ஆயிரத்து தொள்ளாயிரத்து அருபதி முன்று அருபத்தி நான்காம் வருடமா என்று சரியாக ஞாபகம் இல்லை... அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த திரு. பக்தவச்சலம் அவர்களை மஹா பெரியவா சந்திக்க வேண்டும் என்று நினைத்தது அவருக்கு தெரிவிக்கப்பட்டது. திரு. பக்தவச்சலம் அவர்கள் நடு நடுங்கி விட்டார். உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் தரிசனம் செய்ய ஆவலாக இருக்கும் ஜகத் குரு என்னை பார்க்க வேண்டும் என்று தகவல் வந்ததை நினைத்து ரொம்பவே பயந்து விட்டார். இருப்பினும் மஹானின் உத்தரவை ஏற்று உடனடியாக திரு. பக்தவச்சலம் அவர்கள் பெரியவர்களை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றார். அந்த கருனை கடலான மஹா பெரியவாளை சென்று நமஸ்காரம் செய்தார். மஹா பெரியவா பக்தவச்சலம் அவர்களிடம் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்து தர வேண்டும் என்று சொன்னார். பக்தவச்சலத்திற்க்கோ இன்னும் பயம் அதிமாகி விட்டது. உடனே மஹா பெரியவா இப்போது நமது தேசத்திற்கு ஒரு பெரிய ஆபத்து வரபோகிறது. ஒன்பது கோள்களும் ஒரே நேர் கோட்டில் வரப்போகிறது. அப்படி வரும் போது பெறும் ஆபத்து ஏற்ப்பட வாய்ப்புள்ளது. அதனால் மக்களை அந்த பாதிப்பில் இருந்து காப்பாற்ற திருப்பாவை, திருவெம்பாவை, ஞான சம்பந்தர் அருளிய கோளறு பதிகம் சிறு சிறு புத்தகங்களாக அச்சு அடித்து அனைத்து கோவில்களிலும் காலை, மாலை ஆகிய இரு வேளையும் பக்தர்கள் ஒன்று சேர்ந்து தொடர்ந்து சில காலம் சொல்லி வந்தால் வர இருக்கும் ஆபத்தில் இருந்து லோகத்தை காப்பாற்ற முடியும் என்று சொன்னார்கள். உடனே இதற்கு செவி சாய்த்த அப்போதைய தமிழக முதல்வர் நிச்சயம் செய்கிறேன் என்று சொன்னார். பத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் தலா ஒரு லட்சம் புத்தகங்கள் அச்சு அடிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கோவிலுக்கும் வழங்கப்பட்டது. {ஒரு லட்சம் காபி அடிபதற்கு இன்று ஒரு மணி நேரம் போதும். ஆனால் அன்றைக்கு இது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பத்து பதினைந்து பிரஸ்களில் சுமார் இரண்டு மாதம் கஷ்ட்ட பட்டு அடித்தார்கள் அப்போதைய தமிழக முதல்வர்} பெரியவாளை தரிசனம் செய்து விட்டு வந்த பக்தவத்சலம் பயம் நீங்கி தெளிவடைந்தார். பிறகு தலைமை செயலகம் சென்ற முதல்வர் பூந்தமல்லி அருகே இருந்த பக்தவத்சலத்திற்க்கு சொந்தமான சுமார் முப்பத்தி மூன்று ஏக்கர் நிலத்தை மஹா பெரியவாளிடம் ஒப்படைத்து இதை வைத்து ஏதாவது ஒரு நல்ல காரியங்களுக்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி அந்த நிலத்தை பெரியவர்களிடம் ஒப்படைத்தார் திரு. பக்தவத்சலம். அந்த இடம் தான் தற்போது ஜயேந்திர ஆயுர்வேத கல்லூரியாக செயல் பட்டு வருகிறது. அன்றைக்கு அப்படி ஒரு நிலைமை வரவிருக்கும் முன்பே அந்த பேராபத்தை தடுக்க மஹா பெரியவா முயன்றது போல் இன்று நமக்கு ஒரு மஹா பெரியவா, புது பெரியவா இவர்கள் இல்லாதது நமது துரதிர்ஷ்டமே. அப்போது இருந்த காலகட்டத்தை விட இப்போது உள்ள காலம் மிக மிக மோசமாகவே இருக்கிறது. இன்று உலகமே அவரவர்க்களின் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக. அதுவும் நம் பாரத தேசம் கடந்த இரண்டு மாதங்களாக பல இன்னல்களை சந்தித்து கொண்டு தான் இருக்கிறது. அன்று போல் இன்று நம்மை காப்பதற்கு உலகை பழைய நிலைக்கு எடுத்து செல்வதற்கு இன்று எந்த மஹானும் இல்லை? பாரத பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் போன்றவர்களை அழைத்து தைரியமாக பேசுவதற்கும் சொல்வதற்கும் இந்த பாரத தேசத்தில் ஒருவர் கூட இல்லாதது பெரும் துரதிர்ஷ்டம் தான். பாரத் மாதாகி ஜெய் வந்தே மாதரம், வந்தே ஜகத் குரும், வந்தே ஜகத் குரும், வந்தே ஜகத் குரும், வந்தே ஜகத் குரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக