வெள்ளி, 2 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 13

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 13




🌺🌹 திருக்கச்சி நம்பிகளை கட்டாயப்படுத்துதல்

இளையாழ்வான் மறுபடியும் திருக்கச்சி நம்பிகளிடம் சென்று, யாதவப் பிரகாசர் தன்னை காலட்சேபம் பண்ண வர வேண்டாம் என்று சொன்னதை சொல்லி தன்னை சீடராக ஏற்கும்படி சொன்னார். இப்போதும் திருக்கச்சி நம்பிகள் மறுத்து விட்டார். மறுபடியும் காஞ்சி பேரருளானனுக்கு நீர் எடுத்து வரும் சேவையைச் செய்யுமாறு பணித்தார். இளையாழ்வானும் அவ்வாறே செய்தார்.

என்ன செய்தாலும், 'திருக்கச்சி நம்பிகள் நமக்கு குருவாக ஆக மாட்டுறாரே. என்ன செய்யலாம்?' என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.

மூன்று பேரின் எச்சில் இலைகளைச் சாப்பிடுவதன் மூலம், நாம் செய்த பெரும் பாவத்தை போக்கிக் கொள்ளலாம். வயதில் மூத்தவர்களான பெரியோர்கள், ஞானிகள், குரு. இவர்கள் உண்ட மிச்சத்தை ஒருவன் உண்டானானால் அவன் தன்னுடைய பிறவிப் பயனைக் கடந்து விடுவான். இதனால், திருக்கச்சி நம்பிகளை தம் வீட்டில் அமுதுண்ண அழைத்தார் இளையாழ்வான்.

ஏனெனில், தன்னை சிஷ்யானாக திருக்கச்சி நம்பிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் உண்ட எச்சிலை உண்டாவது பிறவிப் பயனை நீங்கி, அந்த வழியிலாவது அவரை குருவாக ஏற்றுக் கொள்ளலாம் என்று எண்ணினார் இளையாழ்வான். இதை அறிந்த திருக்கச்சி நம்பிகளோ, "நான் நாளை அமுதுண்ண வருகிறேன்" என்று கூறிவிட்டார். இதனால் இளையாழ்வனுக்கு மிக்க மகிழ்ச்சி.

🌺🌹 பேரருளாளனும் திருக்கச்சி நம்பிகளும்

தன் மனைவி தஞ்சம்மாளிடம் சொல்லி மறுநாள் திருக்கச்சி நம்பிகள் அமுதுண்ணுவதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். இதனிடையே திருக்கச்சி நம்பிகள் பேரருளானுக்கு ஆலவட்டம் வீசிக்கொண்டிருக்கையில், பெருமாளிடம் கேட்டே விட்டார். "இந்த இளையாழ்வானிடம் இருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை. நீரே வழி சொல்லும் தேவரீரே!"  என்றார். பேரருளாளனும், "திருக்கச்சி நம்பிகளே!  இளையாழ்வானை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டிதானே?!" என்றார். "அது வர்ணாசிரமத்திற்கு எதிரானது" என்று பெருமாளிடம் கூறிவிட்டார்.

இளையாழ்வான் அமுது தயாராகியதும், 'பொழுதாகி விட்டதே இன்னும் திருக்கச்சி நம்பிகள் வரவில்லையே' என்று, திருக்கச்சி நம்பிகளைத் தேடி தெருவின் வழியே தேடிச்சென்றார்.

இளையாழ்வான் இந்தப் பக்கம் அவரைத் தேடிச்செல்ல, இவரோ தெருவின் மறுவழியாக வந்தார். தஞ்சம்மாளிடம் வேலைப்பளு அதிகம் இருப்பதால் தான் உடனே கிளம்ப வேண்டியதாக சொன்னார். தஞ்சம்மாளும் அவருக்கு வீட்டு வாசலிலேயே அமுதமிட்டாள். அவர் உணவருந்தி முடிந்ததும், நான் செல்கிறேன் என்று தஞ்சம்மாளிடம் கூறிவிட்டு சென்று விட்டார்.

தஞ்சம்மாளும் அவர் பிராமணன் அல்லாதபடியால் உணவருந்திய மிச்சத்தை கொட்டிவிட்டு, தானும் தலை மெழுகி, அந்த இடத்தை மெழுகி, மீதமிருந்த உணவையும் கொட்டினார். இப்பொழுது இளையாழ்வான் வந்தார்.

தஞ்சம்மாளிடம் திருக்கச்சி நம்பிகள் பற்றி கேட்க, திருக்கச்சி நம்பிகள் வந்து உணவருந்தியதையும், அந்த இடத்தை சுத்தம் செய்ததையும் சொன்னாள். இளையாழ்வானுக்கு மிகுந்த வருத்தம். "அவர் உணவருந்திய மிச்சத்தை உண்டு சந்தோசப்படலாம் என்று நினைத்தேன். அதற்கும் வழி இல்லையா!" என்று அழுது புலம்பினார்.

பிறகு, வழக்கம் போல சாலக்கிணற்றிலிருந்து நீர் எடுத்து கைங்கரியம் செய்தார் இளையாழ்வான். திருக்கச்சி நம்பிகள் இனி தமக்கு குருவாக கிடைக்க மாட்டார் என்பதை உணர்ந்து வேறு குருவைத் தேட நினைத்தார். பேரருளாளனிடம் பிரார்த்தித்தார்.

ராமானுஜர்

திருக்கச்சிநம்பி ராமானுஜரிடம் பெருமாள் சொன்ன விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார். நானே அனைத்தும்; நானே பரப்பிரம்மம். ஜீவர்களுக்கும் இறைவனுக்கும் வித்தியாசம் உறுதியாக இருக்கிறது.
இனியும் பிறக்காமல் முக்தியடைய வேண்டுமென விரும்புவோர், என்னையே சரணமடைய வேண்டும். சரணாகதி தத்துவமே உயர்ந்தது. ஒருவன் இறக்கும் சமயத்தில் என்னை நினைக்க மறந்து விட்டாலும் பரவாயில்லை; காலமெல்லாம், அவன் என் பக்தனாய் இருந்ததற்காக அவனுக்கு நிச்சயமாக முக்தி அளிப்பேன்.
அவர்கள் இறந்தவுடனேயே வைகுண்டத்தை அடைந்து விடுகிறார்கள். பெரிய நம்பியே இனி உனக்கு குரு. அவரது திருவடிகளைப் பற்றிக் கொள்,. இதுதான் ராமானுஜருக்கு, பெருமாள் சொல்லி அனுப்பிய விஷயம். ராமானுஜரோ குருவைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்.
வைணவத்தலைவர் ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக பெரியநம்பி பெரிதாக மதிக்கப்படுபவர். பெருமாளே அவரைப் பற்றிக் கொள் என கூறியபிறகு, இனி குருவைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. இதன் காரணமாக அவர் மகிழ்ச்சிக் கூத்தாடினார்.
தனக்காக பெருமாளிடம் பேசி தன் சந்தேகத்தை தீர்த்து வைத்ததுடன், ஒரு குருவையும் அடைய வழிகாட்டிய திருக்கச்சிநம்பியின் கால்களில் விழப்போனார் ராமானுஜர். அவர் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், சுவாமி! தங்களை விட பூமியில் உயர்ந்தவர் யாருமில்லை, என்றவாறு அவர் கால்களில் விழுந்துவிட்டார். இந்தக் கணத்தில் இருந்து ராமானுஜர் வீட்டை மறந்தார்.
மனைவியை மறந்தார். சொந்தபந்தம் எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீட்டில் சொல்லிக் கொள்ளாமலேயே ஸ்ரீரங்கத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் ஸ்ரீரங்கமடத்தில் ஆளவந்தாருக்கு பிறகு மடத்தின் பொறுப்பில் இருந்த திருவரங்க பெருமாள் அரையர் சிஷ்ய கோடிகளிடையே பேசிக் கொண்டிருந்தார்.
ஆளவந்தார் வேத விளக்கங்களில் கரை கண்டவர். அரையரும் இதில் வல்லுநர் தான் என்றாலும், ஆளவந்தாரின் அளவுக்கு தேர்ந்தவர் அல்ல. எனவே அவர் சிஷ்யர்களிடம், சீடர்களே! நீங்கள் என்னிடம் மரியாதை வைக்கும் அளவுக்கு நான் உயர்ந்தவன் அல்ல. பரமனுக்கு பூஜை செய்கிறேன்; அவன் புகழ் பாடுகிறேனே ஒழிய ஸ்ரீஆளவந்தாருக்கு பிறகு, அவரைப் போலவே வேத விளக்கங்களை உங்களுக்கு என்னால் தர முடியவில்லை.
இவ்விஷயத்தில் மிகவும் அற்ப சக்தியுள்ளவனாகவே இருக்கிறேன். வேத விளக்கங்களில் விற்பன்னரான, ஒருவர் நமது மடத்துக்கு தலைவராக வேண்டும். நானும், அவரது தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். ஆளவந்தார் முக்தியடைவற்கு முன்பு, ராமானுஜரை அழைத்து வரச் சொல்லியிருந்தார். அவரே, ஒருவரை அழைக்கிறார் என்றால், அந்த மகான் கல்வியில் மிகச்சிறந்தவராகவும், வேத விளக்கங்களை தெளிவாக அறிந்தவராகவும் இருக்க வேண்டும். இளைஞராயினும் கூட, அவரது தலைமையின் கீழ் இந்த மடம் செயல்படுவதே சரியானதென்று எண்ணுகிறேன்.
யாராவது ஒருவர் அவரைச் சந்தித்து, அவரை இங்கு அழைத்து வாருங்கள். ஆளவந்தார் மறைந்த நாளில் அவர் இங்கு வந்தார். அப்போது அவர் பேசப்பேச ஆளவந்தாரின் கை விரல்கள் நிமிர்ந்ததை என்னால் மறக்க முடியவில்லை, என்றார். நமது மகான்களின் வரலாறை இளைய தலைமுறை கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இதனால் தான். இப்போதெல்லாம், ஒன்றும் தெரியாதவர்கள் பலர் பதவிக்காக போட்டி போட்டு, தங்களையும் அழித்துக் கொண்டு, தாங்கள் சார்ந்துள்ள நிறுவனங்களையும் அழித்து விடுகிறார்கள்.
தெரியாத ஒன்றை தெரிந்தது போல் காட்டி நாடகமாடும் வழக்கம் மகான்களிடம் இல்லை. அரையர் போன்றவர்களின் வரலாறை சிறுவயதில் படித்திருந்தால், இந்நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டிருக்காது. இதை சீடர்கள் எல்லாரும் ஏற்றனர்.
ராமானுஜரை அழைத்து வர பெரியநம்பியை அனுப்புவது என முடிவாயிற்று. சீடர்கள் பெரியநம்பியிடம், சுவாமி! தாங்கள் ராமானுஜரை அழைத்து வாருங்கள். ஒருவேளை ராமானுஜர் இப்போதே வரத் தயங்கினால் அவரை வற்புறுத்த வேண்டாம். அரங்கநாதனின் சித்தப்படி அவர் எப்போது வரவேண்டுமென உள்ளதோ, அப்போதே வந்து சேரட்டும். ஆனால், நீங்கள் உடனடியாகத் திரும்பி விட வேண்டாம்.
ஒரு ஆண்டு ஆனாலும் பரவாயில்லை. காஞ்சிபுரத்திலேயே தங்கியிருந்து, திவ்ய பிரபந்தங்களைக் கற்றுக் கொடுங்கள். அவர் இன்னும் பல விஷயங்களில் தேர்ச்சி பெறட்டும். அவரை தலைவராக்க உள்ளோம் என்ற செய்தியையும் அவர் இங்கு வரும் வரை சொல்ல வேண்டாம், என்றனர். அந்த மடத்தில் திருமணமான சீடர்கள் சிலரும் இருந்தனர்.
ஆனால், ஊருக்கு வெளியே அவர்களை குடி வைத்திருந்தார்கள் சீடர்கள். பெரியநம்பியும் திருமணமானவர். அவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டார். செல்லும் வழியில் மதுராந்தகம் கோயிலில் தங்கினார்.
கோயில் குளக்கரையில் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த போது, ஒரு இளைஞன் அவர் திருவடியில் விழுந்து வணங்கினான். யார் இவன்? முன்பின் தெரியாத ஊரில், முன்பின் தெரியாத இந்த இளைஞன் காலடிகளில் விழுந்து கிடக்கிறானே! பெரியநம்பி அவனை, எழுந்திரப்பா! நீ யார்? என்றார்.

இளையாழ்வான் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவம் பற்றி நாளைய பதிவில் அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்....

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!💐

கருத்துகள் இல்லை: