புதன், 10 பிப்ரவரி, 2021

ஸ்ரீ மஹா மாரியம்மனை வழிபடுங்கள்

ஸ்ரீ மஹா மாரியம்மனை வழிபடுங்கள் கொரோனாவில் இருந்து தப்பிக்க

இன்று உலகையே ஆட்டி வைக்கும் தொற்று பரவல் நோய் *"கொரோனா வைரஸ் நோய்"*

பழைய காலங்களில் மிகப் பெரிய தொற்று நோய்காளாக *"பெரியம்மை, சின்னம்மை, காலரா - கழிச்சல் முதலியவை இருந்தன இந்நோய்களில் இருந்து தம்மை பாதுகாக்க மக்கள் "மாரியம்மனையும் காளியம்மனையும்" வழிபட்டனர்"*

"எவ்வளவோ அறிவார்ந்து இருந்த நம் தமிழ் சமூகத்திற்கு "மேற்கண்ட நோய்கள் வைரஸ் போன்ற விஷக்கிருமிகளால் பரவுகிறது" என்பது தெரியாமலா இருக்கும்??!

"ஆனாலும் வெப்பமயமான தேஜஸை உடைய மாரியம்மனை வேப்பிலை, மஞ்சள் முதலிய பொருட்களால் வழிபாடு செய்தனர்" ஆனாலும் பின்னால் வந்த ஆங்கிலேயே வைத்தியர்கள் "பெரியம்மை முதலியவற்றுக்கு காரணம் வைரஸ் என்று கண்டு பிடித்து மருந்தும் கண்டு பிடித்தனர்"

இந்த விபரங்கள் தெரியும் முன்னமே மக்கள் நோயாளிகளை வேப்பிலை மஞ்சள் முதலியவற்றால் குணப்படுத்த முயற்சித்தல், தனிமை படுத்தல், தொடாமை முதலியவற்றை "மாரியம்மன் வழிபாட்டால் செய்து கொண்டு இருந்தனர்"

பின்னாள் அம்மை நோய் அம்மனை வழிபடாமையால் பரவும் என்றவாறு இது தவறாக கற்பிக்க பட்டு மூடநம்பிக்கை என்று ஒதுக்கப் பெற்றது!! காலக்கொடுமை!! ஆதலால் "இன்றும் "கொரோனா முதலிய விஷக்கிருமிகள் பரவாமல் இருக்க அதன் பாதிப்பில் இருந்து விலக நம் ஊர்களிலேயே கிராமங்களிலேயே, தெரு முனைகளிலேயே கருணா சாகரமாக வீராசனத்தில் வீற்றிருக்கும் அம்பிகையாம் மகாமாரியை வழிபாடு செய்யுங்கள்"

"ஸ்ரீ பரமேஸ்வரனின் பாரியாகிய பார்வதியே வடிவமாக வீற்றிருக்கும் ஸ்ரீமாரியின் வெப்பத்தல் கொடும்பரவல் நோய்கள் நிச்சயம் பொடிப்பொடியாக மறையும்"

அவள் அக்னிமயமானவள், பரமேஸ்வரனுயை அடையாளங்களை தன்னகத்தே கொண்டவள், அக்னிமயமான கேசங்களையும், சடாமகுடத்தையும், பாசாங்குசமும் திரிசூலமும் கபாலமும் கத்தியும் உடுக்கையும் கொண்டு சூர்யகோடி தேஜோ மயமாக வீராசனத்தில் வீற்றிருந்து வெப்பமாயமாக இருந்து தன்னை அடைபவர்களுக்கு குளிர்ச்சியை தரும் சீதளாதேவி என்று அவளது தியான ஸ்லோகம் குறிக்கிறது

"அக்நி ஜ்வாலா சிகாம் அக்னி நேத்ராம் அக்னி ஸ்வரூபிணீம்; கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்; வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம் வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரண பூஷிதாம்" என்பது அவளது ஸ்வரூபத்தை குறிக்கும் தியான ஸ்தோத்திரம்

இவ்வம்மையை அவ்வங்கே எப்படி பாரம்பரியமாக வழிபட்டனரோ அவ்வந்த படியே மாற்றமில்லாமல் அவள் உள்ளங் குளிரும்படி "ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறியாட்டோடும்" விழா எடுத்து வேப்பிலை தோரணம் மஞ்சள் நீராட்டு என்று விழா எடுத்து நம் பாரம்பரியத்தை கைவிடாது அவ்வம்மைக்கு ப்ரீத்தியை உண்டாக்குங்கள்

கொரோனா என்ன அதுனுடைய அப்பன் வந்தாலும் "பாரெல்லாம் படியளக்கும் பரமேஸ்வரனின் பாரியாம் ஸ்ரீமாரி பார்த்து கொள்வாள்"

இவ்வம்மையோடு கூட அவ்வந்த ஊர்களின் கிராம தேவதைகளையும் தக்க வகையில் ப்ரீத்தி செய்து வழிபாடு செய்யுங்கள்

"எல்லோரும் ஸ்ரீ தில்லை கூத்தர் திருவருளால் அவ்வந்த பகுதியின் கிராம, நகர காவல் தெய்வங்களால் ரக்ஷிகப் படுவோம் ஆகுக!!

கருத்துகள் இல்லை: