வியாழன், 10 அக்டோபர், 2013

படலம் 40: லிங்க அளவை அனுசரித்து ஆலயம் அமைக்கும் முறை

40வது படலத்தில் லிங்க அளவை அனுசரித்து ஆலயம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. அதில் ஸ்வாயம்புவ பாண தெய்வீக ஆருஷ லிங்க விஷயத்தில் அவ்வாறே சித்த வித்யாதரர்களால் லிங்க விஷயத்திலும் லிங்கத்தை அனுசரித்து ஆலயம் அமைக்கவும் என்று கூறி பலவித முறையால் அளவு நிரூபணம் செய்வதை கொண்டு ஆலயம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. இவ்வாறு 40வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. இப்பொழுது லிங்கத்தின் பொருட்டு ஆலயம் அமைப்பதை விசேஷமாக கூறப்படுகிறது. ஸ்வாயம் புவம் பாணலிங்கம், தைவிகம், ஆர்ஷகம் என்றும்

2. சித்த வித்யாதரர்களாலும் மஹாத்மாக்களாலும் ஸ்தாபித்துமான லிங்கங்களை அனுசரித்து ஆலயம் அமைக்க வேண்டும்.

3. பூஜாம்சமான ருத்ரபாகி அளவிலோ கனஅளவிலோ அகலத்தினாலோ, உயரத்தினாலோ இவைகளின் கர்ணமா னங்களாலோ ஆலயம் அமைக்க வேண்டும்.

4. லிங்க உயர ஸமமாகவோ இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆறு மடங்காகவோ இரண்டு மடங்கு முதற்கொண்டோ ஆலயம் அமைக்க வேண்டும்.

5. தேவமானத்தில் எட்டுபாகமாகவோ ஒன்பது பாகமாகவோ, அதன் அரை பாகமாகவோ, கால் பாகமாகவோ முப்பத்தி இரண்டு பாகமாகவோ கூறப்பட்டுள்ளது.

6. பீடஅளவு ஒவ்வொன்றுக்குமாக தனித்தனியாக கூறப்படுகிறது. பீடத்தின் இருமடங்கு அளவோ மூன்று நான்கு மடங்கு அளவோ,

7. ஐந்து, ஆறு மடங்காகவோ கர்ப்ப கிருஹத்தின் அளவை அறியவும். மற்ற இடைவெளியான அளவுகளை முன்பு கூறப்பட்டுள்ளபடி அமைக்க வேண்டும்.

8. கர்ப்ப க்ருஹ அகலத்தில் இரண்டு பாகத்திலிருந்து ஒரு பாகமோ ஆறு மடங்கான பாகங்களிலிருந்து ஒரு பாகமாகவோ

9. ஒரு பாக அதிகரிப்பளவால் இரண்டு மடங்கு அகலமாகவும் சுவற்றின் நடு அளவை முன்பு கூறப்பட்டுள்ளபடி அமைக்க வேண்டும்.

10. லிங்க அளவிலிருந்து பீடமும், பீட அளவிலிருந்து கர்ப்ப க்ருஹ அளவும் அதிலிருந்து சுவற்றின் அளவு நிச்சயித்து ஒன்று முதல் ஏழு யவை அளவு வரை ஒவ்வொரு மாத்திரை அதிகரிப்பால்

11. பீடமும் கர்ப்ப க்ருஹ அளவும் ஆகும். ஆலய அகலத்தில் நீட்டிய விரலையுடைய முழங்கை அளவு முதல் ஏழு மாத்திரை வரை அளவாக செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் லிங்க அமைப்பையொத்து ஆலயம் அமைக்கும் முறையாகிற நாற்பதாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: