அருள் மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில்
மூலவர் : அஷ்டலக்ஷ்மி, மஹா லக்ஷ்மி, மஹா விஷ்ணு,
அம்மன் : ஆதிலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி, தைரியலக்ஷ்மி,கஜலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, தனலக்ஷ்மி
தீர்த்தம் : சமுத்திர புஷ்கரணி (வங்கக் கடல்)
பழமை : 50 வருடங்களுக்குள்
ஊர் : பெசன்ட் நகர்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு
விழா : புரட்டாசி நவராத்திரி விழா பத்து நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் விழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். தீபாவளி, லக்ஷ்மி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.
சிறப்பு : கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. {ஓம்கார சேத்திரம்} கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது. இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.
அருள் மிகு அஷ்டலக்ஷ்மி திருக்கோயில், பெசன்ட் நகர் - 600 090, சென்னை.போன்:+91- 44-2446 6777, 2491 7777, 2491 1763
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
தகவல் :ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.
பிரார்த்தனை : இங்கு அஷ்ட லக்ஷ்மிகளாக அருள் பாலிக்கும் மகாலக்ஷ்மியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறலாம். தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. உடல் நலம் பெற ஆதி லக்ஷ்மியையும், பசிப்பிணி நீங்க தான்ய லக்ஷ்மியையும், தைரியம் பெற தைரிய லக்ஷ்மியையும், சவுபாக்கியம் பெற கஜ லக்ஷ்மியையும், குழந்தைவரம் வேண்டுமெனில் சந்தான லக்ஷ்மியையும், காரியத்தில் வெற்றி கிடைக்க விஜய லக்ஷ்மியையும், கல்வி ஞானம் பெற வித்யா லக்ஷ்மியையும், செல்வம் பெருக தன லக்ஷ்மிமியை வணங்குதல் நலம்.
பெருமை : அஷ்டலக்ஷ்மிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கிறார்கள். கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோயில். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார்.
ஸ்தல வரலாறு : சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது. அதோடு சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது. இந்த பீச்சுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
புதன், 10 பிப்ரவரி, 2021
அருள் மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக