வியாழன், 10 செப்டம்பர், 2020

ஸ்ரீலக்ஷ்மியும் வில்வமும்

 ஓம் ஸ்ரீ மஹாலெட்சுமியே போற்றி


ஸ்ரீலக்ஷ்மியும் வில்வமும்



=================

1.ஸ்ரீலக்ஷ்மி தாயார் நித்யவாசம் செய்யுமிடமாக  ஸ்ரீநாராயணரின் ஹ்ருதயம்,தாமரைப்பூ,வில்வம்,யானையின் மஸ்தகம்,பசுவின் குறி,குதிரை முகம்,சுமங்கலி வகிடு  எனக்கூறுவர்

2.வில்வமே ஸ்ரீலக்ஷ்மியின் ஸுரூபம்,நித்யவாசஸ்தலம்  "வில்வதவ்யம் மஹாலக்ஷ்மி ரூபஸ்தே வில்வநாயகம்"

3.ரைவத மன்வந்திரத்தில் ஸ்ரீலக்ஷ்மி தாயார் வில்வமரத்திலிருந்து வெளிவந்ததாக புராணம் கூறுகிறது.

4.வாமனபுராணம் ஸ்ரீலக்ஷ்மியின் கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாக காத்யாயனர் கூறுகிறார்

5.காளிகாபுராணம் ஸ்ரீலக்ஷ்மி தாயார்  வில்வக்காட்டில் தவம்
செய்ததாக கூறுகிறது

6.பில்வ மஹிம்ன ஸ்தோத்ரம் ஸ்ரீலக்ஷ்மி தாயாரின் ஸ்தனங்களிலிருந்து வில்வம் தோன்றியதாக கூறுகிறது


7.ஸ்ரீசூக்தம்

. "ஆதித்யவர்ணே தப(அ)ஜாதோ  வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோ(அ)த பில்வ:
தஸ்யபலானி தபஸாநுதந்து மாயாந்தராச்ச பாஹ்யா லக்ஷ்மி:"

சூரியனைப்போல் ப்ரகாசிப்பவளே உன்னுடைய தவத்தால் வனத்திற்கு அதிபதியான வில்வவிருக்ஷம் உண்டாயிற்று.
அதனுடைய பழங்கள் உள்ளேயுள்ள அவித்தைகளையும்
,வெளியேயுள்ள அசுபங்களை போக்கட்டும்.

. அக்ஞானம் அகல ஒரே வழி ஞானம் பெறுவது ஞானம் வந்துவிட்டால்  அது நம்மை மோக்ஷபாதையில் அழைத்துச்செல்லும்
வில்வபழம் அக்ஞானத்தை அகற்றி ஞானத்தை கொடுக்கட்டும்.ஞானம் அடைந்தால் அகமும்,புறமும் சுத்தமாகி மோக்ஷலக்ஷ்மி அருள்கிட்டும்.அதாவது மோக்ஷம் கிட்டும்

8.பில்வ பழத்திற்கு ஸ்ரீபலம் என்றுபெயர்.

9.வில்வ விருக்ஷத்திற்கு  "ஸ்ரீவிருக்ஷம்" என பெயருண்டு

10.சௌபாக்ய சஞ்சீவினி வில்வக்காட்டில் ஸ்ரீலக்ஷ்மிதாயார்  தவம்  செய்பவளாக வர்ணிக்கிறது

11.திருவஹந்திபுரம் தாயாருக்கு வில்வார்ச்சனை நடைபெறுவதாகவும், கூறுவர்

12.ஸ்ரீவெங்கடேச அஷ்டோத்த சதநாமாவளியில் "ஓம் பில்வ பத்ரார்ச்சன ப்ரியாய நம: என நாமம் உள்ளது.(வருடத்திற்கு ஒருநாள்
பில்வார்ச்சனை ஸ்ரீபெருமாளுக்கு நடைபெறும் க்ஷேத்ரங்கள் சில கேள்விபட்டிருக்கிறேன் )

13.திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில்
"கள்ளார்  துழாயும் கணவலரும் கூவிளையும்
முன்னார் முனரியும் ஆம்பலும் முன்கண்டக்கால் " என்கிறார்
கூவிளை=வில்வம்

ஓம் நமோ நாராயணா


ஓம் ஸ்ரீ மஹாசாஸ்தா தாஸன்
பா. சிவகணேசன்
ஓம் ஸ்ரீ மஹாசாஸ்த்ரு பரபிர்ம்ம ஸ்தானம்
திருகாடந்தேத்தி

கருத்துகள் இல்லை: