வியாழன், 10 செப்டம்பர், 2020

ஸ்ரீ வேதநாயகன் சிவன் ஸ்ரீசிவனும், வேதமும்

ஸ்ரீ வேதநாயகன் சிவன்
ஸ்ரீசிவனும்,வேதமும்


==============

வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது நாதம் நாமம் நம:சிவாயவே என்பதை அனைவரும் அறிவோம்
.
"வேத:ஶிவ: ஶிவோ வேத:=சிவனே வேதம்,
வேதமே சிவம்
ஸ்ரீபரமேஸ்வரரின் மூச்சு காற்று வேதம்.ஆதலால் என்றும் நிரந்தரமானது.அழிவில்லாதது.அபௌருஷேயமானது.
அப்பேற்பட்ட வேதம்

 ஸ்ரீசிவனுக்கு எப்படியெல்லாம் சேவை செய்தது என  புராணங்கள் கூறுவதைக்காண்போம்
1.வேதப்பாதுகை
===========
ஸ்ரீசிவனின்
பாதுகை வேதம்.
ஸ்ரீசிவபெருமான் திருமணக்கோலம்கொண்டபோது தேவர்கள் வேதப்பாதுகையை சமர்பித்ததாக சிவபுராணம் கூறுகிறது.திருமணம் முடிந்தபிறகு
அந்தப்பாதுகையை திருத்துருத்தி
 (மாயவரம் அருகில் உள்ள குற்றாலம்)ஸ்தலத்தில் உத்தாலமரத்தடியில் விட்டுச்சென்றார் என்பர்.இன்றும் அத்தலத்தில் தரிசிக்கலாம்.
திருநாவுக்கரசர் தனது பாடலில்  ஓதியஞானமும் ,ஞானப்பொருளும்

ஒலி சிறந்த வேதியர் வேதமும்  வேள்வியும் ஆவன........ஐயாறன் அடித்தலமே.என்கிறார்
 
2.வேத நந்தி
=========
ஒருமுறை நான்கு வேதங்களும் வெள்ளைக்காளையாக மாறி
ஸ்ரீசிவனை வாஹனமாகி தாங்கி நின்றனர்.
(வேதமே தர்மம் ,தர்மமே வேதம். தர்மமே நந்தியின் ஸுரூபம்)

ஸ்ரீசிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது.

ஸ்ரீநந்திதேவர்
தன் மூச்சுக்காற்றால் ஸ்ரீசிவனுக்கு சாமரம் வீசுவதாக ஐதீகம்
அவ்வாறு சென்றால் சென்ற நிமிடம் வரை நம் வாழ்க்கையில் செய்த
புண்யபலன் வீணாகும் என்பர்

3. வேத மலைகள்
==========
 நான்கு வேதங்களும் நான்கு மலைகளாக திகழும் ஸ்தலம் வேதகிரி எனப்போற்றப்படும் திருக்கழுகுன்றம்
.ஒவ்வோரு யுகத்திலும் ஒவ்வொரு மலைகளில் ஸ்ரீபரமேஸ்வரன் எழுந்தருள்வதாக புராணம் கூறுகிறது.இது நான்காவதான சதுர்யுகம் கலியுகம் அதனால் அதர்வண வேதகிரியில் ஸ்ரீபரமேஸ்வரன் அமர்ந்து அருள்புரிகிறார்

4,வேதவனம்
============
நான்கு வேதங்களும் ஆரண்யமாகவும்,மனித உருவில் ஸ்ரீசிவனை
வழிபட்ட ஸ்தலம் வேதாரண்யம்.(திருமறைக்காடு.)
திறக்க முடியாமல்  ரொம்ப நாட்கள்மூடியிருந்த  கதவை  திறக்க திருநாவுக்கரசர் பதிகம் பாடி திறந்த புண்யஸ்தலம்.பிறகு திருஞானசம்பந்தர்
கதவை மூட  "சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும்.......என்றபதிகம் பாடி கதவை மூடினார்.


5.வேதமான்
==========

ஸ்ரீசிவபெருமானின் கையில் உள்ள மான் வேதத்தின் சின்னம்.எப்போதும் ஸ்ரீசிவன் நோக்கி அவரது செவிகளில் வேதம்  ஓதிக்கொண்டே இருக்கும்.

தமிழ் மறைகள் "வேதம் நான்மறியே எனப்போற்றுகிறது"
ஸ்ரீகங்காளர்,ஸ்ரீபிக்ஷாடனர்,ஸ்ரீசந்த்ரசேகர், என சிவனின் பலவிசேஷ ரூபங்களில்  இந்த   மான் உள்ளது


6. வேதக்குதிரை
=============
திரிபுர சம்ஹாரத்தின் போது   சிவபெருமான் பூமியைத் தேராக்கி நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி  பிரம்மாவை சாரதியாக்கி     சூரிய சந்திரர்களை     சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். நிகழ்ந்த ஸ்தலம்=திருவதிகை வீரட்டானம்

7.வேத மரங்கள்
( ஸ்தலவிருக்ஷம்)
======================
வேதாரண்யத்தில் ஒவ்வொரு யுகத்திற்கு ஒவ்வொரு வேதம் ஸ்ரீசிவன்  கோயிலுள்ள ஸ்தல விருக்ஷமாகிறது.
காஞ்சியில்  மாமரம் வேதஸ்ஸுரூபம்.
திருக்குற்றாலத்தில் பலாமரம் வேதஸ்ஸுரூபம். என ஸ்தலபுராணங்கள் கூறுகின்றன.


8.வேதச்சிலம்பு
============
காஞ்சியில் உள்ள சிவாலயங்களில் ஒன்று மறை நூபுரம் ஆகும்.
இத்தலத்தில் யுக முடிவில் வேதம் வழிப்பட்டு  காற்சிலம்பாயின.
ப்ரஹ்மாவுக்கு ஸ்ரீபரமேஸ்வரன் தூக்கிய திருவடியை அசைத்து
 சிலம்பொலி மூலம் வேதத்தை உபதேசித்த ஸ்தலம்

9.வேதவீணை
=========
ஸ்ரீசிவனின் கையிலுள்ள வீணை வேதவீணை.அவர் வேதவீணைதரித்து ஸ்ரீவீணாதர தக்ஷிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். இந்த வீணையைப் தக்கயாகப் பரணி (தக்ஷயாகம்) போற்றப்பட்டுள்ளது

திருச்சிற்றம்பலம்

ஓம் ஸ்ரீ மஹாசாஸ்தா தாஸன்
பா. சிவகணேசன்
ஓம் ஸ்ரீ மஹாசாஸ்த்ரு பரபிர்ம்ம ஸ்தானம் திருகாடந்தேத்தி

கருத்துகள் இல்லை: