புதன், 3 ஜூன், 2020

சாண்டில்ய ரிஷி

ஒருமுறை ஜமதக்னி, யக்ஞவல்கியர், வசிஷ்டர் ஆகியோர் மற்ற ரிஷி, முனிகளுடன் கலந்தாலோசித்து வரகத் என்ற யாகத்தை நர்மதைக் கரையில் செய்ய முனைந்தனர்.

அனைத்து முனிவர்களும் அதில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
.
ஆனால் வேள்வி தொடங்கும் முன்புவரை மகரிஷி காஷ்யபர் வந்து சேரவில்லை.

அவர் பங்கேற்பு இல்லாமல் யாகம் முடிவு பெறாது என்பதை ஏனைய முனிவர்டள் உணர்ந்தனர்.

அவரது பெயரை தர்ப்பைப் புல்லில் கிரந்த எழுத்துகளில் எழுதி பூஜை செய்து ஆவாஹன முறைப்படி அவரை எழுப்ப முயன்றனர்.

அப்போது அங்கு காஷ்யப முனியும் வந்து சேர்ந்தார்.

அங்கு நடத்திக் கொண்டிருக்கும் பூஜை விவரத்தை அவர் கேட்டறிந்தார்.

`தங்களது ஸங்கல்பம் விரயம் ஆகக் கூடாது!' என அவர்களுக்கு உரைத்தவர், மந்திரங்களைத் தானும் உச்சரித்தபடி கமண்டலத்திலிருந்து நீரை அந்த தர்ப்பைப் புல்லின்மீது தெளிக்கிறார்.

ஜடாமுடியும் மரவுரியும் தரித்த ஒரு முனிவர் அந்த தர்ப்பை புல்லிலிருந்து எழுந்து காஷ்யபரையும் மற்ற முனிவர்களையும் வணங்குகிறார்.

அந்த இளம் முனிவருக்கு `சாண்டில்யர்' என்ற பெயரை மகரிஷி காஷ்யபர் அவருக்கு சூட்டுகிறார்.

மகரிஷி உபமன்யு அந்த யாகத்தில் பங்கேற்றவரிடம்
காஷ்யபர் சாண்டில்யருக்கு தங்களது புதல்வி சாண்டிலாவை
திருமணம் செய்விக்க வேண்டி
கோரிக்கை வைக்க,
உபமன்யு மகரிஷி உடன்பட்டு
சாண்டிலாவின் விவாகம் சாண்டில்யருடன் நடத்தப்படுகிறது.

சாண்டில்யரும் சாண்டிலாவும் நீண்ட நாட்கள் அந்த நர்மதை தீரத்தில் தவம் புரிகின்றனர்.

இவரின் குருக்கள் கவுசிகர்
கௌதம மகரிஷி
கைசூர்ய காப்பியா
வாத்ஸய வைசரப்
குஸ்ஸிரி
கௌடிண்யா
அக்னிவாசா
வாத்யவமக்ஸயன்
வைஸ்தபுரியா
பரத்வாஜ் ஆகியோர்.

சாண்டில்யர் சாண்டில்ய கோத்திரத்தின் முன்னோடி ஆவார்.

சாண்டில்யர் சாண்டில்யா உபநிஷத்தினை எழுதியவர் ஆவார்.

சாண்டில்யா பக்தி சூத்திரத்தை எழுதிய பெருமையும் அவருக்கு உண்டு

பகவத புராணத்தின் கூற்றுப்படி, ஹஸ்தினாபுர மன்னர் பரிக்ஷித்
அர்ச்சுணனின் பேரன்
அபிமன்யுவின் மகன் பரிக்ஷித்.
மற்றும் துவாரக மன்னர் வஜ்ரா
கிருஷ்ணரின் பேரன் வஜ்ரா ஆவார்.
இவர்களின் சில மனோதத்துவ சந்தேகங்களை தீர்ப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

சாண்டில்ய மஹரிஷிக்கும், கிருஷ்ணனுக்கும் தொடர்புண்டு.

இவர் கிருஷ்ணனது வளர்ப்புத் தந்தையான நந்தகோபனது குடும்ப குரு
என்று புராணங்கள் சொல்கின்றன.

துவாரகை மன்னர் வஜ்ரனுக்கு ஆலோசனை சொல்ல
சாண்டில்ய ரிஷியை அழைத்ததால்,
இந்தத் தொடர்பு உறுதியாகிறது.

இந்த சாண்டில்ய ரிஷி 12 ஜோதி லிங்கங்களில் முதல் ஜோதி லிங்கமான
சோமநாதரை, பிரபாச க்ஷேத்திரத்தில் நிறுவினார்
என்று பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.

கஜினி முகம்மதுவால் 17 முறை படையெடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட
சோமநாதர் ஆலயம் இது.

தக்ஷனால் சபிக்கப்பட்டு, அதனால் தேய்ந்த சந்திரன், சிவனிடம் அடைக்கலாகி,
சாப விமோசனம் பெறுகிறான்.

சிவன் முடியில் பிறைச் சந்திரனாகத் தங்கி விடுகிறான்.
சந்திரனால் வழிபடப்பட்ட அந்த சிவ ரூபமே,
சோமநாதர்
என்றழைக்கப்பட்டது. 

இங்கு பிறைச் சந்திரனை வழிபடுவது விசேஷம்.

குறுந்தொகையில் கடம்பனூர்ச் சாண்டில்யனார் என்னும் பெயரில்
இடம் பெற்றுள்ள பாடலில்,

பிறைச் சந்திரனைக் கன்னிப் பெண்கள் தொழும் விவரம்
கொடுக்கப்பட்டுள்ளது என்பதே.

“வளையுடைத் தனையதாகிப் பலர் தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே யன்னா”
(கு-தொ 307)

என்னும் அவரது பாடலில்

பெண்களது உடைந்த வளையலைப் போல
உருவத்துடன் பிறைச் சந்திரன் வானத்தில் தோன்றும் காட்சியையும்,
அதைப் பெண்கள் வழிபட்டதையும்
உவமையாகச் சொல்கிறார்.

கருத்துகள் இல்லை: