார்வை பெற்றதாக செவிவழிச் செய்திகள் உண்டு. இன்னொரு சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு. நாகூர் தர்காவுக்கு இந்துக்களும் சென்று வழிபடுவது போல, இந்த மாரியம்மனை இதர மதத்தாரும் வந்து வழிபடுவதை நாம் பார்க்க முடிகிறது.
ஒரு முறை மராத்திய மன்னன் தன் குதிரையிலேறி தன் சிறு பெண் குழந்தையுடன் இராமேஸ்வரம் சென்று திரும்பினார். ஊர் திரும்பிய பின் அந்தப் பெண் குழந்தையின் கண்களிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அரச குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்தனர். அரண்மனையில் சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், ஆயுர்வேதம் ஆகியவைகள் இருந்தும் எந்த வைத்தியராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது சமயபுரம் மாரியம்மனின் நினைவு மன்னனுக்கு வந்தது. சமயபுரத்தாள் பக்தன் மன்னன். உடனே அந்த மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டான், தன் மகளின் கண் உபாதையை அம்மா சரிசெய்ய வேண்டுமென்றும், தங்கத்தால் ஒரு கண் செய்து அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதாகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டான். அப்போது அவன் கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி, நீ சமயபுரம் தேடி அத்தனை தூரம் வருவானேன், உன் அருகிலேயே புன்னைமரக் காட்டில் நான் இருக்க வெறு இடம் தேடி போவானேன், என்றாள். கண் விழித்துப் பார்த்த மன்னனுக்கு மர்மம் புரியவில்லை. தன் ராஜ்யத்திலேயே புன்னைமரக் காட்டில் இருப்பதாகச் சொன்னாளே, அது எங்கிருக்கிறது. அங்கு அன்னை மாரியம்மா எங்கிருக்கிறாள் என்பதை அறியாமல் போனேனே என்று வருந்தி, அந்த இடத்தைக் கண்டுபிடிக்கத் தன் புரவியில் ஏறி புன்னைமரக் காடு இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.

தஞ்சை நகரத்திலிருந்து சில கல் தொலைவிலேயே இருந்த ஒரு பகுதி புன்னை மரக்காடாக இருந்து வந்தது. அந்த காட்டிற்குள் அன்னை சொன்ன இடம் எது என்றறிய மன்னன் தேடிப் போனான். அப்போது வழியில் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருக்க, அந்தப் பெண் அந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாள் என்று வியந்து மன்னன் அந்தப் பெண்ணை விசாரிக்க, அவள் தன்னுடைய இருப்பிடம் இங்குதான் என்று ஓரிடத்தைக் காண்பித்து ஓடிவிட்டாள். அந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. அதனருகில் ஒரு மரத்தினடியில் அவதூதராக ஒரு சித்தர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டான். அவரைக் கண்டதுமே அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்த மன்னன் அவரை வணங்கி தொழுது நின்றான். கண்விழித்துப் பார்த்த அவரை மீண்டும் மன்னன் வணங்கி அவர் ஆசி வேண்டி நின்றான். தன்னுடைய கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி சொன்ன செய்தியையும் சொல்லி, பின்னர் தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியைச் சொல்ல, அந்த மகான் எழுந்து அந்த புற்றை மாரியம்மனாக உருவாக்கினார். மன்னனுடைய எண்ணத்தை உணர்ந்த அந்த மகான் அஷ்ட கந்தங்கள் எனும் எட்டு வாசனை திரவியங்களான சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை, அகில், சந்தனம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் ஆகியவைகளைக் கொண்டு அந்த புற்று மண்ணோடு கலந்து புற்றை மாரியம்மன் உருவம் சமைத்தார். உடனே சர்வ சக்தி படைத்த ஜன ஆகர்ஷண சக்கரம் ஒன்றை தயார் செய்து அம்மன் முன்பாக வைத்து அதனைத் தொடர்ந்து பூஜை செய்து வருவோர்க்கு மனக்குறை தீரும் என்று சொன்னார். சமயபுரம் மாரியம்மனே இங்கும் வந்து கொலுவீற்றிருப்பதையும், மருந்துகளாலும், ஆகர்ஷண சக்கரத்தாலும் சக்தி படைத்த அந்த புற்று மாரியம்மன் வேண்டிய வரம் தருவாள் என்பதை மன்னன் உணர்ந்தான். அப்படி புற்றை அம்மனாக மாற்றியவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். சித்தர் பெருமான் சொன்னபடி அந்த மாரியம்மனைப் பணிந்து வேண்டி வந்த மன்னனுக்கு அவன் மன சஞ்சலம் விலகும்படி அவன் பெண் குழந்தையின் கண் பார்வை சரியானது. மாரியம்மனின் சக்தியையும், சித்தரின் திருவிளையாடலையும் எண்ணி மன்னன் மனம் மகிழ்ந்தான்.

அந்தப் புற்றின் மேல் ஒரு ஆலயத்தை எழுப்பச் செய்தான் மன்னன். அங்கு முறையாக பூஜைகள் நடைபெற கட்டளை பிறப்பித்தான். மன்னன் குடும்பத்தாருக்குக் குல தெய்வமாக இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் காத்து வந்தாள். இந்த அம்மனுக்கு ஐந்தாண்டுகளுக்கொரு முறை தைலாபிஷேகம் எனும் புனுகுச் சட்டம் அணிவிப்பது நடைபெறுகிறது.
இங்கு வந்து வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதைக் கேள்விப்பட்டு மக்கள் வெள்ளம் போல இங்கு வந்து தரிசித்துச் செல்கிறார்கள். சதாசிவ பிரம்மேந்திரரின் அருள் விளையாட்டுக்களில் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் உருவமும் ஒன்று என்பதை இன்றும் மக்கள் வியந்து போற்றி வணங்கி வருகிறார்கள்.

எங்கெல்லாமோ அவதூதராகச் சுற்றி அலைந்த சதாசிவ பிரம்மேந்திரர் நெரூர் வந்தடைகிறார். அவருக்கு பலர் சீடர்களாக விளங்கினர். அப்படி இருந்த சில சீடர்களில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர், மைசூர் மகாராஜா, தஞ்சாவூர் ராஜா ஆகியோர் மனங்களில் தங்களது குருநாதர் தங்களை அழைப்பதாக உணர்ந்து அவர்கள் அனைவரும் நெரூர் வந்து சேர்ந்தனர். வந்து சேர்ந்தவர்களிடம் தான் ஜீவசமாதி அடையப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி சுவாமி சொன்னார். இதனைக் கேட்ட மன்னர்கள் மனம் கலங்கினர். குருநாதரிடம் வேண்டினர். அவர் சொன்னார், இவ்வுடல் ஜீவசமாதி அடைந்தால் என்ன, நீங்கள் மனத்தால் நினைத்தாலே நான் உங்களோடு இருப்பேன் அல்லவா என்று சமாதானம் செய்தார். இவ் வுடல் பூமிக்கடியில் புதைந்து கிடப்பது இது முதல் தடவை அல்லவே. முன்பொரு முறை நான் காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மணலுக்கடியில் பல காலம் இருந்தது உங்களுக்குத் தெரியாதோ என்றார். குருநாதரின் விருப்பப்படி அவர் ஜீவசமாதி அடைவதற்கான இடத்தைத் தயார் செய்தார்கள். ஜீவசமாதி அடைவது என்பதற்கு சில விதிமுறைகள் உண்டு. அவை “திருமந்திரம்” நூலில் விரிவாகப் பேசப்படுகிறது. திருமந்திரம் 7ஆம் தந்திரத்தில் ‘சமாதி கிரியை’ எனும் தலைப்பில் பல பாடல்கள் உண்டு.

அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்தது நாய்நரி நுகரின் நுண்செரு
வந்து நாய் நரிக்குண வாகும் வையகமே.

மகா ஞானி ஒருவனின் உடல் மற்றவர்களைப் போல மாண்டுபோன பின் தீயிலிட்டு எரித்தோமானால், நாட்டு மக்கள் எல்லாம் வெப்பு நோயினால் பீடிக்கப்பட்டு வருந்துவர். அவ்வுடல் கவனிக்க ஆளில்லாமல் அழுகிக் கிடந்து நாய்களும், நரிகளும் அவர் உடலைக் கடித்து உண்ணுமானால் உலகில் பகை மூண்டு நாட்டு மக்கள் நாய் நரிகளுக்கு உணவாகிவிடுவர்.

எண்ணிலா ஞானி உடல் எரி தாவிடின்
அண்ணல் தன் கோயில் அழலிட்டதாம் ஒக்கும்
மண்ணில் மழை விழா, வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.

ஞானி ஒருவரின் உடலைத் தீயிலிட்டு எரித்தால், சிவபெருமான் கோயில் கொண்டருளும் ஆலயத்தைத் தீயிட்டழித்தற்கு ஒக்கும். அப்படிப்பட்ட நாட்டில் மழை பெய்யாது. பஞ்சம் தோன்றும், எண்ணற்கரி மன்னர்கள் முடி துறப்பர்.

புண்ணியமாம் அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுல கெல்லாம் மயங்கும் அனல் மண்டியே.

ஞானியின் உடலைப் புதைப்பது புண்ணிய காரியம். மாறாக அவரது உடலை தீயில் சுட்டு எரித்தால் நாட்டில் அழிவுகள் நேரும். அப்படி உடலைப் புதைக்காமல் மண்ணில் சிதைந்து போகுமாறு விட்டுவிட்டால் உலகத்தின் அழகு கெடும். உலகம் எங்கும் தீப்பிடித்து கெடும்.

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகை செய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள் பெறுவாரே.

ஞானி ஒருவர் இறையருள் பெற்று பின்னர் உடலைவிட நினைத்தால், அந்த உடம்பை குகை ஒன்றை நிறுவி, அதில் அவரை இருத்திடல் வேண்டும். அப்படி செய்தோமானால் அரசர்களும் குடிமக்களும் அளவற்ற இன்பத்தை அடைவார்கள். இறைவன் அருள் அவர்களுக்குக் கிட்டும்.

நவமிகு சாணாலே நல்லாழஞ் செய்து
குவைமிகு சூழ வைஞ் சாணாகக் கோட்டித்து
அவமிகு குகை முக்கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மாசனமே.

குகை என்பது தரையில் தோண்டப்படும் குழி. அது எப்படி இருக்க வேண்டும்? ஒன்பது சாண் அளவுக்குக் குறையாமல் ஆழம் இருக்க வேண்டும். அப்படி தோண்டும் மண்ணைக் குழியைச் சுற்றி ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்துக் கொட்டி, அந்தக் குழியை முக்கோண வடிவத்தில் பக்கம் ஒன்றுக்கு மூன்று சாண் அளவுள்ளதாய்ச் செய்து அந்த குகைபோன்ற குழியில் அவரது உடலை பத்மாசனமாக உட்கார வைத்திட வேண்டும். அந்த குகைபோன்ற குழி எங்கு அமைக்கப்பட வேண்டும்?

தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரினற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான் குகைக்கு எய்து மிடங்களே.

ஞானியின் உடலை அடக்கம் செய்யும் இடங்கள் எங்கெல்லாம் அமைக்கலாம் தெரியுமா? சமாதி ஆனவன் வீட்டின் பக்கத்தில், நடமாடும் சாலையோரத்தில், குளக்கரையில், ஆற்றின் நடுவில், பூஞ்சோலையில், நகரத்தில் நல்ல சுத்தமான பூமியில், அழகான கானகம், உயர்ந்த மலைச் சாரல் ஆகிய இடங்களே உகந்த இடங்களாம். சமாதிக்கான குகை எனும் குழி அப்படி அமைக்கப்பட வேண்டும்?

நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாத நவபாத நேர்விழப்
பொற்பம ரோசமு மூன்றுக்கு மூன்றணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே.

அமைக்கப்படுகின்ற குழி நான்கு புறமும் காலடியால் ஐந்து அடி அகலம், ஒன்பது அடி உயரம் இருத்தல் வேண்டும். ஞானியின் உடலை அந்தக் குழியில் சமாதி வைக்கும்போது அதில் இடப்பட வேண்டிய பொருட்கள் எவை?

பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்த தன் மேலாசனம் இட்டு
முஞ்சிப் படுத்து வெண்ணீரிட்டு அதன் மேலே
பொன்செய் நற் சுண்ணம் பொதியலுமாமே.

பொன், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகிய ஐந்து வகை உலோகங்களையும், வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், பவழம், கோமேதகம், புஷ்பராகம், குருவிந்தம், முத்து ஆகிய நவமணிகளையும் பரப்பி வைத்து, அதன் மீது இருக்கை அமைத்து, தர்ப்பைப் புல் பரப்பி, விபூதியை நிறைய இட்டுவைக்க வேண்டும். அதன் மூது சுண்ணப் பொடியை இட்டு வைக்க வேண்டும். பிறகு?

நள்குகை நால்வட்டம் படுத்ததன் மேற்சாரக்
கள்ளவிழ் தாமம் களபம் கத்தூரியும்
தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடுவீரே.

குழியின் அடியில் நடுவாக சதுரமாகச் செய்து அதன் மீது தேனொழுகும் மலர்கள், சந்தனம், கஸ்தூரி ஆகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் போன்றவற்றைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும். நல்ல பிரகாசமான தீப ஒளியைக் குழிக்குள் காட்ட வேண்டும்.

ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய
மீதினில் இட்டு ஆசனத்தின் மேல் வைத்துப்
போதறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடுவீரே.

உடலெங்கும் திருநீற்றால் பூசி மேலாடை போர்த்தியதுபோல செய்து, உடலை இருக்கையில் அமர்த்தி, மலர், அருகம்புல், நறுமணப் பொடி, வெண்ணீறு ஆகியவற்றை அணிவித்துக் குழியில் வைத்து நான்கு பக்கமும் மண்ணைச் சரித்து மூடிட வேண்டும். குப்பாயம் எனும் சொல்லுக்கு மேல்சட்டை என்று பொருள். எனக்கு ஒரு குப்பாயம் வாங்கினேன் என்று சொல்லிப் பழகலாமே.
ஆக ஒரு மகா ஞானியை சமாதி இடுதல் என்பது ஏதோ ஒரு குழியை வெட்டி அதில் வைத்து மூடிவிடுவது அல்ல. அந்த குழி எப்படி வெட்டப்பட வேண்டும், எங்கெங்கு அமைக்கலாம், அதில் என்னவெல்லாம் இட்டு வைக்க வேண்டும், உடலை என்னவெல்லாம் செய்து உள்ளே வைக்க வேண்டும், எப்படி மூட வேண்டும் என்பதற்கெல்லாம் விதிமுறைகள் இருப்பது திருமந்திரம் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

அந்த வழியில் தன் உடலை ஜீவசமாதி வைத்திட வேண்டுமென்று சதாசிவ பிரம்மேந்திரர் உத்தரவு இட்டார். அவர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விதிமுறைகளின் அமைக்கப்பட்ட குகை போன்ற குழியில் இறங்கி குருநாதர் அமர்ந்து விட்டார். திருமந்திரம் கூறியுள்ளபடி அனைத்தையும் சரிவர செய்தபின் அவர் இறங்கிய குழியை இட்டு மூடினார்கள். அவர் சமாதியடைந்த ஒன்பதாம் நாள் அவர் சமாதியின் மீது ஒரு வில்வ மரம் துளிர்விட்டு எழுந்தது. அவர் முன்பே தெரிவித்திருந்தபடி 12ஆம் நாள் காசியிலிருந்து ஒரு பிரம்மச்சாரி வந்தார். அவர் அங்கிருந்து ஒரு சிவலிங்கம் கொண்டு வந்திருந்தார். அந்த சிவலிங்கத்தை சதாசிவ பிரம்மேந்திரர் சமாதிக்குக் கிழக்காக வைத்து லிங்கம் பிரதிஷ்ட செய்யப்பட்டது. அவர் சமாதியில் எழுந்த வில்வ மரம் முதலில் பத்தடிக்கு நேராக வளர்ந்து பின்னர் மூன்றாகக் கிளை விட்டது. அதனை பிரம்ம, விஷ்ணு, சிவன் என்று மக்கள் வழிபடலாயினர். இப்படியாக அந்த மகான் சமாதியான இடம் இன்று அவருடைய அதிஷ்டானமாகக் கட்டி சிறப்பாக வழிபட்டு வருகின்றனர். வேண்டியவருக்கு வேண்டியதை அருளும் அற்புத சக்தியாக அங்கு அவர் அருள்பாலித்து வருகிறார். அங்கு ஒரு முறை சென்று அந்த ஜீவசமாதியில் அவரை வணங்கி வந்தால் அதன் பலனை நிச்சயம் ஒவ்வொருவரும் உணர்வர்.
த்ரேதா யுகம்....

ராம அவதாரம் முடிந்தது கடைசியில் மிஞ்சியவர்கள் அந்த யுகத்தில் இருவர் மட்டுமே. ஒருவர் இலங்கையில் விபீஷணாழ்வார் இவர் பன்னிரண்டில் ஒரு ஆழ்வார் அல்ல. பர்மனன்ட் இலங்கையை ஆள்வார். மற்றவர் ஆஞ்சநேயர் எங்குமிருப்பவர். இவரில்லாமல் நாம் இல்லை. மூச்சுக்கு காற்றே அவர் தானே. மாருதி என்கிற இருவருமே சிரஞ்சீவிகள். ராமனோடு இருந்த த்ரேதா யுகம் முடிந்தாலும் தன் உயிருக்குயிரான ராமர் மறைந்தாலும் ஆஞ்சநேயன் ராமரையே நினைத்து ராமநாம ஜெபத்தில் தனது வாழ்வை தனிமையில் கடத்தினான். அடுத்த யுகமான துவாபர யுகம் வந்து விட்டது. ஒருநாள் நாரதன் ஆஞ்சநேயனை சந்தித்தான். "ஆஞ்சநேயா இன்னும் எத்தனை நாள் ராமனையே நினைத்து ஜபம் செய்வாய்?" நாரதா முனீஸ்வரா என் மூச்சே ராமர் தான். ஆகவே மூச்சு முடியும் வரை ராமர் தான் எனக்கு எல்லாம்." நாரதன் சிரித்தான்.
"ஏன் சிரிக்கிறாய் நாரதா?" "நிஜத்தை விட்டு நிழலையே தேடிக்கொண்டு இருக்கிறாய். என்ற போது எனக்கு சிரிப்பு வந்தது" "எனக்கு புரியவில்லையே""
"எப்படி புரியும். புரிந்து கொள்ள முயற்சித்தால் அல்லவோ புரியும்!" நாரதா நிஜம், நிழல் என்கிறாய் என் ராமர் நிழலா?" "ஆம் வேறென்ன நாராயணின் ராம அவதாரம் முடிந்தவுடன் ராமர் மறைந்தார். வேறு அவதாரம் தொடங்கி விட்டாரே இந்த புது யுகத்தில்!" "என்ன சொல்கிறாய் நாரதா என் ராமர் என்னவாக புது அவதாரம் எடுத்துள்ளார்? எங்கிருக்கிறார்? சொல்லேன்?"
"இந்த துவாபர யுகத்தில் அவர் பெயர் கிருஷ்ணன். த்வாரகையில் உள்ளார் . சமீபத்தில் அவரிடம் பேசும் போது தான் உன்னை பற்றியும் பேச்சு வந்தது".
"என் பிரபு என்னை நினைத்து கொண்டிருக்கிறாரா. கேட்கவே ரொம்ப புளகாங்கிதம் அடைகிறேன். நான் என் பிரபுவை உடனே பார்க்க வேண்டுமே"
"உனக்கு அவரை பார்க்க வேண்டுமானால் இப்படிப் போக முடியாது. ஒரு மாறு வேடத்தில் துவாரகைக்கு வா. அங்கு ராம நவமி அன்று அன்னதானம் செய். நான் அப்புறம் உன்னை பார்க்கிறேன்" நாரதன் நகர்ந்தான். ஆஞ்சநேயன் ஒரு பிராமணன் வேடத்தில் துவாரகை சென்றான். துவாரகையில் ஸ்ரீ ராம நவமி அன்று அன்னதானம் அளித்தான். எண்ணற்றவர்களுக்கு தன் கையாலேயே அன்னமிட்டான். வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் மக்கள் கூட்டத்தில் கொஞ்சமும் அயராது ஆஞ்சநேயன் குனிந்து ஸ்ரத்தையோடு அனைவருக்கும் இலையில் அன்னமிட்டான். இன்று ராமரைக் காணலாம் என்றாரே நாரதர்? எப்போது ராமரைப் பார்ப்பது? அவரை எங்கே சந்திப்பது? எங்கே போய் தேடுவது? மனதில் எண்ண ஓட்டம். இருந்தாலும் கை அன்னத்தை பரிமாறிக் கொண்டு இருந்தது. ராமனையே த்யானம் செய்துகொண்டு ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு ஹனுமான் அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தான்.

" திடீரென்று ஆஞ்சநேயனுக்கு தலை சுற்றியது கை, கால்கள் தானாக துவண்டது, மூச்சு வாங்கியது, என்ன ஆயிற்று எனக்கு? ஆஞ்சநேயனுக்கு என்ன சொல்வது எப்படி சொல்வது என்றே புரிபட வில்லை... ஒரு வரிசையில் ஒரு கால் மடக்கி மறுகாலை கொஞ்சம் நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்த ஒரு வயோதிக பிராமணருக்கு எதிரில் அப்போது ஆஞ்சநேயன் குனிந்து கையில் அன்ன வட்டிலோடு பரிமாற நின்றவன் நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்தான்.
''ஏன்? ஏன்? இது எதற்காக? நான் என்ன அபசாரம் செய்து விட்டேன்?"
ஆஞ்சநேயன் கதறினான். அந்த மனிதரின் கால்கள் அவனுக்கு நிறைய பரிச்சயமானவை. சாக்ஷாத் ராமனின் கால்கள்""பிரபு என்னை இப்படியா சோதிக்கவேண்டும்? அலறினான் ஆஞ்சநேயன் பிராமணர் சிரித்தார் மெதுவாக எழுந்தார். அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பிராமணரான நாரதரும் எழுந்தார். கிழ பிராமணர் வேடத்தைக் களைந்து கிருஷ்ணன் ஆஞ்சநேயனை அணைத்து கொண்டார். நீண்ட பிரிவல்லவா? ஆஞ்சநேயா உன் கையால் சாப்பிட ஆசை வந்தது. எனவே நானும் நாரதனும் உனைக்காண வந்தோம்.'' "பிரபு எனக்கு ஒரு வருத்தம்!" "என்ன ஆஞ்சநேயா?" "நான் உடனே துவாரகைக்கு வர வேண்டும் உங்களையும் என் தாய் சீதா பிராட்டியையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.. உங்களைத் தனியாக பார்த்தால் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்து வதைக்கின்றன. பிரிவால் தாங்கள் வாடியதேல்லாம் நினைவுக்கு வந்து என்னை என்னவோ பண்ணுகிறது. உங்களை தனியாக பார்க்க என்னால் இனியும் முடியாது. உடம்பில் தெம்பில்லை "வாயேன் எங்களோடு" ஆஞ்சநேயன் கிருஷ்ணனோடு துவாரகை சென்றான். ருக்மிணி என்கிற உருவில் தனது மாதாவைக் கண்டான். பலராமன் என்ற உருவில் லக்ஷ்மணனையும் கண்ணாரக் கண்டு களித்தான். ‌பேச்சே எழவில்லை இரு கைகளும் தாமே மேலேழும்பி, குவிந்தன. மனம் லேசானது நினைவெல்லாம் மனத்தில் அவனாகவே நிரம்பி வழிந்தது. வாய் மெதுவாக சுவாசத்தோடு கலந்து '' ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே'' என்று உச்சரிக்கும் போது கண்கள் மூடிக்கொண்டன. கண்கள் மூடினால் என்ன? உள்ளே தான் அவன் விஸ்வரூபனாக ராமனாக கிருஷ்ணனாக காட்சி தருகிறானே.

ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !!!!
சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே ஸ்ரீகண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவன்தானே!' என்று போற்றுகின்றனர் வைணவப் பெருமக்கள்.

பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்திருக்கும். பஞ்ச பாண்டவர்களிடம் இருந்த சத்தியமும் தர்மமும்தான் அவர்களைக் காத்தன. அதாவது, பகவான் பாண்டவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் வென்றனர்.

''ஒரேயொரு பாணத்தில் பாண்டவ வம்சத்தில் உள்ள அனைவரையும் அழித்துவிட முடியும். ஆனால், அவர்களுக்கு ரட்சகனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரே... அவர் மட்டும் இல்லையென்றால், விரல் சொடுக்கும் நேரத்துக்குள் அழித்துவிடலாம்'' என பீஷ்மரும் துரோணரும் சொன்னார்கள்.

ஆச்சார்யர்கள் சொன்னதை விடுங்கள்... ஸ்ரீபரமேஸ்வரனே சொல்கிறார்... ''கண்ணபிரான் அவர்களுடன் இருக்கும் வரைக்கும், பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்று!

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார ஸேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன் நிறைவாக வாழலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

'சரக சம்ஹிதை’யின் ஒளஷத சாஸ்திரம், அற்புதமாக இதை விவரிக்கிறது. 'எப்படி வாசுதேவனுக்குத் தோல்வி என்பதே கிடையாதோ, இந்தச் சமுத்திரம் எப்படி வற்றாமல் இருக்கிறதோ, என் தாயாரின் திருமணத்தை எப்படி நான் பார்த்தது கிடையாதோ... இந்த சத் வாக்கியங்கள் அனைத்தும் உண்மையானதைப் போல, இந்த மருந்தும் வேலை செய்து குணமாக்கும்’ என்கிற மந்திரத்தைச் சொல்லியபடி, மருந்து தயார் செய்வார்களாம்.

இத்தனை பெருமைகளைக் கொண்டவன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. இதனால்தான், அபராஜிதன் எனும் திருநாமம் அமையப் பெற்றான். அபராஜிதன் என்றால், தோல்வியே இல்லாதவன் என்று அர்த்தம்!

பகவானின் ஒவ்வொரு அவதாரத்துக்கும் அவனுடைய ஒவ்வொரு திருநாமத்துக்கும் அளப்பரிய சக்தி உண்டு. அந்தக் காரணங்களைத் தெரிந்து கொண்டால், காரியங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். உடுத்துகிற ஆடை, பஞ்சில் இருந்து வருகிறது; அந்தப் பஞ்சு, புடவையாகவும் வேஷ்டியாகவும், சட்டையாகவும் துண்டாகவும் எப்படியெல்லாம் மாறுகிறது பார்த்தீர்களா? பகவானின் திருமேனி அவதாரமும் திவ்விய நாமங்களும் அப்படித்தான்!

சஜாதிபய பேதம், விஜாதிபய பேதம், ஸ்வத்த பேதம் என மூன்று பேதங்கள் உள்ளன. அதாவது, தென்னையும் வாழையும் மரம்தான்! ஆனால், தென்னை என்பது ஒரு வகை மரம்; வாழை என்பது வேறொரு வகையானது! ஆனால், இரண்டுமே மரம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இது, சஜாதிபய பேதம்!

அடுத்து, விஜாதிபய பேதம். அது வேறு, இது வேறு. அதாவது, ஒன்று மரமாகவும், இன்னொன்று மலையாகவும் இருக்கிறது. ஆகவே, மரத்தையும் மலையையும் எப்படி ஒரே வகை என்று சொல்ல முடியும்?

மூன்றாவதாக, ஸ்வத்த பேதம். அதாவது ஒரு மரம் இருக்கிறது. அதில் வேர், கிளை, இலை, பழம் என அனைத்தும் இருக்கின்றன. இப்போது, வேரைப் பார்த்து மரம் என்பீர்களா? கிளையை அல்லது இலையைப் பார்த்து மரம் என்று சொல்வீர்களா? வேரை வேர் என்றும் கிளையை கிளை என்றும், இலையை இலை என்றும் கனியை கனி என்றும்தானே சொல்வோம்?! மொத்தமாக மரம் என்று சொன்னாலும், தனித்தனியே ஒவ்வொரு பெயருடன் வேறுபட்டுத் திகழ்கின்றன, பார்த்தீர்களா?

இறைவன் எனும் பிரமாண்டமானவனும் இப்படித்தான்! பரமாத்மாவான அந்தப் பரந்தாமன், அனைத்துக்கும் அப்பாற்பட்டவன். எல்லாமுமாக இருப்பவனும் அவனே; எதுவுமற்றுத் திகழ்பவனும் அவனே! ஏகஹ என்றும் ந ஏகஹ என்றும் ஸ்ரீகிருஷ்ணனை இரண்டு விதமாகவும் அழைப்பது அதனால்தான்! இதைச் சொல்லும் விதமாகத்தான், உணர்த்துகிற வகையாகத்தான் அவனுடைய ஒவ்வொரு திருநாமமும் அமைந்தது.

'நீராய் நிலனாய்...' என்று துவங்குகிற பாடல் உண்டு. அதில் நீராகவும் இருக்கிறாய்; நிலமாகவும் இருக்கிறாய்; நெருப்பாகவும் இருக்கிறாய்; காற்றாகவும் இருக்கிறாய் என்று ஆழ்வார் வியந்து பாடுவார். அந்த வியப்பின் நிறைவாக, 'அட போப்பா... உன்னை எப்படிக் கூப்பிடுறதுன்னே எனக்குத் தெரியலை!' என்று ஏக்கமாகச் சொல்வார். ஆனால் ஒரு விஷயம்... இங்கே பல இடங்களில், வரிகளில்... இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவுறச் சொல்லிக் கொண்டே வருகிற உத்தி ரசனைக்கு உரியது!

மண்ணை எடுத்துச் சாப்பிட்டான் கண்ணன். இதை பலராமன் யசோதைக்குச் சொல்ல... 'எல்லாரும் பொய் சொல்றாங்கம்மா... நான் மண்ணைச் சாப்பிடலை’ என்று குறும்பு கொப்பளிக்கச் சொல்கிறான் கண்ணன். 'நீ விஷமக்காரனாச்சே... செஞ்சாலும் செய்திருப்பே. எங்கே வாயைத் திறந்து காட்டு’ என்கிறாள் யசோதை.

வேறு வழியின்றி, தன் வாயைத் திறக்கிறான் கண்ணபிரான். அங்கே, ஏழுலகையும் தன் தாயாருக்குக் காட்டி அருள்கிறான் பகவான். அதாவது, பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்பது ஒருவன்தான். ஆனால், அவன் காட்டியது ஏழுலகங்களையும்! 'வையம் ஏழும் கண்டாள்... என்றொரு பாடல், 'காட்டியது ஒருவன்; கண்டது ஏழு’ எனும் பொருள்படும்படி, அழகுற விவரிக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணனுக்கு 'சஹா’ எனும் திருநாமம் அமைந்தது அதனால்தான்! அதாவது... கொடுப்பது, கொடுப்பவன் என்று அர்த்தம். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளிக் கொடுப்பவன் ஸ்ரீகிருஷ்ணன் அல்லவா?

சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட உபதேசித்தவன், அந்தக் கருணாமூர்த்தி அல்லவா?

சர்க்கரையை, பச்சை மிளகாய் என்றோ வேம்பு என்றோ மாற்றிச் சொல்லிவிட்டு, அந்தச் சர்க்கரையைச் சாப்பிட்டால் அது காரமாகிவிடுமா? கசப்பாகிவிடுமா? சர்க்கரையின் இயல்பை மாற்ற எவராலும் முடியாது. அப்படித்தான்... பகவானின் எந்தத் திருநாமங்களைச் சொன்னாலும், அவனுடைய பரிபூரண அன்பும் ஆசீர்வாதமும் நமக்கு என்றைக்கும் உண்டு.

இதேபோல் 'வஹா’ எனும் திருநாமமும் கொண்டிருக்கிறான் பகவான். வஹா என்றால் வசிப்பது, வசிப்பவன் என்று அர்த்தம்.

இதைத்தான் பராசர பட்டர், தன் சிஷ்யரான மைத்ரேயரிடம்... 'ஜகத் முழுவதுமாக, ஜகத்தில் உள்ள உயிர்கள் அனைத்திலுமாக ஊடுருவிப் பரவியிருக்கிறான் பரந்தாமன்’ என்கிறார். அதாவது அந்தராத்மாவாக, அந்தராமியாக, அனுப்பிரவேசம் பண்ணியிருக்கிறான்.

அட... இதைத்தானே பிரகலாதனும் சொன்னான் என்கிறீர்கள்தானே?!

ஆமாம். 'இறைவன் எங்கே இருக்கிறான்?' என்று இரணியன் கேட்டதற்கு, 'எங்கும் உளன்’ என்றான் பிரகலாதன். உடனே 'இங்கே இருக்கிறானா?' என்று கேட்டான் இரணியன். எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி இது. பின்னே... எங்கும் இருப்பவன் என்று சொல்லிவிட்ட பிறகு இங்கே இருக்கிறானா என்று கேட்கலாமோ?

'இந்தத் தூணில் இருக்கிறானா?' என்று அவன் கேட்க, 'இருக்கிறான்’ என்று பதில் சொன்னால், 'அந்தத் தூணில் இல்லையா?' என்கிற அடுத்த கேள்வியும் வரும். இதை உணர்ந்த பிரகலாதன், விதண்டாவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்... எனச் சொன்னான்.

சஹா என்றால் கொடுப்பவன்; வஹா என்றால் வசிப்பவன். கொடுக்க வேண்டும் என்றால், கூட இருந்துதானே ஆக வேண்டும்?!

நம்மில், நமக்குள்... ஊடுருவியிருக்கிறான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். இன்று இல்லையேனும் நாளை... நாளை இல்லையேனும் அடுத்த வாரம்... அதுவும் இல்லையெனில் அடுத்த மாதம்... நாம் திருந்த மாட்டோமா, நல்வழிக்கு வரமாட்டோமா எனக் காத்துக் கொண்டிருக்கிறான் கண்ணபிரான்.

'ஆடுற வரைக்கும் ஆடு. ஓய்ஞ்சு முடிஞ்சாதான் உன் புத்திக்கு எதுவுமே உரைக்கும்’ என்று பிள்ளையைப் பெற்ற தாய், பொறுமை காப்பதைப் போல, நமக்குள் இருந்தபடி நமக்காகக் காத்திருக்கிறான் கண்ணபிரான். முடிந்தால், அவனை உணர முயற்சி செய்து பாருங்களேன்!

சனி, 2 மே, 2020

#சேலம் பெரியவா இல்லம்
#SALEM PERIYAVA GRUHAM
   
சேலத்தில் தனக்கென ஒர் இடத்தைக் கேட்டு வாங்கி அதில் கடந்த மூப்பத்தி எட்டு ஆண்டுகளாக பல ரூபங்களில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மஹா பெரியவா!
  
பெரியவாளின் பரம பக்தரான ராஜ கோபால் மாமா இந்தியன் காபி போர்டில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அது. அப்போது அவரின் பெற்றோர் சென்னையில் இருந்தார்கள். அவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு குடும்பத்தின் மாப்பிள்ளை தான் காஞ்சி மகானின் தீவிர பக்தரான பிரதோஷம் மாமா.

ராஜகோபால் தம்பதிகள் காஞ்சி மஹானிடம் பக்தி கொண்டு இருந்தார்களே தவிர அவ்வளவு நெருக்கம் இல்லை. பிரதோஷம் மாமா ஒரு தடவை இவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போய் மஹானைப் பற்றி விவரமாக உபதேசித்த பின்பு தான் இவர் உள்ளத்தில் பெரியவா மீது அளவற்ற பக்தி தோன்றியது. உத்தியோகம் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறிக்கொண்டு இருந்த ராஜகோபால் மாமா சேலத்துக்கும் மாறுதல் கிடைக்கப் பெற்றார். சேலத்துக்குத் தனக்கு மாற்றல் கிடைத்த விஷயத்தைப் பெரியவாளிடம் ராஜகோபால் மாமா  சொன்னபோது ''சேலத்தில் உனக்கு வீடு இல்லையா?'' என்று ஒரு கேள்வியைக் கேட்டார் பெரியவா. சென்னையில் பூர்வீக சொத்து இருக்கிறது என்று ராஜகோபால் மாமா சொல்ல... ''சேலத்தில் வீடு இருக்கிறதா என்று தான் கேட்டேன்'' என்றார் மஹான் அழுத்தம் திருத்தமாக.

''இல்லை!'' என்று மெல்லிய குரலில் பதில் சொன்ன ராஜகோபாலின் மனத்தில் அப்போதே ஓர் எண்ணம் ஓடியது... சேலத்தில் எப்படியாவது ஒரு வீட்டை வாங்கி விட வேண்டும் என்று! சேலத்தில் அவர் உமா நகரில் குடியிருந்தார். அதுவரை சேலத்தில் வீடு வாங்க நினைக்காதவர் மஹானின் கேள்வியால் வீடு வாங்கும் உறுதி கொண்டார். எங்கெங்கோ தேடி கடைசியில் ஒரு நண்பர் மூலமாக ரகுராம் காலனியில் ஒரு வக்கீலின் வீட்டைப் பார்த்துப் பேசி முடித்தார். ''சொந்த வீடு இருக்கிறதா?'' என்று மஹான் கேட்டதை நிறை வேற்றி விட்ட திருப்தி அவருக்கு. வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு தன் மனைவியுடன் காஞ்சிக்குச் சென்ற ராஜகோபால் மாமா மஹானின் முன்னால் போய் நின்றார். வீட்டைப் பார்த்துப் பேசி முடித்ததுமே நேராக காஞ்சிக்குப் போன ராஜகோபால் மாமா மஹானிடம் பவ்வியமாக ''ஒரு வீட்டை சேலத்தில் பார்த்திருக்கிறேன்'' என்றார். மஹானின் அடுத்த கேள்வி ராஜகோபால் மாமாவை வியப்பில் ஆழ்த்தியது... ''வடக்குப் பார்த்த வீடு தானே? உடனே வாங்கிடு!'' வீடு எப்படி இருக்கிறது, எந்தத் திசையை நோக்கி இருக்கிறது என்கிற விவரம் எதையும் மஹானிடம் சொல்லவே இல்லை ராஜகோபால் மாமா... ஆனால் அந்த மஹான் எப்படி கேட்டார்... ''வடக்குப் பார்த்த வீடுதானே?'' மஹானின் அடுத்த கேள்வி, ''என்ன விலை சொல்றான்?'' ''அவன் இன்னமும் குறைச்சுக் கொடுப்பான். வாங்கிடு!'' என்று ஆசி வழங்கினார் மஹான். மஹான் சொன்னபடியே வீட்டின் சொந்தக்காரர் அதன் விலையில் மேலும் நாற்பதாயிரம் ரூபாய் குறைத்துத் தர முன் வந்தார். வீடும் கைமாறியது. அதை வாங்கும் பொருட்டு சென்னை வீட்டை நல்ல விலைக்கு விற்று விட்டார்.

அதன் பின் காரியங்கள் அசுர வேகத்தில் நடக்க ஒரு நல்ல நாளில் வீட்டை வாங்கி தன் மனைவி கீதாவின் பேரில் ரிஜிஸ்தரும் செய்து விட்டார் ராஜகோபால் மாமா. ராஜகோபால்  மாமா தம்பதி மஹானுக்கு முன்னே நிற்கிறார்கள். ஒரு தட்டில் பழம், தேங்காய், பூவுடன், பத்திரத்தை அவர் முன் வைக்கிறார்கள். தட்டைக் கையில் எடுத்து மஹானிடம் நீட்டும் போது தன்னை அறியாமல் ராஜகோபால் மாமா சொல்கிறார்...''மஹா பெரியவா அனுக்ரஹத்தில் மஹா பெரியவா கிரஹம் வாங்கப்பட்டு இருக்கிறது!''
'தங்கள் வீடு’ என்று அவர் சொல்ல வில்லை. 'பெரியவா கிரஹம்’ என்று தன்னிச்சையாக அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
மஹான் ஒரு புன்சிரிப்போடு நிமிர்ந்து ராஜகோபால் தம்பதியைப் பார்த்தார். பிறகு சிறிய டார்ச் வெளிச்சத்தில் பத்திரம் பூராவையும் படித்தார். அதன் பின் கேட்டார்... ''எனக்கே எனக்கா?'' ''பெரியவா அனுக்ரஹம்'' என்றார் ராஜ கோபால் மாமா... பத்திரத்தை மஹான் உடனே திருப்பித் தரவில்லை. சற்று நேரம் கழித்து அந்தத் தம்பதியை தன் அருகில் அழைத்து பத்திரத்தின் மீது தாமரை இதழும் வில்வமும் வைத்துத் தந்தார். வீட்டின் சாவியைக் கையில் எடுத்த மஹா பெரியவா சாவியை ராஜகோபால் மாமா  கையில் தந்து ''சாவியை அவகிட்டே கொடு! அவதானே வீட்டுக்காரி'' என்றார்.

அடுத்தபடியாக பெரியவா சொன்ன விஷயம்.......

''உனக்கும் உன் குழந்தைகளுக்கும் சௌகர்யமாக மேலே வீட்டைக் கட்டிக் கொள்; கீழே நான் இருக்கேன்!'' இவை எப்படிப்பட்ட வார்த்தைகள்! 'பெரியவாளை கீழே விட்டு விட்டு, மேலே போய் எப்படிக் குடித்தனம் பண்ணுவது!’ என்று கவலை வந்தது. மஹானுக்கு அவரது எண்ண ஓட்டம் புரியாதா? ''நான் எல்லா இடத்திலும் இருப்பேன்'' என்பதைப் போல கையைத் தூக்கி ஆசி வழங்கினார். ''எத்தனையோ பேர் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பெரியவா உன் வீட்டை எடுத்துக் கொண்டது உன் மீது அவர் வைத்துள்ள அபிமானத்தையே காட்டுகிறது!'' என்ற பிரதோஷம் மாமா. அந்தத் தம்பதிக்கு தன் வீட்டில் தடபுடலாக விருந்து வைத்து அனுப்பினாராம். இதுதான் சேலம் காந்தி ரோடு, ரகுராம் காலனியில் உள்ள மஹா பெரியவா கிரஹத்தின் வரலாறு.

இந்தக் கிரஹம் இப்போது ஏராளமான பக்தர்கள் ஒரே சமயம் வந்து தரிசனம் செய்யவும், உணவருந்தவும் வசதியாக, மிகவும் விசாலமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மஹா பெரியவா இங்கே பல உருவங்களில் காட்சி தருகிறார். ஸ்ரீ விநாயகரும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தியும் விக்கிரக வடிவில் இருக்க கயிலாசபதியும் நந்தியும் இங்கே கொலுவிருக்கிறார்கள். புதிதாக நான்கு அடி உயரமுள்ள ஆஞ்சநேயரும் இங்கு காட்சி தருகிறார். சுமங்கலி பூஜையும் இங்கே நடைபெறுகிறது. அவ்வப் போது ராமபக்த ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது. மஹானின் பல்வேறு உருவப் படங்கள் இங்கே ஒரே இடத்தில் காணக் கிடைப்பது மிகவும் சிறப்பு! காலையும் மாலையும் கற்பூர தீபாராதனை நடக்கும். சேலத்தில் உள்ள மஹா பெரியவா கிரஹம் ஒரு புண்ணிய ஸ்தலம். அவசியம் ஒரு முறை அந்த கிரஹத்துக்கு விஜயம் செய்து காஞ்சி மஹானின் பேரருளைப் பெறுங்கள்!

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர!!! ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !! ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !!

SRI SRI SRI MAHA PERIAVA GRAHAM
113, RAGHURAM COLONY
GANDHI ROAD
SALEM 636 007
PHONE:  +91 73977 99878
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

மதுராந்தகம் ராமர் கோயில்

ஏரியைக் காத்த ராமர் இவர். மதுராந்தகம் ஏரிக்கரையின் கீழே இந்தக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி, இலக்குவன் ஆகிய மூவரும் அருள்பாலிக்கிறார்கள். ஏரியைக் காத்த ராமரின் மற்றொரு திருவுருவமான கருணாகரமூர்த்தியும் இங்கு உருக்கொண்டுள்ளார். சென்னையிலிருந்து தெற்கே செங்கல்பட்டுக்கும் விழுப்புரத்திற்கும் இடையே மதுராந்தகம் உள்ளது.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

வரதராஜப் பெருமாள் கோயில்

காஞ்சி நகரின் கடைசியில் ஹஸ்தகிரி குன்றில் அமைந்துள்ள இந்தக் கோயில் பிரும்மாண்ட தோற்றம் கொண்டது. கலைநுட்பம் செழித்த நூறுதூண்கள் நிறைந்த மண்டபம் ஒன்றும் விஜயநகரப் பேரரசு காலத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வேலைப்பாடுமிக்கவளையங்கள் சங்கிலித் தொடராக நான்கு மூலைகளிலும் தொடர்வது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம். இறையருள் தரிசனமும் கலையெழில் தரிசனமும் கிடைக்கும் பெருமாள் திருத்தலம். வெகு நேர்த்தியான ரதி-மன்மதன் குதிரை வீரர்கள் ஆகிய சிற்பங்கள் அணிகலன்களைப்போலக்
காட்சியளிக்கின்றன. இங்கு வைகாசியில் நிகழும் கருடோத்சவம் காண பக்தர்கள் கூட்டம் திரளும்.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

காமாட்சி அம்மன் கோயில்

காஞ்சி நகருக்குப் பெருமைதரும் அம்மன் கோயில். அருள் வழங்கும் அருளாலயம். இங்கு அம்மனின் முன்புள்ள ஸ்ரீ சக்கரத்தையே அம்பிகையாக பாவித்து வழிபடுவது மரவு. ஆதி சங்கரர் கோயில் காமாட்சி அம்மன் பின் புரம் அமைந்துள்ளது. இந்தியாவின் மூன்று முக்கியத் தலங்களில் ஒன்றான இது, கோடிமன்னகர்களால் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் மையப்பகுதியில் தங்கக் கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு பங்குனி மாதம் 9 ஆவது சந்திர நாளில் நடக்கும் ரதோற்சவம் பிரசித்திப்பெற்றது.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

ஸ்ரீ வைகுந்த பெருமாள் கோயில்

சிற்பங்கள் செழீத்திருக்கும் கற்கோயில் காஞ்சியின் பெருமை. வரலாற்றில் நிலைக்கும் விதமாக நந்திவர்வ பல்லவன் தலைசிறந்த சிற்பிகளைக்கொண்டு செதுக்கிய கோயில். பிரதான பகுதிகளிலிருந்து சற்று உள்ளடங்கிய ஒரு குறுகிய பாதையின் இறுதியில் இந்த கலைக்கோயில் உள்ளது.வைகுந்த ஏகாதசி இரவில் பக்தர்கள் வழிபடும் முக்கியத்துவம் பெற்றது. இது இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில்பாதுகாக்கப்பட்டு வருகிறது. வைணவ ஆலயம் என்பதால் மதியம் மூடப்பட்டிருக்கும்.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

கைலாசநாதர் கோயில்

பல காலகட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஒன்று தான் கைலாசநாதர் கோயில். இது காஞ்சிபுரம் நகர மத்தியிலிருந்து ஏறத்தாழஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. சுவரோவியங்கள், சிற்பங்கள் மற்றும் கட்டுமானக் கலை ஆகியவற்றால் முக்கியத்துவம் பெற்ற கோயில். கி.பி.8 ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசரால் ராஜசிம்ம பல்லவன் கட்டிய இக்கோயிலை பின்னர் அவரது வழித்தோன்றலான மகேந்திர பல்லவன்மறுசீரமைப்பு செய்தார். மூலவரான கைலாச நாதரைச் சுற்றி 58 லிங்கங்கள்அமைக்கபட்டுள்ளன. இறையருள் குடியிருக்கும் கலைக்கோயில் இது.காஞ்சி சென்றால் கைலாசநாதரைக் கைவிடாதீர்கள்.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

கந்த கோட்டம் சுப்ரமண்யசாமி கோயில்

காஞ்சிநகரம் புராணத்தில் இடம்பெற சுப்ரமணியசாமி கோயிலும் ஒரு காரணம். சிவன், பார்வதி இருவருக்கும் நடுவே முருகன் அமர்ந்திருப்பதுபோல ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலுக்கும் காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவே இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்போது காணப்படும் இக்கோயில்
1915இல் கட்டப்பட்டது.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

ஏகாம்பரேஸ்வரர் கோயில்:தென்னிந்தியாவின் உயரமான கோபுரங்களில் ஒன்றாக ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் திகழ்கிறது. கோபுரத்தின் உயரம் 57 மீட்டர்.தொன்மைமிக்க இந்தக் கோயில் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர அரசர்களால்
புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள பிருத்வி லிங்கம் தென்னிந்தியாவின்
பஞ்சலிங்கங்களில் ஒன்று என்ற பெருமையுடையது. விசாலமான ஐந்து தாழ்வாரங்களும் ஆயிரங்கால் மண்டபமும் அழகின் சிறப்பு. இத்தலத்து
அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வரஅம்சம் மூலமாக உணர்த்தியதைப்போல, இவள் ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். இவளது பாதத்தின் முன்பு ஸ்ரீசக்கரம் உள்ளது.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். சென்னை  திருச்சி நெடுஞ்சாலையில் சென்னையைத் தொட்டுக்கொண்டிருக்கும்நகரம். இங்கு பழமையான விஜயநகர கோட்டை ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்நகரின் மிகப்பெரிய கொளவாய் ஏரியில் படகுசவாரி செய்யும் அனுபவம் ஓர் உற்சாகக் கொண்டாட்டம்.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - வண்டலூர்

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா தமிழ்நாட்டின் சென்னையின் தெற்கில் 30 கீ.மீ தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்காவண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன.அமைவிடம்,வண்டலூர்,சென்னை - 600 048. செவ்வாய் விடுமுறை.
கட்டணம் ரூ.15. தொலைபேசி - 22397150.
-------------------------
ஜயேந்திர சரஸ்வதி அவர்கள் அருளிய "தெய்வ வாக்கு"

புத்தகத்தில் இருந்து பழமையான ஹிந்துசமயம் என்ற போஸ்டின்  நேற்றைய

தொடர்ச்சி...

இப்பொழுது மதக் கொள்கைக்களுக்கும் நடைமுறைகளுக்கும் இடையே நிறைய
வித்யாசம் இருக்கிறது... ஆனால் பெளத்தர்கன் மூலமாக பல அரசுகள்  உருவாயின. அரசாட்சிகள் நடை பெற்றன... அரசர்கள் மூலமாக அநேக நாடுகள்  பெளத்த தேசங்களாக மாறத் தொடங்கின. முக்கியமாக பெளத்த  கொள்கையைக் காட்டிலும் அஹிம்சா கொள்கையையே அடிப்படையாகக்  கொண்டு அரசர்கள் மதம் மாறத் தொடங்கினர். அந்தக் காலத்தில் தான்  வழிபாட்டுக்கு ஸ்தலங்களுக்கு பெளத்த கோயில்கள் தோன்ற  ஆரம்பித்தன. சிவன், விஷ்ணு போன்ற கோயில்கள் அவ்வளவு பிரபலமாக  இல்லை. அதாவது  புண்ய க்ஷேத்திரங்களில் மாத்திரம் சிவ, விஷ்ணு ஆலயங்கள் அழியாமல்  இருந்து வந்தன. ஆனால் சிறு தேவதா வழிபாட்டு மூர்த்தங்கள் எல்லா  கிராமங்களிலும் நிறைய இருந்தன...

(கர்மமீமாம்ஸம்... தர்க்கசாஸ்திரம்... சாங்கிய சாஸ்திரம்) இந்த மூன்று  தத்வங்களாலும் வாதம் செய்யப்பட்டு பெளத்த கொள்கைகள்  தோற்தடிக்கப்பட்டன. இந்தக் குழப்ப நிவையில் தான் புராணங்களில்   பரமசிவனாகப் போற்றப்படும் ஆதிசங்கரர் நம் நாட்டின் தென் கோடியில்   கேரளத்தில் காலடி என்னும் க்ஷேத்திரத்தில் அவதரித்தார். அவர்  முப்பத்திரண்டு ஆண்டுகளே இருந்தார். பால்யத்தில் எட்டு வயதிற்குள்ளேயே எல்லாசாஸ்திரங்களையும் எல்லா சக்திகளையுய் பெற்று அன்னையின்  அநுமதியுடன் சன்யாசம் மேற்கொண்டு காசிக்குச் சென்றார்... அங்கு  எல்லா  பண்டிதர்களையும் சந்தித்துப் பேசி வாதத்தில் வென்று பழமையாய் வந்து  கொண்டிருக்கிற வைதீக ஹிந்து தர்மத்தை புளர்த்தாரணம் செய்யத் தொடங்கினார். ஜய ஜய சங்கர ஜயேந்திர சங்கர உங்கள் பொற் பாதங்களில்

அனந்த கோடி நமஸ்காரங்கள்... காஞ்சி மடத்தில் மஹா பெரியவாளின் 
ப்ருந்தாவனத்தில் தாங்கள் சமர்ப்பிக்கும் உச்சிக்கால தீபாராதனையை  தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்களில் அடியேனும் ஒருத்தி. உங்கள் அறையில்  உங்களை வணங்க உள்ளே நுழையும் போதே முகமெல்லாம் புன்னகை தவழ  வாங்கொ வாங்கோ என்று வரவேற்று குசலப்பிரச்னம் விஜாரித்து குங்குமம்  கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களால் குங்குமத்தை தந்து ஆசீர்வாதம்  பண்ணும் அழகை என்ன சொல்வது?
சுவாமி சிவானந்தர்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம்! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால் மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல! மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில் அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால் இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடுவது இல்லை. வாழ்வில் நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி! எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர் தான் சிவானந்த சரஸ்வதி. திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை எனும் ஊரில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த வேம்பு ஐயருக்கு 1877 ம் வருடம் செப்டம்பர் எட்பாம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. குப்பு ஸ்வாமி என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தார் வேம்பு ஐயர். எட்டயபுரம் ராஜா உயர் நிலைப் பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான். 1903ம் வருடம் மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினார். பிறகு திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து 1905 ம் வருடம் தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். இந்தக் கால கட்டத்தில் அவரின் தந்தை இறந்து போனார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே 1913 ம் வருடம் மருத்துவப் பணி செய்து சம்பாதிக்கலாம் என மலேசியா சென்றார் குப்புஸ்வாமி. வறுமை காரணமாக வேலையில் சேர்ந்தாலும் எளியோரின் துயர் போக்கும் பணியாகவே மருத்துவத் துறையைப் பார்த்தார். ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து மருத்துவமனை ஒன்றை நிர்வாகித்தார். பயனுள்ள மருத்துவ நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவரின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, லண்டனில் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ராயல் ஏஷியாடிக் கழகம் முதலான புகழ்மிக்க சங்கங்கள், அவரை உறுப்பினராக நியமித்துக் கௌரவித்தன. உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு மக்களின் மன ஆரோக்கியம், ஆன்ம பலம் குறித்த சிந்தனை எழுந்தது. யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கினார். 1923 ம் வருடம் இந்தியா திரும்பி, காசி, நாசிக், பண்டரிபுரம், ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது கிடைத்த இடத்தில் உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை நடத்தியவர், ரிஷிகேஷ் தலத்தில் ஸ்வாமிகள் விஸ்வானந்த சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று 1924 ம் வருடம் ஜூன் ஒன்றாம் தேதி ஸ்வாமிகள் சிவானந்த சரஸ்வதி எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார். அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு 1927 ம் வருடம் கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். வட யாத்திரையை முடித்தவர், ராமேஸ்வரம், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தார். பிறகு மீண்டும் ரிஷிகேஷ் வந்தவர் 1934 ம் வருடம் மார்ச் மாதம் உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில் ஆனந்தக் குடிசை எனும் பொருள்படும் ஆனந்தக் குடிர் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள், புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புனித வாழ்க்கை சங்கம் எனும் மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது. ஸ்வாமிகள் சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள், பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார். ஸ்வாமிகள் தன்னை அறிந்து கொண்டு விடுதலை பெறு, நல்லதைச் செய், அதை உடனே செய் எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த ஸ்வாமிகள் சிவானந்த சரஸ்வதி, 1963 ஆம் வருடம் ஜூலை பதிநான்காம் தேதி கங்கைக் கரையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

தொடரும்
தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகள்

இந்த அனுபவம் பல பேருக்கு ஏற்கனவே தெரிஞ்சதாக இருக்கும். ஆனால், எத்தனை தடவை படித்தாலும், கேட்டாலும் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் விடுவதை யாராலும் எப்போதும் கட்டுப் படுத்த முடியாது.

பல வருஷங்களுக்கு முன் ஒரு சித்ரா பௌர்ணமியில் திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமிக்கு மஹன்யாஸ ருத்ர ஜபத்துடன் அபிஷேகம் விமர்ஸையாக நடந்தது.

அதை நடத்தி வைத்தவர் திருவாரூர் மிராஸுதார் நாராயணஸ்வாமி ஐயர். பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர். மத்யான்னம் ருத்ராபிஷேகம் முடிந்ததும் ப்ரஸாதத்தை எடுத்துக் கொண்டு விடியற்காலம் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.

கூட்டம் நெருக்கியடித்தது. பெரியவா பூஜையை முடித்து தர்ஶனம் குடுத்துக் கொண்டிருக்கும் போது, முண்டியடித்துக் கொண்டு ஒருவழியாக பெரியவா முன்னால் ப்ரஸாதத்தோடு நின்றார்.

"இது எந்த க்ஷேத்ரப் ப்ரஸாதம்?"

ரொம்ப வினயத்தோடு.......

" பெரியவா! நேத்திக்கு திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சேன். மஹன்யாஸ ருத்ரஜபத்தோட பெரிய அபிஷேகம். பெரியவா ஸந்தோஷப்படுவேளே.... ன்னு எடுத்துண்டு ஓடி வந்தேன்"

பெரியவா அந்த மூங்கில் தட்டையே உற்றுப் பார்த்தார்!

"நாராயணஸ்வாமி.. நீ பெரிய மிராஸுதார்-ன்னாலும், செலவுக்கு இன்னும் யாரையாவது கூட்டு சேத்துண்டு ஸ்வாமிக்கு பண்ணினியோ?"

"இல்ல பெரியவா......! நானே.... என் ஸொந்த செலவுல பண்ணினேன்"..ன்னு அந்த "நானே"க்கு அழுத்தம் குடுத்தார்.

மனஸுக்குள் சிரித்துக் கொண்டார் பெரியவா.

"லோக க்ஷேமார்த்தம் பண்ணினியாக்கும்?"

"இல்ல....... வயல்ல ரெண்டு மூணு வருஷமா வெளச்சலே இல்லே. அதான்........."

குழைந்தார்.

பெரியவா இன்னும் ப்ரஸாதத்தை தொடவே இல்லை.

"ஆத்மார்த்தமாவோ, லோக க்ஷேமார்த்தமாவோ நீ இதைப் பண்ணலேன்னு தெரியறது"

கண்ணை மூடிக் கொண்டார். பதினைந்து நிமிஷம் கழித்து,

"ஸெரி..... ருத்ரஜபத்துக்கு எத்தனை வேதப்ராஹ்மணா வந்திருந்தா? வைதீகாள்ளாம் யாரு? எந்த ஊர்?"

"பதினோரு ப்ராஹ்மணா ஏற்பாடு பண்ணியிருந்தேன்......"

இடுப்பில் சொருகியிருந்த பேப்பரில் இருந்த பெயர்களை வரிஸையாக படிக்க ஆரம்பித்தார்.

கூட்டத்தில் ஒரே நிஶப்தம். பெரியவா ஏன் இவ்வளவு துருவி துருவி கேட்கிறார்? என்று எல்லாருக்கும் குழப்பம்.

அவர் சில வைதீகாளின் பெயர்களை படிக்க ஆரம்பித்ததும்,

"நல்ல அயனான வித்துக்களாத்தான் ஏற்பாடு பண்ணியிருக்கே...... அது ஸெரி, ஒன் லிஸ்டுல தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகள் பேர் இருக்கான்னு பாரு"

மகிழ்ச்சியுடன் "இருக்கு பெரியவா ! ஜபத்துக்கு அவரும் வந்திருந்தார்"

"பேஷ்! பேஷ்! வெங்கடேஶ கனபாடிகளையும் சொல்லியிருந்தியா.......! ரொம்ப நல்ல கார்யம்! மஹா வேத வித்து! இப்போ கனபாடிகளுக்கு ரொம்ப வயஸாயிடுத்து. கொரல் எழும்பறதுக்கே ரொம்ப ஶ்ரமப்படும். ஜபத்தை மூச்சடக்கி சொல்லறதுக்கு ரொம்ப கஷ்டப்படுவார்! ........."

பெரியவா முடிக்கவில்லை..... மிராஸுதார் உடனே.......

"ஆமா பெரியவா. நீங்க சொல்லறது ரொம்ப ஸெரி. அவர் ஸெரியாவே ருத்ரம் ஜபிக்கலே.! சில நேரம் வாயே தெறக்காம, கண்ண மூடிண்டு ஒக்காந்திருந்தார்.....! அடிக்கடி கொட்டாவி வேற விடறார்......! அதுனால, ஜப ஸங்க்யை [count] வேற கொறையறது......! நேத்திக்கி அவர் ரொம்ப ஶ்ரமம் குடுத்துட்டார்.! ஏண்டா அவரை வரவழைச்சோம்னு ஆயிடுத்து பெரியவா...!"

மிராஸுதார், குற்றப்பத்திரிகை வாஸித்ததுதான் தாமதம், பெரியவா ப்ரளயகால ருத்ரனாக பொங்கி பொரிந்து தள்ளி விட்டார்! வார்த்தைகளில் அவ்வளவு கோவம்!

"என்ன சொன்னே நீ?.... பணம் இருந்தா, எத வேண்ணாலும் பேசலாங்கற திமிரோ? தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகளோட யோக்யதாம்ஸம் பத்தி ஒனக்கென்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால் தூஸு பெறுவியா நீ? அவரைப் பத்தி என்னமா அப்டி சொல்லலாம்?.....

......நேத்திக்கி மஹாலிங்க ஸ்வாமி ஸன்னதில என்ன நடந்ததுங்கறதை நா புரிஞ்சுண்டுட்டேன் ! நா.... கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு.!....

...... நேத்திக்கு ஜபம் பண்ணறப்போ, கனபாடிகள் முடியாம கண்ண மூடிண்டு ஒக்காந்தப்போ, நீ அவர்ட்ட போய் ரொம்ப கடுமையா "ஏங்காணும்! காஸு வாங்கலே நீர்? இப்படி ஜபம் பண்ணாம வாயடைச்சு ஒக்காந்திருக்கீரே!" ன்னு கத்தினியா? இல்லியா?"

எரிமலை குமுற ஆரம்பித்தது! மிராஸுவும், கூட்டமும் விக்கித்துப் போய் நின்றனர்!

நடுநடுங்கி ஸாஷ்டாங்கமாக பாதங்களில் விழுந்து

"தப்புத்தான் பெரியவா. வாஸ்தவம்தான். ஸ்வாமி ஸன்னதில அப்டி அவரைப் பாத்து சொன்னேன். மன்னிச்சுக்கணும் பெரியவா "

உதறலெடுக்க கெஞ்சினார்.

பெரியவா விடவில்லை.

"இரு....! இரு....! நீ அந்த ஒரு தப்பை மாத்ரமா பண்ணினே? சொல்லறேன் கேளு. எல்லார்க்கும் தக்ஷிணை குடுத்தேல்லியோ? ஒவ்வொரு வைதீகாளுக்கும் எவ்வளவு குடுத்தே?"

மென்று விழுங்கி ஈனஸ்வரத்தில் "தலைக்கு பத்து ரூவா குடுத்தேன் பெரியவா"

"ஸெரியா சொல்லு. எல்லா வைதீகாளுக்கும் ஸமமா பத்து பத்து ரூவாயா குடுத்தே? எனக்கு எல்லாம் தெரியும்!"

மடக்கினார்.

மிராஸு மெளனமாக இருந்தார்.

"ஒனக்கு சொல்ல வெக்கமாயிருக்கு போல இருக்கு. நா.... சொல்றேன் கேட்டுக்கோ! வைதீகாளை ஸன்னதில வரிஸையா ஒக்காரவெச்சு தலைக்கு பத்து ரூவா ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே.....!

.....தேப்பெருமாநல்லூர் கனபாடிகள்கிட்ட வந்ததும், "இவர்தான் ஸெரியாவே ருத்ரம் சொல்லலியே......! அவருக்கு எதுக்கு மத்தவாளாட்டம் பத்து ரூவா குடுக்கணும்?.ன்னு நீயே தீர்மானிச்சு, ஏழே..... ஏழு ரூவா !!!ஸம்பாவனை பண்ணினே....!...

.....ஏதோ அவரைப் பழி வாங்கிட்டதா எண்ணம் ஒனக்கு.!! ஆனா, அவர் எதையாவது லக்ஷியம் பண்ணினாரா பாத்தியா? நீ குடுத்ததை வாங்கி அப்டியே துண்டுல முடிஞ்சுண்டார். என்ன? நா..... சொல்லறது ஸெரிதானே?"

எல்லாருக்கும் நேற்று நடந்ததை அப்படியே நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்லுவதை பார்த்து திகைப்பதா? அழுவதா? ஆஶ்சர்யப்படுவதா? ஒன்றும் புரியவில்லை.

"மன்னிச்சுடுங்கோ பெரியவா....! ஏதோ அஞ்ஞானத்தால அப்படி நடந்துண்டுட்டேன்...! இனிமே அப்டி நடக்கவே மாட்டேன். ...."

"இரு...! இரு.....! இதோட முடிஞ்சுட்டாத்தான் தேவலையே! ஜபம் பண்ணின ப்ராஹ்மணாளுக்கு மஹாதானத் தெரு ராமசந்த்ர ஐயரோட க்ருஹத்லதானே ஸாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே? ஸாப்பாடெல்லாம் பரமானந்தமா நன்னாத்தான் போட்டே.......! பந்தில நெய் ஒழுக ஒழுக நெறைய முந்திரிப்பருப்பு, த்ராக்ஷை எல்லாம் போட்டு சக்கரைப் பொங்கல் பண்ணச் சொல்லி, ஒங்கையால நீயே பரிமாறினே..... ஸெரியா?"

வெலவெலத்துப் போனார் மிராஸு. உண்மைதான்!

"ஸெரி...... அப்டி சக்கரைப்பொங்கலை போடறச்சே பந்தி தர்மத்தோட பரிமாறினதா, ஒம்மனஸாக்ஷி சொல்றதா?........

.....நீ சொல்லவே வேணாம். நானே சொல்லறேன்! நீ சக்கரைப் பொங்கல் போடறச்சே, அது பரம ருசியா இருந்ததுனால, வைதீகாள்ளாம் கேட்டு கேட்டு வாங்கி ஸாப்டா.....! நீயும் நெறைய போட்டே....! ஆனா, தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகள்..... வெக்கத்தை விட்டு, "சக்கரைப்பொங்கல் இன்னும் போடுடாப்பா......! ரொம்ப நன்னாருக்கு" ன்னு பல தடவை வாயைவிட்டு கேட்டும்கூட, நீ காதுல வாங்கிண்டு அவருக்கு போடாமலேயே போனியா இல்லியா?....

..... எத்தனை தடவை கேட்டார்! போடலியே நீ! பந்தி வஞ்சனை பண்ணிப்பிட்டியே! இது தர்மமா? ஒரு மஹா ஸாதுவ இப்டி அவமானப்படுத்திட்டியே!....”

மிகுந்த துக்கத்தில் மௌனமாகிவிட்டார் பெரியவா.

கொஞ்ச நேரம் கழித்து ஸாக்ஷாத் மஹாலிங்கமான பெரியவா பேசினார்......

"மிராஸுதார்வாள்....! ஒண்ணு தெரிஞ்சுக்கணும். கனபாடிகளுக்கு இப்போ எம்பத்தொறு வயஸாறது. தன்னோட பதினோராவது வயஸ்லேர்ந்து எத்தனையோ ஶிவ க்ஷேத்ரங்கள்ள ஸ்ரீருத்ர ஜபம் பண்ணியிருக்கார். ஸ்ரீருத்ரம் எப்பவுமே அவரோட நாடி நரம்புகள்ளேயும், ஶ்வாஸத்லேயும் ஓடிண்டே இருக்கு. அப்பேர்ப்பட்ட மஹான் அவர்! அவர்கிட்ட நீ நடந்துண்ட விதம்...... மஹா பாபமான கார்யம்"........

மேலே பேச முடியவில்லை பெரியவாளால்! கண்களைமூடிக் கொண்டு மெளனமாக அமர்ந்துவிட்டார். பிறகு மீண்டும்,

"நீ "பந்தி பேதம்" பண்ணின கார்யமிருக்கே....? அது கனபாடிகள் மனஸை ரொம்பவே பாதிச்சுடுத்து. அவர் என்ன கார்யம் செஞ்சார் தெரியுமா? சொல்றேன் கேளு. நேத்திக்கு ஸாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூர் போகலை.! நேரா, திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோவிலுக்கு போனார் "அஸ்மேத" [பெரிய பிராகாரம்] ப்ரதக்ஷிணம் மூணு தடவை பண்ணினார். நேரா மஹாலிங்க ஸ்வாமிக்கு முன்னால போய் நின்னார். கைகூப்பி நின்னுண்டு என்ன ப்ரார்த்திச்சார் தெரியுமா?........"

பெரியவாளால் மேலே பேசமுடியவில்லை.

தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்டு சொன்னார்

"கண்ணுலேர்ந்து தாரை தாரையா நீர் வழிய, "அப்பா ஜோதி மஹாலிங்கம்! நா ஒன்னோட பரம பக்தன். பால்யத்துலேர்ந்து எத்தனையோ தடவை ஒன் ஸன்னதில மஹன்யாஸ ஸ்ரீருத்ரம் ஜபிச்சிருக்கேன். நீ கேட்டுருக்கே. இப்போ நேக்கு எம்பத்தோறு வயஸாறது. மனஸ்ல பலமிருக்கே தவிர, வாக்குல அந்த பலம் போயிடுத்துப்பா!.....

.......இன்னிக்கு மத்யான்னம் ஸாப்டறச்சே நடந்தது. ஒனக்கு தெரியாம இருக்காது. அந்த சக்கரைப் பொங்கல் ரொம்ப ரொம்ப நன்னா இருந்ததேன்னு, "இன்னும் கொஞ்சம் போடுங்கோ" ன்னு வெக்கத்தை விட்டு அந்த மிராஸுதார்கிட்ட பல தடவை கேட்டேன். அவர் காதுல விழுந்தும், விழாத மாதிரி நகந்து போய்ட்டார்.....!

.......நேக்கு சக்கரைப் பொங்கல்-ன்னா உஸுருன்னு ஒனக்குத்தான் தெரியுமே! சபலப்பட்டு கேட்டும் அவர் போடலியேன்னு ரொம்ப அப்போ தாபப்பட்டேன். ஆனா, ஸாப்டுட்டு கையலம்பிண்டு வாஸத் திண்ணைக்கு வந்து ஒக்காந்தப்புறந்தான், "இப்பிடியொரு ஜிஹ்வா [நாக்கு] சபலம், இந்த வயஸ்ல நமக்கு இருக்கலாமான்னு தோணித்து..........

.........அப்பா மஹாலிங்கம்! இப்போ அதுக்குத்தான் ஒம்முன்னாடி நிக்கறேன். ஒன்னை மத்யஸ்தமா வெச்சுண்டு இந்த க்ஷணத்துலேர்ந்து ஒரு ப்ரதிக்ஞை பண்ணிக்கறேன்......

......எல்லாரும் காஶிக்கு போனா, பிடிச்ச பதார்த்தத்தை விடுவா.........! காஶிலயும் நீதான் இருக்கே! இங்கயும் நீதான்! அதுனால ஒனக்கு முன்னாலே, "இனிமே என் ஶரீரத்தை விட்டு ஜீவன் பிரியற வரைக்கும்.... சக்கரப் பொங்கலையோ, இல்லாட்டா, வேற எந்த தித்திப்பு வஸ்துவையோ தொடவே மாட்டேன். இது ஸத்யம்டா..ப்பா மஹாலிங்கம்" ன்னு வைராக்ய ப்ரமாணம் பண்ணிண்டு "அப்பா ஜோதி மஹாலிங்கம்! ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்" ன்னு சொல்லி பன்னண்டு ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். கண்ணுலேர்ந்து பொலபொலன்னு கண்ணீர்! ஊருக்கு பொறப்பட்டுட்டார்.......!....

....... இப்போ நீ சொல்லு! நீ பண்ணின கார்யம் தர்மமா? மஹாலிங்க ஸ்வாமி ஒப்புத்துப்பாரா?...”

பெரியவா முடிக்கும்போது மத்யான்னம் மூணு மணி! அன்னிக்கு பிக்ஷையே பண்ணலை! சுற்றி நின்ற அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர்!

நேற்று மஹாலிங்க ஸ்வாமி முன்னால் நடந்தது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது! என்ற கேள்வியை விட ஸத்யப்ரமாணமாக "திருவிடைமரூதூரில் அருள் பாலிக்கும் மஹாலிங்கம் நானே !" என்று பெரியவா ப்ரத்யக்ஷமாக காட்டியதை கண்டு அத்தனை பேரும் ப்ரமித்தனர்.

இது ஒரு ஸாதாரண விஷயமா என்ன?

மிராஸுதார் கன்னத்தில் அறைந்து கொண்டு அலறினார்.

"பெரியவா, நா மஹா பாபம் பண்ணிட்டேன். அஹம்பாவத்ல அப்டி பண்ணிட்டேன். இனி என் ஜன்மாவுல அப்படி நடக்கவே மாட்டேன். ப்ரஸாதத்தை ஸ்வீகரிச்சுக்கோங்கோ! "

பெரியவா வாயை திறக்கவில்லை.

"இருக்கட்டும். இருக்கட்டும். எனக்கு அந்த மஹாலிங்க ஸ்வாமியே ப்ரஸாதம் அனுக்ரஹம் பண்ணுவார்." என்று அவர் முடிப்பதற்குள், ஒரு ப்ராஹ்மணர் கட்டு குடுமி, பஞ்சகச்சம், கழுத்தில் ருத்ராக்ஷ மாலையோடு, கையில் ப்ரஸாதத் தட்டோடு வந்து பெரியவாளை அணுகி,

"என் பேர் மஹாலிங்கம்! திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமிக்கு நேத்திக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஒரு மிராஸுதார் நடத்தினார்..... இங்க என் அக்காவை பாக்க வந்தேன். பெரியவாளுக்கு ப்ரஸாதம் ஸமர்ப்பிச்சுடலான்னு வந்தேன்" என்று நமஸ்காரம் பண்ணப்போனவரை பெரியவா தடுத்து....

" நீங்கள்ளாம் ஶிவ தீக்ஷை வாங்கிண்டவா. நமஸ்காரம் பண்ணப்படாது" என்று சொல்லி அவருக்கு மரியாதை பண்ணச் சொன்னார்.

அவர் போனதும் மிராஸுதார் "திரும்ப திரும்ப ப்ரார்த்திக்கிறேன். பெரியவா! நா பண்ணினது ரொம்ப பாப கார்யம்தான். இதுக்கு நீங்கதான் ஒரு ப்ராயஶ்சித்தம் சொல்லணும்"

மன்றாடினார்.

விருட்டென்று எழுந்து விட்டார் பெரியவா

"இதுக்கு ப்ராயஶ்சித்தம்..... நா சொல்ல முடியாது. தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகள்தான் சொல்லணும்"

"இந்தப் பாவி பண்ணின கார்யத்துக்கு கனபாடிகள் ப்ராயஶ்சித்தம் சொல்லுவாரா பெரியவா?"

பெரியவா சற்று உரக்கச் சொன்னார்

"ஒனக்கு ப்ராப்தம் இருந்தா நிச்சயம் சொல்லுவார்"

விடுவிடுவென்று உள்ளே போய் விட்டார்.

மிராஸுதார் உடனே தேப்பெருமாநல்லூர் நோக்கி நடையைக் கட்டினார்.

"பாப விமோசனம்" பெற வேண்டும், ப்ராயஶ்சித்தம் பண்ணிட வேண்டும்” என்ற வைராக்யம் இருந்தது.

தேப்பெருமாநல்லூர் அக்ரஹாரத்தில் நுழைந்து, எதிர்ப்பட்ட ஒருவரிடம் வெங்கடேஶ கனபாடிகள் க்ருஹம் எங்கே என்று விஜாரித்தார். அவர் ஒரு வீட்டை சுட்டிக் காட்டினார்....

"துக்கம் விஜாரிக்க வந்திருக்கேளா? அதான் கனபாடிகள் அஹம். இன்னிக்கு விடியக்காலமேதான் கனபாடிகள் "அனாயாஸேன மரணம்" ன்னு திடீர்னு காலமாயிட்டார்......! போய் பாத்துட்டு வாங்கோ!"

இடிவிழுந்தது போல் இருந்தது!

"ஒனக்கு ப்ராப்தம் இருந்தா நிச்சயம் சொல்லுவார்"ன்னு பெரியவா சொன்னது இதுதானா?

ப்ராப்தம் இல்லேன்னு பெரியவாளுக்கு தெரிஞ்சிருக்கு!

ஓடிப்போய் வெங்கடேஶ கனபாடிகளுடைய பூத ஶரீரத்துக்கு (ருத்ரத்தால் நிறைந்து இருந்த ஶரீரம்) நமஸ்காரம் பண்ணி, மானஸீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அதன்பிறகு, ஓரிரு வருஷத்துக்குள் ஸொத்தெல்லாம் அழிந்து போய், வடக்கே பல ஶிவாலயங்களில் மடப்பள்ளியில் கைங்கர்யம் பண்ணிவிட்டு, கடைசியில் காஶி க்ஷேத்ரத்தில் காலகதி அடைந்தார்!

தன்னை நிந்தனை பண்ணினால்கூட பகவான் மன்னிப்பான். ஆனால் தன்னையே ஸதா ஆஶ்ரயித்து இருக்கும் ஸாதுக்களை யாராவது அவமதித்தால், பகவானால் பொறுத்துக் கொள்ளவே முடியாது! என்பதற்கு இது ஒரு நல்ல முன் உதாரணம்.

ஆனால், பகவான் கருணாமூர்த்தி! பாபம் பண்ணியிருந்தாலும், பண்ணின பாபத்துக்கு மனஸ் வருந்தி, தண்டனை அனுபவித்தாலும், கடைசியில் "காஶியில் மரித்தால் முக்தி" என்பதற்கேற்ப, அந்த மிராஸுதாரை காஶியில் இறக்க வைத்து மோக்ஷத்தை கொடுத்தது அவனுக்கே உரிய பெருங்கருணைl!

பந்தியில் பேதமே பார்க்கக்கூடாது, யாருடைய வயிற்றிலும் அடிக்கக்கூடாது, வயஸானவர்கள் யாராகயிருந்தாலும் நம் அஹங்காரத்தை அவர்களிடம் காட்டக்கூடாது. உடம்பில் ரத்தம் நன்றாக இருக்கும்வரை, ஆட்டம் போடுவோம். பகவான் ரத்தத்தை கொஞ்சம் சுண்டிவிட்டாலோ! போச்சு!

நாம் கற்று, கடைப்பிடிக்க நிறைய இருக்கிறது...

ஶ்ரீ ஆசார்யாள் பாததூளி 🙏🏻
போதாயன அமாவாஸ்யை தர்பபணம்

22.04.2020 புதன்கிழமை

ஆசமனம். அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

கேசவா + தாமோதரா

வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்.

ஶூக்லாம் + ஸாந்தயே, ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்

மமோபாத்த + ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே

*ஶார்வரி* நாம ஸம்வத்ஸரே *உத்தராயணே வஸந்த்* ருதௌ *மேஷ* மாஸே *க்ருஷ்ண* பக்ஷே *அமாவாஸ்யாயாம்* புண்யதிதௌ *ஸௌம்ய* வாஸர யுக்தாயாம் *ரேவதி* நக்ஷத்ர யுக்தாயாம், *விஷ்கம்ப* யோக, *சகுனி* கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் *அமாவாஸ்யாயாம்* புண்யதிதௌ

ப்ராசீனாவீதி

தந்தையார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

........கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம்,

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா, மஹீணாம்

தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

…............கோத்ராணாம் வஸூருத்ராதித்ய, ஸ்வரூபாணாம், அஸ்மது, ஸமத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஶபித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்

அமாவாஸ்ய புண்யகாலே தர்ச ச்ராத்தம்  தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும். பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால்
துடைத்துக்கொள்ளவும். பூணலைஇடம் போட்டுக்கொள்ளவும். கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்

ஆவாஹந மந்த்ரம்

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச// அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி/

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி கட்டை தர்ப்பங்களை கூர்ச்சத்தின்மேல் வைக்கவும்.

ஆஸன மந்த்ரம்

ஸக்ருதாச்சின்னம் பர்ஹி: ஊர்ணாமிருது ஸ்யோநம் பித்ருப்யஸ்தவா, பராம்யஹம், அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதா மஹாஸ்ச்ச அனுகைஸ்ஸஹ//

வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி எள்ளை கூர்ச்சத்தில் மறித்துப் போடவும்.

ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் //

தர்ப்பண மந்த்ரம்





மந்த்ரம்

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி பூணுல் வலம்

ப்ரதக்ஷிண மந்த்ரம்

தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நமஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம: யாநிகாச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே

ப்ராசீனாவீதி பூணுல் இடம்

யதாஸ்தான மந்த்ரம்

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச// அஸ்மாத், கூர்ச்சாத், வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்

மந்த்ரம்

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

மந்த்ரம்

ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்யபலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித திலதர்ப்பண மந்த்ர - ஸாத்குன்யம் காமயமான: யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததேநமம

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்

காயேநவாசா மனஸேந்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ருகிருதேஸ்வபாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து

பவித்ரத்தை பிரித்து போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்

ஶுபம்