படலம் 59: கல்யாணோத்ஸவ முறை
59வது படலத்தில் கல்யாணம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் பொதுவாக எல்லா ஸ்வாமிக்கும் கல்யாண கர்மா கூறப்படுகிறது என்பது பிரதிக்ஞை. பிறகு கல்யாண கர்மாவின் காலம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு கல்யாண விதி விளக்கப்படுகிறது. அங்கு கொட்டகை மண்டபம் இஷ்டமான தேசம் இவைகளில் கோசாணத்தால் மெழுகப்பட்ட இடத்தில் ஸ்தண்டிலம் அமைத்து வெள்ளை வேஷ்டி தரித்தவரும், யோக்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரும், பாட்டு பஞ்சவாத்யம் இவைகளால் ஆன சப்தங்களாலும், கண்ணாடி, குடை சாமரம் இவைகளாலும், பலவித தூபம், அனேக தீபங்களோடு, கூடியதுமான பல்லக்கில் ஏற்றி அழைத்து வரப்பட்ட பரமேஸ்வரனை கிழக்கு முகமாக ஸ்தாபிக்கவும். பரமேஸ்வரனுக்கு முன்பாக மணல் முதலிய திரவ்யங்களால் ஸ்தன்டிலம் அமைத்து ஸ்வாமிக்கும் ஸ்தண்டிலத்திற்கும், நடுவில், வஹ்னியை ஸ்தாபிக்கவும். அக்னியின் இடது பாகத்தில் வடக்கு முகமாக பிரம்மாவையும் மஹாவிஷ்ணுவை வலது பாகத்திலும் தெற்கு முகமாக வஸ்திரம் முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்டதாக ஸ்தாபிக்கவும். பிறகு ஆசார்யன் ஸ்வாமிக்கு பாத்யாசமனம் கொடுத்து அணிந்து கொள்வதற்காக இரண்டு வஸ்திரம் கொடுக்கவும். பிறகு ஸ்தண்டிலத்தில் அக்னியை வைத்து 5 ஸம்ஸ்காரங்களை செய்யவும். பிறகு ஹோமம் செய்யவும் பூர்ணாஹுதி முடிவில் எல்லா ஆபரணத்தாலும் அலங்காரம் செய்யப்பட்ட கவுரியை ஸ்வாமிக்கு வலப்பாகத்தில் வைத்து பாத்யயாசமனம் கொடுத்து அம்பாளுக்கு மங்களசூத்திரம் கொடுக்கவும்.
அணிந்து கொள்வதற்காக இரண்டு வஸ்திரம் அம்பாளுக்கு கொடுத்து பூஜிக்கவும் என்று கூறி மங்கள சூத்திரம் கொடுக்கும் முறை கூற இங்கு ஹோமமுறை மங்கள சூத்திரம் கொடுக்கும் முறை மந்திரத்துடன் கூடியதாக சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு அம்பாளின் அருகில் லக்ஷ்மியை ஸ்தாபித்து ஆசார்யன் ஸ்வாமி அம்பாளுக்கு ரக்ஷõபந்தனம் செய்யவும் என ரக்ஷõபந்தனம் செய்யும் முறை கூறப்பட்டு பஞ்சாங்க பூஷணம் உடையவரும் நன்கு சிவாகமம் அறிந்தவருமான ஆசார்யனால் உத்தரவு இடப்பட்ட அதே லக்ஷணம் உடைய விஷ்ணு போல் தியானித்து தன்னுடைய கொண்டியால் சிவனுடைய கையில், தீர்த்தம் விடவும் என ஜல தானம் தாரை வார்க்கும் முறை கூறப்படுகிறது. ஸ்வாமி அம்பாளுக்கு விபூதி கொடுக்கவும். ஸ்வாமிக்கு மதுபர்க்கம் தாம்பூலம் கொடுக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு கவுரியின் ஹ்ருதயத்தில் சிவ ஹஸ்த நியாசமும் அம்பாளின் வலது காதில் பீஜ முக்ய மந்திர ஜபமும், அம்மி மிதிப்பதும், லாஜ ஹோமமும் முறைப்படி கூறப்படுகின்றன. பிறகு சிவாக்னி பஸ்மாவிற்கும் விசர்ஜனம் செய்யவும். பிறகு நான்காவது தினத்தில் நான்காவது தின கார்யம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு தம்பதிகளின் சயன விதி நிரூபிக்கப்படுகிறது. பிம்பமாய் இருந்தால் உத்ஸவம் செய்யவும் அசலபிம்பமாய் இருந்தால் அதே ஆசனத்தில் ஸ்தாபிக்கவும் என கூறி பிம்பங்களின் ஸ்தாபன முறை கூறப்படுகிறது. இவ்வாறு மற்ற தேவர்களுக்கு கல்யாண உத்சவம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு தனியான பீடத்தை உடைய அம்பாளுக்கும் கல்யாணம் செய்யும் விதி கூறப்படுகிறது. பிறகு கல்யாண மூர்த்தி பிரதிஷ்டை செய்பவனுக்கு விசேஷமாக பலன்கள் கூறப்படுகிறது. இதை பிரதிஷ்டை செய்பவன் தன்னுடைய சரீரத்தின் முடிவில் எந்த ஸ்தானத்தை அடைந்து பக்தர்கள் அவனை திருப்பி அனுப்பாமால் இருக்குமோ அப்பேர்பட்ட சிவஸ்தானத்தை அடைகிறான் என கூறப்படுகிறது. இவ்வாறு 59வது படலத்தின் கருத்து சுருக்கம் ஆகும்.
1. எல்லா தேவதைகளுக்கும் பொதுவாக கல்யாணம் செய்ய வேண்டிய முறைகள் பற்றி சொல்கிறேன். முன் நிச்சயிக்கப்பட்ட சுபமுஹூர்த்தத்திலோ அல்லது வேறு தினத்திலோ
2. மூன்றாம் நாளிலோ, நான்காம் நாளிலோ பகலிலோ நடு இரவிலோ விருப்பமான இடத்திலோ கொட்டகையிலோ மண்டபத்தில் பசுஞ்சாணத்தால் மெழுகி
3. அங்கு ஸ்தண்டிலம், வெள்ளை வஸ்திரத்தால் மூடப்பட்ட மேடையில் மூர்த்தியை ஸ்தாபிக்க வேண்டும். அலங்கரிக்க உகந்தவைகளால் அலங்கரித்து
4. ஸங்கீதம், பஞ்சகோஷம், குடைகள் சாமரங்கள், கண்ணாடிகள், தூபங்கள், தீபங்கள், வரிசைகளுடன் பல்லக்கு முதலியவற்றில் கொண்டு வந்து
5. அதற்கு முன்னால், மணல், முதலியவற்றால், மேடை அமைத்து கிழக்கு முகமாக வைத்து, மூர்த்திக்கும், ஸ்தண்டிலத்திற்கும் நடுவில் அக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.
6. அக்னி குண்டத்திற்கு வலது புறத்தில் வடக்கு முகமாக பிரம்மாவையும் இடது புறத்தில் தெற்கு நோக்கியபடி மஹாவிஷ்ணுவையும் வஸ்திர ஆபரணங்களாம் அலங்கார பூஷிதராக இருக்கச் செய்து
7. ஆசார்யரானவர் விஷ்ணு மூர்த்திக்கு உடுத்துக் கொள்ளவும் மேல் வஸ்திரத்திற்காகவும் கரையுடன் கூடிய ஹ்ருதய மந்திரத்தால் பாத்யம் ஆசமனம் கொடுத்து உடுக்க இரண்டு வஸ்திரம் கொடுத்து போர்த்த என இரு பட்டு வஸ்த்ரங்களால் பிரபுவை அலங்கரித்து
8. ஸ்தண்டிலத்தில் அக்னியை உண்டுபண்ணி பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்ய வேண்டும். ஷடங்க மந்திரத்துடன் பூஜித்து உகந்த ஸமித்து நெய், அன்னம் இவைகளுடன் கூட
9. பூர்ணாஹுதியை கொடுத்து குருவானவர் அப்பொழுது கவுரியை ஸர்வாபரண பூஷிதையாக சுவாமிக்கு வலதுபுறத்தில் ஹ்ருதய மந்திரத்தால் ஸ்தாபித்து
10. தேவிக்கு பாத்யம், ஆசமனம், அர்க்யம், முதலானவற்றை அந்தந்த மந்திரங்களினால் கொடுத்து, ஹ்ருதய மந்திரத்தால் மங்கல சூத்திரத்தையும் தரிக்க வேண்டும்.
11. உடுத்த போர்த்த இரு வஸ்திரங்களையும் கொடுக்க வேண்டும். தேவியின் அருகில் ஸர்வாலங்கார பூஷிதையாக மஹாலக்ஷ்மியை ஸ்தாபிக்க வேண்டும்.
12. ஆசார்யர் சுவாமி அம்பாளுக்கு ரக்ஷõ பந்தனத்தை செய்து சிவத்விஜ குலத்தவர் சிவாகம சமர்த்தர்களுக்கும் ரக்ஷõ பந்தனத்தை செய்ய வேண்டும்.
13. தலைப்பாகை அங்க வஸ்திரத்துடன் பஞ்சாங்க பூஷிதர்களாக இருக்கும் குருவினால் ஏவப்பட்ட வேறொரு ஆசார்யன்
14. இரு வஸ்திரங்கள் மோதிரம் இவை உடையவராய். தன் சரீரத்தை விஷ்ணு மயமாகப் பாவித்து இரண்டு கைகளால் தரித்த கெண்டியால் ஹ்ருதய மந்திரத்தினால் ஜலத்தை கொடுக்க வேண்டும்.
15. மற்றொரு கரத்தில் இருவர்க்கும் விபூதி கொடுத்து பிறகு புண்யாஹத்தை செய்ய வேண்டும். பின் வேத சூத்திரங்களையும் ஜபிக்க வேண்டும்.
16. அக்னியில் பதினாறு சமித்துகளை சிவ அங்க மந்திரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். வெல்லம் பால், நெய், சேர்ந்த மதுவர்க்கத்தை ஹ்ருதய மந்திரத்தால் சுவாமிக்கு கொடுத்து
17. தத்புருஷ மந்திரத்தினால் ஆசமனத்தைக் கொடுத்து மறுபடியும் ஹ்ருதய மந்திரத்தினால் பதினாறு முறை நெய் ஹோமம் செய்து மறுபடியும் பதினாறு எண்ணிக்கையில் நெய்யினால் ஹோம் செய்து
18. காய்கறிகளுடன் கூடிய நைவேத்யத்தை செய்து சாந்தியின் பொருட்டு ஹ்ருதய மந்திரத்தால் ஹோமம் செய்து தாம்பூலத்தையும் கொடுத்து மிகவும் காரணராயுள்ள ஸ்வாமியை ஸ்தோத்தரித்து
19. இரண்டு தால அளவும் முடிச்சுடன் கூடிய முற்பது தர்பைகளால் ஆன கூர்ச்சத்தை சிவ ஹஸ்தமாக தியானித்து தேவியின் இதயத்தில் ஹ்ருதய மந்திரத்தால்
20. தேவியின் வலது காதில் ஆசார்யர் மூலமந்திரத்தை ஜபிக்க வேண்டும். இடப்பக்கம் நெல், அரிசியுடன் கூடிய ஸ்தண்டிலத்தில் அம்மிக்கல்லை வைக்கவும்.
21. முன்மாதிரி சுவாமியின் கையினால் தேவியின் வலது பாகத்தை பிடித்து ஹ்ருதிய மந்திரத்தால் ஆசார்யர் பாத தலத்தை அம்மியின் மேல் வைக்க வேண்டும்.
22. சிவபெருமான் உத்தரவினால் பட்டாடை முதலியவற்றால் விஷ்ணுவை சந்தோஷிக்கச் செய்ய வேண்டும். முன்போல் தர்பையால் அமைத்த கையை நான்காக அமைத்து
23. சிவ ஹஸ்த்தம் இரண்டு தேவியின் கையிரண்டு என எண்ணி பிறகு அக்னியை பிரகாசிக்கச் செய்து அந்த கைகளால்
24. மிகு வெண்மையானதும், அஸ்த்ர மந்திரத்தால் சோதிக்கப்பட்டதுமான நெற்பொறிகளை அக்னியில் சேர்க்கவும். மேற்கூறிய வேறொரு ஆசார்யனுடைய மோதிரம் அணிந்த கையினால்
25. அந்த அக்னியில் ஹ்ருதய சிவ மந்திரத்தால் பொறியை கொடுத்து ஹோமம் செய்து ஆசார்யர் அக்னியை பிரதட்சிணம் செய்து அம்மியை தொட்டு பிறகு
26. இரண்டாவது முறை பிரதட்சிணம் செய்து, பொறி ஹோமம் செய்ய வேண்டும். மூன்றாவது பிரதட்சிணம் செய்து பொறியுடன் வ்யாஹ்ருதி ஹோமமும் செய்ய வேண்டும்.
27. நூற்றி எட்டு தடவை ஹோமம் செய்து கடைசியில் பூர்ணாஹுதியும் செய்து அக்னியில் இருக்கும் சிவத்தை ஸாங்கமாக பூஜித்து
28. சிவாக்னியை விஸர்ஜனம் செய்து அந்த விபூதியையும் நீக்க வேண்டும். தேவர்களை நிறைய அளவு சந்தனம், ஸ்வர்ணம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.
29. பின் நான்காம் நாளில் செய்ய வேண்டிய க்ரியைகளைச் செய்ய வேண்டும். அதே நாளிலோ பகலிலோ நடு இரவிலோ
30. பஞ்ச ஸம்ஸ்காரங்களினால் ஸம்ஸ்கரிக்கப்பட்ட அக்னியால் சமித்து, நெய், அன்னம் முதலியவற்றால் சிவ மந்திரத்தால் நூறும் அங்க மந்திரத்தால் பத்து ஆஹுதியும் செய்ய வேண்டும்.
31. அகோராஸ்த்ர மந்திரத்தால் நூறு ஆஹுதியும் சில மூலமந்திரத்தால் பூர்ணாஹுதியும் செய்யவும். சில சக்திகளை ஐந்து வகை தோல்களினாலோ வஸ்திரங்களாலோ ஸயனம் அமைத்து
32. கவச மந்திரத்தால் அவற்றை பூஜித்து புதிய ஊஞ்சலில் தம்பதிகளை ஸ்தாபித்து அப்பம் முதலியவற்றை நிவேதித்து ஸந்தோஷிக்கச் செய்ய வேண்டும்.
33. ஸ்நபனம் செய்தோ, செய்யாமலோ இறுதியில் சிவோத்ஸவத்தை செய்ய வேண்டும். ஆஸநத்தோடு கூடியதாக மூலபிம்பத்தையோ உத்ஸவ பிம்பத்தையோ ஸ்தாபிக்க வேண்டும்.
34. தேவன், தேவி, மஹாலஷ்மி இவர்களுக்கு அக்னியை ஸ்தாபித்து அக்னிக்கு வலப்புறமோ இடப்புறமோ பிரம்மாவை விஷ்ணுவையும் மாற்றி இருத்தி
35. இவ்வாறே எல்லா தேவர்களுக்கும் விவாஹகார்யத்தை செய்ய வேண்டும். தனி பீடமுள்ள தேவியர்களுக்கும் மூல லிங்கத்திற்கும் இவ்வாறே செய்ய வேண்டும்.
36. மேலும் லக்ஷ்மி மஹா விஷ்ணுவுடன் பிரம்மாவையும் விட்டுவிட்டு முன் சொல்லியபடி அவர்களை ஸ்தண்டிலத்திலேயே சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும்.
37. மூலலிங்க விவாக விஷயத்தில் வெளியில் கருவறையிலிருந்து வெளி மண்டபத்தில் ஸ்தண்டிலத்தில் தேவியை ஆவாஹித்து விவாஹ கர்மாவை செய்ய வேண்டும்.
38. கல்யாண மூர்த்தியின் பிரதிஷ்டையை யார் செய்கிறாரோ அவர் தன் பந்து ஜன வகைகளாலும் எல்லா மக்களும் போற்றப்படுபவராய்
39. ஆயுள், லக்ஷ்மி கடாக்ஷம் புத்திர பவுத்திரர்களுடன் கூடியவராய் பூவுலகில் அரசனுக்கும் கிட்டாத சுகத்தை அடைந்து
40. சரீர முடிவில் எதை அடைந்து மீண்டும் திரும்புவதில்லையோ அப்பேர்பட்ட சிவபதத்தை பக்தர்கள் அடைவார்கள்.
இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் கல்யாண கர்மவிதியாகிய ஐம்பத்தி ஒன்பதாவது படலமாகும்.