சிருங்கேரி மற்றும் பூரி ஸ்வாமிகள் இவர்கள் இருவருமே காஞ்சி மடம் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட மடம் இல்லை என்று தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கான பதில் இதோ. ஆதிசங்கர் தன்னுடைய சரிரத்தை விடுத்து ஆத்மாவுடன் கைலாஷம் சென்று சிவ பெருமானிடம் இருந்து பஞ்ச லிங்கங்களை பெற்றுக் கொண்டு தன்னுடைய சரிரத்தில் வந்த பிறகு தான் நான்கு இடங்களில் ஸ்தாபித்தார். ஐந்தாவது லிங்கமான யோக லிங்கத்தை தனக்காக வைத்து பூஜை செய்து வந்தார். அப்படியாக ஒவ்வொரு ஊரா செல்லும் போது காமாக்ஷி கான காஞ்சி வந்தார். இங்கே அம்பாள் உக்ரஹமாக இருப்பதை கண்டு அம்பாளை சாந்தப்படுத்தி ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்தார். பிறகு தனக்காக ஒரு மடத்தை நிறுவினார். அதுவே காஞ்சி மடன். மற்ற மடங்கள் எல்லாம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டது ஆனால் காஞ்சி மடம் தான் ஆதிசங்கரரின் நேரடி தொடர்பு. மற்ற மடத்திற்கு அப்படி இல்லை. அதே போல் தன்னுடைய முதல் சிஷ்யரை காசியில் வாதம் செய்து வென்ற சுரேவராச்சாரியர் தான் முதல் சிஷ்யர். ஆதிசங்கர் மற்றும் சுரேவராச்சாரியர் இவர்கள் இருவருக்கு மட்டுமே ஆதிசங்கர், சுரேவராச்சாரியர் என்று பெயர். பின் வந்த மற்றவர ஆச்சார்யர்களுக்கு கூடவே சரஸ்வதி பட்டம் பெயருடன் சேர்க்கப்பட்டது. மிக முக்கியமான விஷயம் ஆதிசங்கர் காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் அம்பாளுடன் ஐக்கிமானார். என்பதே உண்மை. அடியேன் ஒன்றே ஒன்று கேட்கிறேன் ஆதிசங்கர் இமயமலையில் சித்தி அடைந்தார் என்று இவர்கள் சொல்கிறார்கள். அப்படி என்றால் இந்த பஞ்ச லிங்கங்களை எவ்வாறு மற்ற இடங்களில் நிறுவியிருக்க முடியும்? இமயமலையில் தான் தன்னுடைய சரிரத்தை விடுத்து பரமேஸ்வரனை கான சென்றார் என்பது வரலாறு. சென்றவர் திரும்ப வந்ததால் தானே மற்ற நான்கு இடங்களில் லிங்கங்களை கொடுத்து இருக்க முடியும். இப்போது புரியும் என்று நினைக்கிறேன். இது உண்மையான வரலாறு. இதை மஹா பெரியவா தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் சங்கர சரித்திரத்தை மட்டுமே ஆறநூறு பக்கத்திற்கும் மேல் சொல்லியிருக்கா வருட கணக்கு மட்டும் இல்லை ஆச்சார்யார்களின் எண்ணிக்கையும் கூட சிருங்கேரியில் வித்தியாசம் உண்டு. இந்த விஷயத்தை பற்றி பலவிதமான கருத்துவேறுபாடுகள் உள்ளன... தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகத்தில் மஹாபெரியவாளே... அழகாக அதை விவரிக்கிறார்... ஷ்ருங்கேரியையும் கணக்கில் வைத்துக்கொண்டு அனுக்ரஹிக்கிறார்... சங்கர சரிதம் என்ற பாகத்தில்... மேலும் தெரிந்து கொள்ள தெய்வத்தின் குரல் பாகம் ஐந்தை படிக்கவும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக