ஜயேந்திர சரஸ்வதி அவர்கள் அருளிய "தெய்வ வாக்கு"
புத்தகத்தில் இருந்து பழமையான ஹிந்துசமயம் என்ற போஸ்டின் நேற்றைய
தொடர்ச்சி...
இப்பொழுது மதக் கொள்கைக்களுக்கும் நடைமுறைகளுக்கும் இடையே நிறைய
வித்யாசம் இருக்கிறது... ஆனால் பெளத்தர்கன் மூலமாக பல அரசுகள் உருவாயின. அரசாட்சிகள் நடை பெற்றன... அரசர்கள் மூலமாக அநேக நாடுகள் பெளத்த தேசங்களாக மாறத் தொடங்கின. முக்கியமாக பெளத்த கொள்கையைக் காட்டிலும் அஹிம்சா கொள்கையையே அடிப்படையாகக் கொண்டு அரசர்கள் மதம் மாறத் தொடங்கினர். அந்தக் காலத்தில் தான் வழிபாட்டுக்கு ஸ்தலங்களுக்கு பெளத்த கோயில்கள் தோன்ற ஆரம்பித்தன. சிவன், விஷ்ணு போன்ற கோயில்கள் அவ்வளவு பிரபலமாக இல்லை. அதாவது புண்ய க்ஷேத்திரங்களில் மாத்திரம் சிவ, விஷ்ணு ஆலயங்கள் அழியாமல் இருந்து வந்தன. ஆனால் சிறு தேவதா வழிபாட்டு மூர்த்தங்கள் எல்லா கிராமங்களிலும் நிறைய இருந்தன...
(கர்மமீமாம்ஸம்... தர்க்கசாஸ்திரம்... சாங்கிய சாஸ்திரம்) இந்த மூன்று தத்வங்களாலும் வாதம் செய்யப்பட்டு பெளத்த கொள்கைகள் தோற்தடிக்கப்பட்டன. இந்தக் குழப்ப நிவையில் தான் புராணங்களில் பரமசிவனாகப் போற்றப்படும் ஆதிசங்கரர் நம் நாட்டின் தென் கோடியில் கேரளத்தில் காலடி என்னும் க்ஷேத்திரத்தில் அவதரித்தார். அவர் முப்பத்திரண்டு ஆண்டுகளே இருந்தார். பால்யத்தில் எட்டு வயதிற்குள்ளேயே எல்லாசாஸ்திரங்களையும் எல்லா சக்திகளையுய் பெற்று அன்னையின் அநுமதியுடன் சன்யாசம் மேற்கொண்டு காசிக்குச் சென்றார்... அங்கு எல்லா பண்டிதர்களையும் சந்தித்துப் பேசி வாதத்தில் வென்று பழமையாய் வந்து கொண்டிருக்கிற வைதீக ஹிந்து தர்மத்தை புளர்த்தாரணம் செய்யத் தொடங்கினார். ஜய ஜய சங்கர ஜயேந்திர சங்கர உங்கள் பொற் பாதங்களில்
அனந்த கோடி நமஸ்காரங்கள்... காஞ்சி மடத்தில் மஹா பெரியவாளின்
ப்ருந்தாவனத்தில் தாங்கள் சமர்ப்பிக்கும் உச்சிக்கால தீபாராதனையை தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்களில் அடியேனும் ஒருத்தி. உங்கள் அறையில் உங்களை வணங்க உள்ளே நுழையும் போதே முகமெல்லாம் புன்னகை தவழ வாங்கொ வாங்கோ என்று வரவேற்று குசலப்பிரச்னம் விஜாரித்து குங்குமம் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களால் குங்குமத்தை தந்து ஆசீர்வாதம் பண்ணும் அழகை என்ன சொல்வது?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக