வியாழன், 10 செப்டம்பர், 2020

ஸ்ரீ திரிபுர ரஹஸ்யம்


 ஸ்ரீ திரிபுர ரஹஸ்யம் எனும் ஓர் அரிய நூலில் காணப்படும் ஒரு மஹோன்னத பொக்கிஷம் இந்த “ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்”.  

இதனை காமேஷ்வரனான சிவனே காமேஷ்வரியான தேவிக்கு அருளியதாக ஸ்ரீ பரசுராமருக்கு, ஸ்ரீ தத்தாத்ரேயர் உபதேஸிக்கிறார். இதிலுள்ள நாமாவளிகள் அனைத்தும் “ஸ்ரீ ஸௌபாக்ய வித்யா” மந்திரத்தை முன் வைத்து அமைக்கப்பட்டது.

“ஸ்ரீ வித்யா” என்ற அம்பிகையின் ஆராதனையை உபாஸிப்பவர்களுக்கு, பஞ்ச தஸாக்ஷரியிம் அதிலிருந்து பெறப்பட்ட ஸ்ரீ லலிதா த்ரிசதியும் இன்றியமையாதவை.  ஸ்ரீ வித்யா பூஜாவிதிகளை கடைப்பிடிக்க மிகக்கடுமையான நியம, நிஷ்டைகள் மிக அவசியம்.

ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தை கடைப்பிடித்து, உய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் எளிதில் கிட்டாது.  அம்பிகையே விரும்பினால் தான், இம்மார்கம் வயப்படும் என்பது சான்றோர் வாக்கு.

அப்படிப்பட்ட அம்பிகையை எல்லோரும் வணங்கி, உய்யவே ஐயன் நந்தி வாஹனன், ஸ்ரீ தத்தர் – ஸ்ரீ பரசுராமர் மூலமாக உலகிற்கு இதை உறைத்தார் என்பது சான்றோர் கருத்து.

கருத்துகள் இல்லை: