வியாழன், 10 அக்டோபர், 2013

படலம் 39: பவுருஷலிங்க பிரதிஷ்டை

39வது படலத்தில் புருஷர்களால் பிரதிஷ்டைசெய்யும் லிங்கத்தின் ஆலய நிர்மாணம் கூறப்படுகிறது. முதலாவதாக பக்தியுள்ள மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் பவுருஷம் என்று பவுருஷ லிங்கத்தின் அமைப்பு விவரிக்கப்பட்டுள்ளது. பிறகு தேய்மானம் அடைந்ததான முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம் நஷ்டமாக இருக்கும் சமயத்தில் அந்த உருவம் அறிந்த போதிலும் பிறகு ஆலயத்தின் அமைக்கும் முறையில் லிங்கத்தை அனுசரித்து ஆலயம் அமைக்கும் முறையும் விளக்கப்படுகிறது. இந்த சமயத்தில் முன்பு கூறிய படலத்தில் உள்ளது போல் லிங்கத்தின் உயர அளவை அனுசரித்து பீடம் அமைக்கும் முறை, பீடத்தை அனுசரித்து சுவர் அமைக்கும் முறை. சுவற்றை அனுசரித்து கோமுகம் அமைக்கும் முறையும் கூறப்படுகின்றது. பிறகு மீதம் உள்ள விஷயங்களை முன்பு போல் அனுசரிக்கவும் என கூறப்படுகிறது. லிங்கத்தை அனுசரித்து பீடம் பீடத்தை அனுசரித்து கர்பக் கிரகமும் கர்பக் கிரஹத்தை அனுசரித்து சுவர் அமைக்கும் முறை ஆகிய விஷயத்தில் அளவு முறையில் அதிகமானது, குறைவானது என்ற முறை விளக்கப்படுகிறது. ஆருஷலிங்க விஷயத்தில் லிங்க அளவை அனுசரித்து ஆலயம் அமைக்கும் விஷயத்தில் பட்டிகையுடன் கூடிய பிரசித்தமான ஆலயம் அமைக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக புராண, பவுருஷமானுஷ லிங்க அமைப்பு விஷயத்திலும், ஆலயம் அமைக்கும் விஷயத்திலும் செய்ய வேண்டிய விசேஷமான முறை கூறப்படுகிறது. முடிவில் பிராம்மணர் முதலான மூன்று வர்ணத்தவர்களால் பூஜிக்கப்பட்டலிங்கம் பவுருஷலிங்கம் என கூறப்படுகிறது. இவ்விதம் கூறப்பட்டு அதன் வேறு அமைப்பு முறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு 39வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பவுருஷ லிங்கத்தின் ஆலய அமைப்பு விதி கூறப்படுகிறது. பக்தியுள்ள மனுஷ்யர்களால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் பவுருஷ லிங்கமாகும்.

2. நம்மால் முன்பு அறியப்படாததாக ஸ்தாபித்த லிங்க விஷயத்தில் லிங்கத்தின் அளவைக் கொண்டு ஆலயம் அமைக்க வேண்டும்.

3. லிங்க உயர அளவால் மூன்று பங்கு பீட அகலமாகும். மூன்று பாக அளவில் கோமுக அளவும், மூன்று நான்கு பாக அளவில்

4. சுவற்றின் அகல அளவும் உயரமும் முன்பு கூறியபடி செய்யவும், லிங்க நீள உயரத்தின் குறுக்கு அளவின் ஒன்றரைபாக அரை பாகமான அதிக அளவால்,

5. இரண்டரை பங்கு அளவு வரை பீட அகலமாகும். அந்த அளவிலிருந்து நான்கு, ஐந்து மூன்று மடங்கு அளவிலான

6. கோமுக விலாசமாகும். பீட விஸ்தார அளவிற்கு ஸமமாகவோ இரண்டு மடங்காகவோ சமமாகவோ அரை அளவாகவோ பீட அகலமாகும்.

7. உதயம் முன்போலவேயாகும். வேறு முறையாகவும் கூறப்பட்டுள்ளது. பூஜாம்சத்தின் இரண்டு மடங்கு பீடத்தின் உதயமாகும்.

8. விசாலத்திலிருந்து நான்கு, ஐந்து குணம் (நாளீகேஹமாகும்) கோமுகமாகும், மீதமான எல்லா விபரங்களையும் முன்புபோல் செய்யவும்.

9. லிங்க அளவிலிருந்து பீடமும் பீடத்திலிருந்து கர்ப்க்ருஹமும் கர்ப்பக்ருஹத்திலிருந்து சுவர் அளவும் நிச்சயிக்கவும். ஒன்று முதல் ஏழுயவை அளவுற வரை ஒவ்வொரு மாத்திரை விருத்தியாக

10. மூன்று மாத்திரை வரை விருத்தியாகவோ குறைந்தோ செய்யவும், கர்ப்பக்ருஹத்தில் பீடமும், அதிலிருந்து ஆலயவிஸ்தாரமும்

11. பிராஸத விஸ்தார அளவின் பாதியோ, மூன்றிலொருபாகமோ சுவற்றின் நீள அளவாகும். அந்தர அளவில் எட்டம்ச அளவோ நான்கம்ச அளவோ அமைக்கவும்.

12. ஸ்வாயம் புவாதி லிங்க விஷயத்தில் முகப்பு முன்பே கூறப்பட்டுள்ளது. புருஷ புராணலிங்க விஷயத்திலும் கிராம அளவின்படி செய்ய வேண்டும்.

13. ஆர்ஷ லிங்க ஆலய விஷயத்தில் பட்டிகாங்க அளவுடன் அதிஷ்டானமுள்ளதாகவும் உபாநம், ஜகதீ கண்டம், பட்டிகா குமுதாதிகளில்

14. ஸ்தலம் வரை அமைக்க வேண்டும். புராண பவுருஷலிங்க விஷயத்தில் முன்புபோல் அமைக்கவும். மானுஷலிங்க விஷயத்தில் பட்டிகாந்தம், வ்ருத்யந்தமாக கோமுகமாகும்.

15. ஆலயத்தின் பீடபிரிப்பளவினால் கோமுகத்தில் பிரித்து சேர்த்ததாகவும், கோமுகம் வெளிப்பக்கமாகமாக இருந்தால் சேர்ந்ததாகவோ கூறப்படுகிறது.

16. சேர்ந்திருப்பதை அவ்வாறாகவே இருக்கச் செய்ய வேண்டும், கலக்கக் கூடாது, மூன்று வர்ணத்தவரால் பூஜிக்கப்பட்ட லிங்கம் பவுருஷம் எனப்படும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பவுருஷலிங்க ஆலய அமைப்பாகிற முப்பத்தியொன்பதாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: