புதன், 23 செப்டம்பர், 2020

ராமானுஜர் பகுதி மூன்று

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு மூன்று




இராமானுஜர் என்பவர் கடலைப் போன்றவர். அந்த கடலின் முழு சரித்திரத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. அப்படி முயன்றால் மிக்க மகிழ்ச்சி. கடலுக்குள் போனால் நீந்தி கரை சேர முடியாது. ஆனால், அந்த கடலையும், கடல் அலைகளையும் நாம் ரசிக்கலாம் அல்லவா?! அந்த கருணைக் கடலின் அவதார நோக்கத்தையும், அவர் செய்த கைங்கர்யங்கள் பற்றியும், கடல் அலைகளைப் போல் அடியேனுக்குத் தெரிந்தவரை பதிவிடுகிறேன். நீங்களும் அந்த பெருங் கருணைக் கடலை ரசித்திடுங்கள்.

இராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம். பஞ்ச ஆயுதங்களின் அம்சமாகவே பிறந்தவர்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திலே குருபரம்பரை என்று சொல்வார்கள். முதலில் குருபரம்பரை பற்றி பார்ப்போம்.

🌻🌹 குருபரம்பரை:

நாமெல்லாம் பூமியில் பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புண்ணியங்களையும், பாவங்களையும் மாற்றி மாற்றி அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். புண்ணியம் அதிகமானால் அதைப் போக்க மறுபிறவி எடுக்கிறோம். பாவங்கள் அதிகமானாலும் மறுபிறவி எடுக்கிறோம். இப்படியே மாற்றி மாற்றி புனரபி ஜனனம், புனரபி மரணம் என மாற்றி மாற்றி பிறவி எடுத்துக்கொண்டே போகிறோம். இதையடுத்து அடுத்த பிறவியே வேண்டாம் என்று சொல்லிக் கொள்கிறோம். நாம் செய்த கர்மாக்களை இப்பிறவிலேயே அனுபவித்து விட்டால் அடுத்து நமக்கு வைகுண்டம் தான்.

அப்பேர்ப்பட்ட கர்மாக்களை அழிக்க, நித்ய அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி நித்ய அனுஷ்டாங்களைக் கடைப்பிடித்தால், பாவங்கள் அனைத்தும் தொலைந்துவிடும்.

வேதங்கள் தான் சட்ட திட்டங்கள். ரிக், யஜுர், சாமம், அதர்வண வேதங்களால் சாஸ்திரங்களை வகுத்துக் கொடுத்தார் இறைவன். நமக்கு சரீரம், சாஸ்திரங்கள், ஞானங்கள் கொடுத்தார். ஆழமான கிணற்றில் நாம் விழுந்துவிட்டால், நம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்று எதிர்பார்க்கிறோம் அல்லவா? அப்படி சம்சார சாகரத்தில் விழுந்து, தத்தளித்துக் கொண்டிருக்கும் நம்மைக் காப்பாற்ற இறைவனே வைகுண்டத்திலிருந்து முதலில் கீழிறங்கி வருகிறார். ஆனால், அப்படி அவர் கீழிறங்கி வந்தாலும் அவரால் நம்மைக் கரை சேர்க்க முடிவதில்லை.

ஏனெனில், கண்ணனாக இராமனாக தசாவதார பிறவிகள் எடுத்தார். இரண்டாவதாக நம்மை பகவத் பக்தியிலே ஆழ்த்த பன்னிரண்டு ஆழ்வார்கள் அவதாரம் செய்தார்கள். பெருமானிடத்திலே பக்தியைத் தூண்டி, பெருமானையே அடைய வேண்டிய வழியை, நாலாயிரம் பாசுரங்கள் மூலம் நமக்கு உரைத்தார்கள் ஆழ்வார்கள்.

ஆழ்வார்கள் பிறவி முடிந்தபின், மூன்றாவதாக நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தையே புத்தகமாகக் கொண்டு அதை உபதேசிக்க நித்யசூரிகளை ஆச்சார்யாரார்களாக அனுபவித்து வைத்தார் ஸ்ரீமந்நாராயணன்.

முதல் ஆச்சாரியனாக நாதமுனிகள் திருஅவதாரம் பண்ணினார். அவருக்கு குமாரர் ஈஸ்வர முனிகள் திருஅவதாரம் பண்ணினார். அவருடைய திருக்குமாரராக யமுனாச்சாரியார் திருஅவதாரம் பண்ணினார்.

நாதமுனிகள், யமுனாச்சாரியார் என்ற இந்த திருநாமத்தை வைத்துதான் குருபரம்பரை ஸ்லோகம் உண்டாக்கப்பட்டது. இதை பாடியவர் கூரத்தாழ்வார். குருபரம்பரையை வணங்குகிறேன் என்பது தான் அந்த ஸ்லோகம். ஆச்சார்யார்களையே முத்தாக, இரத்தினமாக செதுக்கப்பட்ட ஹாரம் தான் "குருபரம்பரா ஹாரம்" என்று சொல்வார்கள்.

குருபரம்பரையில் முதல் ஆச்சாரியன் ஸ்ரீமந்நாராயணனான பெரிய பெருமாள். நர நாராயணரில் நரனுக்கு தன்னுடைய திருமந்திரத்தை உபதேசித்தார் அல்லவா? அர்ஜுனனுக்கு ஆச்சார்யனாக இருந்து கீதையைக் கொடுத்த கீதாச்சாரியன் அல்லவா அவன்? அதனால் அவனே முதல் ஆச்சார்யன்.

இரண்டாவது மகாலக்ஷ்மியான பெரிய பிராட்டி - அந்த லக்ஷ்மிக்கு பெருமாள் ஸ்வயம் மகாமந்திரத்தை உபதேசித்தார். அவரிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டதால் மகாலக்ஷ்மி இரண்டாவது ஆச்சாரியன்.

மூன்றாவதாக லக்ஷ்மியிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டது விஷ்வக்ஷேனர். அதனால் விக்வக்ஷேனர் மூன்றாவது ஆச்சாரியன். விஷ்வக்ஷேனரிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டது நம்மாழ்வார். அதனால் அவர் நான்காவது ஆச்சாரியன். நம்மாழ்வாரிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டவர் நாதமுனிகள். அதனால் அவர் ஐந்தாவது ஆச்சாரியன்.

நாதமுனிகளின் சிஷ்யர்கள் - உய்யக்கொண்டார் மற்றும் மணக்கால் நம்பிகள்; மணக்கால் நம்பிகளின் சிஷ்யர் ஆளவந்தார்; அவரது சிஷ்யர் பெரிய நம்பிகள். ஆறாவது ஆச்சாரியராக நாதமுனிகளின் சிஷ்யர் உய்யக்கொண்டார். ஏழாவதாக பெரிய நம்பிகள்.

முதல் தலைவராக/ஆச்சாரியராக நாதமுனிகள். அதன் பின் உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள். ஆளவந்தாரின் சீடர்கள் ஐந்து பேர் - 1. பெரிய நம்பிகள், 2. பெரிய திருமலை நம்பிகள், 3. திருக்கோட்டியூர் நம்பிகள், 4. திருக்கச்சி நம்பிகள், 5. திருமலையாண்டான்.

எட்டாவதாக இந்த ஹாரத்தில் இருப்பவர் தான் உலகமே போற்றும் ஸ்ரீ இராமானுஜர்.

இன்னும் அனுபவிப்போம்...

எங்கள் கதியே !
இராமானுச முனியே !

நாட்டியநீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம்களிப்புற்றது, தென்குருகைவள்ளல்
வாட்டமிலா வண்டமிழ்மறை வாழ்ந்தது, மண்ணுலகில்
ஈட்டியசீலத்து, இராமானுசன்றன் இயல்வுகண்டே

விளக்கவுரை :-

அறியாமையின் இடமாக உள்ள இந்தப் பூமியில்,
தான் பெற்றிருந்த பரமபதத்தை விடுத்து, இந்த உலகினரின் சிறுமையைக் பாராமல் எம்பெருமானார் அவதரித்தார். இவரது ஸ்வபாவம் மற்றும் உயர்ந்த குணங்களைக் கண்டு, சூரியனைக் கண்ட இருள் விலகுவது போன்று,
வைதிகம் அற்ற மதங்கள் அனைத்தும் நிர்மூலமாகச் சென்றன. இவரது அவதாரம் ஏற்பட்ட பின்னர் ஸர்வேச்வரனாகிய நாராயணனப் போற்றும் வேதங்கள் அனைத்தும், “நமக்கு இனி குறையில்லை”, என்று கர்வம் அடைந்தன.

மிகவும் உயர்ந்த இடமும், நம்மாழ்வாரின் அவதார இடமும் ஆகிய ஆழ்வார்திருநகரியில் உதித்த நம்மாழ்வார் அருளிச் செய்ததும், அனைத்து புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதும், தமிழ் வேதமும் ஆகிய திருவாய்மொழி எந்தக் குறையும் இன்றி வளர்ந்தது.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்

திருவரங்கத்தமுதனார்  திருவடிகளே சரணம்

உய்ய ஒரே வழி! உடையவர் திருவடி!!

ராமானுஜர் பகுதி இரண்டு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு இரண்டு....

நம்மாழ்வார் 32 வருடங்கள் வாழ்ந்தார். அவர் குழந்தையாகப் பிறந்த 16வது நாளில் குழந்தையை ஆழ்வார் திருநகரியிலுள்ள பொலிந்து நின்ற பிரானின் திருக்கோவிலில் ஆலமரத்தின் அருகில் பெற்றோர் இருந்தனர். குழந்தை தவழ்ந்து மெல்ல மரம் ஏறி புளிய மரத்தில் தவம் செய்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அப்போதிலிருந்து 16 வயது வரை தவத்தில் இருந்தார். அதன் பின் 16 ஆண்டுகள் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களில் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி பாசுரங்களைப் பாடினார்.

அவரது சீடர் தான் மதுரகவி ஆழ்வார். அவர் தன் குருவையே இறைவனாகக் கொண்டு பாசுரங்கள் பாடி அனுபவித்தார். அவர் கண்ணிநுண் சிறுதாம்பு பாசுரங்கள் பாடினார்.

குருவான நம்மாழ்வாருக்கு சேவை செய்து வரும் பொழுது, ஒரு நாள் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாரிடம் "நான் வைகுண்டத்திற்குப் புறப்படும் வேலை வந்துவிட்டது" என்றார். இதைக்கேட்ட மதுரகவி ஆழ்வாருக்கு பயங்கர மனவருத்தம். "சுவாமி தாங்கள் இங்கே எங்களுக்காக இருக்கக்கூடாதா?" என்றார். நம்மாழ்வாரோ மதுரகவி ஆழ்வாரிடம், "தாமிரபரணி ஆற்றில் நீர் எடுத்து வாரும்" என்றார்.

மதுரகவி ஆழ்வாரும் நீர் எடுத்து வந்தார். அந்த நீரை காய்ச்சுமாறு நம்மாழ்வார் கூற, மதுரகவி ஆழ்வாரும் காய்ச்சினார். நீரிலிருந்து ஒரு விக்கிரகம் வெளிவந்தது. அதைக்கண்ட மதுரகவி ஆழ்வார், "நான் உங்களுடைய சிலையைக் கேட்டால் நீங்கள் வேறு யாருடைய சிலையைக் கொடுக்கிறீர்கள்" என்றார். நம்மாழ்வாரோ அந்த சிலையைப் பெற்று மறைத்து வைத்துக் கொண்டு, இந்த சிலை உனக்கல்ல என்று கூறி, மறுபடியும் தாமிரபரணி நீர் எடுத்து காய்ச்சச் சொன்னார். மதுரகவி ஆழ்வார் தாமிரபரணி நீர் எடுத்து காய்ச்சினார், அப்போது நம்மாழ்வார் விக்கிரகம் வெளிவந்தது. மதுரகவி ஆழ்வாருக்குச் சந்தோசம். நம்மாழ்வார் வைகுண்டம் சென்றபின் இந்த சிலையையே தொடர்ந்து பூஜித்தார். இந்த சிலை இன்னும் ஆழ்வார் திருநகரியில் புளிய மரத்தின் அருகில் நம்மாழ்வார் சன்னிதியில் உள்ளது.

ஒரு சிலையை மறைத்தார் அல்லவா நம்மாழ்வார். அந்த சிலை தான் இராமானுஜர். நாதமுனிகள் வந்து பாசுரங்கள் கேட்கும் பொழுது, அவர் பாடிய பாசுரங்களையும் கொடுத்து, மற்ற ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களையும் கொடுத்து, "பொலிக! பொலிக!" என்று கூறி இந்த விக்கிரகத்தையும் நாதமுனிகளிடம் கொடுத்தார் நம்மாழ்வார்.

நாதமுனிகள் பூஜித்து, அவர்களுக்குப்பின் பின் பல சீடர்கள் தொடர்ந்து அந்த விக்கிரகத்தை பூஜித்து வந்தார்கள்.

தான் அவதரிக்கும் முன்பே பூஜிக்கப்பட்ட ஒரே குரு இராமானுஜர் தான். இதுவரையில் யாருக்கும் இப்படி பாக்கியம் கிடைக்கவேயில்லை. அந்த சிறப்பு இராமானுஜர் அவதரிக்கும் முன்னமே கிட்டியதால் தான் இராமானுஜரை தெய்வாம்சம் பொருந்தியவர், அந்த இறைவனே இராமானுஜர் என்றெல்லாம் சொல்லலாம். நாளை குரு பரம்பரை பற்றி அறியலாம்.
"
ஶ்ரீமதே சடகோபாய நம
ஸ்ரீமதே ராமாநுஜாய நம

"நம்மாழ்வாரும்.... மதுரகவியாழ்வாரும்..."

நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியை .... பட்டோலை கொண்டு பாவின் இன்னிசை பாடித் திரிபவர்.... மதுரகவி ஆழ்வார்...
நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள கருத்துக்களை.... தாம் பாடிய "கண்ணிநுண் சிறுத்தாம்பு" பிரபந்தத்தில் அருளிச்செய்தவைகளைக் காண்போம்.....

நம்மாழ்வார் பாடிய ...." நலங்கொள் நான் மறைவாணர்கள்" என்பதை....

"நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்"

என்று பாடியுள்ளார்....

2. நம்மாழ்வார் பாடிய....." அப்பொழுதைக்கப் பொழுது என் ஆராவமுதமே" என்றதை....

"அண்ணிக்கும் அமுதூறும் " என்றும்...

3. "அடிக்கீழ் புகுந்தேனே" என்பதை

"மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே.... "என்றும்....

4. "பாடி இளைப்பிலும் " என்பதை

"பாடித் திரிவனே" என்றும்....

5. " உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் " என்பதை

"நம்பிக்கு ஆள் உரியன்" என்றும்...

6. "இங்கே திரிந்தேற்கு " என்பதை...

"திரி தந்தாகிலும் " என்றும்....

7. "தாயாய்த் தந்தையாய் " என்பதை...

"அன்னையாய் அத்தனாய்.. " என்றும்.....

8. "ஆள்கின்றான் ஆழியான் " என்பதை....

"என்னை ஆண்டிடும் தன்மையான் " என்றும்....

9. "எமர் கீழ்மேல் எழுபிறப்பும்" என்பதை....

"இன்று தொட்டு எழுமையும்.... " என்றும்....

10." பேரேனென்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்..." என்பதை....

"நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினார்..." என்றும்...

11." வழுவிலா அடிமை செய்ய வேண்டும்" என்பதை....

"ஆட்புக்க காதல் அடிமைப் பயனன்றே " என்றும்....

12."பொருளல்லாத என்னை அடிமை கொண்டான் " என்பதை....

" பயன் அன்றாகிலும், பாங்கு அல்லாராகிலும்.... செயல் நன்றாகத் , திருத்திப் பணிகொள்வான்" என்றும்...

13. "மலர் பாவைக்கன் என் அன்பேயோ..." என்பதை....

" தென்குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய்.. " என்றும்....

14." வைகுந்தமாகும் தம்முரெல்லாம்..." என்பதை....

"நம்புவார்பதி வைகுந்தம் காண்மினே..." என்றும் பாடியுள்ளார்....

இவ்வாறு நம்மாழ்வார் பகவத் விஷயத்தை அனுபவித்த முறையிலேயே... ஆழ்வாரின் சீடர் மதுரகவியாழ்வாரும் அடியொற்றி.... அனுபவித்து இருப்பதை அடியோங்களும் படித்து இன்புறுவோம்.....

"நம்மாழ்வார் திருவடிகளே சரணம்"

"மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்"

"ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"

காரிமான் உடையநங்கை தம்பதிகளுக்கு புத்திரப்பேறுக்காக ஸ்ரீ அழகிய நம்பியிடம் பிரார்த்திக்கும் சமயம் தாமே ஆழ்வார்திருநகரியில் அவதரிப்போம் என்று சாதித்து அங்ஙனமே அவதரித்தார்.  அவரே திருக்குறுங்குடியில் நம்மாழ்வார் திருக்கோலத்தில் சேவைசாதிக்கும் அற்புதக்காட்சி பல்லக்கு சேர்வையில் சேவிக்கலாம்.
இன்னும்
தொடர்வோம்...

*ஓங்கி உலகளந்த உத்தமன்!*

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்கிறாள் என் தாயார். திருவிக்கிரம அவதாரத்தின் போது தனது திருக்கால்களை எவ்வளவு வேகமாக ஓங்கியிருப்பார் திருவிக்கிரமன் என்று உணர்ந்து ஓங்கி சப்தத்தால் வியக்கவைக்கிறாள்! பின்பு அடுத்தடுத்த நாட்களில் பாஸுரங்களை பாடிக்கொண்டிருந்தாலும், இந்த வியப்பு ஆண்டாளின் திருவுள்ளம் விட்டு அகலவில்லை. அதனால்தான் மீண்டும் 17 வது பாஸுரத்தில், ஓங்கி உலகளக்கும்போது, இந்த அண்டத்தின் மேல் உள்ள ஆவரண ஜலத்தை திருவிக்கிரமன் தன் திருப்பாதத்தால் அறுத்த வைபவத்தை வியந்து *"அம்பரமூடறுத்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே"* என்று மீண்டும் வியக்கிறாள்!

24 ஆம் பாஸுரத்திலும் "அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!!!" என்று வியப்பு நீங்காத ஆண்டாள் உலகளந்த திருவடிகளின் மேன்மையைப் போற்றிப் பாடுகிறார்! இந்தப் "போற்றி"
களிலும் உலகளந்த திருவடிகளுக்குத் தான் முதல் வந்தனம்!!

நாச்சியார் திருமொழியிலும் 2 ஆம் பாஸுரம், 5 ஆம் பாஸுரம், 8 மற்றும் 9 ஆம் பாஸுரங்களில் உலகளந்தானை பாடி வியக்கிறாள்!

நம்மாழ்வார் திருவிக்கிரம ப்ரபாவத்தை 6 ஆம் பத்து 6 ஆம் திருவாய்மொழியில், திருவேங்கடவனிடம் சரணாகதி அனுஷ்டிக்கும் போது, *"எந்நாளே நாம் மண் ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று"* என்கிறார்! திருவிக்கிரம விபவத்தின் போது, எம்பெருமான்தான் ஓங்கி உலகளந்து விட்டாரே! ஆக, இந்த லோகத்திலாகட்டும், அந்த லோகத்திலாகட்டும்.. எவரும் இரண்டு திருப்பாதங்களையும் ஒன்றாக தரிசிக்கவில்லையன்றோ? அதை எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பது? என்கிறார்! நம்மாழ்வாரின் திருவுள்ளம், திருவேங்கடவனை திருவிக்கிரமனாக பற்றியதால், திருவேங்கடவனின் திருக்கமல பாதங்களை தரிசித்தால் போதும்.. திருவிக்கிரம இணைத்தாமரைகளை தரிசித்ததிற்கு ஈடாகுமாம் போலே....குறையும் தீருமாப்போலே!
🙇‍♀🙇‍♀🙏🙏
உய்ய ஒரே வழி! உடையவரின் திருவடி!!
ஓம் ராமானுஜாய :


ராமானுஜர் பகுதி ஒன்று


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 1

"பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னுமாற னடிபணிந்துய்ந்தவன் பல்கலையோர்
தாம்மன்னவந்த விராமானுசன் சரணாரவிந்தம்
நாமன்னிவாழ நெஞ்சே!
சொல்லுவோம் அவன் நாமங்களே!"

- இராமானுஜ நூற்றந்தாதி 1

நாம் அன்னி வாழ நெஞ்சே சொல்லு என் உடையவரின் நாமங்களை. ஏனெனில், ஆழ்வார்கள் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வைணவம் மங்கிய காலம். நாதமுனிகள் நம்மாழ்வார் பாசுரங்களை திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோவிலில் ஆராவமுதன் முன் பாடினார். நம்மாழ்வார் பாசுரங்களை பாடி முடிக்கும் பொழுது, ஆராஅமுதன் கூட்டத்தோடு கூட்டமாக பக்தன் போல் வந்து, இவ்வளவு பாசுரங்களே இப்படி அழகாக இருக்கிறது என்றால் மீதமுள்ள மற்ற பாசுரங்கள் கேட்கும் பொழுது எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று கூறிக்கொண்டிருந்தார்.

நாதமுனிகள் பிரமித்து போய்விட்டார். ஏனெனில் அவருக்குத் தெரிந்தது நம்மாழ்வார் பாசுரங்கள் தான். அதுவும் 100 பாடல்கள் வரைதான். இவ்வாறு கூட்டத்தில் ஒருவர் மற்ற பாசுரங்கள் பற்றி கூறியதும், உடனே விசாரிக்கத் தொடங்கிவிட்டார் நாதமுனிகள். மற்ற பாசுரங்கள் பற்றி எங்கே சென்று அறிந்து கொள்வது என்று கேட்டுக் கொண்டிருக்க, கூட்டத்தில் ஒருவரோ ஆழ்வார் திருநகரி சென்றால் அனைத்து பாசுரங்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார்.

நாதமுனிகளோ ஆராவமுதனை வணங்கி உடனே ஆழ்வார் திருநகரி புறப்பட்டு, நம்மாழ்வாரை வணங்கினார். நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வார் காலத்துக்குப் பின், வரிசையாக பல சீடர்கள் தொடர்ந்து ஆழ்வார் திருநகரியில் வழிபட்டனர். அவர்களிடம் நாதமுனிகள் நம்மாழ்வாரின் மற்ற பாசுரங்கள் பற்றி கேட்டார். அவர்களோ நம்மாழ்வார் விக்கிரகம் முன் பாசுரங்கள் பாடினால் நம்மாழ்வாரே நேரில் தோன்றி அளிக்கலாம்.. எங்களிடம் அவரது சில பாசுரங்கள் தவிர இல்லை என்று சொன்னார்கள்.

பிறகு நம்மாழ்வார் விக்கிரகம் முன் அமர்ந்து நம்மாழ்வாரின் பாசுரங்களை 12000 முறை பாடினார். அவர் பாடி முடிக்கையில், நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் காட்சி கொடுத்தார். அவருக்கு 4000 திவ்விய பிரபந்தங்களையும் அருளினார். இதைக்கண்ட நாதமுனிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நம்மாழ்வார் தன் மடியிலிருந்த ஒரு அழகான சிறிய சிலையைக் கொடுத்து நாதமுனிகளிடம் இதை தினமும் பூஜிக்கச் சொன்னார். நாதமுனிகளிடம் இந்தச் சிலையைக் கொடுக்கும் பொழுது "பொலிக! பொலிக!" என்று சொல்லிக் கொடுத்தார். கி.பி.1017ல் பிறக்கப்போகிற இராமானுஜருக்குக் கலியுகம் தொடங்கிய போதே கட்டியம் கூறியவர் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் கொடுத்த விக்கிரகம் தான் இன்றும் உலகைக் காத்துவரும் ஸ்ரீ இராமானுஜர். நாதமுனிகள் தான் அறிந்த நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களை உலகறிய வெளியிட்டார். நாதமுனிகள் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களைத் தொகுத்தார்.

அந்த நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களையும் உயிர் மூச்சாக மதித்து, அதை நம்மிடையே எளிய முறையில் பரப்பியவர் இராமானுஜர்.

நம்மாழ்வாருக்கு இராமானுஜரின் சிலை எப்படி கிடைத்தது? அதை நாளைய பதிவில் அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரே வழி! உடையவர் திருவடி!!

ஸ்ரீ இராமானுஜர் சரணம்

திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த
ப்ரபந்த காயத்ரி
என்னும்
ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி

பாசுரம் 2
கள்ளார் பொழில் தென் அரங்கன் * கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக்* குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு* ஒன்றறியேன் எனக்கு உற்ற பேரியல்வே.

...........தேன் வழியும் சோலைகளால் சூழப்பட்ட
அழகான திருவரங்கத்தில், அந்த உயர்ந்த
திவ்யதேசம் மூலம் மட்டுமே தனது பெருமைகள்
அனைத்தும் வெளிப்படும்படியாக அழகியமணவாளன்
சயனித்துள்ளான்.  தாமரைமலர் போன்ற
அழகும் செம்மையும் கொண்ட அவனது
திருவடிகளைத் தங்கள் மனதில் நிலை நிறுத்தாமல்
உள்ளவர்களும் இந்த உலகில் உண்டு.  
கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கிட்டியும்,
அதற்கு ஏற்ற பாக்கியம் பெறாத இந்த மனிதர்களை
[பெரியபெருமாளின் திருவடிகளைத் தங்கள்
நெஞ்சத்தில் எண்ணாதவர்களை], நான் விலக்க வேண்டும்.  திருக்குறையலூர் என்னும் திவ்யதேசத்தில்
அவதரித்த திருமங்கையாழ்வாரின் திருவடிகளின்
கீழே, எப்போதும் அகலாதபடி பக்தியுடன் இருப்பவர்
எம்பெருமானார் ஆவார்.  அவருடைய மிகவும்
உயர்ந்த குணங்கள் தவிர வேறு எதனையும்
என் மனம் சிந்திப்பதில்லை.  மிகவும் தாழ்ந்தவனாகிய
என் போன்றவனுக்கு இத்தகைய உயர்ந்த நிலை
ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று அறியமுடியவில்லை.......

ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு பகுதி அறிமுகம்

ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு பகுதி அறிமுகம்
 


இன்று முதல் வரலாறு சுருக்கம் ஆரம்பம் :
 

புரட்சித்துறவி என்று போற்றப்படும் ராமானுஜர் கி.பி. 1017-ல் சக ஆண்டு 939, கலி ஆண்டு 4118, வியாழக்கிழமை, சித்திரை மாதம் 12-ஆம் தேதி சுக்லபட்ச பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது பெற்றோர் அசூரிகேசவசோமாயாஜுலு - காந்திமதி. குழந்தையைப் பார்க்க திருப்பதியிலிருந்து வந்த தாய்மாமன் திருமலைநம்பி, லட்சுமணன் அம்சமாக குழந்தை இருந்ததால் அதற்கு இளையப் பெருமாள் என்று பெயர் சூட்டினார். இளைய நம்பிக்கு எட்டு வயதான போது உபநயனம் செய்து வைக்கப்பட்டது. அவரது தந்தையே முதலில் கல்வி கற்பித்தார். அவரது பதினாறாவது வயதில் குஞ்சம்மாள் எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். அதன் பின் கொஞ்சநாட்களிலேயே அவரின் தந்தை காலமானார். தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார் இளைய பெருமாள்.
 

இந்த நிலையில், இளைய பெருமாளை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்தார் பெரிய நம்பி. அதே சமயம் பெரிய நம்பியிடம் கல்வி பயில திருவரங்கம் சென்று கொண்டிருந்தார் இளைய பெருமாள். இருவரும் மதுராந்தகம் பெருமாள் கோயிலில் சந்தித்துக் கொண்டார்கள். பெரிய நம்பி, இளைய பெருமாளை அங்கேயே மாணவனாக ஏற்று பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்தார். அப்போது அடியோடு திருப்பெயராக ராமானுஜர் என்று பெயரிட்டார். அன்று முதல் இன்று வரை அந்தப் பெயரே நிலைத்து விட்டது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், ராமானுஜர் துறவறம் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. அவரது துறவிக் கோலத்தைப் பார்த்த திருக்கச்சிநம்பி, யதிராஜா என்றழைத்தார். அதாவது துறவிகளின் அரசன் என்று பொருள். துறவிக்கோலத்தில் காஞ்சி கோயிலுக்குச் சென்றார் யதிராஜர். அவரைப் பார்த்த கோயில் அர்ச்சகர் ராமானுஜமுனி என்றழைத்தார். 

ராமானுஜர் பிட்சைக்குப் போகும் போது ஆண்டாளின் பாசுரங்களைப் பாடிச் செல்வது வழக்கம். இதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்று திருவரங்கத்து மக்களால் அழைக்கப்பட்டார். வில்லிப்புத்தூர் கோயிலுக்கு ராமானுஜர் சென்ற போது நம் கோயிலில் அண்ணார் என்று பக்தர்கள் அழைத்தார்கள். ஆளவந்தாரின் ஆதீனத்தை ஏற்றுக் கொண்ட பின் ஸ்ரீரங்கம் சென்ற ராமானுஜரை உடையவர் என்று போற்றினார்கள். ஐந்து ஆசிரியர்களின் பாதங்களில் அமர்ந்து பாடம் கேட்டதால் பஞ்சாசார்ய சீடர் என்று சொல்லப்பட்டார். பிரம்ம சூத்திரத்திற்கு வியாக்கியானங்களை எழுதி பாஷ்யம் அருளியதால் பாஸ்யக்காரர் ஆனார். ராமானுஜரை பெருமாளாகவே மக்கள் பார்த்தார்கள். அதனால் பயபக்தியுடன் எம்பெருமானார் என்றழைத்தார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம் வழங்கியதால் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த பெருமான் என்று ராமானுஜர் பெயர் பெற்றார்.
 

ஸ்ரீபெரும்புதூரில் வாழும் வைணவர்கள் சுவாமி என்றே இவரை அழைத்தனர். ராமானுஜர் சில ஆண்டுகள் கர்நாடக மாநிலம் திருநாராயணபுரத்தில் வசித்தார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கம் புறப்படும்போது அங்கு வாழ்ந்த மக்கள் அவரைப் பிரிய மனமின்றித் தவித்தார்கள். அவர்கள் விருப்பப்படி தன்னைப்போல ஒரு விக்ரகத்தை உருவாக்கச் சொன்னார். கைகூப்பி விடைபெறும் கோலத்தில் சிலை வடிக்கப்பட்டது. அந்தச் சிலையைக் கட்டித் தழுவி தன் ஆற்றலை அதில் செலுத்திய ராமானுஜர், நான் இந்த விக்ரக உருவில் உங்களுடன் இருப்பேன். இந்தச் சிலையை என்னைப்போல் பாவித்து வருவீர்களாக என்று அருளாசி வழங்கினார். இத்திருமேனியை தாம் உகந்த திருமேனி என்று போற்றுவார்கள்.
 

இதே போல் அவர் அவதரித்த திருப்பெரும்புதூரில் அந்த ஊர்மக்கள் ராமானுஜருக்கு சிலைவைக்க விரும்பினார்கள். சிலை உருவானது .அந்தச் சிலையை அரவணைத்து தன் தெய்வீக ஆற்றலை சிலைக்குள் செலுத்தினார். அந்த விக்ரகத்தை தமர் உகந்த திருமேனி என்று போற்றுவர். ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் கோயில் வழிபாட்டு முறைகளை ஒழுங்குப்படுத்தி, அங்கு பூஜை முறைகள் செவ்வனே நடைபெறுவதைக் கண்ட வண்ணம் அங்கேயே தங்கியிருந்தார் ராமானுஜர். அப்போது சீடர்கள் அவரது உருவச் சிலை இருந்தால் வழிபடலாமே என்ற எண்ணத்தில் அவரிடம் அனுமதி வேண்டினார்கள்.
 

நூற்றிருபது வயதை எட்டியிருந்த ராமானுஜரின் உடல் நிலை சற்று மோசமாக இருந்தது. கல்லில் சிலை வடிக்குமளவு அவகாசம் இல்லை. எனவே சுண்ணாம்பு மற்றும் அரிய மூலிகைச்சாறுகள் கலந்த சுதை உருவம் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் அமைந்த சிலை மீது ஸ்ரீ ராமானுஜரின் காவி உடையைப் போர்த்தினார்கள். இதனால் ஸ்ரீராமானுஜர் உயிருடன் அமர்ந்திருப்பது போல் காட்சித்தந்தது. ஸ்ரீராமானுஜர், பிரம்ம மந்திரத்தின் வாயிலாக மூச்சைப் பிடித்துக் கொண்டு தமது சக்திகளை அந்தச் சிலையில் நிலை நிறுத்தினார். அருகிலிருந்த சீடர்களைப் பார்த்து இது என் இரண்டாவது ஆத்மா. எனக்கும் இந்த வடிவத்திற்கும் வேறுபாடு எதுவுமில்லை. இந்த பூதவுடலை விட்டு இந்தப் புதிய திருமேனியில் நான் குடி கொள்ளப் போகிறேன் என்று சொல்லி அருகிலிருந்த எம்பாரின் மடியில் திருமுடியையும், வடுகநம்பியின் மடியில்  தம் இரண்டு திருவடிகளையும் வைத்துக் கொண்டு, எதிரில் வீற்றிருந்த தம் பரமாச்சாரியாரான ஆளவந்தாரின் இரண்டு பாதுகைகளையும் தியானித்துக் கொண்டு பரமபதத்திற்குச் சென்றார் என்று கூறப்படுகிறது. அன்று சனிக்கிழமை, சக ஆண்டு 1059 (கிபி 1137), மாக மாதம், சுக்லபட்ச தசமி என்று வரலாறு கூறுகிறது. இதனை திருநாட்டுக்கு எழுந்தருளல் என்று வைணவர்கள் கூறுவர். அவரது பூதவுடலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த மண்டபம் அருகே தென்கிழக்கு மூலையில் அமர்ந்த நிலையில் பதப்படுத்தி தனிச்சந்நிதியில் எழுந்தருளச் செய்து வழிபடலாயினர். இத்திருமேனியை தாமான திருமேனி என்பர். பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, மற்றும்  அரிய மூலிகைகளினால் அன்று அவரது திருமேனி பதப்படுத்தப் பட்டதால், இன்றும் அவர் உயிருடன் அமர்ந்திருப்பது போல் காட்சி தருகிறார். இது குறித்து பல கருத்துக்கள் நிலவினாலும், இன்று தனிச்சந்நிதியில் ஸ்ரீராமானுஜரின் திருமேனியை தரிசிக்கும் போது நிஜ உருவத்தைக் காண்பது போல் தெரிகிறது. தற்பொழுதும் வருடத்திற்கு இரண்டு முறை சித்திரை திருவாதிரை மற்றும் ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று பச்சைக்கற்பூரம், குங்கமப்பூ, ஆகியவற்றின் தைலம் கொண்டு அத்திருமேனிக்கு காப்பிடுகிறார்கள். ஸ்ரீராமானுஜருக்கு பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் தனிச்சந்நிதி இருப்பதைக் காணலாம். பெரும்பாலும் கைகளைக் கூப்பிய நிலையிலேயே அவரது வடிவம் இருக்கும். ஆனால், ஓரிடத்தில் மட்டும் சின் முத்திரையுடன் காணப்படுகிறார். அந்த இடம் தான் திருவேங்கடம். இங்கு திரிதண்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சின்முத்திரை என்றால் அத்வைதிகள் சொல்லும் பொருள் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது. சுட்டு விரல் பரமாத்மா; கட்டைவிரல் ஜீவாத்மா. ஆனால் அத்வைதக் கொள்கையை ஒப்புக் கொள்ளாத ஜீவாத்மா வேறு; பரமாத்மா வேறு என்று சொல்லும் ராமானுஜர் எப்படி சின்முத்திரை காட்டியிருக்க முடியும்? இதற்கு அவரே ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். என்ன முயற்சி செய்தாலும் சுட்டு விரல் நிமிர்ந்திருக்கும் போது கட்டை விரலால் சுட்டு விரலின் நுனியைத் தொட முடியாது. சுட்டு விரல் வளைந்து கொடுத்தால் தான் முடியும். அதாவது, பகவான் நம்மீது அருள் பாலித்தால் நாம் அவரை அடைய முடியும் என்று கூறியுள்ளார்.
 

வைணவத்தில் உயர்ந்தவன்  தாழ்ந்தவன் என்ற இன வேறு பாடில்லை. வைணவன் என்றாலே பெருமாள் பக்தன். பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்று தான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ஸ்ரீராமானுஜர் தான் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வாகித்து வருவதாக நம்புகிறார்கள். கோவில் வரவு - செலவு கணக்குகள் இப்பொழுதும் அவர் சன்னிதியில் வாசிக்கப்படுகிறது. இன்றும் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடத்திய பிறகு தான் பெருமாளுக்கு நடைபெறுகிறது.
 

உய்ய ஒரு வழி உடையவர் திருவடி
பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந்தவன் பல்கலையோர் தாம்மன்ன வந்த இராமா நுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழ நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.
(இராமானுச நூற்றந்தாதி - 1)

மலர்ந்த தாமரைப் பூவில் வாசம் செய்யும் திருமகளை தன் மார்பில் கொண்டிருக்கும் திருமால்; அந்தத் திருமாலின் புகழையே பாடு பொருளாக அமைத்து திருவாய் மொழி முதலிய பாசுரங்களை அருளிய நம்மாழ்வார்; அந்த நம்மாழ்வாரின் திருவடிகளைப் பணிந்து உய்ந்த இராமானுஜர். நெஞ்சமே ! பலவிதமான கலைகளையும் கற்ற மேன்மக்கள் அனைவருக்கும் சிறப்பான வழிகாட்டியாக, அவர்கள் அனைவருக்கும் அடைக்கலமாக விளங்கிய இந்த இராமானுசருடைய நாமங்களையே நாம் சொல்லி மகிழ்ந்து, இவர் திருவடித் தாமரைகளையே நிலையாகப் பற்றி வாழ்வோம்.

🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

காசி யாத்திரை

வாரணாசி தனிகுடும்பமாக  காசி  செல்பவர்களுக்கு சிறு தகவல்

காசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?*

*இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!*

*அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?*

*கீழே கொடுத்துள்ளேன்.*

*அனைவரும் தங்கலாமா?*

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது

முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi - 221 001 (U.P)
Telephone Nos: 0542 - 2451804,
Fax No: 0542 - 2452404
(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram
Location Godowlia, Tanga Stanad
Behind Sushil Cinema
Varanasi

கட்டணம் உண்டா?

உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது.

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.

ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்
அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.

மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள்.

இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்
டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்

குளியல் அறைகளில் Water Heater உண்டு
குடிப்பதற்கு Purified Water உண்டு
மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு

சரி உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.

1
காலைச் சிற்றுண்டி: நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

2.
மதிய உணவு: நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்

ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3. மாலை 4 மணி டீ உண்டு

4. இரவு 7:30 முதல் 9 மணிவரை
இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு.
AWB
ஓம் நமசிவாய சிவாய
மகாபெரியவா சரணம் 🙏🙏🙏


பவழமல்லி


பவழமல்லி

பவழமல்லிகை தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. ஆம் தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவழமல்லிமரமும் ஒன்று என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும். இது சவுகந்தியா என்ற ஆபரணத்தை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

🌹பவழமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம். இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது. புட்ப விதி என்னும் நூலில் பவழ மல்லிகை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது.

🌹அதாவது நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவழமல்லியும் ஒன்று. இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும். பொதுவாக இந்த மரம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூத்துக் குலுங்கும். இறைவனின் பூஜைக்குரிய மலர்கள் அனைத்தும் செடிகளில் இருந்து தான் பறிக்கப்படும். ஆனால் பொதுவாக மண்ணில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை பூஜைக்கு பயன் படுத்த மாட்டார்கள். ஆனால் இதற்கு பவழ மல்லி விதிவிலக்காக உள்ளது. இது இரவில் பூத்து அதிகாலையில் உதிர்வதால் அப்படி உதிர்ந்த பவழமல்லிப் பூக்களை சேகரித்துத் தொடுத்து இறைவனுக்கு பயன் படுத்துவார்கள்.

🌹பவழமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.

🌹பவழமல்லி சிறுமரமாகக் காணப்படும். இந்தியா முழுவதும் பரவலாக பவளமல்லியை பார்க்கலாம். 1500 அடி உயரம் வரையுள்ள இடங்களில் வளரக்கூடியது. சுமார் 15 அடி உயரம்வரை வளரும். தண்டுபாகம் நான்கு பட்டைகளை உடையது. இலைகள் சற்று நீண்டு முட்டை வடிவில் சொரசொரப்புடன் இருக்கும்.

🌹பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும். கனிகள் வட்டவடிவில் உறை அமைப்பில் இருக்கும். செடியில் இருந்து உதிரும் போது இருபகுதியாக பிரிந்து விழும். அதில் ஒவ்வொரு பாகத்திலும் சிறிய விதை இருக்கும். அந்த விதையை எடுத்து தொட்டிகளில் ஊன்றி புதிய செடியை உருவாக்கலாம்.

🌹இந்த அற்புதச் செடியைப்பற்றி வாயு புராணம் இவ்வாறு தெரிவிக்கிறது. பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால் சூரியன் இளவரசியை ஏற்கவில்லை. இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள். இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்து தான் பாரிஜாதம் என்ற செடி உருவானது.

🌹சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. இதனால் தான் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள். தன்னைக் கை விட்ட சூரியனைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து. கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் என்று விளக்குவார்கள்.

🌹பாரிஜாதம் என்ற இந்த பவழமல்லி, திருமாலுக்கு உகந்தது. பவழமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருப்பதாக நம்புகிறார்கள். தேவலோகத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா, ருக்மிணி இருவரும் கிருஷ்ணபகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவழமல்லிமரத்தை கொண்டு வந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம். ஆனால் மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களை உதிர்த்தது என்றுகூறப்படுகிறது.

🌹இத்தகைய பவழமல்லியில் இருந்து நம் முன்னோர்கள் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான மருந்துகளையும் கண்டு பிடித்து நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். பவழமல்லி மரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவழமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து.

🌹கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. பவழமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. பவழமல்லி மரத்தின் வேரை மென்று தின்றால் பல்லீறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும். விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது. பவழ மல்லிவிதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்!

🌹தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திரு வைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவழமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

🌹திருக்களரில் இறைவன் பாரிஜாதவனேஸ்வரராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இவருக்கு களர் முலை நாதேஸ்வரர் என்றும் பெயருண்டு. இறைவியை, இளம் கொம்பன்னாள், அமுதவல்லி என்று பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். இத்தலம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 21 கி.மீ. தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழியில் அமையப்பெற்றுள்ளது.

🌹தில்லையில் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தானும் அந்த பாக்கியத்தைப் பெற நினைத்தார். இத்தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாத செடியை இங்கே கொண்டு வந்து வளர்த்து வந்தார். அந்தச் செடியால், நாளடைவில் வளர்ந்து சில நாட்களில் அந்தப் பகுதி முழுவதுமே பாரிஜாத வனமாக மாறியது. அதன் பிறகு ஒரு சிவலிங்கத்தை பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து தேவதச்சன் மூலமாக கோயிலை எழுப்பி வழிபட்டு தவம் செய்து வந்ததாக கோயில் ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.

🌹துர்வாசருக்கு இறைவன் நடராஜர் பிரம்ம தாண்டவ தரிசனம் தந்து அருளினார். திருக்களர் திருத்தலத்தில் வழிபாடு செய்யும் பக்தர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம். இத்தலத்தில் பாரிஜாதகராக அருள்
பாலிக்கும் இறைவனைப்பற்றி திரு ஞானசம்பந்தர் பாடியிருப்பதாவது:

🌹“பாக்கியம் பல செய்தபத்தர்கள் பாட்டொ டும்பலபணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள் வாக்கின் நான்மறை யோதினாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய் ஆக்கி நின்றவனே அடைந்தார்க் கருளாயே.”

திருவண்ணாமலை மாவட்டத்தில்
ஆரணியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் திருத்தலத்தில் பவழமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. இத்தலத்தில் குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திரகாமேட்டீஸ்வரராக ஈசன் அருள்பாலித்து வருகிறார்.

🌹வீட்டில் வளரக்க கூடிய இந்த பவழமல்லி மரத்தில் பட்டு வீசும் காற்று ஆரோக்யமானது நம் உடல் நலத்தை பாதுகாக்கக் கூடியது.




செவ்வாய், 22 செப்டம்பர், 2020

தேவ ரகசியம்

தேவரகசியம்!

*ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அக்குழந்தையின் தந்தை மூன்று மாதத்துக்கு முன்னால்தான் இறந்து போயிருந்தான்.*

*எமதர்மன்* ஒரு எமதூதனை அனுப்பி "அந்த பச்சிளம்  குழந்தையின் தாயின் உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு" என்கிறான்.
*இந்த எமதூதன் நினைக்கிறான்*, "ஐயோ பாவம்; அப்பாவும் இல்லை, அம்மாவின்உயிரையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால்  இந்த குழந்தையின் கதி என்னவாகும்!" என அத்தாயின் உயிரை எடுக்காமலே வானலோகம் திரும்பி விட்டான்.*

*நாமெல்லோரும் அந்த நிலையில்தான் இருக்கின்றோம். நமக்கென்று ஒருசில வரையறைகளை வகுத்துகிறோம். அதற்கு பல அளவுகோல்களையும் வைத்திருக்கிறோம்.*

*ஆக, எமதூதன் அந்த குழந்தையின் நிலைமையை நினைத்து பரிதாபப்பட்டதனால் உயிரை எடுக்காமல் போய்விட்டான்.*

*ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார்; "உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை...*

*கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்பது பற்றிய அறிவு இல்லை...*

*அது தெரிகிற வரைக்கும் பூமியிலே போய் கிட" என்று அவனை தூக்கி பூமியில் போட்டுவிட்டார்.*

*அவன் பூமியின் ஒரு பூங்காவில், மினுமினுக்கும் தன் தேக தேஜஜ் எல்லாம் இழந்து கன்னங்கரேலென்று முனங்கிக் கொண்டு  கிடக்கிறான்.*
*அப்போது அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன்,*
என்னடா இது,  இங்கே ஒரு முனங்கல் சத்தம் கேட்கிறதே" என்று அவனைப் பார்த்து விட்டு, தன்னிடம் இருந்த ஒரு துணியை அவனுக்கு போர்த்துகிறான்.*
*மேலும் "என்னுடன் வா" என்கிறான்.*

*எமதூதன் மறுவார்த்தை பேசாமல்
தையற்காரனுடன் அவன் வீட்டுக்குச் செல்கிறான்.* திண்ணையில் எமதூதனும்,  அந்த தையற்காரனும் படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

*அந்த தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், "வா வா வந்து கொட்டிக்கோ"  என்று சாப்பிட கூப்பிட்டாள்.*
அவன் விருந்தாளி வந்திருக்கிறானே என்று சொன்னான்.
*அவள் கணவனை திட்டி விரட்டி விட்டாள்.*

*"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று".  எமதூதனும்  ஒன்றும் சொல்லாமல் போய்க் கொண்டே இருந்தான்.*
*ஒரு பத்து நிமிடம் கழித்து அவள்; "சரி,சரி வந்து சாப்பிட்டு போ"  என்று எமதூதனை  மறுபடியும் கூப்பிட்டாள்.*

*அப்போது அந்த எமதூதன் லேசாக சிரித்தான். கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு சற்று பொன்னிறமாக மாறிற்று. ஆனால் ஒன்றும் பேச மாட்டான்.*

*தையற்காரன் சொல்வான்: "எனக்கு துணிகளில் இந்த காஜா போடுவதற்கு, பட்டன் தைப்பதற்கு  ஆளில்லை; உனக்கு தங்குவதற்கு இடமும், சாப்பிட சாப்பாடும் போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்" என்று சொன்னான்.

*எமதூதன் டெய்லரிங் அசிஸ்டண்ட் ஆகிவிட்டான்.*

*ஒரு பத்து வருடம் ஆகிறது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்கார பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற குழந்தை, அத்துடன் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து *தையற்காரனிடம்* *"இந்த குழந்தைக்கு 'கை' கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது". நல்லா தளர்வாக தைக்க வேண்டும்.  என்று சொல்வாள்.*

*எமதூதன் அந்த குழந்தையையும் பார்த்தான். அந்த பணக்கார பெண்மணியையும் பார்த்தான். பின்னர் சிறிது சிரித்தான். அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறியது.*

*இன்னும் ஒரு ஐந்து வருடம் ஆகிவிட்டது.*

*ஒருநாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வந்தான். வந்து, "இந்தாப்பா! இதில் பத்து மீட்டர் விலையுர்ந்த துணி இருக்கிறது. இதிலே 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தையுங்கள்" என்று சொல்லி கொடுத்து விட்டுப் போனான்.*

*அதற்குள் அந்த எமதூதன் தேர்ந்த தையற்காரன் ஆகிவிடுகிறான்.*

*முதல் நாள் போய்விட்டது.*
*இரண்டாம் நாள் போய்விட்டது.*

 *முதலாளி தையற்காரன், "நாளை டெலிவரி , அந்த பணக்காரன் வந்து கேட்பானே,  என்ன சொல்வது?"  என்று கேட்கிறான்.*

*இந்த எமதூததன்; டர்ரென்று  அந்த பேண்ட் துணியை கிழித்து, ஒரு தலையணை உறை, பெட் கவர் தைத்து விட்டான். *முதலாளி தையற்காரன் திட்டுகிறான்". என் பிழைப்பில் மண்ணை போடுவதற்கு தான் வந்தாயா? இப்போது அவன் வந்து கேட்டால்  நான் என்ன பண்ணுவது?" என்கிறான்.*

*அப்போது கார் டிரைவர் ஓடி வருகிறான்.  "நீங்கள் சபாரி தைக்காதீர்கள். என் முதலாளி இறந்து விட்டார். அதனால் அத்துணியில் ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள்"  என்று கூறுகிறான்.*

*இப்பொழுது எமதூதன் முகத்தில் சிரிப்பு வந்ததும், அவன் முழுவதும் பொன்னிறமாக மாறி விடுகிறான்.*
*அப்படியே மேலே பறந்து போக ஆரம்பிக்கிறான்...*  

*அப்போது தையற்காரன்  சொல்வான், "அப்பா நீ யார்? வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறைதான் சிரித்தாய். ஒவ்வொரு தடவை சிரிக்கிற போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதனால் அதற்கு விளக்கத்தை சொல்லிவிட்டு,  நீ போ" என்கிறான்.*

*அவன் "நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து விட்டால், அந்த குழந்தைக்கு யார் கதி! என்று அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால்; பூமியில் போய் தேவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா" என்று என்னை அனுப்பினார்கள். அதனால் இப்பூலோகம் வந்தேன்.*

*"இங்கு அப்படி என்ன தெரிந்து கொண்டாய்?"  என்று தையற்காரன் வினவுகிறான்.*

*முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா...?*
*அப்போது அவள் முகத்தில் மூதேவி தெரிந்தாள்.*
*பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வாவா என்று கூப்பிடும் போது அன்னை மகாலட்சுமி தெரிந்தார்.*
*அப்போது, இந்த உலகத்தில் "ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும்,  ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள்தான் காரணம்"  என்று தெரிந்து கொண்டேன். மூதேவி போய்விட்டு சீதேவி வருவதற்கு பத்து நிமிடம் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன்.*
*இதுதான் #தேவரகசியம் # ஒன்று*

*மனிதர்களிடம்  பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது.  ஆனால் எந்த கார்டை வைத்து விளையாடுவது, எதை விடுவது; என்று தெரியாததினால்  பெரும் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.*

*"பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா...?*
*அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா...?*
*அதுதான்  அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நான் நினைத்த குழந்தை.*

*அக்குழந்தையின் நிஜமான தாய் ஒரு பரமஏழை. அவள் இறந்தும் விட்டாள். இருந்தும் கூட இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கும்,   தளர்வாக தைக்கவேண்டும் என்று அக்கறையுடன் கூறுகின்ற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான்.  இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறையாக சிரித்தேன்.*
*ஒரு எமதூதன் ஆகிய எனக்கே; பச்சாதாபம் இருக்கிறபோது, உயிர்களை கருணையுடன் உருவாக்கும் இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்கு தெரிந்தபோது இரண்டாவது #தேவ ரகசியம்#  புரிந்தது.*

*இறைவன் எல்லாவற்றையும் காரண காரியங்களோடுதான் நடத்துகிறான்.*

*மூன்றாவது #தேவ_ரகசியம்# மூன்றுநாட்களில் சாகப்போகிறவன்; இன்னும் 20 வருடங்கள் *தான்* உயிரோடு இருக்கப்போவதாக  நினைத்துக்கொண்டு,  நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணியை தைத்துக்கொடு என்று சொன்னானே!!*
*"எனக்கு தெரியும் அவன் சாகப்போகிறான்" என்று,  அதனால்தான் நான் அத்துணியை தைக்கவே இல்லை.*

*அவன்  இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்".*

*இம் மனிதர்கள் இந்த உலகத்தை ஏதோ நூறு வருஷம் இருநூறு  வருஷம் குத்தகைக்கு போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்து குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.*

*சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.!!*

*நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்த வாழ்வின் எதார்த்தமான உண்மை!*

*அதுதெரிந்தும் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன், மற்றவன்தான் செத்துக் கொண்டிருப்பான் என்றும் நினைக்கிறான் அல்லவா?* *அதுதான் மூன்றாவது #தேவரகசியம்#!*

*அதனால்தான் இந்த உலகத்தில் அவன் திறமையாக செயலாற்றாமல் இன்னும் 20-வருஷம் கழித்து நடக்கப் போகிற தன் குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்!!*

*இன்னும் 15 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப்போகிற பையனுக்கு 'Fees'- கட்ட பணம் இல்லையே என்று இப்பொழுதே வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான்!!!*

*இதுவே இவ்வுலகத்தின்  நிம்மதி தொலைய காரணமாகிறது. பேசிக் கொண்டிருக்கிறபோது இந்நொடியே நாம் இறந்துபோகலாம், நாம் இறந்தாலும் நம் குழந்தைகளை நம்மை விட கடவுள் மிகநன்றாகப் பார்த்துக்கொள்வார் என்பதை உணர்ந்தால், நாம் சந்தோஷமாக இருப்போம்!

*இந்த மூன்று ரகசியங்கள்*

*அதாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது.*

*இரண்டாவது எது நடக்கிறதோ- அதற்கு #கடவுள்# ஒரு ஆகச்சிறந்த மாற்றுவழி வைத்திருப்பார்.*
*மனிதனின் மனநிலையில் உள்ள தான் என்னும் *ஈகோவினாலும்*,  அறியாமையினாலும்; அவர்களால் இறைவனின் அருட்களை புரிந்து கொள்ள முடிவதில்லை.*

*மூன்றாவது- யாருக்கும், எந்த நேரத்திலும் சாவு வரலாம்.*
*இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.*
*இந்த #அஞ்ஞானம்#தான் உலகில் துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.*

 இப்படிப் பட்ட #தேவ-ரகசியங்களை# புரிந்து கொண்டு நாமும் வாழப் பழகி விட்டால், நாம் வாழும் காலமெல்லாம் நிம்மதியான வசந்தமே..


அகத்தியர்

அகத்தியரின் தடங்கள் இன்றும் இலங்கையில் திருகோணமலையில், இன்றும் அகத்தியர் வாழும் புண்ணிய பூமி இலங்கை.
இலங்கை சிவ பூமி அகத்தியர் ஆலயம் தான் இது

திருமலை மாவட்டம் மூதூர் கங்குவேலியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் மேற்கேயுள்ள வனப்பகுதியில், மகாவலி கங்கைக்கு அருகில் அமைந்திருந்த அகத்தியர் தாபனத்திற்கு ஆடி அமாவாசைக் காலத்தில் சைவ மக்கள் சென்று
வருவது வழமை. இவர்களை விட இங்கு சேனைப் பயிர்ச் செய்கையாளர்களும், விறகுத்
தொழிலாளர்களும் அடிக்கடி சென்று
வருவதுண்டு. இங்கு அமைந்திருந்த கற்தூண்களும், அகத்தியர் ஆலயமும், சிவலிங்கமும், ஈழத்தை முதன் முதலாக சோழர்கள் ஆட்சி செய்வதற்கு முன்னரே (2500 ஆண்டுகளுக்கு முன்னர்) நிறுவப்பட்டமைக்கான வரலாற்று சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேயிடத்தில் 18ஆம் நூற்றாண்டில் 2ஆவது அகத்தியர் தமிழ் பல்கலைக் கழகம் இயங்கியமைக்கான வரலாற்றுத் தடயங்களும் காணப்பட்டன. இவ்வாறான புராதன சிறப்பையும், புராண காலப் பதிவுகளையும் கொண்ட அகத்தியர் தாபனத்தை கடந்த ஓரிரு நாட்களுக்கு சிங்களப் படைகள் துடைத்தழித்துள்ளன.

திருக்கரசுப் புராணத்தின் படி, கைலையில் சிவபெருமானுக்கும், உமாதேவிக்கும் திருமணம் இடம்பெற்ற பொழுது, கைலைமலை சரிந்ததாகவும், இதனை சீர்செய்யும் நிமித்தம் ஈழத்தின் திருமலைக்கு அகத்திய முனிவரை சிவபெருமான் அனுப்பி வைத்ததாகவும்
கூறப்படுகின்றது.

இதன்படி திருமலையை சென்றடைந்த அகத்தியர், அங்குள்ள கங்குவேலிப் பகுதியில் சிவலிங்கம் அமைத்து, தனது தவலிமையால் கைலை மலையை வழமைக்கு கொண்டு வந்ததோடு, அங்கிருந்தவாறே சிவன் – பார்வதி
திருமணத்தை தரிசித்ததாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் திருமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர், தற்பொழுது மாவிலாறு என்று அழைக்கப்படும் அகத்தியனாற்றில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் ஐதீகங்கள் கூறுகின்றன.

தமிழ்க் கலைகள் அறுபத்தி நான்கும் அகத்தியரால் இங்கு போதிக்கப்பட்டவையாகும். அகத்தியத் தாபனம் பல்கலைகளையும் போதித்து வந்துள்ளது. திருமங்கலாய் தொடங்கி மூதூர் துறை மகாவலி வரை மகாவலி ஆற்றுக்கு கிழக்கே கங்கை வெளி பரந்து காணப்பட்டது. இன்று கங்குவேலி என்று பெயர் குறுகி விட்டது. உலகில் முதலில் நாகரீகம் தோன்றியது இங்கே தான் என மூதூர் அகத்தியர் என்ற ஆய்வு நூலில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குவேலியிலுள்ள அகத்தியத் தாபனம் அழிந்த பின்னரும், வழிபாட்டுத் தலமாக சிவலிங்கம் காட்சியளித்தது. அத்துடன் அகத்தியத் தாபனத்தின் வாயில் படிகள், சந்திரவட்டக்கல் உட்பட கல்வெட்டுக்கள் என்பன போர் முடிவடைந்த பின்னர் சமாதானச் சூழல் நிலவுகிறது எனக் கூறப்படும் காலத்தில் தான் சேதமாக்கப் பட்டிருக்கின்றன. ஈழ நாட்டில் அகத்தியரைப் பற்றிய குறிப்புக்கள், நூல்கள், வரலாற்றுச் சுவடுகள் அதிகம் காணப்படுகின்றன.

இந்தியாவில் காணப்படும் தமிழரின் வரலாற்றுக் காலத்துக்கு இவை முற்பட்டவையாகும். தமிழ்ப் பேரவைக்கால நூல்களில் முத்தூர் அகத்தியர் என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்தியுள்ளமையை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அகத்தியர் ஈழத்தில் திருகோண மலையில் பல்லாண்டுகள் காலம் வாழ்ந்துள்ளார் என்பதை அவர் பணிகளாலும், நூல்களாலும் அறிய முடிகின்றது. திருமங்கலாய்ச் சிவன் கோவில், அகத்தியத் தாபனம், திருக்கரசைச் சிவன் கோயில் என்பவற்றை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். இதன் மூலம் திருகோணமலையின் தமிழரின் வரலாறு, வரலாற்றுக் காலங்களுக்கு முற்பட்டது என் பதை உறுதி செய்ய முடிகின்றது. அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி (திருக்கரை சையம் பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகத்தியத் தாபனம் அமைந்திருக்கிறது. அகத்தியத் தாபனம் தொடர்பாக 2001 ஆம் ஆண்டில் பேரறிஞர்.க. பாலசுப்பிரமணியம் அவர்களால் வெளியிட்டப்பட்ட ஆய்வு நூல் மகாசி்த்தர் மூத்தூர் அகத்தியர் என்பதாகும். வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அகத்தியத் தாபனம் தொடர்புடைய புகைப்படங்கள் சில மகா சி்த்தர் முத்தூர் அகத்தியர் என்னும் ஆய்வு நூலில் இருந்து.

மகா சி்த்தர் முத்தூர் அகத்தியர் ஆய்வு நூல் பேரறிஞர். க . பாலசுப்பிரமணியம்

அகத்தியர்அறிவுரை!
*************************

"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன்
சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்த சமயத்தில் எப்படி
தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள். ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக்
கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக் கொண்டு உலகில் அனைத்தையும்
பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எள


தாக, மிக நீதியாக தோன்றம்."

நவராத்திரி மகிமை

நவராத்திரியின் மகிமையை விளக்கும் இந்தக் கதை தேவி பாகவதம்- 5-வது ஸ்கந்தத்தில் உள்ளது.

தேவி மஹாத்மியத்திலும் இடம் பெற்றுள்ளது.
மனிதர்களில் துயரப்படுபவர்கள் இரண்டு வகை.

ஒன்று, சொத்து- சுகங்களை இழந்து துன்புறுவோர். அடுத்தது, குழந்தைகள், உறவினர் மற்றும் சுற்றத்தாரின் செயல்களால் துயரப்படுபவர்.

இவர்களது துயரைப் போக்கும் விதம்... முனிவர் ஒருவர், அம்பாளின் வழிபாட்டு மகிமையைச் சொல்லும் முகமாக உள்ளது இந்தக் கதை.

சுரதன் என்ற அரசன் மிக நல்லவன்; குடிமக்களை நன்கு வாழவைத்தான். இவனது ராஜ்ஜியத்தைக் கவர நினைத்த மலைவாசிகள், திடீரென படையெடுத்து வந்து போரிட்டு வெற்றியும் பெற்றனர்.

தோல்வியுடன் அரண்மனை திரும்பிய மன்னன், தன் மந்திரிகளும் பகைவர்களின் கைக்கூலிகளாக இருப்பதை அறிந்து மனமுடைந்தான். அரண்மனையில் இருந்தால் தனக்கு ஆபத்து என்று உணர்ந்தவன், காட்டுக்குச் சென்றான்.

"என் பெயர் சமாதி. செல்வத்துக்குக் குறைவில்லை. தர்மத்தில் நாட்டம் உள்ளவன். ஆனால் பொருளாசை மிகுந்த என் பிள்ளைகளும் உறவினர்களும் வஞ்சனை செய்து காட்டுக்குத் துரத்தி விட்டனர். அவர்கள் தீமை செய்தாலும் என் மனம் அவர்களை நினைத்தே ஏங்குகிறது’’ என்று வருந்தினான் வியாபாரி.

அவனுக்கு ஆறுதல் சொன்ன மன்னன், ‘’வருந்தாதே; நானும் உன்னைப்போன்று பாதிக்கப் பட்டவன்தான். வா... இருவரும் சுமேதஸ் ரிஷியிடம் சென்று, நமது துயரம் தீர வழி கேட்கலாம்’’ என்று வியாபாரியை ரிஷியிடம் அழைத்துச் சென்றான்.

இருவரது வேண்டுதலையும் கேட்ட ரிஷி, ‘’நவராத்திரியில் விரதம் இருந்து அம்பாளை பூஜியுங்கள். அவள் அருளால் உங்களின் துயரம் விலகும்!’’ என்றார்.

அம்பாளின் மகிமைகளையும் நவராத்திரி வழிபாடுகளையும் விவரித்து, மந்திர உபதேசமும் செய்தார்.
அதன்படியே அரசனும் வியாபாரியும், மந்திர ஜபம் செய்து, கடுந்தவத்தில் ஆழ்ந்தனர்.

நவராத்திரி பூஜையையும் முறைப்படி செய்தனர். இதன் பலனாக இருவருக்கும் காட்சி தந்தாள் அம்பிகை.

‘‘மன்னா, உன் பகைவர்கள் உன்னைச் சரண் அடைவர். நீ பல்லாண்டு காலம் நல்லாட்சி புரிவாய்!’’ என்று அருள் புரிந்தாள்.

வியாபாரியின் பிரார்த்தனை வேறுவிதமாக இருந்தது. ‘’தாயே, எனக்கு ஞானத்தைக் கொடு! நான், பிறவிப் பெருங்கடலைத் தாண்ட விரும்புகிறேன்!’’ என்றான்.
‘‘அப்படியே ஆகும்’’ என்று வரமளித்து மறைந்தாள் அம்பிகை.

மன்னனும் வியாபாரியும் சந்தோஷத்துடன் திரும்பி வந்து, வாட்டம் போக்க வழிகாட்டிய முனிவரை வணங்கி ஆசிபெற்றனர். அம்பிகை வரமளித்த படியே, அவர்களது பிரார்த்தனைகளும் பலித்தன.


அகிலாண்டேஸ்வரி

ஈஸ்வரி என்றாலே ஜகதீஸ்வரி, அகிலாண்டேஸ்வரி


தான் ஞாபகத்துக்கு வரும்.

திருச்சிக்கு அருகில் இருக்கும் திருவானைக்காவல் கோவிலில் குடிகொண்டு இருப்பவள்.

அம்பாள் மிக அழகு! அதுவும், அர்த்த ஜாம பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேசுவரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு களை, அழகு, கம்பீரம். அகிலாண்டேசுவரி மிக உக்ரமான அம்பாள் என்றே கூறுவார்கள்.

நடு இரவில், சலங்கை ஒலி 'ஜல் ஜல்' என ஒலிக்க, அவள் கோவில் பிரகாரங்களை வலம் வருவதாக ஐதீகம்.

இரு காதுகளிலும் ஆதி சங்கரர் அணிவித்த ஸ்ரீசக்ரத்தை தாடங்கம் என்கிற காதணிகளைஅணிந்து எதிரில்அமர்ந்து இருக்கும் ஆனைமுகத்தோனுக்கும்,அடியவருக்கும் அருள்பாலிப்பவள்.

பார்க்கப் பார்க்க திகட்டாத ஜ்வலாமுகி ,வாராஹி அவள்.

அம்மா அம்மா அம்மா
எனக் கபயம் அருள்வாய் அகிலாண்டேஸ்வரி

ஸிம்ஹ வாஹினி  ஸ்ரீ லலிதே பவானி
நம்பினோரைக் காக்கும் செம்மல்ர் வதனி

மங்கள நாயகி  மதுரை  மீனாஷி
திங்களை சூடியோன் தேவி  ஸ்ரீ காமாஷி கங்கை நதிக் கரை காசி விசாலாஷி
இங்கு ஏலகனோடு  எனக்குக் கொடு காஷி

நவராத்திரி ஸ்பெஷல்

காளிதாசரின் குமார சம்பவம்...  சிறு குறிப்பு. [ நவராத்திரி ஸ்பெஷல் ]

பார்வதி தேவியின் மனதில் சிவபெருமானை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆழத்தை அளப்பதற்கு வந்ததுபோல். சிவபெருமானே பிரம்மச்சாரி வேடத்தில் வந்து தேவியை பரிக்ஷை செய்கிறார். அது மட்டுமல்லாமல் சிவபெருமான் மீது அன்னைக்கு இருக்கும் அளவிடமுடியாத அன்பை தேவியே திருவாய் மலர்ந்து அருள வேண்டும். அதைக்கேட்டு பேரானந்தம் அடைய வேண்டும் என்று நினைத்து பிரம்மச்சாரி வேடத்தில் வந்தாரோ என்று நாம் நினைக்க தூண்டுவது போல இருந்தது அவரது பேச்சு.

பிரம்மச்சாரி – பார்வதி தேவியின் வாத – பிரதிவாதங்களுக்கு இடையில் தேவி அவரின் கூற்றை இவ்வாறு ஏளனம் செய்கிறாள். சிவபெருமானைப் பற்றிய உண்மையான ஞானமும் இல்லாத நீங்கள். அவரைப்பற்றிய விஷயம் கூறுவதில் மட்டும் சிறந்து விளங்குபவரா நீங்கள். உங்களையும் அறியாமல், ஈசனைப் பற்றி ஒரே ஒரு உண்மையைக் கூறியுள்ளீர்கள்! சிவபெருமானைப் பற்றிய குலமோ, அவருடைய பெற்றோர்களைப் பற்றிய விவரமோ எதுவும் யாரும் அறியமாட்டார்கள். எனவே அவரைத் திருமணம் செய்ய நினைப்பது தவறு என்று கூறினீர்கள் அல்லவா?! அது முற்றிலும் உண்மையே!! ஏனென்றால் எந்த வேதங்கள் சிவபெருமானை, பிரம்மனுக்கே கர்த்தா: அதாவது பிரம்மனையே சிருஷ்டி செய்தவர் என்று கூறுகின்றனவோ, எந்த சிவபெருமான் இந்த உலகில் உள்ள அனைத்துக்கும் சிருஷ்டி கர்த்தாவாக இருக்கிறாரோ. அவரைப் பற்றிய, ஆதி அந்தம் இல்லாத அவரை, பெருமைப்பற்றிய குலமோ, கோத்ரமோ அறிவது என்பது இயலாத காரியம்தான்!!! ஜகத்பிதாவான அவர் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்.

இப்படி பேசிக் கொண்டு வந்த பார்வதிதேவி. பிரம்மச்சாரியுடன் பேசி. அவருக்கு சிவனுடைய பரதத்துவத்தைப் புரிய வைப்பது இயலாத காரியம் என்பதை அறிந்து இவ்வாறு சொல்கிறாள். உங்களுடன் இப்படி விவாதம் செய்வது போதும்” நீங்கள் சிவபெருமானைப்பற்றி எப்படியெல்லாம் கேள்விப்பட்டீர்களோ அப்படியே ஒன்றுக்கூட குறையாமல் அவர் இருந்து விட்டு போகட்டும். ஆனால் சிவனின் பேரில் என் மனதில் இருக்கக்கூடிய அபரிமிதமான அன்பு. மற்றவர்களுடைய நிபந்தனையோ, பாராட்டுதலையோ கேட்டு மாறப் போவது இல்லை. எனவே இந்த வீண் வாதம் இனி தேவையில்லை.”

பார்வதிதேவி இவ்வாறு கூறிய பின்பும் தன்னுடைய கருத்துக்களை சொல்ல விழைகின்ற பிரம்மச்சாரியை அங்கிருந்து எப்படியாவது வெளியேற்ற சொல்லி தன தோழிக்கு உணர்த்துகிறாள் தேவி. பின் அதிதியாக வந்த ஒரு பிரம்மச்சாரியை வெளியேறும்படி சொல்வது முறையல்ல என்று நினைத்து. தேவி தானே அந்த இடத்திலிருந்து செல்ல முற்படுகிறாள். அதற்கான காரணத்தையும் சொல்கிறாள். பெருமானைப் பற்றி அவதூறு பேசுவது மட்டுமல்ல அதனைக் கேட்டுக் கொடிருந்தாலும் பாவம் நம்மை சேரும்” இப்படி சொல்லி அங்கிருந்து அவசரமாக வெளியேற முயற்சி செய்யும் போது. தன்னுடைய உத்தரீயத்தின் நுனியை யாரோ பிடித்து இழுப்பதை உணர்ந்து மிகவும் கோபமுற்றவலாய் யாரென்று திரும்பிப் பார்க்கிறாள் தேவி. பிரம்மச்சாரி மறைந்து, சிவபெருமான் தன ஸ்வய ரூபத்தில் புன்னகையுடன் காட்சி தருவதை கண்டாள் அன்னை.

சிவபெருமானைப் பற்றி சிவபெருமானுக்கே புரிய வைக்க பாடுபட்டதையும், தன்னுடைய ஆழ்ந்த காதலை அவரிடமே தெரியப்படுத்தியதையும் எண்ணி, வெட்கம், துக்கம், சந்தோஷம், ஆனந்தம், திகைப்பு இவை அனைத்தும் ஒருங்கப் பெற்றவளாய் வெளியே செல்வதற்காக மேலே தூக்கப்பட்ட பாதத்தை கீழே வைத்து.செல்வதா அல்லது அங்கயேஇருப்பதா என்ற தடுமாற்றத்தில், காட்டாறு நடுவில் மலையினால் தடுக்கப்படும்போது. போகும் திசையறியாமல் சுழன்று சுழன்று ஆரவாரம் செய்வது போல். ஆர்ப்பரிக்கின்ற தன் மனதை அடக்க முடியாமல் சந்தோசத்தில் செய்வதறியாமல் நின்றாள் பார்வதி தேவி!!!

“ ஹே தேவி!! நான் இன்று முதல் உனது அடிமை! உன்னுடைய தவத்தினால் என்னை வென்று விட்டாய்” என்று சொல்லும் பிறைச்சந்திரனை தலையில் சூடிய பெருமானின் வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் அவரை அடைய தான் பட்ட எல்லா கஷ்டங்களுக்கும் பலன் கிடைக்கப்பெற்று மீண்டும் புத்துணர்ச்சி அடைந்தாள் பார்வதி தேவி!! இப்படி சொல்லும் பொருளும் போல் என்றும் சேர்ந்தே இருக்கின்ற சிவனும், பார்வதியும் நம் எல்லோரையும் காக்கட்டும்!!