வெள்ளி, 2 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 14

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 14




இளையாழ்வானை அழைத்துவரச் சொல்லுதல்

ஆளவந்தார் காஞ்சியிலிருந்து திருவரங்கம் புறப்பட்டுச் சென்றபின்பு இளையாழ்வானின் நினைவாகவே இருந்தார். நமக்குப் பின்பு இந்த திருவரங்கம் ஆஸ்தானத்தில் அனைத்துமாக இருந்து இளையாழ்வான்தான் வைஷ்ணவ சம்பிரதாயத்தை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்பதில் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

ஆளவந்தாருக்கும் வயது ஆகிக்கொண்டே சென்றது. முன்போல் செயல்பட முடியவில்லை. நினைத்துக் கொண்டார் - தான் திருநாடு அலங்கரிக்கப்போகும் நாள் வந்துவிட்டது என்று. உடனே, பெரிய நம்பிகளை அழைத்தார். தன்னுடைய சிஷ்யர்களிடமும், பெரிய நம்பிகளிடமும் இளையாழ்வானைப் பற்றி விசாரித்தார்.

"இளையாழ்வான் அத்வைதக் கொள்கையுடைய யாதவப் பிரகாசரிடம் காலட்சேபம் பண்ணுவதை நிறுத்தி விட்டாரே. இப்பொழுது என்ன செய்கிறார்?" என்று கேட்டார் ஆளவந்தார். உடனே, அங்கிருந்தோர் இளையாழ்வான் இப்போது சாலக்கிணற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துவரும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் திருக்கச்சி நம்பிகளிடம் கற்றுக் கொள்கிறார் என்றார்கள். திருக்கச்சி நம்பிகளுடன் இருப்பது, நல்லது என்று ஆளவந்தாருக்குத் தோன்றியது.

🍀💐 சிஷ்யர்களை அழைத்தார்

வயோதிகத்தால் தான் மிகவும் தளர்ச்சியடைந்ததைக் கருதி, சிஷ்யர்களை அழைத்து ஆளவந்தார் கூறியது:

"இறைவனே நம் வாழ்க்கை. இறைவன் மீது பூரணமாக நம்பிக்கை வைத்து, அவன் பாதங்களே தனக்கு அடைக்கலம் என்று இருப்பவன் உண்மையான பக்தன். கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், ஒருவனுக்குத் தன் மீதே நம்பிக்கை இல்லையென்று அர்த்தம். நம் உள்ளத்தின் உருவகம் இறைவன். நாம் அவனிடம் உள்ளோம். அவன் நம்மிடம் உள்ளான். மனித சமுதாயத்திற்குச் சேவை செய்யவே இறைவன் நம்மைப் படைத்துள்ளான்!"

அறிவுகூர்மை நிரம்பப்பெற்ற இளையாழ்வார் சில உபனிஷத் சொற்றொடர்களுக்கு யாதவப்ரகாசர் கூறிய பொருத்தமற்ற பொருளை ஏற்க மறுத்தார்.
. *தஸ்ய யதா² கப்யாஸம் புண்ட³ரீகம் ஏவமக்ஷிணீ* என்ற சாந்தோக்ய உபனிஷத் (1-6-7) சொற்றொடருக்கு “குரங்குகளின் பின்புறம் போல் சிவந்த கண்களை உடையவன்” என்று யாதவப்ரகாசர் பொருள் கூறியதைக் கேட்டு கண்ணீர் விட்டார் இளையாழ்வார்.
8.சூரிய ஒளியால் அப்போது மலர்ந்த அழகிய தாமரைப் பூக்களைப் போன்ற திருக்கண்களை உடையவன் என்ற சிறப்புடைய பொருளைப் பகிர்ந்தார் இளையாழ்வார்.

 ஆளவந்தாருடைய ஆணையை நிறைவேற்றி இளையாழ்வாரை திருவரங்கத்திற்கு அழைத்து வர கச்சி நகரம் நோக்கிப் புறப்பட்டார் பெரியநம்பிகள்.
 பெரியநம்பியும் காஞ்சிபுரம் சென்றடைந்தார். அங்கு சாலைக்கிணற்றுக்கு அருகே நின்று ஆளவந்தாரின் ஸ்தோத்ரரத்தினத்தில் ஒரு ச்லோகத்தை இளையாழ்வார் காதில் விழும்படி சேவித்தார்.
38. அற்புதமான பொருள் பதிந்திருக்கும் ஸ்தோத்ரரத்தினத்தில் பால் ஈர்க்கப்பட்ட இளையாழ்வார், பெரியநம்பியை வணங்கி அதன் விபரம் கேட்க பெரியநம்பிகளும் ஸ்தோத்ரரத்தினத்தை பற்றியும், அதை எழுதிய ஆளவந்தாரைப் பற்றியும், அவருடைய தற்போதைய நிலைமை மற்றும் அவா பற்றியும் விளக்க இளையாழ்வார் உடனே ஆளவந்தாரை கண்டிட வேண்டும் என்று பெரியநம்பிகளுடன் திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்.

இவ்வாறு அவர் கூறிவிட்டு திருவரங்கம் அரங்கநாதன் கோவிலுக்குச் சென்று, அரங்கனின் சந்நிதானத்தில் சிறிது நேரம் அமைதியாக நின்றார். பிறகு, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். 'நான் தெரிந்தோ தெரியாமலோ இதுவரை செய்திருக்கூடிய பிழைகளைத் தேவரீர் பொறுத்தருள வேண்டும்!' என்று இறைஞ்சினார். அருகிலிருந்த பக்தர்கள் அழுதார்கள். ஆளவந்தார் தம்முடைய முடிவு மிக அருகிலிருப்பதாகக் கூறினார்.

 பெரிய நம்பிகள் இளையாழ்வானை அழைக்கச் செல்லுதல்

ஆளவந்தாரின் சீடர்களில் முக்கியமானவர்கள் ஐந்து பேர். அவர்கள் 1. பெரிய நம்பிகள் 2. பெரிய திருமலை நம்பிகள் 3. திருக்கச்சி நம்பிகள் 4. திருக்கோட்டியூர் நம்பிகள் 5. திருமாலையாண்டான். இவர்கள் ஐந்து பேருக்குமே ஆளவந்தார் தான் இருக்கும் பொழுது, முக்கியமான சில கடமைகளையும், பொறுப்புகளையும் கொடுத்தார்.

எப்படி அரசன் ஒருவன் தான் இறக்கும் தருவாயில், இளவரசனுக்குத் தேவையானவற்றை பூர்த்தி செய்து கொடுக்கிறானோ, அவனைப்போல இங்கு மன்னராக ஆளவந்தார் இருக்கிறார். இளவரசனாக இளையாழ்வான் இருக்கிறார். இப்போது இந்த ஆளவந்தாரான அரசனுக்கு, தனக்குப்பின் வைஷ்ணவத்தைத் தன் அகன்ற தோள்களால் தாங்கப்போகும் வருங்காலத் தலைவர் இவர்தான் என்று எப்போது தோன்றியதோ, அப்பொழுதிலிருந்து இளையாழ்வான் இளவரசனாகிவிட்டார். இப்போது இந்த வருங்கால இளவரசருக்கு வைஷ்ணவ சாம்பிராஜ்யத்தை திறமையுடன் நடத்த, ஐந்து சீடர்களால்தான் முடியும் என்று, ஐந்து சீடர்களுக்கும் ஒவ்வொரு கடமையைத் தந்தருளினார் ஆளவந்தார். "என்னுடைய காலத்திற்குப்பின் உங்கள் ஐந்து பேருக்கும் ஒவ்வொரு கடமை இருக்கிறது. அதை நிறைவேற்றபோவது நீங்கள் தான்" என்றார்.

இப்பொழுது பெரிய நம்பிகளை அழைத்து, "நீர் போய் இளையாழ்வானை அழைத்து வாரும்" என்றார். அக்கட்டளையை ஏற்றுக்கொண்ட சீடர் பெரிய நம்பிகளும் உடனே காஞ்சிபுரம் புறப்பட்டுச் சென்றார்.

காஞ்சிபுரத்திற்கு வந்து சேர்ந்த பெரிய நம்பிகள் திருக்கச்சி நம்பிகளைச் சந்தித்து, ஆளவந்தார் இளையாழ்வானை அழைத்துவரச் சொன்ன விதமாக விசயங்களைச் சொன்னார். திருக்கச்சி நம்பிகளும் மிகவும் மகழ்ச்சியடைந்தார். "ஆளவந்தாருக்குப் பிறகு பட்டம் ஏறத் தகுதியுடையவர் இளையாழ்வான் மட்டுமே!" என்றார் பெரிய நம்பிகள்.

பெரிய நம்பிகள், இளையாழ்வான் சந்திப்பு நாளை நிகழும்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

கருத்துகள் இல்லை: