சிந்தூர அருண விக்ரஹாம்..
இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது.சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது. அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான்.அப்பொழுதே அமபாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள்.ஏன் உருவத்தோடு தோன்றினாள்.அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.
அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ? அவள் எப்படியிருப்பாள் ? ""தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் "" என்கிறது துர்கா ஸூக்தம்.அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.
அவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும். மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்"அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள் என்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவள் சிகப்பு வர்ணத்தில் ."ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்பு வடிவம் கொண்டாள்.
அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன. நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்.
தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் "" என்கிறது துர்கா ஸூக்தம்.
இதே ஸ்ரீசூக்தத்தில் ஹிரண்ய வர்ணாம் அப்படின்னே ஆரம்பிக்கறது.
இதே போல இன்னும் சில சூக்தங்களில் வேறு நிறம்.
எப்படியெல்லாம் நினைக்கிறோமோ வணங்குகிறோமோ அப்படியெல்லாம் தோன்றுகிறாள் பராசக்தி, இல்லையா.
மேலும் அவள் அருள் கிட்டிட...... அவள் நாமம் உரைப்போம்.
லலிதா ஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடி
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ 1 "
சிதக்னி குண்ட ஸ்ம்பூதா தேவகார்ய சமுத்யதா !'
அம்மா! மகாராணி! உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் அமர்ந்திருப்பவளே ! சித்தமான அக்னிகுண்டத்திலிருந்து தோன்றியவளே! தேவர்களின் கார்யசித்திக்காக எழுந்து அருளியவளே. உனக்கு நமஸ்காரம். இதில் ஒரு விசேஷம் பார்த்தீர்களா ! உலகத்தின் ஐந்தறிவு அல்லது ஆறறிவு பெற்ற எந்த உயிராக இருந்தாலும் எந்த மொழியில் பேசினாலும் அதனுடைய முதல் வார்த்தை""அம்மா"தான்.
ஆங்கிலத்தில்வரும் மதர் என்ற வார்த்தையே வடமொழியில் உள்ள மாதா என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.லலிதா ஸ்கசரநாமத்தில் வரும் முதல் வார்த்தையே மாதா தான்.நம் எல்லோருக்கும் ஆதி மாதா அவள், நாம் எல்லோரும் அவள் குழந்தைகள். அம்மாவுக்கும் குழந்தைக்கும் எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பிணப்பு உண்டு.பிறந்த சிறு குழந்தை 6 மாதம் வரையில் தனக்கு எல்லாமே அம்மாதான் என்று நினைத்துக்கொள்ளும் மற்ற உறவுகள் தந்தை உள்பட பின்னால்தான்.இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் குரலை கர்ப்பகாலத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடுமாம். அதனால்தான் ஸ்ரீமாதா என்ற முதல் வார்த்தையோடு ஆரம்பிக்கிறது
ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ
எனக்கு தாயாராக இருந்தாலும் அவள் மஹாராணி, அதுமட்டுமல்ல அவள் இருப்பதோ சிம்ஹாசனத்தில். இந்த எளியவனுக்கு தாயாராக இருப்பதால் அவளை எளியவளாக எண்ணி விடாதீர்கள்.அவள் அகில உலகுக்கும் மஹாராணி.
முத்து ஸ்வாமி தீக்க்ஷதர் ஸ்ரீ மாதா ஷிவவாமாங்கே என்ற பேகட கீர்த்தனையில் இவ்வாறு பாடுகிறார். " ஸ்ரீ மாதா சிவவாம மாங்கே ஸ்ரீ சக்ரரூப தாடங்கே மாமவ1ஸ்ரீ மஹாராஜ்ஞீ வதநஸ்-ஸசாங்கே சித்ப்ரதி பிம்பே மாமவ"என்று லலிதாஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடியை வைத்தே திருச்சி அகிலாண்டேஸ்வரியைப் பாடினார்.
சிதக்கினி குண்ட ஸ்ம்பூதா சித் என்பது உள் மனதுக்குள் இருப்பது யோகிகளின் கடைசி நிலை சித் என்ற அந்த நிலை வந்து விட்டால் நாம் வேறு கடவுள் வேறு என்ற நிலை போய்விடும்.கடவுளை நம் சித்தத்திலேயே பார்க்கலாம்."சித்தத்துனுள்ளே சிவலிங்கம் காட்டி"என்ற நிலை. மனசு, புத்தி, அஹங்காரம், அந்தகரணம் அடுத்தநிலை சித்தம்.இவையெல்லாம் சித்தத்தில் ஒடுங்கும். இதைத்தான் பாரதி "அந்த கரணமெல்லாம் சிந்தையிலே ஒடுங்கி"என்கிறார்.அப்பேற்பட்ட சித்தமாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மாதா.
தேவ கார்ய சமுத்பவா
தேவர்களின் கார்யமான அசுரர்களை வதம் செய்யவேண்டும் என்பதற்காக சித் அக்னி குண்டத்திலிருந்து வேகமாக மிகுந்த ஆற்றலுடன் தோன்றினாள்.
நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!
கண்ணை விவரித்து விட்டு மூக்கை விட முடியுமா? நாஸாதண்டம் என்பது மூக்கினுடைய நடு தண்டு பாகமும் மூக்கும் சேர்ந்தது. அது எப்படி இருக்கிறது என்றால் அப்பொழுதுதான் பாதி மலர்ந்தும் பாதி மலராத செண்கப்பூப் போல இருக்கிறதாம். அதுவும் இளம் சிவப்பு நிறம்தான். அப்படிப் பட்ட மூக்கில் அம்பாள் மூக்குத்தி அணிந்திருக்கிறாள். அதை வர்ணிக்க என்னால் முடியாது. இருந்தாலும் முயன்று பார்க்கிறேன்.வானத்தில் இருக்கும் எல்லா நக்ஷ்த்திரங்களின் ஒளியையும் அப்படியே திரட்டிஒரு சிறு மூக்குத்தியாக அணிந்திருக்கிறாளாம். மூக்குத்தியின் மகிமை தெரியவேண்டுமானால் கன்யா குமாரிக்குப் போய் அவளுடைய மூக்குத்தி எவ்வாறு ஜ்வளிக்கிறது என்று பார்த்தால் புரியும். கலங்கரை விளக்கம் போன்று ஒரு காலத்தில் கப்பல்களை ஆகர்ஷிக்குமாம்.
முத்துமூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன தங்கத்தினால் முடிந்திட்ட தாலியழகும் அடியானாற் சொல்ல திறமோ அழகான காஞ்சியில் புகழாக விளக்க விளங்கிடும் அம்மை காமாக்ஷி உமையே ஞாபகம்தான் வருகிறது.
மறுமுறை படியுங்கள்
நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!
தேவியின் முகம் தெரியும்.
அவள் உங்களுக்கு அருள் புரிய சிரிப்பாள்.
4 வது வரியிலிருந்து 20ஆவது வரி வரைக்கும் லலிதா ஸகஸ்ரநாமத்தில் அம்பாளின் அழகான கேசாதி பாத வர்ணனைதான். அதிலிருந்து ஒரு வரியைப் பார்க்கலாமா !
அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா
அம்பாளின் நெற்றியை வர்ணிக்கும் பகுதி.அளகம் என்பது நெற்றியின் இரு பக்கங்களின் இருக்கும் பகுதி.அங்குதான் அம்பாளுடைய சுருண்ட கூந்தல் காற்றில் அழகாக முன்னுச்சியில் இரு புறமும் ஆடிக்கொண்டு இருக்கும். சரி அம்பாளுடைய நெற்றி எப்படி இருக்கிறது.அதுதான் அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா மாதிரி இருக்கிறது. என்ன சரியாகப் புரிய வில்லையா? கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாமா. அவளுடைய நெற்றி எட்டாநாள் சந்திரன் போல் இருக்கிறது. எல்லோரும் நெற்றியை பிறைச் சந்திரனுக்குத்தான் ஒப்பிடுவார்கள் ஆனால் இங்கு வேறுமாதிரி.ஆதி சங்கரர் செளந்தர்ய லகிரியில் அம்மா உன் தலையில் ஒரு பாதி அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா சந்திரன் மாதிரி இருக்கிறது. நெற்றியில்மறு பாதி சந்திரன் இருக்கிறது. இரண்டையும் அப்படியே சேர்த்து வைத்துப் பார்த்தால் முழுநிலவாகி விடும். அப்படி பௌர்ணமி பூர்ண சந்திரன் போல இருப்பதுதான் உன்முகம் என்கிறார்.இப்போது புரிகிறதா ஏன் அபிராமி பட்டர் அமாவாசையன்று பௌர்ணமி என்று கூறினார்.அவர் அம்பாளின் முகதரிசனம் செய்து கொண்டு இருந்தபோது கேட்ட கேள்விக்கு வந்த பதில்.பிறைச் சந்திரன் என்று சொன்னால் அது நெற்றியோடு பொருந்தாது. இரண்டு பக்கமும் தூக்கிக்கொண்டு இருக்கும் அழகாக இருக்காது.ஆனால் பாதி பிறை எட்டம்நாள் சந்திரன் சமமாக இருக்கும். அதை அப்படியே அம்பாளின் நெற்றியாக பாவனை செய்து இருபுறமும் சுருண்ட கூந்தல் காற்றில் அலைபாயும்படி கற்பனை செய்து பார்த்தால் அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா என்ற வரிக்கு அர்த்தம் புரியும்.
குமார் ராமநாதன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக