சனி, 27 ஜூலை, 2019


சுருதி ஸூக்தி மாலா : சுலோகம்-21-30
|| ஓம் நம: சிவாய ||
சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்
சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்

சுலோகம் 21

ச்ரைஷ்ட ப்ரயுக்தமபி நாம நமஸ் த்வதீயம்
ச்ரேஷ்டோஸி ய: க்ரதுபுஜாம் பதிரக்ரியானாம் |
ச்ரேஷ்ட ச்ருதோஸி பகவந்நவிசேஷதஸ்த்வம்
மந்த்ரேஷு க்ருச்ச்ர படிதேஷு ச ஸாம கானாம் ||
“தூஷ்யது துர்ஜன :” என்பது ஒர் ந்யாயம், துஷ்டன் ஸந்தோடஷப்படட்டும் என்று அவன் சொல்லும் கக்ஷியை அங்கீகரித்தே நமது கொள்கைக்குப் பாதகமில்லை என்று ஸாதிப்பது சாஸ்திரக்காரர்கள் வழக்கம். அந்த ந்யாயப்படி மேற்கொண்ட நமஸ்க்ருத்ய ஹி வஸீயாம்ஸம் என்ற வேதப்படி, சிறந்த நிலை தான் நமஸ்கரிக்கப்படுவதற்குக் காரணம் என்று அங்கீகரித்தாலும் நம் கக்ஷிக்கு பாதகமில்லை என்று சொல்லப்படுகிறது.
பதவுரை
ச்ரைஷ்ட ப்ரயுக்தமபி நம: – சிறந்த மேன்மையால் ஏற்படும் நமஸ்காரமும், த்வதீயம் நாம – உம்மைச் சேர்ந்தது தான். அக்ரியானாம்பதி: – பசுபதியாகிய, ய: – த்வம் – யாதொரு நீர், க்ரது புஜாம் – தேவர்களுக்குள், ச்ரேஷ்டோஸி – சிறந்தவராக இருக்கிறீரோ, பகவன் – பகவானே! ஸாமகானாம் – சாமவேதிகளினுடைய, கிருச்ச்ரபடி தேஷு – க்ருச்ச்ர க்ரந்தத்தில் சொல்லப்படுகிற மந்த்ரேஷு – மந்த்ரங்களில், அவிசேஷத: – பொதுவாக (அபேக்ஷிகமன்னியில்) த்வம் – நீர், ச்ரேஷ்ட:- சிறந்தவர் என்று, ச்ருதோஸி – சொல்லப்பட்டிருக்கிறீர். “நமோ ஜ்யேஷ்டாய ச்ரேஷ்டாய என்பது ஸாமவேதிகளின் க்ருச்ச்ர க்ரந்தத்தில் படிக்கப்பட்டிருக்கும் மந்த்ரமாகும். நக்ஷத்ரேஷ்டியில் திருவாதிரை நக்ஷத்திர ப்ரகரணத்தில் சொல்லப்படும் ஆர்த்ரயா ருத்ர: ப்ரதமான ஏதி ச்ரேஷ்டோ தேவானாம் பதிரக்னியானாம் என்ற மந்த்ரம். பசுபதி ஸர்வ தேவர்களுக்குள் சிறந்தவர் என்பதை விளக்குவது இங்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும்.

சுலோகம் 22

தேவாந்தரைஸ் ஸஹ நமஸ்துதி ஹூதய ஸ்தே
தோஷாய நால மலமேவ விபர்யயாய |
புத்ரார்த்தின: சருவிதெள ஸஹ சந்த்ர மெளளே
ஸோமேன ஹூத மனுசுஸ்ரீஉம ருத்ரமக்னிம் ||
இவ்விதம் 9 முதல் 21 முடிய 13 ச்லோகங்களால் வேத, புராண வசனங்களைக் கொண்டும், சுருதி, ஸ்ம்ருதி லோக (புராணம்) ந்யாய ரீத்யா, நம: சேஷித்வம் என்ற லக்ஷணம் அதிவ்யாபதி, அவ்யாப்தி, அஸம்பவ ரூப தோஷ த்ரயமில்லாமல் பரமசிவனைக் குறிக்கும் என்பதை விளக்கி விட்டு,
இப்போது உத்தேச க்ரமமாக வந்த இரண்டாவது லக்ஷணமாகிய பகவத் பத வாச்யத்வம் என்பதை 29 முதல் 34½ வரை 6½ ச்லோகங்களால் உபபாதனம் பண்ணும் நோக்கத்துடன்
நடுவில் 22 முதல் 28 முடிய 7 ச்லோகங்களால் சிவபெருமான் வேதங்களில் பிறதேவதையுடன் சேர்க்கப்பட்டு துதிக்கப்படுவதோ நமஸ்கரிக்கப்படுவதோ, கூப்பிடப்படுவதோ கிடையாது, தனியாகத்தான் துதி, நமஸ்காரம், ஆஹ்வானம் செய்யப்படுகிறார். ஏனெனில் ஸமாஸமாப்யாம் விஷமே பூஜாத: என்ற கெளதமாதி வசனப்படி, சிறந்தவரைத் தாழ்ந்தவர்களோடு ஒன்று கூட்டி மரியாதை செய்வது தகாது என்ற முறையுள்ளதல்லவா என்ற விஷயத்தை ப்ரதிபாதிப்பதால், சிவபெருமான் நம: சேஷித்வ லக்ஷணத்தையும் சிறப்பையும், ஸ்தாணா நிக்ந ந்யாயப்படி த்ருடப்படுத்துவதற்கு, இந்த ச்லோகம் ஆரம்பம்.
பதவுரை
தேவாந்தரை: ஸஹ – மற்ற தேவதைகளோடு கூட, நம : ஸ்துதி ஹூதய : – நமஸ்காரம், ஸ்துதி, ஆஹ்வானங்கள், தே – உம்முடைய, தோஷாய – சந்தோஷம் பொருட்டு, நாலம் – சக்தியுள்ளவை அல்ல. விபர்யயாயைவ அலம் – கோபத்தின் பொருட்டேயாகும். சந்திரமெளளே – சந்திரனை சிரசில் தரித்திருப்பவரே! புத்ரார்த்தின: – ஸந்ததியை விரும்புகிறவனுக்கு, சருவிதெள – விதிக்கப்பட்ட சருவை த்ரவ்யமாகக் கொண்டயாகத்தில், ஸோமேன ஸஹ – ஸோமதேவதையோடு கூட, ஹூதம் – கூப்பிடப்படுகிற, ருத்ரம – ருத்ரனை, அக்னிம் – அக்னி தேவதையாக, அனுசுச்ரும – நாங்கள் வேதங்கள் வாயிலாக அறிகிறோம். ஆதலால் ஸோமாரெளத்ர சருவில், தாங்கள் ஸோமனோடு சேர்ந்து பூஜிக்கப்படவில்லை. ஸோமனும் அக்னியும் சேர்ந்து பூஜிக்கப்படுகிறார்கள்.
விரிவுரை
மாத்வா ருத்ர சுக்ருதாமா நமோபி: – ருத்ரதேவதையே! உம்மைப் பிறருடன் சேர்த்து நமஸ்கரிப்பதால் கோபிக்கச் செய்ய மாட்டோம். வ்ருஷப – வேண்டியதை வர்ஷிக்கும் ஸ்வதந்த்ர தெய்வமே! துஷ்டுதீ – மற்றதேவதைகளுக்கு சமமாகச் செய்யும் ஸ்துதியாலும், மா சுக்ருதாம – கோபமூட்ட மாட்டோம்; மா சுக்ருதாம ஸஹூதீ – வேறு தெய்வங்களோடு சேர்த்துக் கூப்பிடுவதாலும், (யாஜ்யா புரோனுவாக்யா – மந்த்ரங்களால் சேர்த்து யக்ஞத்துக்கழைப்பதாலும்) கோபிக்கச் செய்யமாட்டோம். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் நிருக்தத்தில் சொல்லப்பட்டிருப்பதாவது.
கிம் ச துல்ய நமஸ்காரை: தேவாந்தரகாமிபி: |
துஷ்டுத்யா ஸத்ருச ஸ்துத்யா ஸமானாஹ்வான
கர்மணா ந வயம் சுக்ருதாம த்வாம் ஸர்வதேவ நமஸ்க்ருதம் ||
சிவபெருமானையும் விஷ்ணுவையும் கூடச்சேர்த்து ஸமமாக பாவிப்பவன் சண்டாள துவ்யனாகிறான். அவன் ஸங்கர ஜாதியைச் சேர்ந்தவனென்பது அனுமானம் செய்யப்படலாம். சூர்யனுக்கும் மினுமினுப் பூச்சிக்கும் போல, சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் வித்தியாசமுளது என்றெல்லாம், தத்வம், சிவதத்வ நிரூபணம், ஆதித்ய புராணம், பராசர புராணம், ஸ்காந்தம் ஹூத ஸம்ஹிதை முதலிய க்ரந்தங்களில் விவரிக்கப்பட்டிருப்பதை காண்க. ஸ்ரீமத் பாகவத்தின் 3, 4, 8-வது ஸ்கந்தத்தில் விஷமுண்டு உலகனைத்தையும் காத்த சிவபெருமானுக்கு நிகரான தெய்வம் கிடையாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருப்பதை, வைஷ்ணவர்களும் (முக்யமாக வைஷ்ணவப் பற்றுதல் உள்ள ஸ்மார்த்த ப்ராம்மணர்களும் தி.வி.அ) நன்கு கவனித்து தத்துவறிய வேண்டிய விஷயமாகும்.
ஸோமா ரெளத்ரம் சரும் நிர்வபேத் ப்ரஜாகாம:
என்பது சந்தானத்துக்காக விதிக்கப்பட்ட யக்ஞத்தைத் தெரிவிக்கும் வேதவாக்யமாகும்.

சுலோகம் 23

அக்னிம் ப்ரக்ருத்யகலு ருத்ரபதம் ப்ரயுங்க்தே
தத் ப்ராமஹணம் பவதி யத்ர தயோஸ் ஸஹூதி: |
ஆஹ்வானமத்ர பவத: ப்ருதகேவ த்ருஷ்டம்
யத் ப்ராதரக்னிமிதி ஸூக்த வித: படந்தி ||
ஸோமா ரெளத்ர சரு விதியில் ஸோமனோடு சேர்த்துக் குறிக்கப்படும் ருத்ரன் தாங்கள் அல்ல அக்னிதான் என்பது அடுத்த இரண்டு அர்த்தவாத வாக்கியங்களால் தெளிவாகிறது.
“ஸந்திக்தேஷு வாக்யசேஷாத்” என்றல்லவா, ஜைமினியின் மீமாம்ஸ வாக்ய ந்யாயம்?
அக்தா சர்க்கரா உபதம் தாதி என்ற விதியில் பொதுவாக நனைத்த கல்லை மேடைகட்ட உபயோகிக்க விதியிருந்தாலும், நெய்யில் நனைக்கப்பட்ட கல்லை மேடைகட்ட உபயோகிக்க வேண்டுமென்று விசேஷமான பொருள். தேஜோவை க்ருதம் என்ற துதி, பர அர்த்தவாதத்தினால் கொள்ளப்படுவது வழக்கமல்லவா என்ற நோக்கத்துடன், அந்த சந்தேகத்தைத் தெளிய வைக்கும் அர்த்தவாதங்களை எடுத்துக் கூறுகிறார்.
பதவுரை
யத்ர தயோ: ஸஹூதி: – எந்த ஸோமாரெளத்ர சருவில் ஸோமனுக்கும் ருத்ரனுக்கும் சேர்ந்து ஆஹ்வானம் காணப்படுகிறதோ, தத் – அந்த, ப்ராம்மணம் பவதி – அர்த்தத்தை நிர்ணயித்துக் கொடுக்கக் கூடிய அர்த்த வாக்யம் இருக்கிறது, இங்கு ப்ராம்மணபதம் விதி வாக்யத்தைக் குறிக்காது. அர்த்தவாத வாக்கியத்தைக் குறிக்கும். சேஷே ப்ராம்மண சப்த: என்று ஜைமினி விதிவாக்யத்திற்குப் போல, அர்ந்தவாத வாக்கியத்திற்கும் பிராம்மண பதம் வாசகம் என்பதை நிலை நாட்டியிருக்கிறார். அக்னிம் ப்ரக்ருத்யகலு – அக்னியைச் சொல்லியல்லவா, ருத்ரபதம் – ருத்ரன் என்ற பதத்தை. ப்ரயுங்க்தே – ப்ரயோகம் செய்கிறார். அத்ர – தங்களைக் கூப்பிடுமிடத்தில், பவத : – ஆஹ் வானம், – தங்களைக் கூப்பிடுவது, ப்ருதகேவ – தனியாகத்தான், த்ருஷ்டம் – காணப்படுகிறது, ஹூக்தவித: – ஹூக்தங்களை கண்டு பிடித்தவர்கள், யத் – எந்த ஹூக்தத்தை, ப்ராதரக்னி மிதி – ப்ராதரக்னிம் ப்ராதரிந்திரம் ஹவாமஹே என்பது முதலாக, படந்தி – படிக்கிறார்களோ, அங்கு உம்மைத் தனியாக அல்லவா கூப்பிடுவது தெளிவாகக் காணப்படுகிறது.

சுலோகம் 24

அக்ன்யாதிபிஸ்தவ மஹேச்வர! ஹூதிசங்கா
மாபூத் இதி ப்ரக்ருதமப் யனுஷங்க யோக்யம் |
மந்த்ர: க்ரியா பத மபாஸ்ய பதாந்தரேண
த்வாமா ஹ்வயந் நுதபதேன பினத்தி ரீ திம் ||
பதவுரை
மந்த்ர – ப்ராரதரக்னிம், ப்ராதரிந்திரம் ஹவாமஹே
என்ற மந்த்ரம், அக்ன்யாதிபி: அக்னி முதலிய தேவதைகளோடு, தவ – உம்மை, ஹூதிசங்கா கூப்பிடப்படும் ஸந்தேஹம். மாபூத் இதி – (ஜனங்களுக்கு) ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன், ப்ரக்குதம் – முன்பு சொல்லப்பட்ட, அனுஷங்க யோக்யம் – பின் வாக்கியத்தில், ஸம்பந்தப் படுத்தத் தகுத்ததாயிருந்த போதிலும் க்ரியாபதம் – ஹவாமஹே என்ற வினைச்சொல்லை, அபாஸ்ய – விட்டுவிட்டு, உமது வாக்கியத்தில் அனுஷங்க ந்யாயப்படி, மற்றதேவதை வாக்யத்தில் போல சேர்த்து ஸம்பந்தப்படுத்தாமல் விட்டு, பதாந்தரேண – உத ருத்ரம் ஹவேம் என்றபடி, ஹவேம என்று மற்றொரு தனி வினைச் சொல்லால், த்வாம – உம்மை, ஆஹ்வயந் – கூப்பிடுகிறதாய் இருந்து கொண்டு, உத – பதேன – உத என்ற பதத்தினால், அபி – என்ற சப்தத்திற்கு ஸமானமான அர்த்தத்தைக் கொடுக்கும் சக்திவாய்ந்ததினால், ரீதிம் – உமக்கு தேவதாந்தர ஸாத் ருச்யத்தை, மஹேச்வரா! பினத்தி – அடியோடு விலக்குகிறது. ருத்ரம் உத – ருத்ரனைக்கூட, ஹவேம் – தனியாகக் கூப்பிடுவதற்கு அவகாசம் அடைகிறோம் என்பது தாத்பர்யம்.
உத பதத்தால் பிரித்து, மற்றவர்களுக்கு அனுஷங்க ந்யாயப்படி, ஸம்பந்தப் படுத்தப்பட்ட க்ரியா பதத்தைக் தங்களுக்குச் சேர்க்காமல், தனியாக வினைச்சொல் கூறி உம்மைக் கூப்பிட்டது, எங்கும் எப்பொழுதும் உம்மைத் தனியாகவே கூப்பிட வேண்டும், மற்ற தாழ்ந்த சிறு தேவதையுடன் சேர்த்துக் கூப்பிட்டு ஸ்துதி நமஸ்காரம் செய்வது தவறு; உமக்கு ப்ரதீயாகாது என்ற தத்வத்தை நன்கு விளக்குகிறது.

சுலோகம் 25

ந்யாஸீ க்ருதம் வஸு பலா தமரை ரவாப்தும்
அன்வாகதோ ருதிதவானிதி ருத்ரமக்னிம் |
ருத்ராம்ஸ்த்வதுத்பவதயா மருதோ கணான்வா
ருத்ராவணேன ச பவந்த மவைமி ருத்ரம் ||
அக்னியை ருத்ர சப்தத்தால் சொல்வதற்கு காரணம் விளக்குகிறார்.
பதவுரை
அமரை: – தேவர்களால், ந்யாஸீ க்ருதம் – நியாஸமாக ஒப்படைக்கப்பட்ட, வஸு – ஸொத்தை, பலாத் – பலாத்காரமாக, அவாப்தும் – அடைவதற்கு, அன்வாகத: – பின் தொடர்ந்து வரப்பட்டவன், ருதித வான் – அழுதான் அல்லது அழச்செய்தான், இதி – என்ற காரணத்தால், அக்னிம் – அக்னி தேவதையை, ருத்ரம் – ருத்ர சப்தத்தால் சொல்லப்படுவதாக, அவைமி – அறிகிறேன். மருத: – ஸப்த மருத்துக்களையும், கணான்வா – உமது சபையோர்களான பார்ஷதர்களையும், த்வதுத்பவதயா – உம்மிடமிருந்து உண்டான காரணத்தால், “கார்ய காரணமோ ரபேத ந்யாயேன” குடத்தை மண் என்பதுபோல, ருத்ரான் – ருத்ர சப்தவாச்யர்களாகவும், பவந்தம் – உம்மை, ருத் த்ராவணேன – துக்கத்தையும் பாபத்தையும் நசிக்கச் செய்வதால், ருதி என்ற வேதஸ்வரூபமான சப்தத்தைக் கலப்பத்தின் முதலில் பிரம்மாவிற்கு ததாதி கொடுப்பதாலும், ருத்ரம் –ருத்ர சப்தவாச்யனாக, அவைமி – அறிகிறேன்.

சுலோகம் 26

யக்ஞேபி ருத்ரபதமாருண கேதுகோக்தம்
தத் சப்த மீச்வர ! ததீயமபி ஸ்மரந்தி |
யத்தத் ப்ரதேசகத ருத்ர பதாவகாசே
யக்ஞஸ்ய சப்த மனுசுச்ரும ஸாமகேப்ய: ||
யக்ஞே அபி – யாகம் என்ற அர்த்தத்திலும், ருத்ர பதம் – ருத்ரம் என்ற பதமானது, ஆருண கேது கோக்தம் – ஆருண கேதுகம் என்ற சயனத்திலும், சூர்ய நமஸ்காரத்திலும் உபயோகிக்கப்படும் மந்த்ரங்கள் அடங்கிய தைத்ரீய ஆரண்யகம் முதல் ப்ரச்னத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஈச்வர – பரமேச்வரனே! ததீயமபி – அவனுடைய பொருளையும், தத்சப்தம் – அவன் பெயரால் சொல்லப்படுவதாக, ஸ்மரந்தி – பெரியவர்கள் கருதுகிறார்கள். ஸ்வஸ்வாமி பாவ ஸம்பந்தந்தால், ராஜாவைச் சேர்ந்தவர், ராஜாவென்று சொல்லப்படுவது ஸஹஜமே. அது போல ருத்ரனை ஸ்வாமியாகக் கொண்ட யக்ஞம் ருத்ர சப்தத்தால் சொல்லப்படுகிறது. ஸாமவேத ச்ருதி பர்யாலோசனாயாம் யக்ஞம் ருத்ர சப்தவாச்யமாக விருப்பது, ருத்ரஸ்வாமிகம் என்பதால் என்ற அர்த்தம் தெளிவாகிறது. யத் – எத்தக் காரணத்தால், தத்ப்ரதேசகத ருத்ரபதாவகாசே – அந்த ஆருண கேதுகம் என்ற பெயருள்ள யஜுர்வேத ஆரண்ய பாகத்திலுள்ள ருத்ரத்தின் ஸ்தானத்தில், ஸாமகேப்ய: – ஸாமவேதம் கரை கண்டவர்களிடமிருந்து, யக்ஞஸ்ய சப்தம் – யக்ஞஸ்ய என்ற சப்தத்தை, அனுசுச்ரும – கேட்கின்றோம்.
ஒரே அர்த்தத்தைத் தெரிவிக்கும் சுருதிகளில், பதபேதமாக ஓரிடத்தில் யக்ஞ சப்தமும், மற்றோரிடத்தில் ருத்ரபதமும் கூறப்படுவதால், கதிஸாமன்ய ந்யாயத்தால் இரண்டு பதங்களும் ஒரே பொருளை குறிக்கின்றன என்பது ஏற்படுமாதலால், யக்ஞத்தை ருத்ர சப்தம் யஜுர் வேதத்தில் குறிப்பிடுவது திண்ணம்.

சுலோகம் 28

ஸந்த்யேவ தத்திதபத ப்ரதிரூபகாணி
பூரிணி பாகவத ஸாத்வத ஸந்நிபாநி |
ஸ்யாத் தாத்ருகேவ பகவானிதி சப்தரூபம்
ஷாட்குண்யஹேதுகமபி த்வதுபைதி நாந்யம் ||
பதவுரை
தத்திதபத ப்ரதிரூபகாணி – தத்திதாந்தம் போலத் தோன்றும் அகண்ட பதங்கள், பாகவத ஸாத்வதஸந்நிபாநி – பாகவதஸாத்வத, மைத்ர முதலிய, பூரிணி – பலபதங்கள், ஸந்த்யேவ – இருக்கின்றன. பகவானிடி சப்த ரூபம் – பகவான் என்கிற சப்த ரூபமும், தாத்ருகேவ ஸ்யாத் – அப்படியே தத்திதாந்த ப்ரதிரூபகம் அகண்ட பதம் என்றே இருக்க வேண்டும். பவான் என்பதுபோல பகவான் என்பது பூஜ்ய பதம் ஆனதால், ரூட பதமாகக் கொள்ளவேண்டும் தனவான் என்பதில் போல மது பூ ப்ரத்யயம் வரவேண்டிய ஆவச்யகமில்லை. உம்மிடமே ஈச்வர சப்தம் ரூடமென்று நிரூபிக்கப் பட்டதால், பூஜ்யதையும் ஈச்வரனாகிய உமக்காகையால், பகவான் சப்தம் முக்கியமாக உமக்குத் தான் பொருந்தும்.அப்படி தனவான் என்பது போல, பக: அஸ்யாஸ்தீதி பகவான் என்று வ்யுத்பத்தி செய்து, தத்திதாந்தமாகக் கொண்டு, ஆறுகுணங்கள் உடையவரைக் குறிக்கும் யெளகிக சப்தமாகக் கொண்டாலும், ஷாட்குண்யஹேதுகமபி, அந்த பகவான் என்ற சப்தரூபம், த்வத் – உம்மைத் தவிர, அன்யம் – மற்றவரை, ந உபைதி – அடையத்தக்கதில்லை குறிக்கத்தல்ல.
(1) தேவாஸுரர்கள் யுத்தம் நேர்ந்ததும் தேவர்கள் தம் ஸொந்த த்ரவ்யங்களை அக்னியிடம் கொடுத்து, ந்யாஸமாகச் செய்து விட்டுச் சென்றதாகவும், பிறகு ஜயம் பெற்றுவத்து கேட்க, அக்னி கொடுக்கமனமில்லாமல் ஓட, பின்பற்றப்பட்டு அழுததாகவும் தேவர்களை அழச் செய்ததாகவும், வரலாறு யஜுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால் அக்னி சில இடங்களில் ருத்ர பதத்தால் குறிக்கப் படுகிறார்.
(2) ருத்ரனிடமிருந்து உண்டானதால், மருத்துக்கள், பார்ஷதர்கள் தந்தைபெயரால் கூறப்படுகிறார்கள்.
(ஆத்மாவை புத்ர நாமாஸி என்ற ந்யாயப்படி)
(3) துக்கத்தையும் பாபத்தையும் அழிப்பதால்,
(4) ப்ரம்மாவிற்கு வேதத்தை உபதேசிப்பதால், நாதத்தால் ஸகல உலகத்தை ஸந்தோஷப்படுத்துவதால் நாதஸ்வரூபி என்பதால் ஓங்காரத்தால், வேதசப்தத்தால், ஜபிப்பவர்களுக்கு இஷ்டத்தைக் கொடுப்பதால், கஷ்டப்படும் ஜனங்களைப் பார்த்து, தந்தைபோல தயையால் தான் கஷ்டப் படுவது போல் அழுவதால், ப்ரளய காலத்தில் ஸம்ஹார மூர்த்தியைப் பார்த்து உஅலக்ம் அழுவதால் மகாதேவோ மர்த்யான் ஆவிவேச என்றபடி கத்திக் கொண்டு, ஜனங்கள் உட்ப்ரவேசித்து ஆயுளை முடிப்பவர் என்றதால் மோகாத்மக மாயையை நீக்குவதால் பக்தர்களின் ஸம்ஸார துக்கத்தை விலக்குவதால் என்ற 9 விதமான வ்யுத் பத்தியும் ஒருங்கே பொருந்துவதால் ருத்ரசப்தத்திற்குப் பரமேச்வரன் முக்கிய பொருளாவார்.
(5) ருத்ராஸ்ய ஸ சிர: ப்ரதிததாதி என்று யக்ஞத்தில் ருத்ர சப்தப்ரயோகம்.
(6) ருத்ர ஏனம் பூத்வா ஹந்யாத் என்று வாஸ்தோஷ்பதி ஹோமம் செய்யாதவனுக்குக் கடுமையான ஜ்வரம் ஸம்பவிக்கும் என்ற இடத்தில் ருத்ரசப்தம் ஜ்வரவாசகம். ரெளத்ர சப்தம் கடுமை என்ற அர்த்தத்தைக் குறிப்பது இதிலிருந்து தான் தத்திதாத்த சப்தமான தென்று, ஆறு அர்த்தங்கள் ருத்ர சப்தத்துக் கூறப்பட்டன.

சுலோகம் 29

ஐச்வர்ய மக்ர்ய மனுபாதி மதீ ச லக்ஷ்மீ:
ஞானம் ச வீர்ய யசஸீ ச விராகதா ச |
ஏதே குணா: ஷடபி தே பகஸம்க்ஞ யோக்தா:
ஸந்தீத்யனேன பகவந் ! பகவா நஸி த்வம் ||
இவ்விதம் முதல் சுலோகத்தில் குறிக்கப்பட்ட ஐந்து லக்ஷணங்களில், நம : சேஷித்வம் என்ற முதல் லக்ஷணத்தை அதிவ்யாப்தி இல்லாததாக நிரூபணம் செய்து, அஸாதாரணமாக நிலை நாட்டிய பிறகு, இரண்டாவது லக்ஷணமான பகவத் பதவாச்யத்வம் என்றதை, அஸாதாரணமாக சிவபெருமானுக்கே உரித்து என்று இது முதல் 6½ சுலோகங்களால் விளக்குகிறார். (29 – 34½).
பதவுரை
அக்ர்யம் – சிறந்த, ஐச்வர்யம் – ஈசத்தன்மையும் அநுபாதி மதீ – காரணத்தால் ஏற்படாத, ஸ்வபாவகமாள, லக்ஷ்மீ: ச ஸம்பத்தும், ஞானம் ச – அறிவும், வீர்ய யசஸீ ச – பலமும் புகழும், விராகதா ச – வைராக்யமும், இந்த உலகிலுள்ள பயன்களில் ஆசையற்றிருத்தல், ஏதே – இந்த ஷடபிகுணா: – ஆறு குணங்களும், பக ஸம்க்ஞா – பக என்ற பதத்தால் உக்தா: சொல்லப்படுகின்றன தே – அவைகள், ஸந்தி – உம்மிடத்தில் இருக்கின்றன இத்யனேன – என்ற காரணத்தால், பகவந் – பெரியவரே, த்வம் – நீர், பகவானஸி – பகவத் சப்த வாச்யராக இருக்கிறீர்.

சுலோகம் 30

ஐச்வர்ய மீசவரபத ச்ருதி ருக்ர சப்தோ
வீர்யம் யச : சிவபதம் ச தவாபிதத்தே |
ஸர்வக்ஞ காம ரிபு சப்த ஸமர்த்திதெள ச
ஸார்வக்ஞ ராக விரஹெள பவத: புராரே ||
மேற்கூறிய ஈசத்வம் முதலிய ஆறு குணங்கள் சிவபிரானிடத்து உள்ளதற்கு ப்ரமாணம் சொல்லப்படுகிறது.
பதவுரை
ஈச்வரபத ச்ருதி : ஈச்வரன் என்ற பதமாகிய சுருதியானது, (இங்கு சுருதியென்றால் வேதமென்பது பொருள் அல்ல, பூர்வமீமாம்ஸையில் விநியோஜக ப்ரமாணங்கள் ஆறில் முதலாவதாகக் கூறப்பட்ட ஜைமினி பரிபாஷைப்படி, நிரபேக்ஷோ.. சப்த : ச்ருதி : – எந்த சப்தத்தால் கேட்டவுடனே பிறர் ஸந்தர்ப்பாதிகள் உதவியில்லாமல் அர்த்தம் அறியப்படுகிறதோ, அது சுருதி என்பது கருத்து) ஈச்வரன் கோயில் என்றால் ஸந்தர்ப்பம் தேவையில்லாமல் சிவபெருமான் ஆலயம் தான் அர்த்தமாகுமல்லவா).
தவ ஐச்வர்யம் – உம்மிடமிருக்கும் ஈசத்வத்தை அபிதத்தே – சொல்லுகிறது. உக்ரசப்த : – உக்ர என்ற சப்தம் (லிங்கவிதமாக), வீர்யம் – பலத்தையும் சிவபதம். யச : ச – புகழையும், அபிதத்தே – சொல்லுகிறது. புராரே – த்ரிபுரஸம்ஹாரக் கடவுளே, (ஸ்தூல ஸூக்ஷ்ம, காரண சரீரங்களை எரித்து, ஞானத்தால் முக்தியளிப்பவரே !) ஸார்வக்ஞராக விரஹெள – ஸகல அறிவும், ஆசையற்றலும், ஸர்வக்ஞ சப்த – ஸர்வக்ஞ சப்தத்தாலும், காமரிபு சப்த – காமரிபு – (காமனை எரித்தவர்) என்ற சப்தத்தாலும், ஸமர்த்திதெள பவத : – நிலைநாட்டப்பட்டவைகளாக இருக்கின்றன.
உக்ர என்ற பதம் குரூரன் என்ற பொருளைத் தராது பலமுள்ளவன், பிறரால் அவமதிக்கப்படாதவன் என்ற பொருளைத்தான் குறிக்கும்.
உக்ரோஸ்யுக்ரோஹம் ஸ ஜாதேஷுபூயாஸம்
என்ற பிரார்த்தனை காணப்படுகிறது. அங்கு நீங்கள் பிறரால் அவமதிக்கப்படாமல் பலவானாக இருக்கிறீர். நானும் அவ்வண்ணமே, பந்துக்களால் அவமதிக்கப்படாமல் பலவானாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்பது தான் பொருத்தமானது.
“உக்ரேப்ய: கச்சித் ஓஜீயாந்”
என்ற மற்ற ச்ருதியும், ஓ ஜீயாந் – பலமுள்ளவர்களுக்குள் மிகுந்த பலமுள்ளவர் என்ற பொருளைத்தான் கொடுக்கிறது.
அதவா, அசேஷ கல்யாண குணைக கன ஈச்வர : |
சிவ இத்யுச்யதே ஸத்பி : சிவதத்வார்த்த வேதிபி : ||
என்ற புராண வசனப்படி, ஸமஸ்த கல்யாணகுண கூட்டத்தைச் சொல்லும் பதம் சிவபதம் என்பது திண்ணம். அக்கூட்டத்தில் புகழும் அடங்கியபடியால், சிவபதம் புகழைச் சொல்வதாக மூலத்தில் கூறப்படுகிறது. இந்த்ரியம் முதலிய உதவி அபேக்ஷையில்லாமல் எல்லா விஷயத்தையும் அறியும் சக்தியுடைமை ஸர்வக்ஞ்யத்வம் எனப்படும். நமக்குக் கண் அபேக்ஷை இல்லாமல், ரூபஞானம் வருவதில்லை. ஸாதன அபேக்ஷையில்லாமல், ஸகல ஞானமும் இருக்க வேண்டும் அது தான் ஸார்வஞ்யம் என்பது வாயவீயஸம்ஹிதையில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஈச்வரனை நிலைநாட்ட எழுதப்பட்ட ந்யாய குஸுமாஞ்சலி என்ற கிரந்தத்தில் ஸ்ரீமான் உதயனாசார்யார் அவர்களும் ஈச்வரனுடைய ஸார்வஞ்யத்தை இவ்விதமே வர்ணித்துள்ளார்.
ஸாக்ஷாத் காரிணி, நித்ய யோகினி பாத்வார அனபேக்ஷ்ய ஸ்திதெள பூதார்த்தானுபவே என்று ஆரம்பித்து, தன்மே ப்ரமாணம் சிவ : என்று, சிவனே ஸர்வக்ஞர் என்று அபிப்பிராயத்துடன் முடித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: