ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

ஆடி மாதத்தின் சிறப்பு

சூடிக் கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள் அவதரித்த தினம் தான் ஆடி மாதம் பூரம் நட்சத்திரமாகும்.

இன்றைய தினத்தை எல்லா கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வருகிறது. ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரமும் வருகிறது. அதில் என்ன சிறப்பு. ஆனால் ஆண்டாள் அவதரித்தபின் தான் அந்த நாளுக்கு தனிச்சிறப்பு ஏற்பட்டது.

ஆண்டாள் பூமித்தாயின் அம்சம் பூமித்தாயே பூமியில் அவதரித்தால் அது சிறப்பல்லவா உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆண்டாள் இந்த பூவுலகில் அவதரித்து நம்மை கரைசேர்த்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில் ஒரு துளசிச் செடியின் அடியில் கலியுகம் பிறந்து 98 வதாக வந்த நளவருடம் ஆடிமாதம் வளர்பிறையில் பஞ்சமி திதியும் பூர நட்சத்திரம் கூடிய நன்னாளில் பெரியாழ்வார் ஆண்டாளைக் கண்டெடுத்தார்.

அவளை கோதை என்னும் பெயரிட்டு வளர்த்து வரும்படி வடபெருங்கோயிலுடையானும் அருள் பாளித்தார். அதன்படி கோதையை வளர்ந்து வந்தார் பெரியாழ்வார்.

இந்த கோதை கண்ணனை நினைத்து பாவை நோன்பு நோர்ப்பதாக எழுதிய 30 பாடல்கள் தான் திருப்பாவை.

சூடிக்கொடுத்த சுடர்கொடியான கோதையை கண்ணனே ஆட்கொள்கிறான்.

அன்றைய தினம் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்படும்.
-----------------------

கருத்துகள் இல்லை: