*சாளக்கிராம நித்ய பூஜா !*
*கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்கிராம கற்கள் மிகுந்த புனிதம் வாய்ந்தவை.* இவைகளையே தெய்வ ஆராதனைக்கு பயன்படுத்துகிறோம். சிவ, விஷ்ணு , நரசிம்ம .......என பலவாறாக சாளக்கிராம கற்கள் கிடைக்கின்றன. உங்களின் ஆராதனை தெய்வத்திற்கு ஏற்றாற்போல தேர்ந்தெடுத்து நித்ய பூஜை செய்வது சாலச்சிறந்தது.
சாளக்கிராமக் கற்களில் இயற்கையாகவே நம்முடைய ஆராதன மூர்த்தி இருப்பதால், அதற்கு சங்கல்பம், ஆவாஹனம் , விசர்ஜனம் .....போன்றவைகள் செய்வதில்லை. அவைகள் சுயம்பு மூர்த்திகளே ................
விஷ்ணுவின் பிரதி, சாலக்கிராமம் ஆகும். அது ஒருவகைக் கல்லால் ஆனது. கண்டகி ஆற்றங்கரையில் விஷ்ணு கல்லாகுமாறு சபிக்கப்பட்டார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. பலவகை சாலக்கிராமங்கள் பற்றி கருட புராணம் கூறுகிறது. எல்லா சாலக் கிராம கற்களும் புனிதமானவையே. ஒரு சாலக்கிராமத்தைத் தொட்டால் முற்பிறப்பில் செய்யப்பட்ட பாவங்களும் தீரும்.
1. கேசவ சாலக்கிராமம் என்பது சங்கு, சக்கர, கதை, தாமரைக் குறிகள் காணப்படுவது. இவை கூறப்பட்ட வரிசையில் இருக்க வேண்டும்.
2. மாதவ சாலக்கிராமத்தில் சங்கு, சக்கரம், பத்ம, கதை வரிசையில் இருக்கும்.
3. நாராயண சாலக்கிராமத்தில் பத்மம், கதை, சக்கரம், சங்கு என்ற வரிசை இருக்கும்.
4. கோவிந்த சாலக்கிராமத்தில் கதை, பத்மம், சங்கு, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.
5. விஷ்ணு சாலக்கிராமத்தில் பத்மம், சங்கு, சக்கரம், கதை என்ற வரிசை இருக்கும்.
6. மதுசூதன சாலக்கிராமத்தில் சங்கு, பத்மம், கதை, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.
7. திரிவிக்கிரம சாலக்கிராமத்தில் கதை, சக்கரம், சங்கு, பத்மம் என்று வரிசை இருக்கும்.
8. வாமன வடிவில் சக்கரம், கதை, பத்மம், சங்கம் என்ற வரிசையிலும்
9. ஸ்ரீதரன் வடிவில் சக்கரம், பத்மம், சங்கம், கதை என்ற வரிசையிலும்
10. ஹ்ருஷிகேசன் அமைப்பில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்
11. பத்மநாபன் அமைப்பில் பத்மம், சக்கரம், கதை, சங்கு என்ற வரிசையிலும்
12. தாமோதரன் வடிவில் சங்கு, சக்கர, கதை, பத்மம் என்ற வரிசையிலும்
13. வாசுதேவன் வடிவில் சக்கரம், சங்கு, கதை, பத்மம் என்ற வரிசையிலும்
14. சங்கர்ஷனில் சங்கு, பத்மம், சக்கரம், கதை என்ற வரிசையிலும்
15. பிரத்யும்னனில் சங்கு, கதை, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்
16. அநிருத்தன் அமைப்பில் கதை, சங்கு, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்
17. புருஷோத்தமன் அமைப்பில் பத்மம், சங்கு, கதை, சக்கரம் என்ற வரிசையிலும்
18. அதோக்ஷஜ வடிவில் கதை, சங்கு, சக்கரம், பத்மம் என்ற வரிசையிலும்
19. நரசிம்மன் உருவில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்
20. அச்சுதன் அமைப்பில் பத்மம், சக்கரம், சங்கு, கதை என்ற வரிசையிலும்
21. ஜனார்த்தனன் வடிவில் சங்கு, சக்கரம், பத்மம், கதை என்ற வரிசையிலும்
22. உபேந்திரனில் கதை, சக்கரம், பத்மம், சங்கு என்ற வரிசையிலும்
23. ஹரி அமைப்பில் சக்கரம், பத்மம், கதை, சங்கு என்ற வரிசையிலும்
24. ஸ்ரீ கிருஷ்ணனில் கதை, பத்மம், சக்கரம், சங்கு என்ற வரிசையிலும் அமைந்திருக்கும்.
*மிகவும் எளிமையாக அவற்றுக்கு பூஜை செய்யும் முறையைக் காண்போம் :*
1. பன்னீராலும் ,
2. பச்சைக்கற்பூரம் கலந்த நீராலும்,
3. பாலாலும்,
4. சந்தனத்தால்,
5. அபிஷேக மஞ்சள் ,
6. கரும்புச்சாறு (இருந்தால்) ,
7. அபிஷேக திரவியப்பொடி கலந்த நீர்,...........
8. நெய் , தேன் மற்றும் தயிராலும்,
9. விபூதி கலந்த நீராலும்,
10. கங்கை நீராலும் ..................
அபிஷேகம் செய்யலாம். அவ்வாறு செய்யும் பொழுது, ஸ்ரீ ருத்ரம் மற்றும் பஞ்ச சூக்தம் ( புருஷ சூக்தம் , ஸ்ரீ சூக்தம் , விஷ்ணு சூக்தம், நாராயண சூக்தம் , துர்கா சூக்தம் ) பாராயணம் செய்யலாம்.
இவற்றுடன் அந்ததந்த உபாசனை மூர்த்திகளின் ஸஹஸ்ரநாமங்களோ, அல்லது அஷ்டோத்ரங்களோ பாராயணம் செய்யலாம். மேலும் விருப்பமான ஸ்துதிகள், ஸ்தோத்ரங்கள் பாராயணம் செய்வது சாலச்சிறந்தது.
அபிஷேகம் முடிந்தவுடன் மடி வஸ்திரத்தால் (தூய்மையான துணியால் ) துடைத்து சந்தனம், குங்குமம் ....விபூதி இட்டு ,.......ஆசனம், பாத்யம், அர்க்யம் , ஆசமனம் செய்து ......... துளசி , வில்வம் , மலர்களால் அர்ச்சித்து , தூப , தீப ,நைவேத்யம் செய்து.........
ஸ்நானம், கந்தம் , புஷ்பம் ............கற்பூர நீராஞ்சனம் என பூஜா புத்தங்களில் விவரித்துள்ளதை போல அர்ச்சனைகள் செய்து ஆனந்திக்கலாம்.
சாளக்கிராமம் உள்ள வீடு பாடல் பெற்ற தலத்தின் சிறப்பினைக் கொண்ட புண்ய க்ஷேத்ரம். 12 சாளக்கிராமம் கொண்ட வீடு ஒரு திவ்ய தேசம்
ஆகும். அங்கு லக்ஷ்மி நித்ய வாசம் செய்கிறாள். மேலும் பாவங்கள் குறைந்து அழிந்துவிடும்.
*மஹாபெரியவா ஒருமுறை, " எங்கு சாளக்கிராம பூஜை நடைபெறுகிறதோ, அங்கு ஒரு குறையும் வருவதில்லை.* அதைச்சுற்றி சுமார் 2km தூரத்திற்குள் உயிர் விடும் எந்த உயிரினமும், அதன் கடைசி நேரத்தில் அந்த புண்ணிய பூஜையின் அதிர்வுகளை பெற்று.........வாசனைகளும் வினைகளும் குறைந்து சாந்தியாக, அமைதியடைந்து அதனால் அதன் மறுபிறவி மிக சிறந்ததாக அமையப் பெறுகின்றன " என்று கூறியதாக கேள்விப்பட்டோம். மேலும் அந்த வீட்டிலுள்ளோர்கள் கொடிய மரணம் , மோசமான விபத்துகள் , துர்மரணம் போன்றவை சாளக்கிராம பூஜை நடைபெறும் வீட்டில் நிகழ்வதில்லை.
தமிழ் திருமுறைகள் , திவ்யப் பிரபந்தங்கள் முதலியன பாடி , அபராத சமரோபணம் செய்து, நமஸ்கரித்து,...........
அபிஷேக தீர்த்தம் , நைவேத்ய பிரசாதம் வீட்டில் எல்லோருக்கும் கொடுத்து, நாமும் தீர்த்தம் பருகி , பிரசாதம் உண்டு ..... பூஜையை முடித்துக் கொள்ளலாம்.
*ஓம் நமோ நாராயணாய !*