படலம் 41: ஸார்வதேசிகலிங்க பிரதிஷ்டை
41வது படலத்தில் ஸார்வதேசிக லிங்கம் பிரதிஷ்டை செய்யும் முறை கூறப்படுகிறது. முதலாவதாக ஸார்வ தேசிகலிங்கங்களின் ஸ்தாபனம் கூறப்படுகிறது என்பது பிரதிஞ்ஞையாகும். பிறகு ஸார்வதேசிகம் என்ற பெயருக்கு ஆலயம் லிங்கம், பீடம், இவைகளின் கருங்கல் இவைகளின் விதியோ எல்லா இடத்திலும் ஒத்துக் கொள்ள படுவதாகும் என கூறப்படுகிறது. ஸார்வ தேசிகன் என்ற ஆலயங்களை ஸாத்விகம், ராஜசம், தாமசம், என்ற தேசத்திலோ ஏற்படுத்தவும், ராஜசமான தேசத்தில் அந்த ஆலயத்தின் கல்பனம் விசேஷமாக அரசர்களின் வெற்றிக் காரணத்திற்காகவும், அறம், பொருள், இன்பம் இவைகள் சித்திப் பதற்காகவும் ஆகும். ஆகையால் ராஜசதேசத்தில் அந்த ஆலயங்களின் கல்பனம் எல்லா விருப்பத்தையும் கொடுக்கும் என கூறப்படுகிறது. வேறு இடத்தில் பிரதிஷ்டை செய்வது நடத்துபவன் நடத்திவைப்பவன் ஆகிய இருவருக்கும் உயர்ந்த பதவி கூறப்படுகிறது. பிறகு நாகரம், திராவிடம், வேசரம், ஸார்வதேசிகம் என்ற பெயரை உடையவைகள். முறையாக கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம், ஆகிய யுகங்களின் சம்மதமாக கூறப்படுகிறது. வராடம், காலிங்கம் என்ற பெயர் உடைய விமானம் எல்லா இடத்திலும் சம்மதம் ஆகிறது என்று கூறப்படுகிறது. பிறகு ஸார்வதேசிகம் என்ற பெயர் உடைய விமானம் புகழை விரும்பக் கூடியவர்களால் செய்ய வேண்டிய கார்யம் என கூறப்படுகிறது. ஸார்வதேசிக ஆலய விஷயத்தில் தந்திர சங்கிரஹம் என்ற தோஷம் ஏற்படுவதில்லை என கூறுகிறார். பின்பு ஸார்வதேசிக ஆலயத்தின் அமைப்பு கூறப்படுகிறது. ஸார்வதேசிக ஆலயத்தின் அளவால் கணக்கிடும் முதலியவைகளின் நிரூபணமும் விசேஷமாக ஆயாதி என்ற அளவால் கணக்கிடும் முறையும் கூறப்படுகிறது. பிறகு கர்பக் கிரகத்தின் நிர்மாண முறை நிரூபிக்கப்படுகிறது.
பிறகு ஸார்வதேசிக லிங்கங்களின் அமைப்பு ஆலயம் கர்பக்கிரஹம், வாசல்படி, ஸ்தம்பங்கள் இவைகளின் அளவுகளை அனுசரித்து லிங்கங்களின் அளவு செய்யும் முறையும் நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஸமகண்ட, வர்த்தமான, சைவாதிக்ய, த்ரைராசிக, ஸ்வஸ்திக, சஹஸ்ராக்யம் என தாரா லிங்கங்களின் பெயர்கள் நிரூபிக்கப்படுகின்றன. அவைகளின் கூறப்பட்டமுறையால் லக்ஷணத்துடன் கூடியதாகவும் உபபேதமாகவும் நிரூபிக்கப்படுகிறது. இங்கு ஸஹஸ்ரலிங்க தாராலிங்கத்தின் அமைப்பு முன்பு கூறியபடியே இந்த படல விஷயத்திலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக முகலிங்கமும் முன்பு கூறிய முறைப்படி இந்த இடத்திலும் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பின்பு லிங்கங்களின் சிரோவர்தனம் என்கின்ற தலையின் சுற்றளவு முன்பு கூறிய முறைப்படியே செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறாக லக்ஷணத்தின் மேற்பட்ட பரீட்சை முறையானது, சிவலிங்கபிரதிஷ்டையில் கூறப்பட்டுள்ள முறைப்படி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு பீடத்தின் அமைப்பு கூறப்படுகிறது. பிறகு லிங்க உயரத்தின் என்ற அளவாலும், கர்பக்கிரஹத்தின் அளவாலும், பீடத்தின் விஸ்தார தன்மை நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறு பீடத்தின் உயர அளவு சுருக்கமாக கூறப்படுகிறது. பீடத்தின் ஸ்தாபிக்கும் முறையால் அதற்கு அலங்காரம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு கூர்ம சிலை பிரம்ம சிலை இவைகளின் அமைப்பு விளக்கப்படுகிறது. பிறகு லிங்கத்திற்கும் எவ்வாறு நிழல் அடிக்கும் தன்மை ஏற்படாதோ அதன்படி செய்ய வேண்டும் என விசேஷமாக கூறப்படுகிறது. ஸ்வாயம்புவ பாண, காணப, ஆருஷ, லிங்கங்களின், அமைப்பு விரும்பதக்கதல்ல என கூறி அந்த விஷயத்தின் வேறு விசேஷமான விளக்கம் காணப்படுகிறது. முடிவில் ஸார்வதேசிக லிங்கங்களின் பிரதிஷ்டை முன்பு கூறிய முறைப்படியே செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு 41வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. எல்லா தேசத்திற்கும் உட்பட்டதான பிரதான லிங்கம் முதலியவைகளின் பிரதிஷ்டை நன்கு கூறப்படுகிறது. ஆலயம், லிங்கம், பீடம், கற்கள் இவைகளையுடைய
2. ஸார்வ தேசிகம் என் பெயரையுடையவற்றிற்கு விதிமுறையானது எங்கும் பொதுவானதாகும். ஸாத்விகம், ராஜஸம், தாமஸம், ஆகிய தேசத்திலோ பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
3. சிறப்பாக ராஜஸ தேசத்தில் ஸ்தாபிக்கப்படுவது அரசர்களின் வெற்றிக்கு காரணமாகும். இது அறம், பொருள், இன்பம் கிடைப்பதற்காக ஸார்வகாமிகம் எனக் கூறப்படுகிறது.
4. மற்றவை எல்லாம் செய்கிறவனுக்கும், செய்விப்போனுக்கும் பேரின்பத்தை கொடுக்க கூடியவையாகும். க்ருதயுகத்தில் நாகரம்என்ற அமைப்பும் த்ரேதாயுகத்தில் திராவிடம் என்ற விமான அமைப்பும் ஆகும்.
5. த்வாபரயுகத்தில் வேஸரம் என்ற அமைப்பும், கலியுகத்தில் ஸார்வதேசிகம் என்ற அமைப்பும் கூறப்பட்டுள்ளது. வராடமும், காலிங்கமும் எல்லாவிடத்திலும் பொதுவானதாகும்.
6. மேலும் நாகரம், திராவிடம், காலிங்கம், வேஸரம் இவைகளைக் காட்டிலும் வராடம் என்கிற ஸார்வ தேசிக அமைப்பு விசேஷமாகக் கூறப்படுகிறது.
7. ஸார்வ தேசிகம் என்று கூறப்பட்டு அதன் பயன் விசேஷமாக கூறப்படுகிறது. ஸ்வாயம்புவம், பாணம், தைவிகம் ஆர்ஷம் என்ற லிங்க அமைப்புகள்
8. எவ்வாறு விசேஷமானதோ அவ்விதமே ஸார்வ தேசிக லிங்கம் சிறந்ததாக கூறப்பட்டுள்ளது. மானுஷ லிங்கம் முதலியவைகளிலும் விசேஷமான பயன்கள் சொல்லப்பட்டது.
9. ஆகையால் மேன்மையை விரும்புகிறவர்களால் ஸார்வ தேசிக லிங்க ஸ்தாபநம் செய்யத்தக்கது. அதில் தந்திர கலப்பு குற்றமோ, மந்திர கலப்பு குற்றமோ,
10. ஆசார்ய கலப்பு குற்றமோ, பிரதேச கலப்பு குற்றமோ, காலநேரக் கலப்பு குற்றமோ, யுகக் கலப்பு குற்றமோ
11. மற்றும் வேறுவிதமான குற்றமோ இல்லை. ஆதலால்தான் ஸார்வதேசிக லிங்கம் விசேஷமாக சொல்லப்படுகிறது. ஸார்வ தேசிக ஆலயத்தின் உயர அகல அளவு கூறப்படுகிறது.
12. மூன்று நான்கு கைமுழம் முதல் இரண்டிரண்டு முழமாக அதிகப்படுத்தி ஐம்பது முழம் வரை ஸார்வதேசிக ஆலயத்தின் அளவாகும்.
13. ஸார்வதேசிக ஆலயத்தில் சாந்திகம் முதலான உயர அமைப்புகள் எவைகள் உண்டோ அவைகள், உயரத்தின் இரண்டு பகுதியில் மூன்று பங்கு முதல் ஏழு பங்கு வரை உள்ளது சாந்திகம் முதலான அமைப்புகளாகும்.
14. உயர்ந்த ஆசார்யர்களால் பாதிபாகம் அளவு அதிகரித்து மூன்று மடங்கு வரையிலாகவோ உயர அமைப்புகளை ஒன்று, இரண்டு, மூன்று என்ற முழ அளவுகளால் கூடினதாகவோ, குறைந்ததாகவோ ஏற்க வேண்டும்.
15. ஆயம் என்பது முதலான அளவுகளின் கணக்கு உருவ பிம்பத்திற்கு தேவையில்லை என்பதால் உருவ பிம்பத்தின் அமைப்பை ஆயம் என்பவைகளால் கணக்கிடக்கூடாது. அகலத்திலிருந்தும் உயரத்திலிருந்துமோ, அகலத்தின் உயர அளவாலோ
16. அகலத்தின், நீளத்தின் அளவாகவோ, சுற்றளவாலோ ஆராயவும். சிறிய குறிப்பினால் சிறிய முறையாக ஆயம் முதலியவைகள் கூறப்படுகின்றன.
17. ஒன்பது, எட்டு, ஆறு என்ற அளவுகளால் விருப்பப்படி முறையாக அளவை ஏற்கவும். பதினொன்று, பன்னிரெண்டு, ஐந்து என்ற எண்ணிக்கைகளால் குறைத்து மீதமுள்ள ஆய அளவை அறிய வேண்டும்.
18. மூன்று, எட்டு, ஒன்பது, பத்து, பதினான்கு ஆறு, எட்டு, ஏழு என்ற எண்ணிக்கைகளால் குறைப்பதையோ, அதிகரிப்பதையோ செய்து மீதியை செலவாக அறிய வேண்டும்.
19. பன்னிரெண்டு, ஏழு, ஆறு அளவுகளினாலும், நட்சத்திரங்களினாலும் நாளை எண்ணவும். அரசன், யஜமானனின் ஜன்ம தினத்திலிருந்தோ, வாஸ்து லிங்கங்களின் நக்ஷத்திர தினம் வரையிலோ
20. கிடைத்த நக்ஷத்திரத்தில் முறைப்படி ஜன்மம் முதலான நக்ஷத்திரங்களை எண்ணி அறியவும், கஷ்டம், ஐச்வர்யம், ஆபத்து, நலம், சச்சரவு, அனுகூலம், கொல்லுதல் (துஷ்டி, ஸம்பத், விபத்து, ÷க்ஷமம், ப்ரத்யரம், ஸாதகம், வதம், மைத்ரம், பரமமைத்ரம் என்பது ஒன்பது வித ஜன்ம நக்ஷத்திர பலனாகும்.)
21. நட்பு, மிக நட்பு என்பதாக நக்ஷத்திரத்திலிருந்து க்ரியை செய்யும் நக்ஷத்திரம் வரை கூட்டி ஒன்பதால் வகுக்க மீதம் வரும் எண்ணிக்கைகளின் பலனாகும். மீதமுள்ள எண்ணிக்கையை ஒன்று என்றால் கலஹம் என்றும், இரண்டெனில் ஐஸ்வர்யம் என்றும் முன்புள்ளபடி மீத பலன்களை அறிய வேண்டும்.
22. மூன்றாவதான த்ரிஜன்ம நக்ஷத்திரம் சுபம். லக்னத்தின் எட்டாம் ராசியில் இருக்கும் நக்ஷத்திரம் இறந்ததாகக் கூறப்படுகிறது. வைநாசிக நக்ஷத்திரமின்றி மூன்றாவது நக்ஷத்திரத்திலோ மாறுபட்ட நக்ஷத்திரத்திலோ செய்ய வேண்டும்.
23. மற்றவைகளை நல்லவையென அறிந்து நக்ஷத்திரங்களை உபயோகிக்க வேண்டும். வியோகம் முதலான கெட்ட யோகங்களையும், அசுரகணம், மானுஷ்ய கணங்களையும்
24. விருப்பப் பயனை அடைய விரும்புபவன் தள்ளி வைக்கவேண்டும். மோக்ஷத்தை விரும்புபவன் தன் விருப்பம்போல் செய்யவும். ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, ஒன்பது ஆகிய எண்ணிக்கைகளால் குறைக்கப்பட்டது எதுவோ
25. அவை தஸ்கரம் என்பது முதலான அம்சமாக அறியவும். அந்த அம்சங்களின் பெயரால் அதன் பலன்களை அறியவும். பதினொன்று ஒன்பது, மூன்று, என்பவைகளால் யோநி லக்ஷணங்களின் அதிகரிப்பை எண்ண வேண்டும்.
26. த்வஜம் என்பது முதலான எட்டு யோநிகளும், ஷட்ஜம் முதலான ஏழு யோகிநிகளும் ப்ருத்வீ முதலான ஐந்து யோநிகளுமோ, தக்ஷிணாக்னி முதலான மூன்று அக்னிகளும்
27. நான்கு வகை யோநி அமைப்புகளாக அறியவும். த்வஜம் முதலான முன்பு கூறப்பட்டது போலவே ஆகும். ஷட்ஜம், வ்ருஷபம், காந்தாரம், பஞ்சமம், மத்யமம்
28. நிஷாதம், தைவம் என்பதான ஏழு யோநிகளாகும். அவைகளில் ஷட்ஜம் வ்ருஷபம் இவைகள் சிறந்ததாகும். பூதங்களில் பூமி, நீர் என்பது சிறந்ததாகும்.
29. அக்னிகளில் கார்ஹபத்யமும், ஆஹவநீயமும் சிறந்ததாகும். மண் முதலானவை நம்மால் அறியப்பட்ட ஐந்து யோகிநிகளாகும். அவ்வாறே தட்சிணம் முதலான மூன்று அக்னிகளும் ஆகும்.
30. ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு என்ற அளவு அதிகரிப்பதால் சிவனிடத்தில் வாயிற்படி அமைக்கப்பட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை, சனிக்கிழமை, செவ்வாய்கிழமை ஆகியவைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையல்ல. நல்ல யோகத்துடன் இருப்பின் அவை நல்லதை தருவதாகும்.
31. ஆலயம், மண்டபம், பிரகாரம், கோபுரம், லிங்கம், உருவ பிம்பம் முதலியவைகளில் ஆயம் என்பதான கணக்கிடும் அளவுகளை அமைக்க வேண்டும்.
32. ஆனால் லிங்கத்திலும், பிம்ப உருவத்திலும் உயர அளவாகவே அமைக்க வேண்டும். ஆலயத்தின் மூன்று பங்கு, நான்கில் மூன்று பங்கோ, ஐந்தில் மூன்று பங்கோ, இரண்டு பங்கோ
33. ஆறம்சத்தில் நான்கு பங்கோ, ஏழு பாகத்தில் ஐந்து பங்கோ, நான்கு பாகமோ, மூன்று பாகங்களாகவோ கருவறையை அமைக்க வேண்டும்.
34. ஆலய அமைப்பின் எட்டு பாகத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு பாகங்களால் கர்பக்ருஹத்தை அமைக்கலாம். கருவறையின் ஒன்பது பாகத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு பாகத்தால் கோமுகத்தை அமைக்க வேண்டும்.
35. ஓர் கையளவினாலோ இரண்டு கையளவினாலோ கலந்ததாகவோ சுவற்றை அமைக்க வேண்டும். மூன்றில்இரண்டு பங்கோ, ஓர் பங்கோ, ஐந்தம்சத்தில் மூன்று பங்கோ
36. ஆறம்சத்தில் நான்குபங்கோ, ஏழம்சத்தில் மூன்றம்சமுமோ, மத்தியில் நான்கு பங்கு, ஆறு பங்கு, ஐந்து பங்கு அளவாகவோ
37. எட்டாக பிரிக்கப்பட்டதிலும் ஒன்பதாக பிரிக்கப்பட்டதிலும் ஐந்து பாகமோ நான்கு பாகத்தினாலோ நடுவில் பத்ரம் என்ற அமைப்பைச் செய்ய வேண்டும்.
38. கால் பாகமோ, முக்கால் பாகத்தின் பாதி பாகமோ, இரண்டம்சம் வெளியில் பத்ரத்தை தள்ளவும். பத்ரத்தின் இரண்டு பக்கத்திலும் ருத்ர உருவங்களையோ அமைக்க வேண்டும்.
39. விமானத்தின் ஒவ்வோர் தளத்திலும் ருத்ர உருவங்களை அமைக்கவும். கருவறையின் அளவை அனுசரித்து ஸார்வ தேசிக லிங்கங்கள் கூறப்படுகின்றன.
40. ஆலயத்தின் கருவறை அளவில் ஐந்தம்சத்தின் மூன்று பாகங்களால் செய்வது உயர்ந்ததாகும். ஒன்பது பங்கில் ஐந்து பாகங்களால் மத்திய நிலையாகும். பாதியளவால் அமைப்பது அளவாகும்.
41. அதன் இடைவெளி பிரிவினால் பிறவகைகள் ஆறு இருக்கின்றன. அதனிடை வெளிப்பட்ட பிரிவினால் முப்பத்தி மூன்று அளவுகளும் உள்ளன.
42. கருவறையை இருபதாக பிரிக்கப்பட்டதில் பத்து மடங்கு அதம நிலையாகும். பதினொரு பங்குகளால் செய்வது நடுநிலையாகும். பன்னிரண்டு பங்குகளால் அமைப்பது உயர்ந்ததாகும்.
43. எட்டாக பிரிக்கப்பட்ட நடுபாகத்தில் லிங்கங்கள் அமைக்கப்பட வேண்டும். கருவறையை ஒன்பதாகவோ பிரித்து ஒன்பது லிங்கங்களையோ அமைக்க வேண்டும்.
44. கருவறையில் நான்கில் ஓர் பங்கு அதமம் ஆகும். மூன்று பங்கு (முக்கால் பங்கு) உயர்ந்ததாக ஆகும். நடுவில் எட்டாக பிரிக்கப்பட்ட பாகத்தில் அந்தந்த பாகத்திற்கிடைப்பட்ட பிரிவினால்
45. லிங்கங்களுக்கு முப்பத்தி மூன்று அளவுகள் கூறப்பட்டுள்ளன அல்லது கருவறையினுடைய மூன்றிலொரு பாகம் கடைசி அமைப்பாகும்.
46. கருவறையின் பாதிபாகம் நடுநிலையாகவும், ஐந்து மூன்று பங்கு உயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. முன்பு போல் நடுபாகத்தை முப்பத்தி மூன்று அளவாகச் செய்ய வேண்டும்.
47. லிங்க உயரத்தின் பத்தம்சத்தில் நான்கு, ஐந்து ஆறு பாகங்களால் செய்வது நல்லதாகும். ஓர் முழம் ஆரம்பித்து ஓரோரங்குல அதிகரிப்பால்
48. ஒன்பது முழம் வரையில் லிங்கத்தின் உயர அளவாகும். கருவறை இருபத்தியொரு பங்காக பிரிக்கப்பட்டபொழுது
49. பதிமூன்றம்சம் உயர்ந்ததாகும். பத்தம்சம் அதமம் ஆகும். முன்பு போல் முப்பத்தி மூன்று அளவால் மத்யபாகத்தை செய்து விட வேண்டும்.
50. லிங்க உயரத்தில் பத்து பங்கில் நான்கு, ஐந்து, ஆறு பங்கால் செய்வது உயர்ந்ததாகும். மூன்று பங்கு ஐந்து பாகங்களால் லிங்கத்தின் அகலம் கூறப்பட்டுள்ளது.
51. இருபத்தி நான்காக்கப்பட்ட லிங்க உயரத்தில்ஐந்து பாகங்களால் அகலமாகும் அல்லது பதினெட்டாக பிரிக்கப்பட்ட லிங்க உயரத்தில் ஐந்து பாகமோ
52. நான்கு பாகமோ லிங்க அகலமாக கூறப்பட்டுள்ளது. நீளத்தை இருபத்தியொரு பாகமாக்கி ஆறு, ஐந்து ஏழு பாகங்களினால்
53. லிங்கங்களின் அகலம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வாயிற்படி, தூண்கள் முதலியவைகளாலும் லிங்கத்தின் அளவை அறிய வேண்டும்.
54. அங்குலங்களால் பிரித்த அளவால் லிங்கங்களை பிரித்தறியவும். ஆயம் என்ற அளவுகளால் சுபமென்ற அளவை அடைய அம்சங்களால் பிரித்தெறிய வேண்டும்.
55. பதினாறாம்சம் முதல் இருபத்தி நான்கு அம்சம் வரையிலாகவும், நூறு பாகமாக பிரித்து ஓர் பாகத்தை சேர்க்க வேண்டும்.
56. மேற்கூறிய அளவுகளால் லிங்கம், பிம்பம் இவைகளின் அளவுகளை அறியவும். ஸமகண்டம், வர்தமாநம், சைவாதிக்யம், த்ரைராசிகம்
57. ஸ்வஸ்திகம், ஸஹஸ்ரம், தாராலிங்கம் என்று லிங்கங்களின் பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. இப்பேர்பட்ட வகையுடன் கூடியதென சிறுகுறிப்பு முறையாக கூறப்படுகிறது.
58. லிங்கத்தின் உயரத்தை மூன்று பாகமாக பிரித்து மூன்று பங்காக்கவும். அந்த பாகத்தின் சமமான உயரத்தையுடையது ஸமகண்டமெனப்படும்.
59. முன்பே கூறப்பட்ட உயரத்தின் அளவுகளை யுடையதும் ஸமகண்டம் எனப்படுகிறது. சிவனின் உயரத்தில் பதினைந்து, பதினான்கு, இருபத்தியொன்று, இருபத்திநான்கம்சமாக உள்ளது.
60. நான்கு, ஐந்து, ஆறு, ஏழு அம்ச பாகங்கள் ப்ரும்ம பாகத்தில் கூறப்பட்டுள்ளன. அந்தந்த விஷ்ணு, ருத்ர பாகங்களின் அதிகரிப்பால் அவைகளின் அளவை அறிய வேண்டும்.
61. நான்கு விதமான வர்தமான அளவுகள் அந்தணர் முதலான நால்வர்களிடத்தில் வரிசையாக கூறப்படுகிறது. வேறு விதமாகவும் வர்த்தமாநம் கூறப்படுகிறது.
62. ஓர் முழத்தில் ஓர் அங்குலமும், இரண்டு மூன்றுமுழத்தில் மூன்று மாத்ரையளவும் நான்கு, ஐந்து முழத்தில் ஐந்து மாத்ரையும் ஆறு, ஏழு முழத்தில் ஏழு மாத்ரையளவும்
63. எட்டு, ஒன்பது முழங்களில் ஒன்பது அங்குலமும் உயர்வாகி உள்ளது என அறியவும். ஆறுபாகமாக்கப்பட்டாதில் ஒன்று, இரண்டு, மூன்று மாத்ரையாக அதிகரித்து
64. ப்ரும்ம, விஷ்ணு ருத்ராம்சத்தில் ஓர் முழமும் முறையாக்கப்பட்டுள்ளது. ஏழு, ஏழு எட்டு என்ற பாகமும், ஐந்து ஐந்து ஆறு என்ற பாகமும்
65. நான்கு, நான்கு, ஐந்து என்ற அம்சமும், மூன்று, மூன்று என்ற பாகமாக அந்தணர் முதலான நான்கு வர்ணத்தவர்களின் முறைப்படியான சிவாதிகம் என்ற லிங்க அமைப்பை அறிய வேண்டும்.
66. லிங்க உயரத்தை ஒன்பது பாகமாக்கி, பிரும்மம் முதலான மூன்று, மூன்று பாகங்களால் ஆறு, ஏழு எட்டு பாகங்களாலும் ருத்ரபாகம் முதலான பாகங்களின் உயரத்தை முறைப்படி அறிய வேண்டும்.
67. மேற்கூறிய அமைப்பு த்ரைராசிகம் என்ற லிங்கமாகும். அது நான்காம் வர்ணத்தவர்களுக்கு உயர்வானதாகும். ஒன்பதாக்கப்பட்ட லிங்க அளவினால் மூன்று, நான்கு பாகங்களால் ப்ரும்ம பாகம் முதலான பாகங்களை அறிய வேண்டும்.
68. மேற்கூறியது ஸ்வஸ்திக லிங்கமாகும். வேறு விதமாகவும் கூறப்படுகிறது. சிவனின் உயரத்தை முப்பது பாகமாக்கப்பட்டதில் ஒன்பது, பத்து, பதினொன்று பாகங்களால்
69. ப்ரும்ம பாகம் முதலியவைகளை கல்பிக்கவும். ப்ரும்மம் முதலான பாகத்திலிருந்து ஒவ்வொரு முறையாக லிங்கத்தில் முப்பத்தி மூன்று பாகமாக்கப்பட்டதில் நான்காம் வர்ணத்தவர்களுக்கு உரியதாக ஸ்வஸ்திகம் என்ற அமைப்பாகும்.
70. ஸஹஸ்ர லிங்கத்தையும் தாரா லிங்கத்தையும் முன்பு கூறப்பட்டுள்ளபடியே அமைக்கப்பட வேண்டும். முகலிங்கமும் முன்பு கூறப்பட்டுள்ளபடியே அமைக்கவேண்டும்.
71. மேற்கூறிய லிங்கங்களுக்கு தலையில் வட்ட வடிவமான (சிரோவர்தநம்) அமைப்பு முன்பு கூறியபடி செய்ய வேண்டும். லிங்கங்களும் சிரோவர்தநம் என்ற பாகமானது அதிகமாக செயற்பாலதாகும்.
72. எல்லாவற்றிற்கும் மூன்றிலோர் பாகத்திற்கு மேற்பட்டதாக சிரோவர்தநம் அமைக்க வேண்டும். சிவலிங்க பிரதிஷ்டையில் கூறப்பட்டுள்ள முறைப்படி சிவலிங்க அமைப்பை செய்ய வேண்டும்.
73. எவ்வாறு லிங்கத்தின் பரப்பளவு உள்ளதோ அந்த அளவு பீடத்தின் பரப்பளவு இருக்க வேண்டும். லிங்க உயர அளவால் மூன்று மடங்காகவும் பரப்பளவு இருக்கலாம்.
74. நான்கு, ஐந்து மடங்காகவோ, இரண்டு மடங்காகவோ பீடத்தின் சுற்றளவு இருக்கலாம். பூஜையின் அம்சத்தில் இரண்டு, மூன்று, நான்கு மடங்காகவோ
75. அதன் கர்ணஅளவு பக்கவாட்டளவாகவோ, உயரத்தின் ஸமமாகவோ உயரத்தின் இரண்டு மடங்கு அளவாகவோ, பீடத்தின் சுற்றளவு கூறப்படுகிறது.
76. அவைகளின் இடைப்பட்ட அளவும் பீடங்களுக்கு கூறப்பட்டுள்ளன. கர்ப்பக்ருஹத்தின் மூறில் ஓர் பங்கோ, நான்கில் ஓர் பங்கோ
77. கருவறையின் பாதியளவோ, பீடத்தின் அகல அளவேயாகும். விஷ்ணு பாகத்தின் ஸமமான உயரமோ, கால் பங்கு, அரை பங்கு அளவுடன் கூடியதாகவோ பீடத்தின் அகலமாகும்.
78. பிரம்மபாக அளவை எட்டாக பிரித்து ஓர் பாக அதிகரிப்பால் ஐந்து பாக உயரமாகவோ, விஷ்ணு பாக உயர அளவால் ஐந்து பாக அதிகரிப்பாகவோ பீடத்தின் அளவை அறிய வேண்டும்.
79. பீடப் பிரதிஷ்டையில் கூறப்பட்டுள்ளபடி அதன் இலக்கண அமைப்புகளை செய்யவும். லிங்கத்தின் உயர அளவால் இரண்டு மடங்கோ, மூன்று மடங்குமோ
80. நான்கு, ஐந்து மடங்காகவோ ஆதார சிலையை அமைக்கவும். அந்தந்த இடைவெளியின் பாகங்களை ஒன்பதாக அமைத்தறிய வேண்டும்.
81. லிங்கத்தின் அகல அளவு சமமாகவோ லிங்கத்தின் உயரஅளவு சமமாகவோ பீடத்தின் சுற்றளவுக்கு ஸமமாக ப்ரும்ம சிலையை அமைக்க வேண்டும்.
82. பீடத்தின் அகல ஸமமாகவோ, முக்கால் பாகம், அரை பாகமாகவோ, கால்பாகமாகவோ உயரமுள்ளதாக ப்ரும்ம சிலை அமைக்க வேண்டும்.
83. அவ்வாறே நடுபாகத்தை நான்கு பங்காக்கி பிரும்ம சிலையின் உயரத்தை அமைக்கவும். லிங்கத்தின் உயர அளவானது பத்தம்சத்திற்கு ஸமமாகும்.
84. ஓர்பாகம் முதல் அதிகரிப்பால் நான்கு பாகம் வரையிலும், ப்ரும்ம சிலையின் (குழியை) த்வாரத்தை அமைக்கவும். உயரத்திலிருந்தும் அகலத்திலிருந்தும் முன்பக்கமாக
85. ஒவ்வொரு யவையளவு அதிகரிப்பால் இரண்டங்குலம் வரை அமைக்கவும். இதில் ஓர் விசேஷமுள்ளது. பூஜைக்கு அம்சமாக எவ்வளவு அளவு நீளமுள்ளதோ
86. அவ்வளவு அளவு வெளிப்பட்டதாக பீடத்தை அமைக்கவும். எவ்வாறு அமைத்தால் லிங்கத்திற்கும், பீடத்திற்கும் நிழல் தெரியும் குற்றம் ஏற்படாதோ அவ்வாறு அமைக்க வேண்டும்.
87. மேற்கூறியபடி அமைத்தால் அரசாங்கம், அரசன், செய்பவன், செய்விப்பவன் ஆகியவர்களுக்கும் உயர்ந்ததான நற்பயன் கிடைக்கிறது. எல்லா லிங்க விஷயத்திலும் இதே முறையாகும்.
88. அவ்வாறே பூஜை பாகத்தின் பாதியிலிருந்து கீழ்பட்டதாக அமைத்தாலும் பூஜை பாகத்திலிருந்து அதிகமான பீடமும், இரண்டு பாகத்திலிருந்தும் குறைவானதாகவோ
89. பீடம் அமைத்தாலும், பீடத்திலிருந்து லிங்கம் அமைத்தாலும் அது மோக்ஷத்தை கொடுக்கும். நற்பயனை அடைய தகுந்ததல்ல. ஸமமாக இருப்பின் ஸோகசித்தியையும், மோக்ஷ சித்தியையும் கொடுக்க கூடியதாகும்.
90. ஆலய அமைப்பு விஷயத்தில் சாந்திகம் முதலான உயர அமைப்புகள் கூறப்பட்டுள்ளது. ஆலய அமைப்பை அனுசரித்து எண்ண வேண்டும். ஆரம்பம், முடிவு என்பது இங்கு கூறப்படவில்லை.
91. ஸார்வதேசிக லிங்க விஷயத்தில் குறைத்தல், கூடுதல் என்ற விஷயத்தில் மிக்க குற்றமில்லை. ஸ்வயம்புலிங்கம், தைவிக லிங்கம், பாண லிங்கம், கணலிங்கம், ரிஷி லிங்கம் ஆகியவற்றின்
92. அகல உயரத்தினாலோ அவைகளுக்கு அமைப்பு முறை விரும்பத்தக்கதல்ல. ப்ரும்ம பாகம் முதலியவைகளால், தலையின் அமைப்பு முறை பேதங்களிலிருந்து
93. ப்ரும்ம நந்தி முதலான சிலைகளால் தனக்குரியதான அமைப்புகளாலும், ப்ரும்ம பாகம் முதலான மூன்று பாகங்களுடனோ, இரண்டு, ஒன்று பாகங்களுடன் கூடியதாகவோ
94. எவ்வாறு விசேஷமாக உருவ அமைப்பு இருக்குமோ அவ்வாறு அமைக்கவும். மேற்கூறியவைகளில் ஆலய பீட அமைப்பில் கருவறையளவு ஏதுண்டோ அவைகளுக்கு
95. ஸார்வதேசிக லிங்கம் இஷ்டமானது. மேற்கூறிய அமைப்புகள் ஸார்வதேசிகம் எனப்படுகிறது. ஆலயம், பீடம் இவைகளுக்கு பழுது குற்றம் மேற்பட்டால்
96. ஜீர்ணோத்தார முறைப்படியே பீடத்தையும் ஆலயத்தையும் அமைக்க வேண்டும். சிலையின் சேர்க்கை இல்லாவிடில் அவைகளின் சேர்க்கை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.
97. ஸ்வாயம்புவம் முதலான லிங்கங்களுக்கு கண்ணிற்கு புலப்படுமிடத்திற்கு கீழே தோண்டி பார்ப்பது நன்றன்று. மனிதர்களுக்கு திருட்டு பயத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்தும்.
98. லிங்கத்தில் காணப்படும் பிரதேசமே பிரம்ம ருத்ர விஷ்ணு பாகமாகும். ஆகையால் அதற்கு கீழ் உள்ள அடிபாகத்தை சோதிக்க கூடாது.
99. அறியாமையால் சோதிக்கின்ற காலத்தில் எஜமானனுக்கு மரணம் ஏற்படுமென்பது நிச்சயமாகும். சந்தேகமில்லை, ஸார்வ தேசிக லிங்கங்களுக்கு இவ்வாறு லக்ஷணம் கூறப்பட்டுள்ளது.
100. மேற்கூறிய லிங்கங்களின் பிரதிஷ்டை முறை முன்பு கூறப்பட்ட முறைப்படியே கூறப்படுகிறது.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸார்வதேசிகலிங்க ஆலய அமைப்பு முறையாகிற நாற்பத்தியோராவது படலமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக