சோளிங்கர் யோக நரசிம்மர்
11மாதங்கள் யோக நிலையில் இருந்து கார்த்திகை மாதம் மட்டும் யோக நரசிம்மர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்!
ராம அவதாரம் முடிந்ததும் ராமபிரான் வைகுண்டம் எழுந்தருளும் வேளையில், தாமும் உடன் வருவதாக கூறினார் ஆஞ்சநேயர்.
ஆனால் ராமபிரான், ‘கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் சப்த ரிஷிகளுக்கும், காலன் மற்றும் கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்.
அவர்களை என்னுடைய சங்கு, சக்கரத்தால் அழித்து கலியுகம் முடியும் வரை நீயும் கடிகாசலத்தில் சங்கு, சக்கரத்துடன் இருந்து யோக ஆஞ்சநேயராக மக்களுக்கு அருள்பாலித்து கலியுகம் முடியும் வேளையில் எம்மை வந்தடைவாய்’ என்று கூறிவிட்டார்.
இதனால்தான் யோக நிலையில் சங்கு, சக்கரத்துடன் அமர்ந்த நிலையில் தனி மலையில் .நரசிம்மர் அமர்ந்திருக்கும் மலை அருகே யோக ஆஞ்சநேயராக அருள் பாலிக்கிறார்..
கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீகம். எனவேதான் இன்றும் பக்தியோடு, ராமாயணம் படிக்கும் இடம் தோறும் ஆஞ்சநேயர் அருவமாகவோ, உருவமாகவோ வந்து கலந்துகொள்வதாக ஐதீகம்.
பக்த பிரகலாதனுக்காக தூணில் இருந்து அவதரித்தவர் நரசிம்மர்அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜா, விஸ்வாமித்ரர் என சப்த ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நரசிம்மப் பெருமாள் சோளிங்கபுரம் தலத்தில் சாய்ந்த நிலையில், யோக முத்திரையோடு தியானக் கோலத்தில் காட்சியளிக்கிறார்
இங்குள்ள பெரிய மலையின் உச்சியில் வடக்கு நோக்கியபடி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனைக் கடந்தால் சாளக்கிராம மாலை அணிந்து மூலவராய் யோக நரசிம்மர் கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலித்து வருகிறார்.
அம்ருதவல்லித் தாயார்...
தனிச்சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் உற்சவர் பக்தவச்சலப் பெருமாள் என்பதாகும். தாயார் திருநாமம் சுதாவல்லி.
குறிப்பு.... ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கிய பிறகு ஸ்ரீஆஞ்சநேயரை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக