வியாழன், 10 அக்டோபர், 2013

படலம் 38: ஆர்ஷலிங்க பிரதிஷ்டை

38வது படலத்தில் ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட லிங்கத்தின் ஆலய அமைப்பு முறை கூறப்படுகிறது. பிறகு முதலில் ஆர்ஷலிங்க இலக்கணம் கூறப்படுகிறது. அதில் கவுசிகர் முதலான முனிவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டும், மனிதர்களால் இன்றியும் பிரதிஷ்டை செய்யப்பட்டது மான லிங்கம் ஆருஷ லிங்கம் ஆகும். அதிலும் அடிபாகம் நெடுபாகம் மேல் பாகங்களில் பெரியதாகவோ மலிந்ததாகவோ இருக்கும் என கூறப்படுகிறது. பிறகு ஒரு தளம் உள்ள ஆலயம் அமைக்கும் முறையில் ஆருஷலிங்கம் அமைக்கும் முறை அறிவிக்கப்படுகிறது. அதில் லிங்கம், பீடம் விஷயத்தில் அளவை அனுசரித்து கருவறை அமைக்கும் முறையும், சுவர் அமைக்கும் முறையும், கோமுகம் அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. சுவயம்புவ லிங்கத்திலும் இவ்வாறே. ஒரு தளம் உடைய ஆலயம் அமைக்கும் முறை செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு இந்த விஷயத்தில் இரண்டு தளம் உடைய ஆலயம் அமைக்கும் முறையில் விசேஷமான முறை விளக்கப்படுகிறது. இவ்வாறு 38வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஆர்ஷ லிங்கங்களின் ஆலய விதி கூறப்பட்டுள்ளது. கவுசிகர் எல்லா ரிஷீகளாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆர்ஷ லிங்கம் எனப்படும்.

2. லிங்கத்தின் மூலபாகம் ஸ்தூலமாகவும் சிரோபாக ஸ்தூலமும், மத்யபாக ஸ்தூலமாகவோ மெலிந்ததாகவும், அம்சமில்லாமலும் வ்ருத்தாகாரமாகவும் பழம் போலவும் அளவு சூத்ரமில்லாமலும்

3. இந்த லக்ஷணமுடையதும் மானுஷலிங்கத்திற்கு வேறானதும் ஆன லிங்கம் பற்றி கூறப்படுகிறது. பூஜாம்ச ருத்ரபாகத்தின் இரண்டுபாக பீடமும், த்ரிகுணமாக கர்ப்பக்ருஹமும்

4. அதில் ருத்ராம்சத்தில் பாதிசுவர் அளவாகும், அதன் சமமாகவோ மூன்றம்சமாகவோ அகலத்தில் இரண்டு மடங்காகவோ முக்கால் பாகமதிகமாகவோ

5. பாதி பாகத்திற்கு அதிகமானதாகவோ, ஏழுபாகம் அதிகமாகவோ லிங்க அகல அளவில் மூன்று மடங்காக பீடம் கூறப்படுகிறது.

6. கர்ப்பக்ருஹமானது பீடத்தினுடைய மூன்று பாகத்திலும் இரண்டு பாகத்தால் சுவரின் அமைப்பாகும், முன்பு கூறப்பட்டதுபோல் உயரமும் ஆகும் வேறுவிதமாகவும் கூறப்படுகிறது.

7. லிங்க அகலத்தின் இரண்டளவினாலோ இரண்டின் பாதி அளவாகவும் பீடமாகும், பீடவிஸ்தார அளவினால் ஒன்றரை ஒரு பாகம் அதிகரிப்பினாலும்

8. ஒன்றரை பாகம் இரண்டு பாகம் வரையிலாக பீடத்தின் அகலமாகும். பீடஅகலத்தின் இரண்டு மூன்று, நான்கு மடங்கு அளவாகவோ

9. கோமுகத்தின் அளவாகும். இரண்டு பாகம், முக்கால் பாகம், இரண்டரை பாகம் ஒவ்வொரு அம்சத்தின் சமமாகவோ சுவற்றின் அளவாகும்.

10. கோமுகத்தின் முன்பாகம் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. வேறுவிதமாகவும் கூறப்படுகிறது, லிங்க அளவில் இரண்டு பாக அளவால் பீடத்தின் அளவாகும்.

11. பீடத்தின் மூன்று மடங்களவு கர்ப்ப க்ருஹமாகும். ஐந்தம்சம், மூன்றம்சம், இரண்டு பாகம் ஒரு பாகமான அளவிலோ கர்ப்ப க்ருஹ அளவின்படி சுவற்றின் அகல அளவாகும்.

12. பூஜை அம்சமான ருத்ரபாகத்தின் இரண்டு மடங்கு கர்ணபீடத்தின் அகலமாகும், அதிலிருந்து நான்கு மடங்கு கோமுக அளவாகும், அதன் மூன்று, ஆறு பாகங்களால்

13. ஓர் அம்சமாகும். வேறு விதமாகவும் அளவு கூறப்படுகிறது. லிங்க அளவின் இருமடங்கு அளவு கர்ணபீட அளவாகும்.

14. மூன்று பாக அளவு கோமுகமும் மூன்று நான்கு ஐந்து பாகங்களில் ஓர்பாக அளவு அதன் விஸ்தாரமாகும், வேறு விதமாகவும் கூறப்படுகிறது.

15. சுற்றளவு உயரத்தில் பதினாறு பாகத்தில் பதினான்கு பாகம் கர்ண அளவாகும் பீடத்தின் சுற்றளவு கோமுகத்தின் நான்கு மடங்கு அளவாகும்.

16. அதன் நான்கின் ஒருபாகமோ அல்லது மூன்றில் ஒரு பாகமோ எட்டுபாக அளவில் சுவற்றின் அளவாகும். இரட்டிப்பான அகலத்தில் கர்ண பாகத்தில் பத்தில் ஒரு பங்கை குறைவாக்கி

17. பீடத்தின் நீளத்தையும் அதிலிருந்து ஐந்து பாகம் கோமுகமுமாகும். மேற்கூறிய பாகத்திலிருந்து ஐந்தில் ஒரு பாகம், ஏழில் ஒரு பாகம் சுவற்றின் உயரம் பாதி அளவாகும்.

18. குறைவு இல்லா தன்மையின் இடைவெளியில் உள்ள பத்து பாகத்தின் எட்டில் ஒருபங்கு பீடத்திற்கும் கோமுகத்திற்கும் ஏற்றதாகும். பலவித அளவு இருக்குமேயாயின் சிறந்தவர்களால் விருப்பபட்டபடி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

19. ஸ்வாயம்புவ லிங்க விஷயத்தில் ஒரு தள விமான விஷயமாக கூறப்பட்டுள்ளது. இரண்டுதள விமான ஆலயத்தில்

20. ஆதாரத்துடனும் நிராதாரத்துடனும் ஆலயத்தில் அலிந்தம் என்ற அமைப்புள்ள சுவராகும். முன்பு கூறப்பட்டுள்ள முறைப்படி ஆலயத்தின் நக்ஷத்ரப் பொருத்தப்படி இருதள விமானத்தை அமைக்க வேண்டும்.

இவ்வாறு உத்திரகாமிக மஹாதந்திரத்தில் ஆர்ஷலிங்க ஆலய அமைப்பாகிய முப்பத்தியெட்டாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: