வெள்ளி, 5 ஜூன், 2020

*லிங்க புராணம் ~ பகுதி — 09*

        காலனை வென்ற
        சுவேதன் வரலாறு
=======================

சுவேதன் என்ற மறையோன் தன் வாழ்நாள் மிகக்குறைவே என்று அறிந்து ஈசன்தாள் பற்றி., சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து பக்தியுடன் வழிபட்டு வந்தான். எந்த நேரமும்., அவன் செயல் நினைப்பு அனைத்தும் ஈசனைப் பற்றியதாகவே இருந்தது. அவன் ஆயுள் முடியும் நேரம் காலனே நேரில் வந்தான். காலனைக் கண்டு அவன் சிறிதும் அஞ்சவில்லை. மேலும் ஈசன் திருவடிகளைப் பற்றினார்க்கு யாராலும்., எவ்விதமும் துன்பம் நேராது என்று காலனிடம் சொன்னான். உன்னால் எனக்கு என்ன பயம் என்றான். அதைக் கேட்ட காலன் கடுஞ்சினம் கொண்டு பாசக்கயிற்றை சுவேதன் மீது வீசினான். கயிறு இறுகத் தொடங்கியது. சுவேதன் "என்னைக் காப்பது நீயே அல்லவா..?" என்று எண்ணியவாறு தான் பூஜித்து வந்த லிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டான்.

அடுத்த கணம் லிங்கத்திலிருந்து தோன்றிய பரமன் கோபத்துடன் காலனை உற்று நோக்க அவன் வாகனத்திலிருந்து கீழே விழுந்து உயிர் நீத்தான். பரமன் சுவேதனுக்கு அழியா வாழ்வைக் கொடுத்து தம் கணங்களில் ஒருவனாக இருக்க அருள் செய்தார். உயிரற்றுக் கிடந்த யமுனை எழுப்பி அவனிருப்பிடம் அனுப்பி வைத்தார். சுவேதன் வரலாற்றைக் கூறிய பிரமன் முனிவர்களிடம், ஈசனைத் தியானித்து அவரைப் பக்தியுடன் ஆராதித்து வாருங்கள். சிவலிங்கம் ஒன்றை அமைத்து அதில் ஈசனைத் தியானித்து மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுங்கள். உங்கள் அன்புக்கு ஈசன் கட்டுண்டு அருள்புரிவான் என்றார். அவ்வாறே முனிவர்கள் பக்தியுடன் பூசிக்க திருப்தி அடைந்த ஈசன் அவர்களுக்கு அருள்புரிய முன் தோன்றிய அதே திகம்பர சந்நியாசி கோலத்தில் தாருகாவனம் வந்து சேர்ந்தார். இம்முறை முனிவர்கள் ஈசனை அன்புடன் வரவேற்றனர், வணங்கினர். முனி பத்தினிகளும் அவர்களுடன் ஈசனை வழிபட்டனர். மேலும் அவர்கள் ஈசனை நோக்கி, நாங்கள் செய்த அபசாரங்களை மன்னித்து, அடியார்களாகிய எங்களிடம் அளவற்ற அன்பு பூண்டு, பக்தியுடன் நாங்கள் அளிக்கும் உபசாரங்களை மனமுவந்து ஏற்று அருளவேண்டும் என்று வேண்டினர்.

அப்போது ஈசனின் திகம்பர வடிவம் மறைந்து, கைகளில் மானும், மழுவும் ஏந்தி உமாதேவியுடன் காட்சி அளித்தார். முனிவர்கள் பரமானந்தக் கடலில் மூழ்கினர். நெஞ்சம் உருக ஈசனைப் பக்தியுடன் துதித்து வணங்கினர். சுவேதன் வரலாறு, மார்க்கண்டேயன் வரலாறு போன்றது. மேலும், விரிஞ்சன் முதலான தேவர்கள் பாசுபத விரதத்தை ஆற்றியே அழியா உயர் பதத்தை அடைந்தனர். ஆகவே நீங்களும் அவ்விரதத்தைப் பக்தியுடன் கடைப்பிடியுங்கள் என்று கூறி மறைந்தார் ஈசன். முனிவர்களும் பக்தியுடன் பாசுபத விரதத்தைக் கடைப்பிடித்து வல்வினைகள் தொலையப் பெற்றனர்.

தொடரும்.....

*லிங்காஷ்டகம் தமிழில்....*

ப்ரம்ம முராரியார் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கம் இல்லா சிவலிங்கம் ।
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எறித்த கருணாகர லிங்கம் ।
இராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

வாசமனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம் ।
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம் ।
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம் ।
தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

தேவ கணங்களின் அர்ச்சனை லிங்கம்
தேடிடும் பக்தியில் வூரிடும் லிங்கம் ।
சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

எட்டு தளத்தினுள் எழுந்திடும் லிங்கம்
எல்லாமாகிய காரண லிங்கம் ।
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

தேவரின் உருவில் பூஜைக்கும் லிங்கம்
தேவ வனமலரை ஏற்றிடும் லிங்கம் ।
பரமநாதனாய் பரவிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

லிங்காஷ்டகம் இதனை தினமும் சிவ சன்னதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன் சிவனருளும் கொள்வார்….
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி….
"வெல்லவே முடியாதது..."
தர்மம்..

மஹாபாரதப்போர்...

18 நாள் யுத்தம்...

வெற்றி பாண்டவர்களுக்கு...

ஆனால், ஒரு விஷயம்...

கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள் — துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்...

இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்...?

ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.

1) ஜயத்ரதன்

2) பீஷ்மர்

3) துரோணர்

4) கர்ணன்

5) துரியோதனன்

6) விதுரர்

இவர்களின் வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் வெற்றியை தந்தது.

இதில் யாரை வீழ்த்த தீட்டிய திட்டம் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?

அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய யுக்தி தான் சிறப்பு வாய்ந்தது என்று நினைப்பார்கள்.

இன்னும் சிலபேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்றும் நினைக்கலாம்.

இதே மாதிரிதான் பீஷ்மர், துரோணர் இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்...

ஆனால் சரியான விடை...

விதுரருக்காக ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் சிறப்பு வாய்ந்தது.

'இது என்ன புது குழப்பம்?

விதுரர் எங்கே சண்டை போட்டார்?

அவரை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணன் ஏன் திட்டம் போட வேண்டும்?'
என்ற கேள்விக்கு விடை சொல்லும் முன்...

யுத்தம் நடக்கும் முன்பு நடந்த சம்பவங்களை  பார்ப்போம்...

முதலில் விதுரரை பற்றி தெரிந்து கொள்வோம்...

யார் இந்த விதுரர்?

விதுரர்...

திருதராஷ்டிரருக்கும்,
பாண்டுவுக்கும் தம்பி...

அதாவது,
பாண்டவர்களுக்கும்
கெளரவர்களுக்கும்
சித்தப்பா...

விதுரரின் தாயார் ஒரு பணிப்பெண்ணாக இருந்தவர்.

விதுரர் மகா நீதிமான்...

தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர்...

தர்மராஜர்... அப்பழுக்கில்லாதவர்...

'பெண்களை தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என எந்த நிலையிலும் அவர்களை உயர்வாக வைத்து போற்ற வேண்டியவர்கள்' என தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது விதுரர் ஒருவரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவரும் வாய்
திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்...

அதற்கான தண்டனை தான்...
விதுரரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவருக்கும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்பது தர்மத்தின் நியதி.

கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணர் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை.

ஏனெனில்,
ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் இருந்தது.
எனவே அவர்களை எளிதில் வீழ்த்த முடிந்தது.

ஆனால், மேற்கண்ட பண்புகளால் விதுரரை மட்டும்  வீழ்த்தவே முடியாது...

விதுரர் 'வில்' எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது...

யுத்தம் என்று வந்தால்...
மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக, கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற முடியாது.

மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகி இருக்கும்.

அதனால்...
எல்லோரையும் விட மிக முக்கயமான நபர்...
*விதுரர்*தான்.

அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போரிடக் கூடாது.

மேலும், தர்மநெறி படி விதுரர் போரில் மரணமடைய கூடிய நியதியும் கிடையாது.

விதுரரை போரிடாமல் எப்படி தடுப்பது?

ஸ்ரீகிருஷ்ணர் தர்ம வியூகம் அமைக்கிறார்.

அதன்படி,
பாரதப்போரைத் தடுக்க, ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காகத் தூது செல்கிறார்.

'கிருஷ்ணர் வருகிறார்' என்று தெரிந்ததும்... திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.

துரியோதனன் சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, 'ஸ்ரீகிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார்?' என்ற கேள்வி பிறந்தது.

நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள்.

ஸ்ரீகிருஷ்ணரோ, “நான் தூதுவன்... என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன்.

இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்...” என்றார்.

விதுரருக்கு மகா சந்தோஷம்...

தனக்கு பிரியமான கிருஷ்ணர் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார்.

விதுரர் வீட்டில் கிருஷ்ணர் இரவு பொழுதைக் கழித்தார்...

மறுநாள், அரச சபையில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக
வாதாடினார்.

துரியோதனன், "ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப்
பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது..." என்று சொல்லி
கிருஷ்ணரையும் அவமதித்துப் பேசினான்.

கிருஷ்ணரும், "யுத்தம் நிச்சயம்..." என்று சொல்லிவிட்டு
பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார்.

வழியில்...
கிருஷ்ணருடைய சாரதி, "சுவாமி! எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்?” என்றான்.

கிருஷ்ணா் சொன்னார், "அனைத்தும் நல்லதுக்கே... இதன் விளைவு இப்போது துரியோதனன் சபையில் நடந்து கொண்டிருக்கிறது...” என்று சொல்லி சிரித்தார்.

அதேபோன்று...
அப்போது துரியோதனன் சபையில் எல்லோரும் துரியோதனனிடம் கெஞ்சி, 'கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும்...' என்று வாதாடினார்கள்.

அதில் விதுரர் குரல் தான் ஓங்கி ஒலித்தது.

ஏற்கனவே துச்சாதனன் துயில் உறியும் போது விதுரர் தட்டி கேட்டது...
பாண்டவ தூதரான கிருஷ்ணரை விதுரர் தன் வீட்டில் முதல் நாள் இரவு தங்கவைத்து  உபசாரம் செய்தது...
என துரியோதனனுக்கு விதுரர் மேல் வெறுப்பு இருந்தது...

இதன்மூலம் அவர் பாண்டவர்கள் கட்சி என்றும் ஒரு நினைப்பு.

இப்போதும் விதுரர், கிருஷ்ணர் பேச்சைக் கேட்டு கொண்டு போரை நிறுத்த வாதாடியதும், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது...

என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான்.

குறிப்பாக,
அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான்.

இதனால்,
விதுரர் மிகுந்த அவமானமடைந்தார்...
ஆவேசமடைந்த விதுரர், சபையோர்கள் நடுங்க சபதமிட்டார்.

"உனக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது துரியோதனா!...

 இனி உனக்காக நான், என் வில்லை எடுத்துப் போரிட மாட்டேன்...
அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்லமாட்டேன்...
 எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை...” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச்
சபையிலிருந்து வெளியேறினார்.

யுத்தம் முடியும் வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து
திரும்பவில்லை...

இப்பொழுது புரிந்து இருக்கும் ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டில் ஏன் தங்கினாரென்று...

தங்காமல் இருந்தால்...

விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா?

துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் விதுரருக்கு வந்திருக்கும் அல்லவா?

விதுரர் வைத்திருந்த 'வில்'
தர்ம சக்கரம் கொண்ட மஹாவிஷ்ணுவின் வில்...

'கோதண்டம்' எனப்படும் அந்த வில்லை எவராலும் வெல்ல முடியாது.

அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது.
'காண்டீபம்' என்பது அதன் பெயர்.

போரில் விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது!

இதுவே
பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது...!

தர்மராஜனான விதுரரை ஜெயிக்கவே முடியாது என்ற தர்மம் உணர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் செய்த மஹா தர்ம யுக்தி தான் மஹாபாரத வெற்றி...!

தர்மத்தை யாராலும் வெல்லவும் முடியாது...

தர்மத்தை போற்றுவோம்...

*நம் தலைமுறைகளுக்கும் தர்மத்தை எடுத்துச் சொல்வோம்...   தர்மம் தலை காக்கும்!  தக்கச் சமயத்தில் உயிர் காக்கும்.   தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்!  தர்மம் நிலைத்து நிற்கும்....

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

வியாழன், 4 ஜூன், 2020

நாம் அறியாத தகவல்...

கண்டிப்பாக படிங்க நண்பர்களே....●

தோழி  வீட்டில் காலை திருவாராதனம் கண்டு வந்த போது தோழியின்  9 வயது மகன்..

●மாமி நவகிரஹம் ஒன்பது உள்ளது. ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளது. மற்ற இரண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா?

இது பாரபட்சம் இல்லையா? என கேட்டான்.

□அவனை ஆசீர்வதித்து மகனே நல்ல கேள்வி. பகவான் உனக்கு எல்லா நலனும் வழங்கட்டும் என கூறியவாரே,

எங்கே ஒன்பது கிரஹம் பெயர்களை கூறு என்றேன்.

●சூரியன், சந்திரன், அங்காரகன், புதன் குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது.

□வாரத்தின் நாட்கள் கூறு என்றேன்.

●ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, என்றான்.

□இப்போ உன் கேள்வி ராகு, கேதுவுக்கு ஏன் வாரத்தில் பங்கு இல்லை என்பதும், அது பாரபட்சம் என்பதும் தானே என்றேன்.

●ஆமாம்  மாமி என்றான்.

□மகனே பகவான் எந்த காரணத்தை கொண்டும் யாருக்கும் பாரபட்சம் செய்யமாட்டான். அதாவது அவன் பகவானை விரும்பினாலும்,  வெறுத்தாலும் பாரபட்சம் காட்டவே மாட்டான்.

ஹிரண்யனுக்கு பல சந்தர்ப்பங்களை கொடுத்தான். பிரஹலாதனுக்கு அவன் செய்த பல கொடுமைகளில் இருந்து

காப்பாற்றி உணர்த்தினான். ஆனாலும் புரியாமல், தூணை காட்டி கேட்டு இங்கு இல்லையேல் உன் உயிரை எடுப்பேன் என கூறியதால் பகவான் தன் பக்தன் பிரஹலாதன் உயிரை காக்க தூணிலிருந்து தோன்றி அரக்கன் ஹிரண்யன் உயிரை எடுத்தான்.

இராமாயணத்தில் இராவணனுக்கு அவன் எல்லா நண்பர்களும், ஆயுதங்களும் இழந்து தனியாக நின்றபோதும், அவனுக்கு ஒரு நாள் சந்தர்ப்பம் கொடுத்தார். அதாவது

இன்றுபோய் நாளை வா என, எதற்காக சண்டை போடுவதற்க்கா இல்லை. சீதையை கொண்டுவந்து ஒப்படைக்க அதன் மூலம் அவனுக்கு இரக்கம் காட்ட ஆனால் அதை இராவணன் செய்யாத்தால் பகவானால் கொல்லப்பட்டான்.

அது போல் தான் பகவான் தேவர்களுக்கும்*, கிரஹங்களுக்கும் பாற்கடலை கடைந்து வந்த அமுதத்தை பகிர்ந்து அளிக்கும் போது இடையில் புகுந்த அரக்கன் அதை பெற   சந்திரன் அதை காட்டி கொடுக்க பகவான் அசுரன் தலையை துண்டித்து விட அமுதம் பெற்ற அவனுக்கு அழிவு இல்லாததால், அவர்களை இரண்டு கிரஹமாக ஆக்கி இராகு, கேது எனப்பெயர் வைத்து அவர்களுக்கு உரியதாக ராகுகாலம், குளிகைகாலம் என இரண்டு காலத்தை கொடுத்துள்ளார்.

மனிதர்கள் இந்த இராகு காலத்தில் எந்த வேலையைச்செய்தாலும், அது சிரமத்தின் பேரில் தான் நடைபெறும். நற்காரியங்கள் கூடுமானவரை செய்யக்கூடாது. அதேபோல் குளிகனில் கெட்ட காரியங்கள்,  அபர காரியங்கள் செய்யக்கூடாது எனக்கூறி அருளினார்.

●மாமி  அது தெரியும், ஆனால் ஏன் மாமி வாரநாட்களில் அவர்களை சேர்க்கவில்லை என்றான்.

□அவனிடம் உன்னிடம் ஒரு பாக்கெட் பிஸ்கட் தான் உள்ளது, அந்த பாக்கெட் பிஸ்கட்டை நீயும் உன் தங்கையும் பிரித்து சாப்பிட எண்ணும் போது, இடையில் உங்கள் நண்பர் இருவர் வந்தால் என்ன செய்வாய் என்றேன்.

●அந்த பிஸ்கட் பாக்கெட்டில் உள்ளதை கூட வந்தவர்களுக்கும் பிரித்து கொடுத்து சாப்பிடுவோம் என்றான்.

□ஏன் அவங்களுக்கு தனியாக ஒன்றை கொடுக்கலாமே என்றதும்,

●எங்கிட்ட ஒரு பாக்கெட் தானே இருக்கு அப்போ அதிலிருந்து தானே கொடுப்பேன் என்றான்.

□சரியாக சொன்னாய், அதே போல்தான் வாரத்துக்கு நாள் ஏழு என ஏழு கிரகஹங்களுக்கும் ஒன்றாக பகவான் உண்டாக்கி, ஒவ்வொரு நாளுக்கும் இருபத்தினான்கு மணி நேரம் என ஏற்படுத்தி நடத்திவரும் போது இடையில் இரு கிரஹங்கள் வருவதால் என்ன செய்ய என யோசித்த பகவான்,

அனைத்து கிரஹங்களுக்கும் வேலை நேரம் சமமாக இருக்கவேண்டும் அதே நேரம் வார நாட்களையும் கூடுதலாக வருமாறு செய்ய கூடாது என்ற எண்ணத்தில்...

ஏழு கிரஹங்களையும் அழைத்து அவர்கள் ஒவ்வொருவர் நேரத்திலும் மூன்று மணிநேரத்தை எடுத்துக்கொண்டான்.

இப்போ சொல்லு ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம்.

●இருபத்திநான்கு மணி நேரம் மாமி.

□அதில் மூணு மணி நேரத்தை பகவானுக்கு கொடுத்தது போக மீதி எவ்வளவு உள்ளது.

●இருபத்து ஒரு மணி நேரம் மாமி.

□இப்போ ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் மாதிரி ஏழு நாட்களுக்கும் எடுத்தால் எவ்வளவு.

●இருப்பதொரு மணி நேரம் மாமி.

□இப்போ பெருமாள் கையில் எவ்வளவு மணி நேரம் உள்ளது.

●ஏழு பெருக்கல் மூணு இருப்பத்தியோரு மணி நேரம்.

□இதைத்தான் தன்னால் தலை துண்டிக்கப்பட்டு உடலால் ஒரு கிரஹமாகவும், தலையால் ஒரு கிரஹமாகவும் ஆன ராகு கேதுவுக்கு பிரித்துக்கொடுத்தார்.

●அதுவும் எப்படி?..

□ஒவ்வொரு கிழமையிலும் ராகு காலமாக ஒன்றரை மணி நேரமும் குளிகை காலமாக ஒன்றரை மணி நேரமுமாக..இப்போ சொல்லு உன்னிடம் இருந்த ஒரு பாக்கெட் பிஸ்கட்டை இடையில் வந்தவருக்கு பகிர்ந்தளித்த மாதிரி,ஏற்கனவே இருந்த ஏழு நாட்களையும் இருபத்தி நான்கு மணி நேரத்தையும் சமமாக பகிர்ந்தார்.

ராகுவும், கேதுவும் ஒரே உடலின் இரண்டு அங்கம் ஆனதால், அந்த இருபத்தொரு மணி நேரத்தை இரண்டாக பிரித்து ஆளுக்கு பத்தரை மணிநேரம் அதாவது ஒவ்வொரு நாளிலும். ஒன்றரை மணி நேரம் ஏழு நாட்களில் ஏழு பெருக்கல் ஒன்றரை அதாவது பத்தரை மணிநேரமாக கொடுத்துள்ளார்.

இப்போ சொல்லு பகவான் பாரபட்சம் காட்டியுள்ளானா!!!!..

●இல்லை மாமி ஏழு நாட்களை கொண்ட வாரத்தில் ஒவ்வொருவரிடமும் இருந்து மூணு மணி நேரத்தை குறைத்து வேலை நேரத்தை 21 மணி நேரமாக குறைத்து, அதையே இரண்டு பங்கான அசுரனுக்கு பாதி பாதியாக அதாவது பத்தரை மணியாக, அந்த இருபத்தொரு மணி நேரத்தை பிரித்து கொடுத்துள்ளான் அப்படி தானே என்றான். 

□அப்படிதான் மகனே, பகவான் யாரையும் எந்த காரணத்திற்காகவும் வஞ்சிக்கவோ, பாரபட்சம் காட்டவா மாட்டான். நல்லவர்களை அரவனைப்பதும், துஷ்டனுக்கு சந்தர்பம் கொடுத்து திருத்தவும், சில சோதனைகளை செய்வான். அப்போதும் செய்பவன் அவனே என அவனிடம் நாம் சரணடைந்து விட்டால் போதும் அவன் நம்மை ஆட்கொண்டுவிடுவான்.

பகவான் யாரையும் நம்மைபோல் பாரபட்சமாக நடத்த மாட்டான்.
💐🌹🙏💐🌹🙏💐🌹
*லிங்க புராணம் ~ பகுதி — 08*

       சுதரிசனன் வரலாறு
=======================

உத்தம குலத்தில் பிறந்த அந்தணன் சுதரிசனனும்., கற்பிற் சிறந்த மனைவியும்., அன்றாடம் தன் இல்லத்திற்கு வரும் அதிதிகள் மனம் கோணாமல் அவர்களுக்கு உணவிட்டு., மகிழ்வித்து அனுப்பி வந்தனர். ஒருநாள் ஓர் அதிதி வந்தார். அவரையும் எல்லா வகையிலும் உபசரித்து உணவூட்டினர். இடையில் சுதரிசனன் ஓர் அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால் மனைவியிடம் அதிதி மனம் கோணாமல் அவரை உபசரிக்குமாறு கூறிவிட்டுச் சென்றான். உணவருந்திய அதிதி அவளிடம் தனக்கு உடல் சுகமும் அளிக்கும்படி கேட்டான். அவள் பதைபதைத்து விட்டாள். கற்புக்குப் பங்கம் வரும்., அல்லது அதிதிக்கு உபசாரக் குறைவு ஏற்படும் என்று எண்ணி செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது சுதரிசனன் வீடு திரும்பினான். அதிதிக்கு எல்லாச் சௌகரியமும் கிடைத்ததா..? பூரண திருப்தியா..? என்று கேட்க மனைவி பதை பதைத்திருக்க., அதிதி அந்தணர் மனைவி அறுசுவை உண்டியுடன்., உடலுக்குச் சுகம் அளித்து திருப்தி கொடுத்தாள் என்று கூறினார். அப்போது அந்தணன் சினமோ., வெறுப்போ கொள்ளாமல்., தன் மனைவியை அவர் அனுபவித்து விட்டதால் அவள் அதிதியின் சொத்து என்று கூறி., அவளையும் உடன் அழைத்துச் செல்லுமாறு வேண்டினான். அப்போது அந்த அதிதி மறைந்து விட்டார். அங்கே அவர்களுக்குச் சிவபெருமான் காட்சி தந்து., தான் அவர் மனைவியைத் தீண்டவும் இல்லை. அவள் கற்புக்கரசி. புனிதமானவள். பிறவிப் பெரும் துயரினின்று நீங்கள் இருவரும் விடுபட்டு என்னிடம் வந்து சேர்வீராக என்று அருள்பாலித்தார். இவ்வாறு அதிதி பூஜையின் மேன்மையைப் பிரம்மன் தாருகாவனத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும்., அம்முனிவர்கள் இறைவன் திருவடிகளிலேயே சரண் புக., அவரை வழிபடின் அவர் அருளால் முனிவர்களின் துன்பங்கள் நீங்கும் என்று அறிவுறுத்தினார். அடுத்து., பிரம்மன் அவர்களுக்குத் துறவின் தன்மையை எடுத்துக் கூறியதுடன் துறவிகள் மட்டுமின்றி மற்றோரும் ஈசன் பேரருளுக்குப் பாத்திரமானவர்களே. தாம் செய்யும் கர்மாக்களை அந்தப் பெருமானுக்கே அர்ப்பணித்து., அனைத்திலும் ஈசனைக் காண்பவர் முக்தி அடைவர் என்றார்.

தொடரும்.....

*ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்*
*ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் |*
*பராத்பரம் பரமாத்மக லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*

*லிங்காஷ்டகமிதம் புண்யம் யஃ படேஸஸிவ ஸன்னிதௌ |*
*சிவலோகமவாப்னோதி சிவேன ஸஹ மோததே ||*
வேத அர்த்தம் சொல்பவனுக்கு தெரியாவிட்டாலும் உரிய தேவதைகளுக்குத் தெரியும்!

வேத சப்தத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படி தபஸோ அப்படியே கேட்பதும்.

வேதம் சொன்னால் புரியாது; புரியாத வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம்
வருவதே பெரிய ஏற்றம். வேத சப்தம் நம்மை கேட்கப் பண்ணுகிறது.

அதர்வண வேதம் சொல்கிறது -

இங்கிருந்து ஒருவர் கோவிலுக்குப் போய் பகவானைச் சேவிக்கிறார்.

பகவான் இவரைப் பார்த்தாரா என்று எப்படி தெரிந்து கொள்வது?

பகவான் இவரை அனுக்ரஹித்தானா என்பதற்கு வேதம் ஒரு அளவுகோல் சொல்கிறது.

ஓரிடத்தில் வேத பாராயணம் நடக்கிறது. வேத சப்தத்தைக்கேட்டு அங்கே போய் அவர்
உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு கேட்கிறார்.

வேதம் சொல்கிறது-

எப்போது வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு வேத பாராயணத்தைக்
கேட்கிறாறோ அப்போது பகவான் அவரைப் பார்த்து விட்டான் என அர்த்தம்.

பகவான் பார்த்தான் என்பதற்கு அளவுகோல் எது?

வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுதல். வேதத்தைக் கேட்க
ஒருத்தருக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்னும் பகவானின் கடாக்ஷம் அவனுக்கு
கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

பகவானிடத்தில் த்வேஷம் இருந்தால் கூட அவன் பொறுத்துக்கொள்வான்.

வேதத்தின் மீது த்வேஷம் இருந்தால் ஒத்துக் கொள்ள மாட்டான்.

நாம் வேதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

ந்ருஸிம்ஹ அவதாரத்தின் முன்பு பகவான் சொன்னான் 'யதா வேதேஷூ' என்று எவன்
வேகத்தை நிந்திக்கிறானோ அவன் சீக்கிரம் நாசத்தை அடைவான் என்றான்.

அர்த்தம் தெரியா விட்டாலும் வேதத்தைக் கேட்க வேண்டும். கேட்க வேண்டும் என்ற
அபிப்பிராயம் நமக்கு வேண்டும்.

அர்த்தமே தெரியா விட்டாலும் பரவாயில்லை. இது எப்படி சரியாகும் என்று கேள்வி.

வேத மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாமல்ஒருவர் ஹோமம் பண்ணுகிறார்.

அப்போது பலன் சித்திக்குமா என்றால் சித்திக்கும் என்கிறது வேதம்.
ப்ரம்மச்சாரி உபநயனத்தின் போது பிக்ஷாடணம் -பிச்சை எடுக்கக் கற்றுக்
கொள்கிறான்.

அதற்கு அவனுக்குச் சொல்லிக் கொடுக்கப் படுகிறது. ஒவ்வொரு வீட்டின் முன்பும்
'பவதி பிஷாந்தேஹி' என்கிறான்.

இவனுக்கு சமஸ்கிருத பாடம் ஆரம்பிக்கவில்லை. ராம சப்தம் கூட தெரியாது. 'தாங்கள்
பிச்சை இடுங்கள்' என்ற அர்த்தமும் தெரியாது.

ஆனால் அதை சொல்லக் கற்றுக் கொண்டுள்ளான். அவனுக்கு என்ன தெரியும்..?

'பவதீ பிஷாந்தேஹி'என்று கூக்குரலிட்டால் பாத்திரம் நிறையும். வீட்டுக் கதவைத்
திறந்து வந்து அந்த வீட்டுப் பெண்மணி பாத்திரத்தில் அரிசியை இடுகிறாள்.
பாத்திரம் நிறைகிறது.

ப்ரம்மச்சாரி அர்த்தம் தெரியாமல் சொல்கிறான். ஆனாலும் பாத்திரம் எப்படி
நிறைகிறது என்றால், இவனுக்குத் தெரியாமல் போனாலும் வீட்டில் உள்ளவர்களுக்குத்
தெரியும்.

அது போல், வேத மந்திரத்திற்கு நமக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும்
தேவதைகளுக்குத் தெரியுமாதலினால் அவர்கள் ஓடி வந்து நாம் கொடுப்பதை ஸ்வீகரித்து
நம்முடைய அபீஷ்டத்தை பூர்த்தி பண்ணுவார்கள்..

முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் ஸ்வாமி.

புதன், 3 ஜூன், 2020

*லிங்க புராணம் ~ பகுதி — 07*

         *தாருகாவனத்தில்*
       *திகம்பர சந்நியாசி*
   =======================

தாருகாவனத்திலிருந்த முனிவர்களுக்கு உண்மையை உணர்த்த எண்ணிய சிவபெருமான்., திகம்பரராய்., சிறந்த அழகனாய்., கையில் ஓடு ஏந்தி பிக்ஷாடனாராய் புறப்பட்டார் ஈசன். அவரைக் கண்ட ரிஷி பத்தினிகள் தம் சுய அறிவின்றி., ஈசன் வசத்தினராகி அவரைப் பின் தொடர அனைவருடனும் முனிவர்கள் இருந்த யாகசாலைக்கு அருகில் வந்தார் ஈசன். இந்நிலையில் முனிவர்கள் சினம் கொண்டு யாரோ ஒரு காமுகனை தம்முடைய பத்தினிகள் பின் தொடர்ந்து வந்திருப்பதைக் கண்டு நிலை குலைந்தனர். அவர்கள் அந்த திகம்பர சன்னியாசியை சபித்தனர். ஆனால்., அவர்களுடைய சாபம் பலனற்றுப் போகவே திகைப்படைந்தனரே அல்லாமல்., வந்தவர் பரமன் என்பதை அறிந்து கொள்ளவில்லை. அப்போது சன்னியாசி தீடீரென்று மறைந்துவிட்டார். சன்னியாசி மறைந்தவுடன் கொடுந்துன்பங்கள் முனிவர்களைப் பற்றிக் கொண்டன. செய்வதறியாது அவர்கள் உதவிக்காக பிரம்மனை நாடினர். நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த பிரம்மன் முனிவர்களிடம் கீழ்க்கண்டவாறு கூறினார். நீங்கள் பெரும் தவறு இழைத்து விட்டீர்கள். முக்கியமாக அனைத்துக்கும் மேலான பரம்பொருள் ஒன்று இருப்பதை ஏற்கவில்லை. அதனை உணர்த்துவதற்கே எம்பெருமான் உங்களிடையே வந்தார். அவரை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை., சாபமும் கொடுத்தீர்கள். அந்த அபசாரமே வெப்ப நோயால் உங்களைத் துன்புறுத்துகிறது என்றார். ஈசனிடம் பக்தி உள்ளவன்., அதிதியாக வருபவரை., ஈசனாகவே எண்ணி உபசரிக்க வேண்டும் என்ற முறைகளின் கூற்றை நீங்கள் அறியவில்லை. அதிதியை உபசரித்து அழியாப் பேரின்பம் பெற்ற சதரிசனன் வரலாற்றைக் கேளுங்கள் என்று அந்த வரலாற்றைக் கூறினார் பிரம்மன்.

தொடரும்...

*அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்*
*ஸர்வஸமுத்பவ காரண லிங்கம் |*
*அஷ்டதரித்ர வினாஸன லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*
இன்று வைகாசி விசாக திருநாள். வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் உடனே கிடைக்கும்.

சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள்தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால்தான் முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர்.

சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைந்து அவர்களை காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.

புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.

இது ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. வைகாசி மாதம்  விசாகம் நட்சத்திரம் தினத்தன்று இந்த அவதாரம் நிகழ்ந்தது. இதன் காரணமாக வைகாசி  விசாகம் தினம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவ மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.

நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுதுதான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது. முருகனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.

பகை விலகும்.பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

விசாக நட்சத்திர தினத்தன்று உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லன யாவும் நடைபெறும்.  பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம்

சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும் எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அத்தனையும் தீர்ந்தும் போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

இதனால்தான் வைகாசி விசாகம் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் முருகன் திருத்தலங்களில் கோலாகல விழா கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.

இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும். மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீகச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கை தோற்றப்பொழிவு அன்று தரிசனமாகும்.  பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

கன்னியாகுமரி அம்மனுக்கு ‘ஆராட்டு விழா’ இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமி மலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் விசாக திருவிழா தனித்தன்மை கொண்டது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.

விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் மண்ணை எடுத்து தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து சுயம்புநாதர் ஆலயத்தின் அருகில் குவிப்பார்கள். இதனால்  பாவ வினைகளும், நோய்களும் தீரும்.

செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும்.

வைகாசி மாதம் பவுர்ணமியும், விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் அறுக்கு இலையும், அரிசியும் தலையில் வைத்துக் கொண்டு உத்திரகோச மங்கை என்னும் தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராட வேண்டும். பின் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமியம் இவற்றை சிரசில் தெளித்துக் கொண்டு நீராடி கருவறையில் குடி கொண்டிருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். பின் தான தர்மங்களை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
சாண்டில்ய ரிஷி

ஒருமுறை ஜமதக்னி, யக்ஞவல்கியர், வசிஷ்டர் ஆகியோர் மற்ற ரிஷி, முனிகளுடன் கலந்தாலோசித்து வரகத் என்ற யாகத்தை நர்மதைக் கரையில் செய்ய முனைந்தனர்.

அனைத்து முனிவர்களும் அதில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
.
ஆனால் வேள்வி தொடங்கும் முன்புவரை மகரிஷி காஷ்யபர் வந்து சேரவில்லை.

அவர் பங்கேற்பு இல்லாமல் யாகம் முடிவு பெறாது என்பதை ஏனைய முனிவர்டள் உணர்ந்தனர்.

அவரது பெயரை தர்ப்பைப் புல்லில் கிரந்த எழுத்துகளில் எழுதி பூஜை செய்து ஆவாஹன முறைப்படி அவரை எழுப்ப முயன்றனர்.

அப்போது அங்கு காஷ்யப முனியும் வந்து சேர்ந்தார்.

அங்கு நடத்திக் கொண்டிருக்கும் பூஜை விவரத்தை அவர் கேட்டறிந்தார்.

`தங்களது ஸங்கல்பம் விரயம் ஆகக் கூடாது!' என அவர்களுக்கு உரைத்தவர், மந்திரங்களைத் தானும் உச்சரித்தபடி கமண்டலத்திலிருந்து நீரை அந்த தர்ப்பைப் புல்லின்மீது தெளிக்கிறார்.

ஜடாமுடியும் மரவுரியும் தரித்த ஒரு முனிவர் அந்த தர்ப்பை புல்லிலிருந்து எழுந்து காஷ்யபரையும் மற்ற முனிவர்களையும் வணங்குகிறார்.

அந்த இளம் முனிவருக்கு `சாண்டில்யர்' என்ற பெயரை மகரிஷி காஷ்யபர் அவருக்கு சூட்டுகிறார்.

மகரிஷி உபமன்யு அந்த யாகத்தில் பங்கேற்றவரிடம்
காஷ்யபர் சாண்டில்யருக்கு தங்களது புதல்வி சாண்டிலாவை
திருமணம் செய்விக்க வேண்டி
கோரிக்கை வைக்க,
உபமன்யு மகரிஷி உடன்பட்டு
சாண்டிலாவின் விவாகம் சாண்டில்யருடன் நடத்தப்படுகிறது.

சாண்டில்யரும் சாண்டிலாவும் நீண்ட நாட்கள் அந்த நர்மதை தீரத்தில் தவம் புரிகின்றனர்.

இவரின் குருக்கள் கவுசிகர்
கௌதம மகரிஷி
கைசூர்ய காப்பியா
வாத்ஸய வைசரப்
குஸ்ஸிரி
கௌடிண்யா
அக்னிவாசா
வாத்யவமக்ஸயன்
வைஸ்தபுரியா
பரத்வாஜ் ஆகியோர்.

சாண்டில்யர் சாண்டில்ய கோத்திரத்தின் முன்னோடி ஆவார்.

சாண்டில்யர் சாண்டில்யா உபநிஷத்தினை எழுதியவர் ஆவார்.

சாண்டில்யா பக்தி சூத்திரத்தை எழுதிய பெருமையும் அவருக்கு உண்டு

பகவத புராணத்தின் கூற்றுப்படி, ஹஸ்தினாபுர மன்னர் பரிக்ஷித்
அர்ச்சுணனின் பேரன்
அபிமன்யுவின் மகன் பரிக்ஷித்.
மற்றும் துவாரக மன்னர் வஜ்ரா
கிருஷ்ணரின் பேரன் வஜ்ரா ஆவார்.
இவர்களின் சில மனோதத்துவ சந்தேகங்களை தீர்ப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

சாண்டில்ய மஹரிஷிக்கும், கிருஷ்ணனுக்கும் தொடர்புண்டு.

இவர் கிருஷ்ணனது வளர்ப்புத் தந்தையான நந்தகோபனது குடும்ப குரு
என்று புராணங்கள் சொல்கின்றன.

துவாரகை மன்னர் வஜ்ரனுக்கு ஆலோசனை சொல்ல
சாண்டில்ய ரிஷியை அழைத்ததால்,
இந்தத் தொடர்பு உறுதியாகிறது.

இந்த சாண்டில்ய ரிஷி 12 ஜோதி லிங்கங்களில் முதல் ஜோதி லிங்கமான
சோமநாதரை, பிரபாச க்ஷேத்திரத்தில் நிறுவினார்
என்று பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.

கஜினி முகம்மதுவால் 17 முறை படையெடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட
சோமநாதர் ஆலயம் இது.

தக்ஷனால் சபிக்கப்பட்டு, அதனால் தேய்ந்த சந்திரன், சிவனிடம் அடைக்கலாகி,
சாப விமோசனம் பெறுகிறான்.

சிவன் முடியில் பிறைச் சந்திரனாகத் தங்கி விடுகிறான்.
சந்திரனால் வழிபடப்பட்ட அந்த சிவ ரூபமே,
சோமநாதர்
என்றழைக்கப்பட்டது. 

இங்கு பிறைச் சந்திரனை வழிபடுவது விசேஷம்.

குறுந்தொகையில் கடம்பனூர்ச் சாண்டில்யனார் என்னும் பெயரில்
இடம் பெற்றுள்ள பாடலில்,

பிறைச் சந்திரனைக் கன்னிப் பெண்கள் தொழும் விவரம்
கொடுக்கப்பட்டுள்ளது என்பதே.

“வளையுடைத் தனையதாகிப் பலர் தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே யன்னா”
(கு-தொ 307)

என்னும் அவரது பாடலில்

பெண்களது உடைந்த வளையலைப் போல
உருவத்துடன் பிறைச் சந்திரன் வானத்தில் தோன்றும் காட்சியையும்,
அதைப் பெண்கள் வழிபட்டதையும்
உவமையாகச் சொல்கிறார்.
ஶ்ரீ மஹாலிங்கஸ்வாமி மஹிமை:

"மஹாலிங்கம்!! மத்யார்ஜுனா!!" என்றபடி திருவிசைநல்லூர் க்ருஹத்திலிருந்து வெளியில் எட்டிப் பார்த்தார் ஶ்ரீதரஐயாவாள். பேய் மழை கொட்டிக் கொண்டிருந்தது. இம்மழையைத் தாண்டி, காவேரி வெள்ளம் ஓடும் வாய்க்காலைத் தாண்டி திருவிடைமருதூர் கோவிலுக்கு எப்படி போக முடியும்!! ஶ்ரீதர ஐயாவாளுக்கு ஒரே கவலை!! மஹாலிங்கத்தை தர்சிக்காமல் அன்னம் புசிப்பதில்லை என்ற வ்ரதத்தில் இருக்கும் ஶ்ரீதர ஐயாவாள் அன்றிரவு உபவாஸம் இருப்பதாகத் தீர்மாணித்துக்கொண்டார்!!

திடீரென்று ராத்ரி நேரத்தில் வீட்டுக் கதவை யாரோ படபடவென்று தட்டும் சப்தம்!! கதவைத் திறக்கிறார் ஶ்ரீதரர். திருவிடைமருதூர் மத்யார்ஜுனர் கோவில் சிவாச்சாரியார்!!

"அடாடாடாடா!! ஸ்வாமி!! இந்த கொட்ற மழைல நனைஞ்சுண்டு வந்துருக்கேளே!! உள்ளே வாங்கோ!! வாங்கோ!!" தொப்பலாக மழையில் நனைந்துகொண்டு வந்திருக்கும் மஹாலிங்கஸ்வாமி அர்ச்சகரை உள்ளே அழைத்துக்கொண்டு வந்தார் ஶ்ரீதர ஐயாவாள்!!

"மஹாலிங்கஸ்வாமி ப்ரஸாதம் கிடைக்காத நீங்க சாப்பிட மாட்டேள்ன்னு நேக்குத் தெரியும்!! இந்த மழையில நீங்க எப்படி வர முடியும்!! சரின்னு நானே வந்துட்டேன்!!" ஶ்ரீதர ஐயாவாள் கண்களில் ஜலம் தளும்பி வழிகிறது!! மஹாலிங்கத்தின் கருணையை நினைத்தா அல்லது சிவாச்சாரியாரின் அன்பை நினைத்தா!! இரண்டுமே கலந்து தான்!!

புது வஸ்த்ரம் கொடுத்து அவரை உடுத்திக்கச்சொல்லி விட்டு, இருவருமாக பேசிக்கொண்டே ஶ்ரீதர ஐயாவாளின் மனைவி பரிமாறிய அன்னைத்தை இருவரும் சாப்பிடனர்!! "ஆஹா!! ஸ்வாமி!! மழைல நினைஞ்சுண்டு வந்தது ரொம்ப பசிக்க ஆரம்பிச்சுடுத்து!! உங்க பார்யை கையாலே புசிக்கற அன்னம் தேவாம்ருதமா இருக்கு!!"

இருவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டின் கூடத்திலேயே படுத்துக்கொண்டனர்!! இருவரும் பேசிக்கொண்டே இருந்துவிட்டு எப்போது தூங்கினாரென்றே தெரியாதபடிக்கு ஶ்ரீதர ஐயாவாள் அசந்து விட்டார்!!

விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து பார்த்தால், பக்கத்தில் படுத்திருந்த சிவாச்சார்யாரைக் காணவில்லை.
"காலம்பற சீக்ரம் எழுந்து போய்ட்டார் போலருக்கே!! என்ன கார்யம்ன்னு தெரியல்லே!! நோக்கு ஏதாவது தெரியுமோ!! எப்போ புறப்பட்டார்ன்னு!!" தன் மனையாளிடம் கேட்டார் ஶ்ரீதர ஐயாவாள்.

"தெரியலியேந்நா!! நானும் உள்ள அசந்து தூங்கிட்டேன்!! சரி எழுப்ப வேண்டாமேன்னு கிளம்பிட்டார் போலருக்கு அண்ணா!! விடுங்கோ!! கோவிலுக்கு போறேளோன்னோ!! அங்க தான் இருப்பார்!! விஜாரிச்சுக்கலாம்!!" இது மனைவி.

"இல்லேடீ!! வாய்க்கால்லே வெள்ளமா ஜலம் ஓடறதேடீ!! எப்படி அவர் தாண்டி திருவிடைமருதூர்க்கு போவார்ன்னு தெரியல்லியே!!"

"ஏன்னா!! இதே வெள்ளம் தானே நேத்து ராத்ரியும் இருந்துருக்கும்!! எப்படி அவர் வந்தார்ன்னு நீங்க கேட்கல்லியே!!"

"அடாடாடா!! அது ஞாபகமில்லையே!! இந்த ப்ரளய ஜலத்துல மனுஷன் எப்படி நீந்திண்டு வந்தார்!! மஹாலிங்கம்!! மஹாலிங்கம்!!" என்றபடி அங்கலாய்த்துவிட்டு ஸ்நாநம் ஸந்த்யாவந்தனம் சிவபூஜை எல்லாம் முடித்து மத்யார்ஜூனேச்வரன் கோவிலுக்கு கிளம்பினார் ஶ்ரீதர ஐயாவாள்.

மழை நன்றாக விட்டிருந்தது!! வாய்க்காலில் முட்டிக்கால் அளவு ஜலம் ஓடிக்கொண்டிருந்தது!! எப்படியோ தாண்டி மத்யார்ஜுனர் கோவிலை அடைந்தார் ஶ்ரீதர ஐயாவாள்!!

நேராக மஹாலிங்கம் ஸந்நிதிக்கு சென்றார்!! அர்ச்சகரிடம் "ஏன் ஸ்வாமி!! மஹாலிங்கம் ஏதோ ரொம்ப களைப்பா இருக்கறாப்ல இல்லே!! மழை கொட்றதோல்லியோ!! ஒத்துக்கலை போலருக்கு!!" என்றார்!!

"இருக்கட்டும் ஸ்வாமி!! ஒரு நாள் தவறாத மஹாலிங்கம் ஸந்நிதியை தர்சிக்காத ப்ரஸாதம் வாங்காத நீங்க சாப்டதே இல்லே!! நேத்து ப்ரளயம் மாதிரி மழை!! என்னாலேயும் வந்து ப்ரஸாதம் கொடுக்க முடியல்லே!! என்ன பண்ணினேள்!! சிவாச்சாரியாரின் கேள்வியில் அதிர்ந்தார் ஶ்ரீதர ஐயாவாள்.

"ஸ்வாமி!! என்ன சொல்றேள்!! நீங்க தானே!! கொட்ற மழைல காவேரி வாய்க்காலைத் தாண்டி ஆத்துக்கு வந்து ப்ரஸாதம் கொடுத்தேள்!! புது வஸ்த்ரம் கூட கொடுத்தேன்!! அதைக் கட்டிண்டு எங்கூட சாப்டேள்!! விடியகாலம்பற தானே கிளம்பா போனேள்!! ராத்ரி எப்படி ப்ரளய ஜலம் மாதிரி ஓடற வாய்க்காலைத் தாண்டினேள்ன்னு கேட்கனும்ன்னு நினைச்சுண்ட்ருக்கேன்!!"

"என்ன சொல்றேள்!! நானா!! நான் வரவேயில்லையே!! இந்த மழைல வரமுடியல்லியேன்னு நீங்க என்ன பண்ணுவேளோன்னு நினைச்சுண்ட்ருந்தேனே!!"

"அப்போ!! வந்தது!!" மஹாலிங்கம் ஸந்நிதியில் பார்த்தால், நேற்று இரவு எந்த வஸ்த்ரத்தினை சிவாச்சாரியாருக்கு அளித்தாரோ, அதே வஸ்த்ரம் மஹாலிங்கத்தின் மேல்!!

ஶ்ரீதர ஐயாவாளுக்கு விதிர்விதித்து போய்விட்டது!! "ஆஹா!! ஆஹா!!அப்பா !! மஹாலிங்கம்!! மஹாலிங்கம்!! மத்யார்ஜுனா!! சங்கரா!! நீயா வந்தே!! எனக்காகக் கொட்ற மழைல நினைஞ்சுண்டு, உன் ப்ரஸாதத்தை நீயே கொடுத்து, புது வஸ்த்ரம் கட்டிண்டு, என் பக்கத்துலயே உட்கார்ந்து சாப்பிட்டு, என் கூடவே இருந்துண்டு, பரமேச்வரா!! பரமேச்வரா!! ஸர்வேச்வரா!! என்னால தாங்க முடியல்லே!!" இரண்டு கண்களும் ஜலத்தை ப்ரவாஹமாக பொழிந்தது!!

மஹாலிங்கத்தினுடைய அவ்யாஜ கருணையை என்னவென்று கூறுவது!! பக்தனுக்கும் பரமனுக்கும் இருக்கும் உறவே அலாதியானது!! பக்தனுக்காக பரமேச்வரன் எதையும் செய்வார் என்பதற்கான ப்ரத்யக்ஷ ஸாக்ஷியே ஶ்ரீதர ஐயாவாளுக்காக பரமேச்வரன் செய்தது!!

சிவ திவ்ய நாமங்கள், சிவ தோடயமங்கலம், சிவ நாம ஸங்கீர்த்தனம் பஜனை ஸம்ப்ரதாயத்தில் உயிர்ப்புடன் இன்றும் விளங்குவதற்கு  ஶ்ரீதர ஐயாவாளன்றோ காரணம்!!                                                                                                                                                                                                           
📕📕📕📕📕📕📕📕📕📕📕

*என் தடைப்பட்ட இமயப் பயணம்*
*பகுதி - 6*
*~~~~~~~~~~~~~~~~~~~~~~~*

     "நேற்று என் சகோதர அதிகாரியும் நானும் மிகுந்த ஆவலுடன் குறிப்பிட்ட அம்மரத்தடிக்கு சென்றோம். அங்கே இருந்த அந்தச் சாது அவரது கையைச் சோதித்துப் பார்க்க எங்களை அனுமதித்தார். அங்கு வடுவோ காயம் பட்ட அடையாளமோ இல்லை!

    "நான் ரிஷிகேசம் வழியாக இமயத்தின் தனிமையை நாடிச் செல்கிறேன்.' அந்தச் சாது எங்களுக்கு ஆசி கூறி உடனே புறப்பட்டார். அவருடைய புனிதத் தன்மையினால் என் வாழ்வு உயர்ந்ததாக உணர்கிறேன்."

    அந்த அதிகாரி பக்தி கலந்த ஆச்சரியத்துடன் கதையை முடித்தார்; அவரது அனுபவம் அவரை வழக்கத்தைவிட அதிகமாக நெகிழ வைத்திருந்தது. ஒரு கம்பீரமான சைகையுடன் அவர் அச்செய்தி வெளியாகி இருந்த பத்திரிக்கைத் துண்டை என்னிடம் கொடுத்தார். பரபரப்பான செய்திகளைத் திரித்துக் கூறும் பத்திரிக்கைகளுக்குரிய பாணியில் (அந்தோ, இந்தியாவில் கூட இந்நிலை இல்லாமலில்லை!) அப்பத்திரிகையின் நிருபர் அச்செய்தியை சற்று மிகைப்படுத்தியே இருந்தார்.சாதுவின் தலையே துண்டிக்கப்பட்டது போல அந்தச் செய்தி வெளியாகி இருந்தது.

    அமரும் நானும் தன்னைத் துன்புறுத்தியவனை,
கிறிஸ்துவைப் போன்று, மன்னிக்கும் தன்மை படைத்த அப்பெரிய யோகியைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருந்தினோம். இந்தியா, சென்ற இரண்டு நூற்றாண்டுகளாகப் பொருட் செல்வத்தில் ஏழையாக இருந்தாலும் அள்ள அள்ளக் குறையாத அருட் செல்வத்தை இன்றும் பெற்றுத்தான் உள்ளது; இந்தப் போலீஸ்காரரைப் போன்று சாதாரண உலக வாழ்க்கையில் ஈடுபட்ட மனிதர்கள் கூட எப்பொழுதாவது ஆன்மிகத்தின் சிகரங்களைச் சந்தித்து விட முடிகிறது.

     அவருடைய அதிசயமான கதையினால் எங்கள் அலுப்பைப் போக்கியதற்கு அந்த அதிகாரிக்கு நன்றி கூறினோம். அவர் எங்களை விட அதிர்ஷ்டசாலி என்பதை அவர் குறிப்பிட்டிருக்கலாம்; எவ்வித முயற்சியும் இன்றியே தெய்வீக ஒளி பெற்ற ஒரு மகானை அவரால் சந்திக்க முடிந்தது; எங்களுடைய தீவிரமான நாட்டம் ஒரு குருவின் திருவடிகளை அடையாமல் வன்மையான ஒரு போலீஸ் நிலையத்தில் முடிந்தது!

   இமயத்திற்கு மிக அருகில் இருந்தும், நாங்கள் பிடிபட்டு விட்டதால், எவ்வளவு தூரத்திலிருந்தோம்; சுதந்திரத்தை நாடும் எனது அவா இரு மடங்காகி விட்டது என்று அமரிடம் கூறினேன்.

    "சந்தர்ப்பம் கிடைத்ததும் நழுவிவிடலாம். நாம் புனிதமான ரிஷிகேசத்திற்கு நடந்தே செல்லலாம்." நான் ஊக்கமூட்டும் வகையில் புன்முறுவல் செய்தேன்.

    ஆனால் பலமான ஆதாரமாயிருந்த எங்கள் பணம் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டதால் என் தோழன் நம்பிக்கை இழந்தவனாகிவிட்டன்.

     "நாம் இந்த ஆபத்தான காட்டு பிரதேசங்களில் நடக்கத் தொடங்கினால் நாம் மகான்கள் வசிக்கும் இடத்திற்குப் பதிலாக புலிகளின் வயிற்றுக்குள் சென்று முடிவோம்."

     அனந்தாவும் அமரின் சகோதரனும் மூன்று நாட்கள் கழித்து வந்து சேர்ந்தனர். அமர் தன் சகோதரனை பாசம் கலந்த நிம்மதியுடன் வரவேற்றான். நான் சமாதானமடையவில்லை. அனந்தாவிற்கு என்னிடமிருந்து கடுமையான வசைச் சொற்களைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை.

    "உன் உணர்ச்சியை நான் புரிந்து கொள்கிறேன்," என் அண்ணன் ஆறுதலாக  மொழிந்தான். "நான் உன்னிடம் கேட்பதெல்லாம், நீ என்னுடன் காசிக்கு வந்து ஒரு முனிவரைச் சந்திக்க வேண்டும். பிறகு கல்கத்தாவிற்கு வந்து மிகுந்த துக்கத்தோடு இருக்கும் நம் தந்தையுடன் சில நாட்கள் தங்க வேண்டும். பிறகு நீ இங்கே  உன் குருவைத் தேடுவதை மறுபடி தொடங்கலாம்.

-பரமஹம்ஸ யோகானந்தர்

📕📕📕📕📕📕📕📕📕📕📕

தொடர்ந்து படிப்போமாக🙏
நமது #ஆலயங்களெல்லாம் எப்படி #மசூதிகளாக மாற்றப்பட்டது என்று பாருங்கள் நடுநிலை ஹிந்துக்களே...

நாம் முகலாயர்களால் கட்டப்பட்டது என நம்பிக் கொண்டிருக்கும் அத்தனை கட்டிடங்களும் அது தாஜ்மஹாலாக இருந்தாலும், தில்லி செங்கோட்டையாக இருந்தாலும், ஜூம்மா மசூதியானாலும், குதுப்மினாரானாலும் அல்லது எந்த முஸ்லிம்களால் கட்டப்பட்டவை எனப்படும் கோட்டைகள், மசூதிகளானாலும் சரி. அவை ஹிந்து அரசர்களால் கட்டப்பட்டவையே என ஆதாரங்களுடன் எடுத்து விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் முகலாய ஆட்சியில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிற எந்தக் கட்டிடமும் முகலாயர்களால் கட்டப்படவேயில்லை என்கிறார் வரலாற்றாசிரியர் K.M. Elliot. The so called Mogul rule is the biggest fraud of Indian history என்கிறார் அவரது The History of India as told by its Historians book

 முகலாயர்கள் ஹிந்து அரசர்களால் கட்டப்பட அரண்மனைகள் அல்லது ஆலயங்களின் மேல்பகுதியில் மட்டுமே மாற்றங்களைச் செய்து அதனைத் தாங்கள் கட்டியதாகக் காட்டிக் கொண்டார்கள். உதாரணமாக தாஜ்மஹாலில் செதுக்கப்பட்டிருக்கும் குரானிய எழுத்துக்கள்.

பொ.யு. (பொது முகம்)பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால் உண்மையில்

ராஜபுத்திர அரசரான ஜெய்சிங்கிற்கு
 சொந்தமான

*"தேஜோ மஹாலயா"*

 என்றழைக்கப்பட்டதொரு அரண்மனை.. (அதனை சிவன் கோவில் என்றும் கூறுவதுண்டு). ராஜா ஜெய்சிங், ஷாஜஹானுக்கு அடிபணிந்து கப்பம் கட்டி வந்தவர்.

*ஷாஜஹான் அவரது மனைவி மும்தாஜின் மரணத்தை சாக்காக வைத்து அவரிடமிருந்து அந்த அரண்மனையை பிடுங்கிக் கொண்டார்.* ஷாஜஹானின்  "காதல்" மனைவியான மும்தாஜ் 1628-ஆம் வருடம் பாகல்பூரில் இறந்து அங்கேயே புதைக்கப்பட்டார். *ஆறுமாதம் கழித்து அதனைத் தோண்டியெடுத்து "தாஜ் மஹால்" என்றழைக்கப்படுகிற அரண்மனையின் நிலவறையில் மீண்டும் புதைக்கப்பட்டார்.* அப்படியானால் தாஜ்மஹால் ஆறே மாதத்தில் கட்டிமுடிக்கப்பட்ட ஒன்றா என்ன? *ஆனால் அதன் பின்னர் கிட்டத்தட்ட 22 வருட காலம் தாஜ்மஹால் மூடிக்கிடந்தது.* ஷாஜஹான் அதில் இன்றைக்கு நாம் காண்கிற மாற்றங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருந்தார்.

தாஜ்மஹால் 1661-ஆம் வருடம் திறந்து வைக்கப்பட்டதாகக் கூறுவது மற்றொரு பொய்.

அவுரங்கஷீப் 1658-ஆம் வருடமே ஷாஜஹானை சிறையிலடைத்துவிட்டார் என்பதனைக் கவனிக்கையில் அது ஒரு பித்தலாட்டம் என்று தெரியவரும்.

 மேலும் ஷாஜஹான் ஒரு வடிகட்டின கஞ்சன். கிட்டத்தட்ட நூறு அறைகளும், சுரங்க வழிகளும் கொண்ட தாஜ்மஹாலைக் கட்டி முடிக்க அன்றைக்கே பல கோடி ரூபாய்கள் வேண்டும்.

அத்தனை பணத்தை செலவு செய்து ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜிற்காக தாஜ்மஹாலைக் கட்டினார் என்பது பெரும் புளுகு. அவரது அரண்மனை அந்தப்புரத்தில் ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். ஷாஜஹானுக்கும் அவரது மகளுக்கும் இருந்த தகாத உறவு நிரூபிக்கப்பட்ட ஒன்று. அப்படியாகப்பட்ட மனிதர் 25 வருடங்களாக தாஜ்மஹாலைக் கட்டினார் என்பது அண்டப்புளுகுதான். ஆனால் அப்படித்தான் நாம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம்.

ஷாஜஹான் ஒன்றும் பணக்கார அரசருமல்ல. அவரது ஆட்சி அமைதியானதாகவும் இருக்கவில்லை. ஷாஜஹானின் 30 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் 48 போர்கள் நடந்தன. தாஜ்மஹாலில் நடந்த குரானிய வசனங்களைப் பொருத்தும் வேலைகளைக் கண்ட 'டாவர்னியர்' என்கிற ஃப்ரெஞ்சுக்காரர் சாதாரண சாரம் கட்டுவதற்கு மரம் இல்லாமல் செங்கற்களைக் கொண்டு சாரம் கட்டியிருந்ததாகக் கூறுகிறார்.

 இவ்வளவு செலவு செய்து தாஜ்மஹாலைக் கட்டுகிற ஷாஜஹானுக்கு மரம் வாங்கக் கூடக் காசில்லை என்பது ஆச்சரியம்தான்.*

*இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்ட எத்தனை திட்டமிடல் இருந்திருக்க வேண்டும்? எவ்வளவு வரைபடங்கள் வரைந்திருக்கப்பட வேண்டும்? அப்படி எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை.... !

 ஷாஜஹான் தும்மினால் கூட எழுதி வைக்கும் அவரது வரலாற்றாசிரியர்கள் ஒருவர் கூட இந்தக் கட்டிடம் கட்ட நிகழ்ந்த திட்டமிடல்களை, செலவுகளைக் குறித்து ஒருவார்த்தை கூட எழுதவில்லை.

அப்படி எதுவும் நடந்திருந்தால்தானே எழுதி வைப்பார்கள்.

இன்றைக்கு இஸ்லாமிய கட்டிடக் கலையாக அறியப்படுகிற கும்மட்டங்கள் யாவும் ஹிந்துக் கட்டிடக்கலையே..!!* என்று ஆராய்ந்து முடிவிற்குக் வந்திருக்கிறார்கள்.

*They, the mugals and muslims in general, highjacked the hindu architecture and announced it as their own என்பது அவர்களின் இறுதியான முடிவு.*

*இஸ்லாம் பரவத் துவங்கிய நாளிலிருந்து கொலையும், கொள்ளையும் மட்டுமே நடத்தி வந்தவர்களுக்கு தங்களுக்கென ஒரு கட்டிட பாணியை உருவாக்கிக் கொள்ள எங்கே நேரமிருக்கும்?*

தாங்கள் வென்ற இடங்களில் இருந்த கட்டிடங்களை தங்களுடையதாக அறிவித்துக் கொண்டார்கள். படையெடுத்து வந்த பெரும்பாலான முஸ்லிம்கள் படிப்பறிவில்லாதவர்கள். தாஜ்மஹாலைப் போன்றதொரு மாபெரும் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கற்பனையோ அதற்கான கணித அறிவோ இல்லதவர்கள் அவர்கள்.

*ஆனால் இந்திய அரசர்கள் காலம்காலமாக பெரும் அரண்மனைகளையும்,  பேராலயங்களையும் கட்டியவர்கள். அவர்களிடம் பணிபுரிந்த ஹிந்து கட்டிடக் கலைஞர்கள் பெரும் திறமைசாலிகள். இந்தியாவிற்கு வந்தேறிய மொகலாயர்களிடம் அவர்களைப் போன்றவர்கள் அறவே இல்லை. இன்றைக்கு இருக்கும் முஸ்லிம் கட்டிடக் கலைஞர்கள் கூட முன்னால் ஹிந்துக்கள்தான். ஷாஜஹானால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் அவர்கள்.

இந்திய வரலாறெங்கும் நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட சுவாரசியமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆரம்பத்தில் நான் இதையெல்லாம் நம்பவில்லை. ஆனால் இதன் பின்னனியில் செய்யப்பட்டிருக்கும் ஆராய்ச்சிகள் சாதாரணமானவையல்ல என்று உணர்ந்த பின்னர் மேலும், மேலும் படிக்கத் தூண்டியது. 
..............🙏...........
படித்ததில் பிடித்த து