மாத்ருகா பஞ்சகம்
ஸ்ரீஆதிசங்கரர் பகவத்பாதாள் “மாத்ரு பஞ்சகம்" மகிமை!
அம்மா உனக்கு பல கோடி
நமஸ்காரம்!
ஆதிசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மனப்பான்மை ஓங்கி இருந்தது.
தாய் ஆர்யாம்பாளிடம் துறவுக்கு அனுமதியைக் கேட்க, தன் ஒரே மகன் துறவியாவதைக் காண சகிக்க முடியாத அந்தத் தாய் மறுத்து விட்டார்.
இளம் வயதிலேயே விதவையான அந்தத் தாயிற்கு அந்த உத்தம மகனை விடப் பெரிய உறவோ, சொத்தோ இருக்கவில்லை.
தாயின் அனுமதியில்லாமல் துறவியாகவோ ஆதிசங்கரருக்கு சம்மதமில்லை.
ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை ஒரு முதலை ஒரு பற்றிக் கொண்டது.
ஆதிசங்கரர் உரத்த குரலில் தாயிடம் சொன்னார்.
“அம்மா என் காலை ஒரு முதலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது. நான் சன்னியாசி ஆக நீ அனுமதி தந்தாயானால் அது என்னை விட்டு விடும்”.
ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளான ஆர்யாம்பாள் வேறு வழியில்லாமல் மகன் துறவியாவதற்கு ஒத்துக் கொண்டார்.
ஆதிசங்கரர் தகுந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார்.
முதலை அவர் காலை விட்டு விட்டது.
(அந்த முதலை பிரம்மாவின் சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் என்றும் ஆதிசங்கரரின் கால் பட்டதும் அவன் சாப விமோசனம் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது)
கரையேறிய ஆதிசங்கரர் தன் வீடு புகவில்லை.
வீடு வந்த பின்னும் வாசலிலேயே “பிக்ஷாந்தேஹி” என்று மகன் நின்ற போது தான் ஆர்யாம்பாளுக்கு உண்மை முழுமையாக உறைத்திருக்க வேண்டும்.
முன்பே ஒரு முறை மகன் துறவியாவது போல் கனவு கண்டு அந்தக் கனவுக்கே துடித்துப் போன அந்தத் தாயின் நிலைமை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
எல்லையில்லாத சோகத்தில் மூழ்கிய ஆர்யாம்பாள் மகன் இருந்தும் இல்லாதது போல் வாழ வேண்டி வரும் நிலைமையையும், ஈமக்கிரியை கூட மகன் இல்லாமல் போகும் அவலத்தையும் எண்ணி மிகவும் வருந்தினார்.
உறவுகளைத் துறக்கும் போது உறவுகளுடன் கூடிய அனைத்தையும் முடித்துக் கொள்வதால்
துறவிகள் பெற்றவர்களுக்கு ஈமக்கிரியைகள் கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
ஆனால் தாயின் சோகத்தால் நெகிழ்ந்த ஆதிசங்கரர் அந்த விதியை மீறித் தன் தாயிற்கு வாக்களிக்கிறார்.
‘உன் அந்திம காலத்தில் உன் ஈமக்கிரியைகளைச் செய்ய நான் கண்டிப்பாக வருவேன்”
ஆண்டுகள் பல கழிந்த பின் ஆர்யாம்பாள் மரணப்படுக்கையில் கிடக்கையில் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்த ஆதிசங்கரர் உடனடியாகத் தாயிடம் வந்தார்.
ஒரு துறவியான பின் தாயிற்கு ஈமக்கிரியை செய்வதா என்று சாஸ்திரம் படித்த உறவினர்கள் குமுறினார்கள்.
சிதைக்குத் தீ மூட்ட நெருப்பைக் கூடத் தர மறுக்க தன் சக்தியாலேயே தாயின் சிதைக்கு ஆதி சங்கரர் தீ மூட்டினார்.
அரும் பெரும் தத்துவங்களையும், உபநிடத சாரங்களையும் உலகத்திற்குத் தந்த ஆதிசங்கரர்
தாயின் அந்திம காலத்தில் மடியில் கிடத்திக் கொண்டு பாடிய “மாத்ரு பஞ்சகம்” மிகவும் நெகிழ்ச்சியானது.
அறிவால், ஞானத்தால், பக்தியால் எத்தனையோ பொக்கிஷங்களைத் தந்த ஆதிசங்கரர் உணர்ச்சி பூர்வமாக எழுதியது அந்த ஐந்து சுலோகங்களை மட்டுமே.
ஒரு ஜகத்குரு ஒரு மகனாக அன்னையின் பாசத்தையும், தியாகத்தையும் எண்ணிப் பாடிய #மாத்ரு #பஞ்சகம் இது தான்.
1.ஆஸ்தம் தாவதி³யம் ப்ரஸூதிஸமயே து³ர்வாரஶூலவ்யதா²
நைருச்யம் தநுஶோஷணம் மலமயீ ஶய்யா ச ஸம்வத்ஸரீ ।
ஏகஸ்யாபி ந க³ர்ப⁴பா⁴ரப⁴ரணக்லேஶஸ்ய யஸ்யாக்ஷம:
தா³தும் நிஷ்க்ருʼதிமுந்நதோঽபி தநயஸ்தஸ்யை ஜநந்யை நம: ॥
தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே! அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று செல்ல? அந்த தாய்க்கு நமஸ்காரம்!
2.கு³ருகுலமுபஸ்ருʼத்ய ஸ்வப்நகாலே து த்³ருʼஷ்ட்வா
யதிஸமுசிதவேஶம் ப்ராருதோ³ மாம் த்வமுச்சை: ।
கு³ருகுலமத² ஸர்வம் ப்ராருத³த்தே ஸமக்ஷம்
ஸபதி³ சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம: ॥
ஹே தாயே! c ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே! உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!
3.ந த³த்தம் மாதஸ்தே மரணஸமயே தோயமபிவா
ஸ்வதா⁴ வா நோ த³த்தா மரணதி³வஸே ஶ்ராத்³த⁴விதி⁴நா ।
ந ஜப்த்வா மாதஸ்தே மரணஸமயே தாரகமநு-
ரகாலே ஸம்ப்ராப்தே மயி குரு த³யாம் மாதுரதுலாம் ॥
தாயே! c மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. c மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது. தாயே! உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!
4.முக்தாமணி த்வம் நயநம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிர ஸுத த்வம் ।
இத்யுக்தவத்யாஸ்தவ வாசி மாத:
த³தா³ம்யஹம் தண்டு³லமேவ ஶுஷ்கம் ॥
என் முத்தல்லவா c ! என் கண் அல்லவா c ! c என் ராஜா, என் குழந்தை c சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே! அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !
5.அம்பே³தி தாதேதி ஶிவேதி தஸ்மிந்
ப்ரஸூதிகாலே யத³வோச உச்சை: ।
க்ருʼஷ்ணேதி கோ³விந்த³ ஹரே முகுந்த³
இதி ஜநந்யை அஹோ ரசிதோঽயமஞ்ஜலி: ॥
அன்று ப்ரஸவ காலத்தில் ‘அம்மா’ அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே! இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக