செவ்வாய், 29 டிசம்பர், 2020

அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி பூஜை


அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி பூஜை

05 : 08 : 20 அன்று நமது பாரத பூமியில் அயோத்தி மாநகரில் ஸ்ரீ ராமஜென்ம பூமியில் ப்ரம்மாண்டமான ஸ்ரீ ராமர் ஆலயம் அமைக்க பூமி பூஜை செய்ய ஏற்பாடுகள் அதி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

ஸ்ரீ வேதவ்யாஸ மஹரிஷிகளால் அருளிச் செய்யப்பட்ட ப்ரஹ்மாண்ட மஹாபுராணத்தின் உத்தரபாகத்தில் "காஞ்சி காமாக்ஷி தேவி வர்ணனம்" எனப்படும் முப்பத்தி ஒன்பதாவது அத்யாயமும், காஞ்சிபுர மாஹாத்ம்யம் எனப்படும் நாற்பதாம் அத்யாயமும் உள்ளன. இதில் நாற்பதாம் அத்யாயத்தில் ஸ்ரீ தசரத மஹாராஜா காஞ்சி ஷேத்ரத்தில் ஸ்ரீ காமாக்ஷி அம்பாளை ஸ்தோத்ரம் செய்த ஸ்லோகங்கள் உள்ளன. {124 - 129}

அன்றைய தினம் அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று தன்னுடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தி ஒன்பதாவது ஆசார்யாள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவர்களின் வார்ஷிக ஜயந்தி இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்த அயோத்யா விவகாரத்தில் புது பெரியவா மிகப்பெரிய முயற்சி செய்தது யாரும் மறந்து விட கூடாது. பெரியவா இன்றும் நம்மோடு இருக்கிறார் என்று நிரூபிப்பதற்காக தான் இந்த பூமி பூஜை பெரியவா ஜென்ம நட்சத்திரத்தில் வருகிறது. பெரியவா இன்று இருந்திருந்தால் அயோத்யா தீர்ப்பு வந்த நாளன்றே கோவில் கட்டுவதற்கு முதலில் நின்று இருப்பார். நமது துரதிர்ஷ்டம் பெரியவா நம்மோடு இல்லாமல் சுஷ்ம ரூபமாக இருந்து கொண்டு அவரின் நட்சத்திர தினத்தன்று நடைபெற இருக்கிறது. ராமஜென்ம பூமி விஷயத்தில் ஆரம்ப கால கட்டத்தில் தன்னை முழுமையான அர்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டவரும், தண்ணலம் பாராமல் அயராமல் உழைத்தவருமான காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் லட்சியம் இன்று நினைவாகிறது. வரும் ஐந்தாம் தேதி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார்கள். என்னுடைய யோஜனை அதாவது ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ராம ஜென்ம பூமியில் ஓரு சிலை வைக்க வேண்டும் என்பதே. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்திடம் கேட்டு கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக நாம் எல்லோரும் பிரதமருக்கு கடிதம் மூலமாகவும் மெயில் மூலமாகவும் அனைவரும் அனுப்பினால் நிச்சயம் பிரதமர் மோடி ஜி அவர்கள்  ஓத்துழைப்பார். நமது பெரியவா சிலையும் வரலாற்றில் இடம் பெறும்.
பாரத தேசத்தில் எந்த ஒரு சன்னியாசியும் செய்ய அஞ்சிய போது நம் புது பெரியவா தான் முதலில் நின்றார் என்பதை நாம் இந்த தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

ஜய ஜய சங்கர ஜயேந்திர சங்கர ஜய

ஸ்ரீ ராமபிரானின் திருவுள்ளமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
                   பாரத் மாதாகி ஜெய் வந்தே மாதரம் 

கருத்துகள் இல்லை: